Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தை மூட வேண்டும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தை மூட வேண்டும்

Report us Steephen 3 hours ago

தினமும் நஷ்டத்தில் இயங்கி வரும் ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் நாட்டுக்கு பெரும் சுமையாக மாறியுள்ளதாகவும் அந்த நிறுவனத்தில் பணியாற்றி வரும் 7 ஆயிரம் ஊழியர்களுக்கு இழப்பீடுகளை வழங்கி நிறுவனத்தை மூடி விடுவது சிறந்தது எனவும் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் கடந்த மார்ச் மாதம் 31 ஆம் திகதி வரையான காலத்தில் 18 ஆயிரத்து 400 கோடி ரூபாய் நஷ்டத்தையும் மிஹன் லங்கா ஆயிரத்து 900 கோடி நஷ்டத்தை சந்தித்துள்ளன. இந்த இரண்டு நிறுவனங்களின் நஷ்டம் என்பது 20 ஆயிரம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது.

எரிபொருள் விலை அதிகரிப்பு போன்ற விடயங்களுடன் ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் இந்த வருடத்தில் மட்டும் 3 ஆயிரத்து 500 கோடி ரூபாய் நஷ்டத்தை சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்டில் வாழும் அனைவரும் தலா 10 ஆயிரம் ரூபாய் கடனாளியாக மாற்றியுள்ள ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தை தொடர்ந்தும் நடத்துவதா இல்லையா என்பதை உடனடியாக தீர்மானிக்க வேண்டும் எனவும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.

https://www.tamilwin.com/politics/01/195341?ref=home-feed

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த  மச்சானின் திருவிளையாடல்க ளினால்  ஒரு தேசிய விமான சேவை அழிந்த கதை.

 எமிரேட்ஸ் நிறுவன பங்களிப்பில் அதனால் அனுப்பப் பட்ட பீட்டர் ஹில் எனும் அனுபவம் வாய்ந்த பிரதம நிருவாகியின் கீழ், 2008ம் ஆண்டு 4.4 பில்லியன் ரூபா லாபத்தில் இயங்கிய நிறுவனம் ஸ்ரீலங்கன்.

அதே ஆண்டு வெளிநாடு பயணம் சென்றிருந்த மகிந்தா மகாராஜாவும் பரிவாரங்களும் ஒருநாள் முன்னதாக நாடு திரும்ப தீர்மானித்து, முதல் வகுப்பு பயணிகள் வெளியே அனுப்பி (off loading) அந்த ஆசனங்களை தமக்கு ஒதுக்குமாறு கோரியது. கோரிக்கை பீட்டர் ஹில் வரை சென்றும், முதல் வகுப்பு பயணிகள் பெரும் பணக்கார, தொழில் அதிபர்கள் என்பதால் அவ்வாறு செய்ய முடியாது என மறுக்கப்பட... பெரும் கோபத்தில், மீசை உடன் சேர்த்து மேல் உதட்டினை கடித்துக் கொண்டார் மகிந்தா .

நாடு திரும்பியதும், பீட்டர் ஹில் இன்  விசாவினை ரத்து செய்து, 48 மணி நேரத்தில் கிளம்ப உத்தரவு இடப்பட்டது. அது மட்டுமல்ல எமிரேட்ஸ் உறவும் அதிரடியாக ரத்து செய்யப்பட்ட்து.

விமான துறையில் பரிச்சயம் இல்லாத, கபொத உயர் தரம் கூட சித்தி அடைந்திராத,  மனைவி சிராணியின்  அண்ணாச்சி, மச்சான் நிசாந்த விக்கிரமசிங்க நிறுவனத்தின் பிரதம நிருவாகி ஆகிறார்.

image_1539057324-65b1a0fb32.jpg

மச்சானுக்கு தலை கால் புரியவில்லை. காஞ்ச  மாடு கம்பன்கொல்லையில் வீழ்ந்த மாதிரி, அவரது நடவடிக்கைள் அனைத்தும் வடிவேலு காமெடி ரகம்.

ஒரு நாள் ஜப்பானில் இருப்பார்.... அதே விமானத்தில் வந்த பணிப்பெண்ணுடன்....இரவில் தங்குவார். மறுநாள் லண்டனில்.... வேறு ஒரு பணிப்பெண். ஊதாரித்தனமான  செலவுகள். எல்லாம் நிறுவனத்தின் தலையில் கட்டி விடுவார்.

மச்சானின் நிருவாகத்தில், 2015ல் நிறுவன நட்டம் 126 பில்லியன் ரூபாய்கள்.

Related image
 
இந்த மச்சான், செஹானி ரொட்ரிகோ எனும் ஒரு விமான பணிப்பெண்ணை, எப்படியோ மடக்கி இருந்தார். அவருடனான தொடர்பால், ஒரு வருட சம்பளம் இல்லா  லீவினை பெற்றுக்  கொண்டிருந்தார், செஹானி. பின்னர் இந்த பெண்ணை சிங்கப்பூருக்கும், அடுத்து துபாய் நகருக்கும், உயர்வான பதவிக்கு அனுப்பி இருந்தார்.  துபாய் நகரத்தில் உள்ள முகாமைத்துவ பயிற்சி பெரும் நிறுவன உயர் அதிகாரிகளுக்கான  அபார்ட்மெண்ட் ஒன்றில் டுபாயில் விற்பனை முகவர் ஆக கீழ் நிலை ஊழியரான செஹானி ரொட்ரிகோ பெண்ணை தங்க வைத்து இருந்தார். அதற்கு  உரிய மாதாந்த கொடுப்பனவுகளை கொடுக்குமாறு கணக்கு பிரிவுக்கு உத்தரவு இட்டு இருந்தார். ஆனால்  அவர் எந்த ஒரு முகாமைத்துவ பயிற்சியில் இருக்கவோ, அல்லது அதற்கு  உரிய வேலையிலோ இருக்கவில்லை. 

zzzzair.png

நிதி ஒழுங்கீனம் தொடர்பாக நடக்கும் விசாரணையில், இவர் லீவின் பின்னர் பதவிக்கு வந்ததும், சிங்கப்பூர், துபாய் வேலையில் இருந்ததும், கணக்கு பிரிவு, மச்சான் உத்தரவில் பண கொடுப்பனவு செய்தது, விமான நிறுவன HR க்கு தெரியாது என்று HR முகாமையாளர் சொல்லி உள்ளார்.

ஸ்ரீ லங்கா அம்பாஸிடோர் என்னும் இன்னுமோர், நிறுவனத்துக்கு தெரியாத பதவியில் இருப்பதாக, வேறு ஒரு விமான பணிப் பெண்ணை தள்ளிக் கொண்டு வேறு விமான சேவை நிறுவனங்களில் பறந்து, பில்லை, ஸ்ரீ லங்கனில் தள்ளி விட்டு உள்ளார். 

நிறுவன பணியாளர் தேர்வு பரீட்ச்சையில் பல முறை பெயில் ஆன பலர், குறிப்பாக பெண்கள், இவரின் உத்தரவில் உள்ளே புகுந்தனர்.

தனது மனைவி விரும்பிய நாய் குட்டி ஒன்றை சுவிஸ் நாட்டில் இருந்து எடுத்து வர, கோத்தா  உத்தரவில் தனி விமானம் அனுப்பின கதையும் நடந்தது.

இந்த கூத்தினிடையே, மகிந்தா கைத்தடி  வாஸ் குணவர்தனே மிகின் ஏர்லைன்ஸ் எனும் பெயரில், வேறு ஓன்றை தொடங்கி அதிலும் தனி களவு ராஜாங்கம் நடந்தது.

ஆக நாட்டின் விமான சேவையினை, மகிந்த  குடும்பம், ஒரு குதிரை ஓட்டத்துக்கு கொண்டு போய் (taken  for  a  ride ) கவுத்து விட்டுள்ளது.

Image result for nishantha wickramasinghe

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Nathamuni said:

மச்சானின் நிருவாகத்தில், 2015ல் நிறுவன நட்டம் 126 மில்லியன் ரூபாய்கள்.
 
நாதம், நீங்கள் எழுதியதை வாசிக்க....என்னவோ தெரியவில்லை!

நம்ம தாதா இடி அமீனும்.....உகண்டாவின் பொருளாதாரமும் தான் நினைவுக்கு வந்து போகுது...!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, Nathamuni said:

செய்தியுடன் படங்களையும் இணைத்து அசத்திவிட்டீகள்.  :91_thumbsup::91_thumbsup::91_thumbsup:
நக்கீரன் பேப்பர் வாசித்த பிரமை....:110_writing_hand:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புங்கையூரன் said:

நாதம், நீங்கள் எழுதியதை வாசிக்க....என்னவோ தெரியவில்லை!

நம்ம தாதா இடி அமீனும்.....உகண்டாவின் பொருளாதாரமும் தான் நினைவுக்கு வந்து போகுது...!

உதை விட திறைசேரி பத்திரம் விற்ற விளையாட்டு பற்றி நாதமுனி தன்னுடைய ஸ்ரைலில் சொன்னால் நல்லாயிருக்கும் .

  • கருத்துக்கள உறவுகள்

Nishantha-1.jpg

maxresdefault.jpg

தோழர்,

விமான சேவை நடத்துவது எவ்வளவு குஜாலன தொழில் என்பது அறியக்கூடியதாக உள்ளது .

போக நட்டம் குறித்து புலன்விசாரணை தொடங்கும் முன் சம்பந்தப்பட்டவர்களை லண்டனில் செற்றில் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்துவிட்டு கைசெலவிற்கு பணமும் கொடுத்து அனுப்புவதுதானே முறை ? ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

maxresdefault.jpg

வயிறு பத்தியெரியுது....

vadivelu gif à®à¯à®à®¾à®© ப஠மà¯à®à®¿à®µà¯

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

iஇவ்வளவு நடந்த பிற்பாடு மைத்திரிக்கு கஜுநட்ஸ் என்ன தங்க பஸ்பமே குடுத்தாலும் பிளைட்முழுக்க  காறிதுப்பி கொண்டு இருக்கும் .?

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, Nathamuni said:

விமான துறையில் பரிச்சயம் இல்லாத, கபொத உயர் தரம் கூட சித்தி அடைந்திராத,  மனைவி சிராணியின்  அண்ணாச்சி, மச்சான் நிசாந்த விக்கிரமசிங்க நிறுவனத்தின் பிரதம நிருவாகி ஆகிறார்.

நாதம் உங்கள் தகவல்களைப் பார்த்தா நிசாந்தவின் பிஎ வாக இருந்திருப்பீர்களோ என்று எண்ண தோன்றகிறது.தகவலுக்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

நாதம் உங்கள் தகவல்களைப் பார்த்தா நிசாந்தவின் பிஎ வாக இருந்திருப்பீர்களோ என்று எண்ண தோன்றகிறது.தகவலுக்கு நன்றி.

பேகர்ஸ் வம்சாழி... ஆங்கிலம் தாய்மொழி.... தகுதியே அதுதானே... 

நம்மூரில் ஆங்கிலம் பேசுபவன் மெத்தப்படித்த மேதாவி என்ற நிலை தானே.

தேடி வாசித்தை தொகுத்தளிப்பே அடியேன் வேலை. இந்தாளுக்கு பிஏ ஆக இருந்தாளுக்கு, பலூன், வாயகரா வாங்கி வாங்கியே வாழ்க்கை வெறுத்திருக்கும்..... அப்பப்ப, புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் என்பதாக, சிறு பலன் கிடைத்திருக்கும்.

Edited by Nathamuni

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.