Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஓய்­வு­பெற்­றவர்கள்- அர­சி­ய­லுக்கு வரக்­கூ­டாது – சுமந்­தி­ரன் எம்.பி.!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஓய்­வு­பெற்­றவர்கள்- அர­சி­ய­லுக்கு வரக்­கூ­டாது – சுமந்­தி­ரன் எம்.பி.!!

பதிவேற்றிய காலம்: Oct 9, 2018

ஒய்வு பெற்ற அரச உத்­தி­யோ­கத்­தர்­களை அவர்­களது துறை சார்ந்த விட­யங்­க­ளில் ஆலோ­ச­னைக்­கா­க­வும் பக்­க­ப­ல­மா­க­வும் ஈடு­ப­டுத்த யோச­னை­களை முன்­வைக்க வேண்­டிய தேவை உள்­ளது. ஒய்வு பெற்­ற­வர்­கள் அவர்­க­ளின் துறையை விட்டு அர­சி­ய­லுக்கு வரக்­கூ­டாது.

இவ்­வாறு நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் எம்.ஏ.சுமந்­தி­ரன் தெரி­வித்­தார்.
தேசிய ஓய்­வூ­தி­யர் தின விழா யாழ்ப்­பா­ணம் வீர­சிங்­கம் மண்­ட­பத்­தில் மாவட்­டச் செய­லர் நா.வேத­நா­ய­கன் தலை­மை­யில் நேற்று நடை­பெற்­றது.

 

நிகழ்­வில் முதன்மை விருந்­தி­ன­ராக கலந்­து­கொண்டு உரை­யாற்­றும் போதே அவர் இவ்­வாறு தெரி­வித்­தார். அவர் தெரி­வித்­த­தா­வது-

ஓய்­வூ­தி­யம் என்­பது உரி­மையா அல்­லது சலு­கையா என ஐயம் ஏற்­பட்­டுள்­ளது. இதை வைத்­துப் பட்­டி­மன்­றம் ஒன்­றைக் கூட நடத்­த­லாம். இங்கு பேசிய இரண்டு அதி­கா­ரி­கள் ஓய்­வூ­தி­யம் வரப்­பி­ர­சா­தம் என்று கூறி­னார்­கள்.

அரச சேவை­யில் பல விட­யங்­கள் சலு­கை­கள் என வர்­ணிக்­கப்­ப­டு­கின்­றன. சம்­ப­ளத்தை தவிர அனைத்­தும் சலு­கை­கள் என வர்­ணிக்­கப்­ப­டு­கின்­றது.
சம்­ப­ளம் என்­பது உரித்து ஓய்­வூ­தி­யம் என்­பது சலுகை என ஒரு­வர் கூறு­கின்­றார். வரிச் சலு­கை­யில் வாக­னம் பெறு­தல் சலுகை அது உரித்து அல்ல என்ற சர்ச்­சை­யும் உள்­ளது. பொது வெளி­யில் அது தொடர்­பில் விவா­தம் நடை­பெற்­றுக் கொண்­டி­ருக்­கின்­றது.

எமது நாட்­டில் ஓய்­வூ­தி­யம் பெரும் வய­தெல்லை தொடர்­பில் மீளாய்வு இடம்­பெற்று வரு­கின்­றது. இது எமது நாட்­டில் மட்­டு­மல்ல உலக நாடு­கள் பல­வற்­றில் இடம்­பெற்று வரு­கின்­றது. 55 வய­துக்கு பின்­னர் என இருந்து 60 வய­தில் காட்­டா­யம் என்று குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. அவர்­கள் அனு­ப­வத்­தில் உச்ச எல்­லை­யில் இருக்­கும் போது அவர்­க­ளுக்கு ஒய்வு வழங்­கு­வது சரியா என்­றும் பேசப்­ப­டு­கின்­றது.

நான் இரண்டு தொழில்­க­ளைச் செய்­கின்­றேன். நான் சட்­டத்­த­ர­ணி­யா­க­வும், அர­சி­யல்­வா­தி­யா­க­வும் உள்­ளேன். இந்த இரண்­டுக்­கும் ஓய்வு வய­தெல்லை கிடை­யாது. ஆனால் அரச பணிக்கு அப்­ப­டி­யல்ல. ஓர் வய­தெல்லை இருக்­கின்­றது. எனி­னும் இந்த வய­தெல்­லையை மாற்­றி­ய­மைக்க ஏற்­பா­டு­கள் இடம்­பெற்று வரு­கின்­றன.

அடுத்து வரும் வரு­டங்­க­ளில் மாற்­றம் அடை­ய­லாம். இப்­போது ஒய்வு பெற்­றுள்­ள­வர்­க­ளுக்கு இது சாத்­தி­ய­மா­காது விட்­டா­லும் இனி ஒய்வு பெறக்­கூ­டி­ய­வர்­க­ளுக்கு சாத­க­மாக அமை­ய­லாம்.

ஒய்வு பெற்ற அரச உத்­தி­யோ­கத்­தர்­களை அவர்­கள் துறை சார்ந்த விட­யங்­க­ளில் ஆலோ­ச­னைக்­கா­க­வும் பக்­க­ப­ல­மா­க­வும் ஈடு­ப­டுத்த யோச­னை­களை முன்­வைக்க வேண்­டிய தேவை உள்­ளது. ஒய்வு பெற்­ற­வர்­கள் அவர்­க­ளின் துறையை விட்டு அர­சி­ய­லுக்கு வரக்­கூ­டாது.

தொழில் புரி­வது ஒரு­வ­ரு­டைய மனி­தத் தன்­மை­யோடு பின்­னிப்­பி­ணைந்த விட­யம். தொழில் செய்­வ­து­தான் தன்னை சமூ­கத்­துக்கு பிர­யோ­ச­ன­மாக்­கு­கின்ற செயற்­பாடு. ஆக்­க­பூர்­வ­மான செயற்­பாட்­டில் ஈடு­ப­டு­வது மாண்­புக்­கு­ரிய விட­ய­மாக இருக்­கும்.- என்­றார்.

நிகழ்­வில் கலந்து கொண்ட நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் மாவை சோ. சேனா­தி­ராஜா தெரி­வித்­த­தா­வது-

உள்­நாட்­டுப் போரின் கார­ண­மாக பல திற­மை­யான அரச உத்­தி­யோ­கத்­தர்­கள் புலம்­பெ­யர் நாடு­க­ளுக்­குச் சென்­றுள்­ள­னர். இங்­கி­ருந்து வெளி­யே­றிய அரச உத்­தி­யோ­கத்­தர்­கள், மருத்­து­வர்­களை நாம் இந்த மண்­ணில் சேவை­யாற்ற அழைக்­கின்­றோம்.

அவ்­வாறு வரு­வோர்­களை நாம் வர­வேற்­கத் தயா­ராக உள்­ளோம். எமது நாட்­டில் பணி­யாற்­றும் அரச உத்­தி­யோ­கத்­தர்­க­ளுக்­கும், மேற்­கு­லக நாட்டு உத்­தி­யோ­கத்­தர்­க­ளுக்­கும் பல வேறு­பா­டு­கள் உள்­ளன. மேற்­கு­ல­கில் அவர்­கள் தமக்கு மட்­டும் உழைக்­கின்­ற­னர். ஆனால் இங்­குள்­ள­வர்­கள் அவர்­க­ளது ஒட்­டு­மொத்த குடும்­பத்­துக்­குமே உழைக்­கின்­றார்­கள்.

அங்­குள்­ள­வர்­க­ளில் ஏரா­ள­மா­ன­வர்­கள் அரச துறையை விட்டு தனி­யார் துறை­யில் ஆர்­வ­மா­கப் பணி­யாற்­று­கின்­ற­னர். இங்­குள்­ள­வர்­கள் பலர் அரச துறை­க­ளி­லேயே ஆர்­வம் காட்­டு­கின்­ற­னர். தனி­யார் துறைக்­குச் செல்ல தயங்­கு­கின்­ற­னர்.

அரச துறைக்­குச் செல்­லாத பலர் தனி­யார் துறை­யில் ஈடு­பட்டு அதிக ஊதி­யத்­தைப் பெற்று வரு­கின்­ற­னர். அவர்­கள் உயர்ந்த தொழில்­நுட்­பம், அதிக வரு­மா­னம் என வாழ்­கின்­ற­னர். அதை இங்­குள்­ள­வர்­கள் புரிந்து கொள்­கி­றார்­கள் இல்லை.

இங்­குள்­ள­வர்­க­ளில் ஏரா­ள­மா­ன­வர்­கள் விஞ்­ஞா­னத் துறை­யில் ஆர்­வம் காட்­டப் பின்­ன­டிக்­கின்­ற­னர். அந்­தத் துறை­யின் வளர்ச்சி வீழ்ந்­துள்­ளது. எமது இளைய சமு­தா­யம் இதில் அக்­கறை செலுத்த வேண்­டும்.- என்­றார்.

 

https://newuthayan.com/story/10/ஓய்­வு­பெற்­றவர்கள்-அர­சி­ய­லுக்கு-வரக்­கூ­டாது-சுமந்­தி­ரன்-எம்-பி.html

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, கிருபன் said:

ஒய்வு பெற்­ற­வர்­கள் அவர்­க­ளின் துறையை விட்டு அர­சி­ய­லுக்கு வரக்­கூ­டாது. 

யாரை குறிப்பிடுகிறார் ? போக கூத்தாடிகள் மற்றும் அரசியல் , சட்டதரணிகளுக்கும் ஒய்வு வயது கட்டயமாக்க பட வேண்டும் .இவர்களின்ர இம்சை தங்க இயலாமல் கிடக்கு ..?

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

யாரை குறிப்பிடுகிறார் ? போக கூத்தாடிகள் மற்றும் அரசியல் , சட்டதரணிகளுக்கும் ஒய்வு வயது கட்டயமாக்க பட வேண்டும் .இவர்களின்ர இம்சை தங்க இயலாமல் கிடக்கு ..?

தலைவர் சம்பந்தனுக்கு ஆப்பு வைக்கப் போகிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

ஓய்வுபெற்றவர்கள் அவர்களின் துறையை விட்டு அரசியலுக்கு வரக்கூடாதென்று அவர் சொல்வது திரு விக்னேஸ்வரனை மனதில் வைத்துத்தான் என்பது தெளிவு.

ஏனென்றால் விக்னேஸ்வரன் போன்ற தெளிவான சிந்தனையுடன் செயற்படுபவர்களினால், அரசியல் வியாபாரம் செய்யும் சுமந்திரன் போன்றவரகளது முகத்திரை அவ்வப்போது கிழித்தெறியப்படுவது நடந்துகொண்டிருக்கிறது. ஆகவே தமது அரசியல் வியாபாரம் சிங்களவர்களிடம் கொடிகட்டிப் பறப்பதற்கு விக்னேஸ்வரன் போன்றவர்கள் தடையாக இருப்பதை இவர் விரும்பவில்லை.

அடுத்ததாக, சிங்களப் பிரதமர் ஆக்ஸ்பேர்ட் பல்கலையில் உள்நாட்டு விசாரணை போதும், சுதந்திரமான சர்வதேச விசாரணையை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று திட்டவட்டமாகக் கூறியிருக்கிறார். இன்றுவரை ரணிலின் நல்லிணக்க அரசுக்கு முண்டு கொடுத்துவரும் சுமந்திரனோ அல்லது சம்மந்தனோ இதுபற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதுபற்றித் தெரிய ஆசை.

அதுபோல, வடக்கின் முல்லைத்தீவு மற்றும் திருகோணமலை மாவட்டங்களைச் சூழ்ந்து மேற்கொள்ளப்பட்டுவரும் திட்டமிட்ட அரச ஆதரவிலான சிங்களக் குடியேற்றங்கள் பற்றியும், கிழக்கே அபகரிக்கப்பட்டுவரும் தமிழரின் நிலங்கள் பற்றியும் அண்மையில் திரு விக்னேஸ்வரன் அவர்கள் மிகவும் தெளிவான ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டிருக்கிறார். மகாவலி நீர்பாசணத் திட்டம் என்கிற போர்வையில், வடக்குக் கிழக்கு மாகாணங்களை நிரந்தரமாகவே துண்டாடி, நிலத்தொடர்பை அறுத்தெறிந்து, தமிழர்களை இந்த மாகாணங்களில் சிறுபான்மையினராக்கி விட்டால், அவர்களது தாயகக் கோட்பாடு அழிக்கப்பட்டுவிடும் என்கிற சிங்களத்தின் நீண்டகாலக் கனவு ஈடேறிவரும் நிலையில், இன்றும் இந்த அரசிற்கு முண்டுகொடுக்கும் சுமந்திரனோ அல்லது சம்பந்தனோ இதுபற்றி என்ன நினைக்கிறார்கள் என்றும் அறிய ஆசை.

இங்கே சுமந்திரனுக்கும் சம்பந்தனுக்கும் ஆதரவாகக் குரல் கொடுப்பவர்கள் இருக்கிறார்கள். இவ்விரு விடயங்கள் பற்றியும் அவர்களது நிலைப்பாடு எப்படியென்று தெரியவில்லை. சிலவேளைகளில், "அவர்கள் செய்தால், சரியாகத்தானிருக்கும்" என்கிற மனோநிலையில் இருக்கிறார்களோ என்னவோ ?!
 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ragunathan said:

ஓய்வுபெற்றவர்கள் அவர்களின் துறையை விட்டு அரசியலுக்கு வரக்கூடாதென்று அவர் சொல்வது திரு விக்னேஸ்வரனை மனதில் வைத்துத்தான் என்பது தெளிவு.

ஆரம்பத்திலிருந்தே யாழ் போகும் வெளிநாட்டு ராஜதந்திரிகளிடம் அரசாங்கத்தின் உண்மை முகத்தை அம்பலப்படுத்துவது தான் இவர்களுக்கு பெரிய பிரச்சனை.

என்னப்பா உங்கள் ஆள் இப்படி போட்டுக் கொடுக்கிறாரே என்று அரசு சினப்பது இவர்களுக்கு பெரும் தலைவலி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அரசியலுக்கு வேறு துறைகளில் நல்ல அனுபவம் உள்ளவர்கள் மக்களுக்கு சேவை செய்யும் நோக்கோடு வருவது நல்லது.  சுமந்திரன் அரசதுறையில் இருப்பவர்கள் ஓய்வுக்கு பின் வருவதைத்தான் வேண்டாம் என்கின்றார். தன்னைப் போல் அரசியல் பகுதிநேரமும் சட்டம் பகுதி நேரமும் செய்து பணம் பார்ப்பது எல்லாருக்கும் வரக்கூடாது என்ற நல்ல நோக்கம்தான்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
16 hours ago, கிருபன் said:

ஓய்­வு­பெற்­றவர்கள்- அர­சி­ய­லுக்கு வரக்­கூ­டாது – சுமந்­தி­ரன் எம்.பி.!!

ஒல்லாந்தர் காலத்திலையிருந்து தமிழ்மக்களுக்கு எதுவுமே செய்யாத அரைச்சமாவை அரைக்கும் சம்பந்தனையும் மாவையையும் பக்கத்திலை வைச்சுக்கொண்டு கதைக்கிற கதையைப்பார் .

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் சின்னக்கவுண்டர் சிறீதரன் உட்பட டமிழரசுக் கட்சியிலிருக்கும் ஓய்வு பெற்றவர்களை வெளியேற்றிவிட்டு இதை கூறட்டும்.

எல்லா துறையினருக்கும் ஓய்வு  உள்ளது என்பது கூட இவருக்கு தெரியவில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.