Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குறுந்தகவலை நம்பி வங்கியில் 93 ஆயிரம் ரூபா வைப்பிலிட்ட குடும்பஸ்தர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

fraud.jpg?resize=699%2C349
பெறுமதியான பரிசில் கிடைத்துள்ளது எனவும் அதனை உரிய முகவரியில் சேர்ப்பிப்பதற்கு வங்கியில் உடனடியாக பணம் வைப்பிலிடுமாறு கோரி அழைக்கப்பட்ட தொலைபேசியில் வந்த தகவலை நம்பிக்கை வைத்து வங்கியில் 93 ஆயிரத்து 800 ரூபா பணத்தை வைப்பிலிட்டு ஏமாற்றமடைந்த குடும்பத்தலைவர் வழங்கிய முறைப்பாட்டின் பிரகாரம் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் இன்று வெள்ளிக்கிழமை வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணையைச் சேர்ந்த குடும்பத் தலைவர் ஒருவரே இவ்வாறு பாதி்க்கப்பட்டுள்ளார்.

இந்த வழக்கைத் துரிதமாக விசாரணை செய்து பின்னணியிலிருப்போரைக் கைது செய்யுமாறு யாழ்ப்பாணம் காவல்துறையினருக்கு நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன் உத்தரவிட்டார்.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

யாழ்ப்பாணம் வண்ணார் பண்ணையைச் சேர்ந்த குடும்பத்தலைவர் ஒருவருக்கு அவரது கைபேசியில் உங்களுக்கு பெறுமதியான பரிசில் ஒன்று விழுந்துள் என குறுந்தகவல் ஒன்று கடந்த மாதம் வந்துள்ளது. அதனை நம்பிய அவர், பதில் தகவல் வழங்கியதனையடுத்து அவருக்கு அழைப்பை ஏற்படுத்திய நபர் ஒருவர், தங்களுடைய பரிசிலை உரியவாறு சமர்ப்பிப்பதற்கு 93 ஆயிரத்து 800 ரூபா பணத்தை குறித்த தனியார் வங்கியில் வைப்புச் செய்யுமாறு கணக்கு இலக்கத்தை வழங்கியுள்ளார்.

அந்தக் கணக்குக்கு குடும்பத் தலைவர் உரிய தொகைப் பணத்தை வைப்புச் செய்துள்ளார். எனினும் பணம் வைப்பிலிட்டு ஒரு மாதகாலமாகியும் அந்தப் பரிசில் தொடர்பில் எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. அதனால் குறித்த கணக்கு இலக்கத்தை வைத்து குடும்பத்தலைவர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கினார்.

அந்த முறைப்பாடு தொடர்பில் ஆரம்ப விசாரணைகளை முன்னெடுத்த காவல்’துறையினர்;, அதுதொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுக்கும் வகையில் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் இன்று வெள்ளிக்கிழமை முதல் அறிக்கையைத் தாக்கல் செய்தனர்.

அதனை ஆராய்ந்த யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன், வங்கியின் கணக்கு அறிக்கையைப் பெற்று மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து மோசடியின் பின்னணியில் உள்ளோரைக் கைது செய்யுமாறு உத்தரவிட்டார்.

http://globaltamilnews.net/2018/102636/

1 hour ago, பிழம்பு said:

பெறுமதியான பரிசில் கிடைத்துள்ளது எனவும் அதனை உரிய முகவரியில் சேர்ப்பிப்பதற்கு வங்கியில் உடனடியாக பணம் வைப்பிலிடுமாறு கோரி அழைக்கப்பட்ட தொலைபேசியில் வந்த தகவலை நம்பிக்கை வைத்து வங்கியில் 93 ஆயிரத்து 800 ரூபா பணத்தை வைப்பிலிட்டு ஏமாற்றமடைந்த குடும்பத்தலைவர்

கணிசமான யாழ்ப்பாணத் தமிழர்கள் குறுக்குவழியில் செல்வதில் அதீத நாட்டமுடையவர்கள். இதனால் அத்தகையவர்கள் மதிமயங்கி செயற்படுவதை தாராளமாக காணலாம். அதில் இவரும் ஒருவர். இவரின் மூடத்தனத்துக்கு இவரிடமிருந்து தண்டப் பணத்தை அறவிடுவதே சிறந்த தீர்ப்பாக அமையும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு மாதமாகி விட்டது. ஆள் சவூதிலயோ, கொரியாவிலோ....

பண்ணியில் பண்ணிப் பாருங்கோவன்.

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, Nathamuni said:

ஒரு மாதமாகி விட்டது. ஆள் சவூதிலயோ, கொரியாவிலோ....

 பண்ணியில் பண்ணிப் பாருங்கோவன்.

காரியம் கை கூடும்

நாள் செல்லும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.