Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் தேவியிலிருந்து பிரிந்து சென்ற ரயில் பெட்டிகளால் பதற்றமடைந்த பயணிகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வவுனியாவில் நேற்று நண்பகல் 11.30 மணியளவில் கொழும்பு நோக்கி பயணித்த  யாழ்தேவி ரயில் ஈரப்பெரியகுளம் ரயில் நிலையத்திற்குச் செல்லும் வழியில் ரயில்ப் பெட்டியின் கடைசி இரு பெட்டிகளும் துண்டித்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

train.jpg

 இதன்போது இறுதி பெட்டியில் கடமையிலிருந்த ரயில்  திணைக்களத்தின் உத்தியோகத்தர் ஒருவர் கீழே வீழந்து காயமடைந்துள்ளார். இவ்விபத்து குறித்து அனுராதபுரம் ரயில்  நிலையத்தினர்  விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், 

நேற்று காலை யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற யாழ் தேவி ரயில்  வவுனியா ரயில்  நிலையத்தினை சென்றடைந்து நண்பகல் 11.30 மணியளவில் கொழும்பை நோக்கி தனது பயணத்தை மேற்கொண்டது. 

 

 

 

அதன்போது ஈரப்பெரியகுளம் ரயில்  நிலையத்திற்குச் செல்லும் வழியில் திடீரென்று ரயில் பெட்டியின் கடைசிப் பெட்டிகள் இரண்டு தனியாக துண்டித்து பிரிந்துள்ளது. இதனை அவதானித்த கடைசிப் பெட்டியிலிருந்த ரயில்  நிலைய உத்தியோகத்தர் தன்னிடமிருந்த சிவப்புக் கொடியினை அசைத்து ரயிலுக்கு சைகை காட்டியுள்ளார். 

 

உடனடியாக ரயில் நிலையத்தினை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முயற்சித்த ரயில் சாரதி பல முயற்சியின் பின்னர் ரயிலை நிறுத்தியுள்ளார். துண்டித்த இரு பெட்டிகளும் வேகமாச் சென்று ஒன்றுடன் ஒன்று  இரண்டும் மோதிய வேகத்தில் சிவப்புக்கொடியுடன் கடைசிப் பெட்டியில் நின்றிருந்த ரயில்  திணைக்களத்தின் உத்தியோகத்தர் தூக்கி வெளியே வீசப்பட்டு தலையில் காயமடைந்துள்ளார். அத்துடன் கடைசிப் பெட்டியிலிருந்த சிறுவர்கள் உட்பட சிலருக்கும் சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளது.

துண்டித்த பெட்டியை திரும்பவும் இணைத்துக்கொண்டு அனுராதபுரம் நோக்கிச் சென்ற ரயில்  அனுராதபுரம் ரயில்  நிலையத்தில் இவ்விபத்து குறித்து ரயில்  சாரதி முறைப்பாட்டினை மேற்கொண்டார். காயமடைந்த ரயில்  திணைக்களத்தின் உத்தியோகத்தருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு ரயில்  கொழும்பை நோக்கிய பயணத்தினை மேற்கொண்டுள்ளதாக ரயில்  நிலையத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.http://www.virakesari.lk/article/45752

  • கருத்துக்கள உறவுகள்

சீனாவின் அன்பளிப்பு.. ஹிந்தியாவின் ரயில் பாதை.. சிங்களத்தின் சேவை.. என்றால்.. இதெல்லாம் சகஜமே. ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

தமிழ் மண்ணை விட்டு வரமுடியாது என்று அந்த பெட்டிகள் அடம்பிடித்துள்ளன.

 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, போல் said:

தமிழ் மண்ணை விட்டு வரமுடியாது என்று அந்த பெட்டிகள் அடம்பிடித்துள்ளன.

 

யாழ்ப்பாணத்தான் பிரிவினை கேட்டான் என்றால் இப்ப ரயில் பெட்டிகளும் பிரிவினை கேட்குதுகள்....உந்த ரயில் பெட்டிகளுக்கு இணைந்திருப்பது எப்படி என புனர்வாழ்வு வழங்க  வேண்டும் .....சிங்க லே ?

  • கருத்துக்கள உறவுகள்

இயந்திர கோளாறு விமானத்திலே ஏற்பட்டு அது வீழ்வதும் வெடிப்பதும் வெளிநாடுகளில் சகஜம் வளர்ச்சியடைந்த நாடுகள் இப்படி இருக்க  இந்த பழைய கால ரெயில் பெட்டி மட்டும் கழண்டது எப்படியெல்லாம் நம்ம ஆட்களை யோசிக்க வைக்கிறது :grin:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.