Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

TNAயின் ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்க வெற்றிபெற்றார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 
December 12, 2018

ranil-1.jpg?zoom=1.2100000262260437&resi

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவி வகிப்பதற்கு பாராளுமன்றத்தில் நம்பிக்கை இருப்பதாக தெரிவிக்கும் பிரேரணை பெரும்பான்மை வாக்குகளுடன் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த பிரேரணை மீதான வாக்கெடுப்புக்கு ஆதரவாக 117 வாக்குகள் கிடைத்திருந்தன.

 

இந்த வாக்கெடுப்பின் போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் 14 பேர் ஆதரவாக் வாக்களித்ததுடன், மக்கள் விடுதலை முன்னணியில் உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் பாராளுமன்ற அமர்வு இன்று (12.12.18) பகல் 1 மணிக்கு ஆரம்பமானது.

இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸ பாராளுமன்றத்தில் இந்த பிரேரணையை சமர்பித்திருந்ததுடன், மங்கள சமரவீர ஆமோதித்து வழிமொழிந்தார். எனினும் இன்றைய பாராளுமன்ற அமர்வினையும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பினர் புறக்கணிக்கனித்திருந்தனர்

http://globaltamilnews.net/2018/106391/

Edited by பிழம்பு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ரணிலுக்கு ஆதரவாக வாக்களித்ததன் காரணம் இதுதான் - த.தே.கூ.

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம் )

அரசாங்கதின்  பங்காளியாக இணையாது எதிர்க்கட்சியாக இருந்து ஆதரவு வழங்குவது என்ற இணக்கப்பாட்டின் அடிப்படையிலேயே ரணில் விக்ரமசிங்க மீதான நம்பிக்கைப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்ததாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தெரிவித்தனர்.  

ranil.jpg

ரணில் விக்கிரமசிங்க மீண்டும் பிரதமராக  நியமிக்கப்பட வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியால் இன்று புதன்கிழமை  பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கைப் பிரேரணைக்கு ஆதரவு தெரிவித்து உரையாற்றுகையிலேயே கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தனர். 

மேலும் இந்த முடிவின்போது எந்தவொரு முன் நிபந்தனையையும் நாம் முன்வைக்கவில்லை. நாட்டின் ஸ்திரத்தன்மையை யோசித்தே இந்த முடிவை எடுத்துள்ளோம். இருந்தபோதும் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் சகல தரப்பினரிடமும் கலந்துரையாடியிருந்தோம்.

ஐக்கிய தேசிய முன்னணியிடமும் இது பற்றிக் கலந்துரையாடினோம். இன்று ரணில் விக்ரமசிங்கவின் உரையில் புதிய அரசியலமைப்பைக் கொண்டுவருவதகாவும், பிரிக்கப்படாது பிளவுபடுத்த முடியாத நாட்டுக்குள் அரசியல் தீர்வொன்றை முன்வைப்போம் தெளிவாகக் கூறியிருந்தார் எனவும் கூட்டமைப்பினர் இதன்போது தெரிவித்தனர்.

http://www.virakesari.lk/article/46267

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

47573055_2206524682725113_17900890383638

 

ஆதரவு அளிக்க, 4 பிரதான முன்நிபந்தனைகள் உட்பட, வேறு சில நிபந்தனைகளையும் விதித்து பிரதான நான்கு நிபந்தனைகளை உறுதி செய்வதாக எழுத்தில் கையொப்பமிட்டு தருமாறு TNA வலியுறுத்தியுள்ளது செய்தி வெளியாகியுள்ளது.

பிரதான 4 நிபந்தனைகள் பின்வருமாறு உள்ளது.

1. தமிழ் சமூகம் எதிர்கொள்ளும் பிரதான பிரச்சனைகளுக்கு காலதாமதமின்றிய உடனடி தீர்வு.

2. அரசியல் கைதிகள் விடுதலை.

3. இலங்கை அரச படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து தனியார் காணிகளில் இருந்தும் படையினரின் வெளியேற்றம்.

4. வடக்கு கிழக்கு எங்கும் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி சார்ந்த அனைத்து திட்டங்களினதும் நிகழ்ச்சிகளினதும் அனைத்து முக்கிய பதவிகளையும் TNA க்கு தர வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப தீர்வு கிடைத்த மாதிரித்தான் போல

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தர் முதலில் மகிந்தரை வீட்டில் போய் சந்தித்தார். ஆதரவு அபரிமிதமாக கிடைக்கும், உங்கள் ஆதரவு எனக்கு தேவை இல்லை என நினைத்த மகிந்த கோரிக்கைகளுக்கு இணங்க முடியாது என இடை நடுவில் எழுந்து உள்ளே போய் விட்டார்.

இப்ப மகிந்த கவலைப்படுவார்.

சம்பந்தர் ஐயா இப்ப செய்வது சரியானது. இன்னும் 11 மாதங்களில் ஜனாதிபதி தேர்தல். ரணிலை ஆதரிப்பதே சரியானது. அதே வேளை, இந்தளவுக்கு துணிந்து வந்தவர்கள் இன்னும் சில வேலைகளை துணிந்து செய்ய வேண்டும்.

இலங்கை வரலாறில் தென் இலங்கை அரசியல் குழப்பங்கள் நடக்கும் போது, ஓரமாக நின்று நடப்பதை ஏற்றுக் கொள்ளும் தமிழர் தரப்பு, இம்முறை பூந்து விளையாடுவது நல்ல நிலை.

உயர் நீதிமன்ற தீ ர்ப்பு, மைத்திரியின் பிரகடனங்கள் அனைத்தும் அரசியலமைப்புக்கு விரோதம் என கூறி, அக்டோபர் 26 நிலைமைக்கு செல்ல வைக்கும். அதன் மூலம் ரணில் பிரதமராக தொடர்பவராக இருப்பார். 

1. மைத்திரிக்கு எதிராக பதவி நீக்க தீர்மானம் கொண்டு வந்தால் ஆதரவு தர மாட்டோம் என கூறினாலும், மைத்திரி வழிக்கு வராவிடில் ஆதரவு கொடுக்கத்தான் வேண்டும்.


2. அதன் மூலம் பிரதமர் ரணில் ஜனாதிபதியாக முடியும்.  


3. சுதந்திர கட்சி, பதவிக்கு அலைபாயும், நிமல் சிறிபால, சரத் அமுனுகம போன்ற 25 பேரை இழுத்து அமைச்சரவைக்கு கொண்டுவருவதன் மூலமும், ஜேவிபி 6 பேருடன் தேவையான,  150 பேரை கொண்டு 2/3 பலம் சேர்த்துக் கொண்டு, தீர்வுகாண அரசியல் அமைப்பு மாறுதலை கொண்டு வர முடியும். இதற்காக ஐதேக உறுப்பினர்கள் அமைச்சர் பதவிகளை விட்டுக் கொடுக்க வேண்டி இருக்கும்.


4.வியாழேந்திரன், சிவசக்தி ஆனந்தன், டக்ளஸ், அங்கஜன் போன்ற தமிழ் உறுப்பினர்களின் ஆதரவு பெறப் பட வேண்டும்


5. வழக்குகளை இறுக்குவதன் மூலம் மகிந்த எதிர்ப்பினை குறைக்க முடியும்.

இதனை ராஜதந்திரிகளுக்கு தெரிவித்து செய்து பார்க்கலாம்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த மூன்றரை ஆண்டு காலத்தில்தமிழ் மக்களின் காணி அபகரிப்பு, இராணுவ கட்டுப்பாடு போன்ற இருக்கவில்லை. அதனால்தான் ரணிலுக்கு ஆதரவு வழங்கினோம்.

dsc_9928.jpg

தமக்கு வேண்டாத ஒருவர் அதிகாரத்திற்கு வரக் கூடாது இருப்பதற்காகவே பாராளுமன்றத்தில் நேற்று
இடம்பெற்ற ரணில் விக்ரமசிங்க மீதான நம்பிக்கை வாக்கெடுப்புக்கு ஆதரவாக தமிழ் தேசிய கூட்டமைப்பு  வாக்களித்ததாக அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சி. சிவமோகன் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியுடன் எவ்வித உடன்படிக்கையும் ஏற்படுத்திக் கொள்ளவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷவின் காலத்தில் தமிழ் மக்களின் காணி அபகரிப்பு, இராணுவ கட்டுப்பாடு போன்ற பல பிரச்சினைகளை வடக்கு கிழக்கு மக்கள் எதிர்கொண்டதாகவும், அந்தப் பிரச்சினைகள் கடந்த மூன்றரை ஆண்டு காலத்தில் இருக்கவில்லை என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

https://www.madawalaenews.com/2018/12/cc.html

  • கருத்துக்கள உறவுகள்

ரணிலின் தனிப்பட்ட வாக்குறுதிகள் நாடாளுமன்றத்தின் வாக்குறுதியா அல்லது ஜனாதிபதியின் வாக்குறுதியா? இவை இரண்டுமே இல்லாதபோது ரணிலால் ஒரு துரும்பைக்கூட தமிழருக்காக தூக்கிப்போட முடியாது. ரணிலுக்கு இப்போதைக்கு தனது பதவியை தக்கவைப்பதுதான் முக்கியம். பின்னர் தமிழரை ஏமாற்ற எத்தனையோ சாக்குபோக்குகளை சொல்லிக்கொள்ளலாம். நம்ப ஆளுங்க இப்பிடியே பிறந்தாங்களா இல்ல பிறந்தபின் தான் இப்பிடி ஆனாங்களா தெரியலை.

 

  • கருத்துக்கள உறவுகள்

image_1544668337-0be77adf79.jpg

  • கருத்துக்கள உறவுகள்

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.