Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திடீரென மேற்கு இந்தோனேசியாவை தாக்கிய சுனாமி அலை: 43 பேர் பலி- 500-க்கும் மேற்பட்டோர் காயம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

திடீரென மேற்கு இந்தோனேசியாவை தாக்கிய சுனாமி அலை: 43 பேர் பலி- 500-க்கும் மேற்பட்டோர் காயம்

மேற்கு இந்தோனேசியாவில் சுனாமி அலை தாக்கியதில் ஜாவா - சுமத்ரா இடையிலான பகுதியில் கடும் சேதம் ஏற்பட்டு, 43 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். #Tsunami

திடீரென மேற்கு இந்தோனேசியாவை தாக்கிய சுனாமி அலை: 43 பேர் பலி- 500-க்கும் மேற்பட்டோர் காயம்
 
இந்தோனேசியாவில் உள்ள கடற்கரை பகுதியான சுந்தா ஸ்ட்ரேய்ட் பகுதியில் உள்ளூர் நேரப்படி நேற்றிரவு 9.27 மணிக்கு திடீரென சுனாமி அலை தாக்கியது. இந்த தாக்குதலுக்கு பாண்டேக்லாங்க், செராங் மாவட்டங்களும் உள்ளானது. இதில் 43 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 550-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். 430 வீடுகள், 9 ஹோட்ட்கள், 10 படகுகள் சேதமடைந்தது.

201812230900459002_1_Tsunami231201._L_st
 
அனாக் கிராகட்டாயு என்ற எரிமலை வெடித்ததன் மூலம் இந்த சுனாமி அலை தாக்குதல் ஏற்பட்டிருக்கலாம் என இந்தோனேசிய பேரிடர் தடுப்பு ஏஜென்சி தெரிவித்துள்ளது. சுனாமி ஏற்பட்டதற்கான உண்மையான காரணம் இதுவரை தெரியவில்லை.
  • கருத்துக்கள உறவுகள்

சுனாமியால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 62 ஆக அதிகரிப்பு(2ஆம் இணைப்பு)

இந்தோனேஷியாவில் எரிமலை வெடிப்பைத் தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 62 ஆக அதிகரித்துள்ளது.

தொடர்ச்சியாக மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகின்றது.

இந்தோனேஷியாவில் சுனாமி – 43 பேர் உயிரிழப்பு

இந்தோனேஷியாவில் எரிமலை வெடிப்பைத் தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியால் 43 பேர் உயிரிழந்துள்ளதுடன், 584 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக பேரிடர் முகமைத்துவ தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்றிரவு (சனிக்கிழமை) 9.30 மணியளவில் தாக்கிய இந்த சுனாமியினால், பெருமளவு மக்கள் காணாமற்போயுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாமென அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், குடியிருப்புகள், கட்டடங்கள் மற்றும் வீதிகள் சேதமடைந்துள்ளதோடு, பெருமளவு சொத்துக்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்படுவதோடு, காயமடைந்தவர்களை வைத்தியசாலையில் அனுமதிக்கும் செயற்பாடுகளும் தொடர்ச்சியாக இடம்பெற்றுவருவதாக அந்த நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, இந்தோனேஷியாவின் வளிமண்டலவியல் மற்றும் காலநிலை ஆய்வு மையத்தின் தகவலுக்கு அமைய, சுனாமி பேரலைகள் ஏற்படுவதற்கு நில அதிர்வு காரணமல்ல என்றும், அனக் கரக்காட்டோ எனும் எரிமலை வெடிப்பின் விளைவாக இருக்கலாம் என்றும் தற்போது சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

http://athavannews.com/எரிமலை-வெடிப்பைத்-தொடர்ந/

  • கருத்துக்கள உறவுகள்

DvEGKn3UYAASoYs.jpg

இந்தோனேசிய ஆழிப்பேரலை: இதுவரை 222 பேர் உயிரிழப்பு – 843 பேர் காயம் (4ஆம் இணைப்பு)

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பை அடுத்து ஏற்பட்ட ஆழிப்பேரலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 222 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் இந்த அனர்த்தத்தில் இதுவரை 843 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 28 பேரை காணவில்லை என்றும் இந்தோனேசியாவின் தேசிய பேரிடர் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் சுடோபோ பூர்வோ நகுரோ தெரிவித்துள்ளார்.

நேற்றிரவு (சனிக்கிழமை) 9.30 மணியளவில் தாக்கிய இந்த சுனாமியினால், குடியிருப்புகள், கட்டடங்கள் மற்றும் வீதிகள் சேதமடைந்துள்ளதோடு, பெருமளவு சொத்துக்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்படுவதோடு, காயமடைந்தவர்களை வைத்தியசாலையில் அனுமதிக்கும் செயற்பாடுகளும் தொடர்ச்சியாக இடம்பெற்றுவருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஆழிப்பேரலை காரணமாக இதுவரை 168 பேர் உயிரிழப்பு (3ஆம் இணைப்பு)

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பை அடுத்து ஏற்பட்ட ஆழிப்பேரலை காரணமாக இதுவரை 168 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த அனர்த்தத்தில் இதுவரை 745 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 30 பேரை காணவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தொடர்ந்தும் மீட்புப்பணிகள் இடம்பெற்றுவருவதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

http://athavannews.com/எரிமலை-வெடிப்பைத்-தொடர்ந/

  • கருத்துக்கள உறவுகள்

இந்தோனீசியாவில் சுனாமி - 220 பேர் பலி, 843 பேர் காயம்

 
இந்தோனீஷியாபடத்தின் காப்புரிமை EPA

இந்தோனீசியாவின் சுந்தா நீரிணையில் ஏற்பட்ட சுனாமியில் 220க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர் மற்றும் 843 பேர் காயமடைந்துள்ளனர் என்று அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உள்ளூர் நேரப்படி ஞாயிறு அதிகாலை இந்தப் பேரிடர் அங்கு நிகழ்ந்துள்ளது.

ஜாவா மற்றும் சுமத்ரா தீவுகளுக்கு இடையில் அமைந்துள்ள சுந்தா நீரிணை ஜாவா கடலையும், இந்தியப் பெருங்கடலையும் இணைக்கிறது. இந்த நீரிணையில் அமைந்துள்ள க்ரகடோவா தீவில் இருக்கும் எரிமலை வெடித்ததால், நிலத்துக்கு அடியில் உண்டான சரிவுகள் சுனாமி பேரலைகளை உண்டாகியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

எந்த ஒரு அறிவிப்புமின்றி சுனாமி தாக்கியதில் நூற்றுக்கணக்கான கட்டடங்கள் சேதமாகின.

தற்போதைய நிலவரம்?

மீண்டும் சுனாமி ஏற்படும் அச்சத்தால் மக்களை கடற்கரைக்கு அருகில் இருக்கும் பகுதிகளில் இருந்து வெளியேறுமாறு பேரிடர் மேலாண்மை முகமையின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தோனீசியாவின் பல்வேறு சுற்றுலாத் தளங்களை சுனாமி தாக்கியது.

இந்தோனீசியாவின் பல்வேறு சுற்றுலாத் தளங்களை சுனாமி தாக்கியது.

இந்தோனீசியாபடத்தின் காப்புரிமை Getty Images

கடற்கரை மற்றும் தேசிய பூங்காவுக்கு புகழ்பெற்ற ஜாவாவில் உள்ள பண்டெக்லாங் மாவட்டத்தில் 100க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

சுமத்ராவில் இருக்கும் ரிசார்ட் ஒன்றில், பேண்ட் குழுவினர் பாடிக்கொண்டே இருக்கும் போது பெரிய அலை ஒன்று தாக்குபடியான வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

"எங்கும் இடிபாடுகள் சிதறிக்கிடக்கின்றன. இடிந்த கார்கள், நொருங்கிய மோட்டார் சைக்கில், கட்டட இடிபாடுகளையே எல்லா இடங்களிலும் காண முடிகிறது" என செஞ்சிலுவை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கார்கள் மற்றும் கண்டெய்னர்கள் 10 மீட்டர் தூரம் வரை இழுத்து செல்லப்பட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

எரிமலை வெடித்ததால் சுனாமி ஏற்பட்டதா என அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்.

1883ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் இந்த க்ரகடோவா எரிமலை வெடித்துச் சிதறியதுதான், நவீன வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட மிகப்பெரிய எரிமலைச் சீற்றமாகக் கருதப்படுகிறது.

பன்தேக்லங், தெற்கு லாம்பங் மற்றும் சேராங் பகுதிகளில் உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன.

இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புண்டு என்றும் முழு நிலவு தினத்தையொட்டி அலைகளின் வேகம் அதிகமாக இருந்ததும் இழப்பை அதிகரித்திருக்கலாம் என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர்.

'இரு பெரும் அலைகள்'

எரிமலை வெடிப்புகளை படம் எடுக்கும், நார்வே நாட்டைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் ஆய்ஸ்டன் லண்ட் ஆண்டர்சன் இரு பெரும் அலைகள் உண்டானதாகக் கூறுகிறார்.

"நான் கடற்கரையில் தனியாக இருந்தேன். எரிமலை வெடிப்பை புகைப்படம் எடுக்க முயற்சி செய்துகொண்டிருந்தேன். அப்போது இரு பெரும் அலைகள் எழுந்தன. ஆனால், முதல் அலை அவ்வளவு வலிமையானதாக இல்லை. "

Volcano tsunamiபடத்தின் காப்புரிமை OYSTEIN LUND ANDERSEN

"முதல் அலைக்குப் பிறகு ஓடிச்சென்று விடுதி அறையில் தூங்கிக்கொண்டிருந்த என் மனைவி மற்றும் மகனை எழுப்பிக்கொண்டிருந்தேன். அலைச் சத்தம் அதிகமாகக் கேட்டது. சன்னல் வழியாகப் பார்த்தபோது மிகப்பெரிய அலை வந்துகொண்டிருந்தது."

"அந்த அலை நாங்கள் தங்கியிருந்த விடுதியையும் தாண்டிச் சென்றது. அங்கிருந்த கார்கள் அடித்துச் செல்லப்பட்டன," என்றார்.

அவரது குடும்பமும், அங்கிருந்த பிறரும் விடுதியில் இருந்து வெளியேறி, அருகில் உள்ள காட்டுக்குள் சென்றனர். அங்குள்ள ஒரு குன்றின்மேல் தற்போது தஞ்சமடைந்துள்ளதாக அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

"எரிமலை வெடிப்புக்கு பின் வெளியாகும் பாறைக்குழம்பு, நிலத்தின் அடியில் உள்ள குளிர்ந்த பாறைகளுக்கு இடையில் செல்லும்போது, நிலத்தின் மேற்பரப்புக்கு கீழ் சரிவை உண்டாக்கும்," என்கிறார் எரிமலையியலாளர் ஜெஸ் ஃபீனிக்ஸ்.

இந்தோனீஷியா

"க்ரகடோவா தீவில் உள்ள எரிமலையின் ஒரு பகுதி நீருக்கடியில் இருப்பதால், எரிமலை வெடிப்பு நிலத்துக்கடியில் உண்டாக்கும் சுனாமி ஏற்படும்."

இந்தோனீசியாவின் சுலவேசி தீவில் கடந்த செப்டம்பர் மாதம் உண்டான சுனாமியால் 2000க்கும் அதிகாமானவர்கள் உயிரிழந்தனர்.

சரியாக பதினான்கு ஆண்டுகளுக்கு முன்பு டிசம்பர் 26, 2004 அன்று 14 ஆசிய நாடுகளில் உண்டான சுனாமியால் 2.28 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் இறந்தனர். அந்த சுனாமிக்கு காரணமான நிலநடுக்கம் இந்தோனீசியாவின் வடக்குப் பகுதியை மையமாகக் கொண்டிருந்தது.

மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதா?

இந்தோனீஷியாபடத்தின் காப்புரிமை Reuters

இந்தோனீசியாவின் பேரிடர் மேலாண்மை முகமையின் செய்திதொடர்பாளர், "முதலில் அது சுனாமி அல்ல, கடல் கொந்தளிப்பு என்றும் எனவே, மக்கள் அச்சப்பட வேண்டாம் என்றும் கூறப்பட்டது" என்று தெரிவித்தார்.

பிறகு நிலநடுக்கம் இல்லாததால் குழப்பம் ஏற்பட்டுவிட்டதாக அவர் மன்னிப்பு கோரினார்.

இதற்கிடையில் ஞாயிறன்று தவறுதலாக விடப்பட்ட சுனாமி எச்சரிக்கை, மக்களிடையே பெரும் பலத்த பீதியை ஏற்படுத்தியது.

https://www.bbc.com/tamil/global-46663633

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் ஏற்பட ஏதும் வாய்ப்பிருந்தால் அறியத்தாருங்கள் சனம் மீண்டும் அதிகமாக இருப்பது கரையோரங்களில் தான்  

  • கருத்துக்கள உறவுகள்

இந்த சுனாமி இயற்கையாக வருகின்றதா அல்லது உருவாக்கப்படுகின்றதா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, ரதி said:

இந்த சுனாமி இயற்கையாக வருகின்றதா அல்லது உருவாக்கப்படுகின்றதா?

கடவுள் இல்லையென்று சொல்பவர்கள் ஏன் இப்படியான திரிகளில் வந்து கருத்து எழுதுவதில்லை?

அண்மைக்காலமாக டிசம்பர் 23,24,25ம் திகதிகளில் இயற்கை அனர்த்தங்கள் அதிகமாகிக் கொண்டேவருகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ரதி said:

இந்த சுனாமி இயற்கையாக வருகின்றதா அல்லது உருவாக்கப்படுகின்றதா?

 

 

இப்போது ஏற்பட்ட சுனாமி... ஒரு எரிமலை வெடிப்புக்கு பின் உருவாகியதாக  சொல்கிறார்கள்.

2006´ம் ஆண்டு இலங்கையை தாக்கிய சுனாமியின் போது... கடலுக்கு அடியில் இரண்டு பூமித் தட்டுகள்  ஒன்றுடன், ஒன்று மோதிய போது...  சுனாமி உருவாக்கியதாக கூறினார்கள். 

கடலுக்கு அடியில்... அணுகுண்டு பரிசோதனை செய்யும் போதும்... பாரிய அலைகள் கரையை தாக்கும்.
அதனையும்... சுனாமி என்றே...   காணொளியில் கூறுகின்றார்கள்.

 

########################## ############################# #########################################

indonesia-tsunami-2-720x450.jpg

indonesia-tsunami-3.jpg

இந்தோனேசிய சுனாமி அனர்த்தம்: உயிரிழப்புகள் 281ஆக அதிகரிப்பு

இந்தோனேசியாவில் ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 281ஆக அதிகரித்துள்ளது.

அத்தோடு காயமடைந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது.

அனக் கிரகட்டு என்ற எரிமலை வெடித்ததைத் தொடர்ந்து நேற்று முன்தினம் ஏற்பட்ட சுனாமி, சுமாத்ரா மற்றும் ஜாவா தீவுகளை கடுமையாக தாக்கியது. இதில் கட்டங்கள், குடியிருப்புகள் என அனைத்தும் அலைகளில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.

பலர் காணாமல் போயுள்ள நிலையில், உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாமென அஞ்சப்படுகிறது.

காணாமல் போனோரை கண்டறியும் நடவடிக்கை இன்று (திங்கட்கிழமை) மூன்றாவது நாளாக தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

காயமடைந்தவர்களுக்கு ஆங்காங்கே கொட்டகைகள் அமைத்து அவசர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதோடு, நிவாரண பணிகளும் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த வருடத்தில் இந்தோனேசியாவை உலுக்கிய இரண்டாவது சுனாமி அனர்த்தம் இதுவாகும். கடந்த செப்டெம்பர் மாதம் 28ஆம் திகதி சுலவெசி தீவை சுனாமி பேரலை தாக்கியிருந்தது.

கிறிஸ்மஸ் மற்றும் புதுவருட விடுமுறைக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்களுக்கு இந்த ஆழிப் பேரலை அனர்த்தம் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

http://athavannews.com/இந்தோனேசிய-சுனாமி-அனர்த-2/

Edited by தமிழ் சிறி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.