Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புதுக்குடியிருப்பு – மருதமடுக் குளம் உடைப்பெடுப்பு: சீரமைப்புப் பணிகளில் இராணுவம் தீவிரம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புதுக்குடியிருப்பு – மருதமடுக் குளம் உடைப்பெடுப்பு: சீரமைப்புப் பணிகளில் இராணுவம் தீவிரம்!

mullai-2-718x450.jpg

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மருதமடுக்குளம் உடைப்பெடுத்ததையடுத்து அதனைச் சீரமைக்கும் பணிகளில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த குளத்தினது வான்பாயும் பகுதி உடைப்பெடுத்ததை உடனடியாக அவதானித்து புனரமைப்புப் பணிகளை விரைந்து மேற்கொண்டதால் ஏற்படவிருந்த பாரிய அனர்த்தம் தவிர்க்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் தற்போது பல பகுதிகளில் வெள்ள நீர் வடிந்து வருகின்றது. தாழ்வான பகுதிகளில் தற்போதும் வெள்ளம் காணப்படுவதுடன், பல ஏக்கர் வயல் நிலங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன.

முல்லைத்தீவு மாவட்டத்தில் மழை வெள்ளப் பாதிப்பினால் 6254 குடும்பங்களை சேர்ந்த 19841 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 28 இடைத்தங்கல் முகாம்களில் 1623 குடும்பங்களைச்சேர்ந்த 4932 பேர் தங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

http://athavannews.com/புதுக்குடியிருப்பு-மரு/

 

  • கருத்துக்கள உறவுகள்

ஆமியும் எவ்வளவு காலம் சும்மாய் இருக்கிறது?...அவர்களுக்கும் வேலை வேண்டும் அல்லவா

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, ரதி said:

ஆமியும் எவ்வளவு காலம் சும்மாய் இருக்கிறது?...அவர்களுக்கும் வேலை வேண்டும் அல்லவா

ஆமிக்கு வேலை சரி .ஆனால் மக்களுக்கு 😯

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, ரதி said:

ஆமியும் எவ்வளவு காலம் சும்மாய் இருக்கிறது?...அவர்களுக்கும் வேலை வேண்டும் அல்லவா

ஒவ்வொரு நாட்டின் இராணுவத்தினது வேலைகளில் இதுவும் அடக்கம். மக்களை கொல்வது அல்ல....

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

ஒவ்வொரு நாட்டின் இராணுவத்தினது வேலைகளில் இதுவும் அடக்கம். மக்களை கொல்வது அல்ல....

 ஏதோ செய்யுறாங்கள் போல :unsure:

48426509-2114605588561908-24576199507941

  • கருத்துக்கள உறவுகள்

உலகத்தில் அனர்த்த நேரத்தில் இராணுவம் உதவுவது வழமை....

  • கருத்துக்கள உறவுகள்
On ‎12‎/‎23‎/‎2018 at 7:30 PM, சுவைப்பிரியன் said:

ஆமிக்கு வேலை சரி .ஆனால் மக்களுக்கு 😯

தமிழரின் சாபக்கேடு 😟

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.