Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

“நான் கொல்வதற்குத் திட்டமிட்ட ஒரு மனிதர் என்றால் அது பிரபாகரனே” - சரத் பொன்சேகா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

“நான் கொல்வதற்குத் திட்டமிட்ட ஒரு மனிதர் என்றால் அது பிரபாகரனே” - சரத் பொன்சேகா

December 25, 2018

“அமைச்சராக வேண்டுமெனில் மன்னிப்புக் கேட்க வேண்டுமென சிறிசேன என்னிடம் கோரினார்”

sarath-fonseka-prabhakaran.jpg?zoom=3&re

அமைச்சுப் பதவி வேண்டுமென்றால், மன்னிப்புக் கோர வேண்டுமென, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னைக் கேட்டதாக, இலங்கையின் முன்னாள் முன்னாள் ராணுவத் தளபதியும், ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

மாவனல்லை பிரதேசத்தில் திங்கட்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், ஓர் அமைச்சுப் பதவிக்காக ஜனாதிபதியிடம் தான் மன்னிப்புக் கோரப் போவதில்லை எனவும் இதன்போது அவர் தெரிவித்தார்.

இலங்கையில் அண்மையில் ஏற்பட்டிருந்த அரசியல் நெருக்கடியின்போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா கடுமையாக விமர்சித்து வந்தார்.

இதன் காரணமாக, அண்மையில் ஐக்கிய தேசியக் கூட்டணியின் அமைச்சரவை நியமிக்கப்பட்டபோது, சரத் பொன்சேகாவுக்கு அமைச்சர் பதவி வழங்குமாறு, பிரதமர் ரணில் வி்க்ரமசிங்க ஜனாதிபதிக்கு பரிந்துரைத்திருந்த போதிலும், சரத் பொன்சேகாவின் பெயரை, ஜனாதிபதி அகற்றி விட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நிலையான அபிவிருத்தி மற்றும் வன விலங்குத் துறை அமைச்சினை இதன்போது சரத் பொன்சேகாவுக்கு வழங்குமாறும் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்ததாக அறிய முடிகிறது. அரசியல் நெருக்கடி ஏற்படுவதற்கு முன்னர் இருந்த அரசாங்கத்திலும், மேற்கூறிய அமைச்சுப் பதவியினையே சரத் பொன்சேகா வகித்திருந்தார்.

“மஹிந்த ராஜபக்ஸ தன்னைச் சிறையில் அடைத்த போதும், அவரிடம் மன்னிப்புக் கேட்டால் என்னை விடுவிப்பதாகக் கூறப்பட்டது.. ஆனால், அதனை தான் மறுத்து விட்டதாக குறிப்பிட்ட சரத் பொன்சேகா, ஒரு சாதாரண மன்னிப்புக்காக, தான் பல மில்லியன் ரூபாவுக்கு பேரம் பேசப்பட்டதாகவும்,  ஆனால், தன்னுடைய நிலையிலிருந்து தான் மாறவில்லை எனவும் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் அவ்வாறான உறுதியுடைய தான், ஓர் அமைச்சுப் பதவிக்காக மன்னிப்புக் கோருவேன் என எதிர்பாரக்கிறீர்களா” என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

இதேவேளை, தான் மக்களைக் கொல்வதற்கு ஒருபோதும் திட்டமிடவில்லை என்றும், தான் கொல்வதற்குத் திட்டமிட்ட ஒரு மனிதர் என்றால், அவர் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனே எனவும், இதன்போது சரத் பொன்சேகா கூறினார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கொல்வதற்கு அண்மையில் சதித் திட்டமொன்று தீட்டப்பட்டதாகவும், அதில் சரத் பொன்சேகாவும் சம்பந்தப்பட்டுள்ளார் எனவும், தகவல்கள் வெளியாகியிருந்த நிலையிலேயே, அவர் இதனை தெரிவித்தார்.

 

http://globaltamilnews.net/2018/107815/

 

  • கருத்துக்கள உறவுகள்

இவருக்குத்தான் வடக்கில் அவருக்குக் கணிசமான வாக்குகளை குத்தினார்கள் 

  • கருத்துக்கள உறவுகள்

பொன்சேகாவுக்கும் பிரபாகரனுக்கும் தனிப்பட்ட பகையோ.. குடும்பப் பகையோ கிடையாது.

இருந்தும்.. ஏன் பொன்சேகா.. பிரபாகரனை கொல்ல திட்டமிட்டார்..??!

காரணம் ஒன்று தான்.. பிரபாகரன்.. தமிழ் மக்களுக்கான உரிமையை பற்றி உறுதியாக பேசியதாலும்.. கோரி நின்றதாலும்.

ஆக பிரபாகரனை கொல்ல திட்டமிட்டேன் என்று பகிரங்கமாக சரத் பொன்சேகா சொல்வதன் ஊடாக.. அவர் தமிழ் மக்களுக்கு எதிரான நிலைப்பாடுகளுடன் இருந்திருக்கிறார்.. என்பது மீண்டும் நிரூபிக்கப்படுகிறது.

இதன் மூலம்.. இவர் தமிழினப் படுகொலையை திட்டமிட்டே அரங்கேற்றி இருக்கிறார். ஆகவே இவர் ஒரு இனப்படுகொலையாளி என்பது வெளிப்படை உண்மையாகி இருக்கிறது. 😯

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இவர் கூறிய  பச்சை இனவாத கருத்துக்களை தமிழ் மக்கள் அறிவர். தமிழ் மக்களை கொல்வதே இவரது நோக்கம். அதனையே செய்து முடித்தார். இப்போ சிங்கள மக்களுக்கு தான் ஒரு  கீரோ என காட்ட முயல்கிறார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
16 hours ago, கிருபன் said:

கொல்வதற்குத் திட்டமிட்ட ஒரு மனிதர் என்றால், அவர் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனே..

சரத் பொன்சேகா

நீங்கள் தமிழினத்தின் உரிமையை கேட்டவனை கொல்ல துடித்தவர். அது சிங்கள இரத்தத்தின் சுய குணம்.

தங்கள் அற்ப சொற்ப ஆசைகளுக்காக இன உரிமை கேட்டவன் அழிய வேண்டும் என நினைத்த ஈழத்தமிழர்களும் யாழ்களத்தில் இருக்கின்றார்கள்.

 2009ன் பின் தங்கள் வீட்டு மாமரத்தையே தறித்து விட்டு விழா எடுத்த அவர்கள்.....என்னத்தை சொல்ல...?

  • கருத்துக்கள உறவுகள்

Bildergebnis für fonseka in jail Ãhnliches Foto

 

Ãhnliches Foto  Ãhnliches Foto

மறியலுக்குள்.... கைத் தொலைபேசி வைத்திருந்தமைக்காக இவர் மீது,  வழக்கு போட்டிருக்க வேண்டும்.

On 12/25/2018 at 1:42 PM, கிருபன் said:

“நான் கொல்வதற்குத் திட்டமிட்ட ஒரு மனிதர் என்றால் அது பிரபாகரனே” - சரத் பொன்சேகா

அப்ப இனி இவரை கொலைகாரப் பொன்சேகா என்றழைக்கலாம்.

முதலில் உம்மை காப்பாற்றும் , அப்புறம் பார்க்கலாம் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.