Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகளுடன் தமிழ் தலைமைகள் செய்து கொண்ட டீலின் விளைவே TNA….

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளுடன் தமிழ் தலைமைகள் செய்து கொண்ட டீலின் விளைவே TNA….

December 25, 2018

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…

 

 

 

 

தமிழ் தேசிய கூட்டமைப்பின் உருவாக்கம் என்பது தமிழீழ விடுதலை புலிகளுடன் தமிழ் அரசியல் தலைமைகள் செய்து கொண்ட டீலின் ஊடானதே என வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் கே. சயந்தன் தெரிவித்துள்ளார்.

அகில இலங்கை கம்பன் கழகத்தின் ஏற்பாட்டில் கொழும்பில் நடைபெற்ற “சொல்விற்பனம்” எனும் விவாத அரங்கில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர்,

தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்படுவதற்கு முன்னரான நிகழ்வுகளை தொடர்ச்சியாக பார்த்தால் ஜனநாயக ரீதியான தேர்தலில் போட்டியிட்ட ஒவ்வொருவரும் சுட்டுப்படுகொலை செய்யபப்ட்டனர். அந்த வரிசையில் இறுதியாக உயிரிழந்தவர் கலாநிதி நீலன் திருச்செல்வம், அதற்கு முன்னர் திருகோணமலை நாடாளுமன்ற உறுப்பினர் தங்கத்துரை அதற்கு முன்னர் யாழ்.மாநகர சபை முதல்வர் சிவபாலன், அதற்கு முன்னர் சரோஜினி யோகேஸ்வரன் என தொடர்ச்சியாக கொல்லப்பட்டார்கள்.

அதனால் தேர்தலில் போட்டியிட்டு கொல்லப்படாமல் இருக்க வேண்டும் எனில் விடுதலைப்புலிகளுடன் டீலுக்கு போக வேண்டிய தேவை ஏற்பட்டது. அந்நிலையில் எல்லா கட்சிகளையும் சேர்த்து ஜனநாயக குரலாக இருப்போம் எனும் உத்தரவாதம் அளிக்க வேண்டி இருந்தது.

அதேபோன்று புலிகளுக்கும் ஒரு தேவை இருந்தது. தாமே தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என கூறிக்கொண்டு இருந்தார்கள். அதனை சர்வதேசம் ஏற்க தயாராக இருக்கவில்லை. அதனால் புலிகளுக்கு மக்களிடம் ஒரு ஆணை பெற வேண்டிய தேவை ஏற்பட்டது. அதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் விடுதலைப்புலிகளே தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என அங்கீகரிக்க வேண்டும் என கோரி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்கள்.

அதன் பின்னரே விடுதலைப்புலிகளை சர்வதேச சமூகம் அங்கீகரித்தது. அதுவே அங்கே நடந்தது. கட்சிகளுக்குள் தாங்கள் எவ்வாறு செய்யப்பட வேண்டும் என எவ்வாறு தான் இயங்க வேண்டும் அதன் இயங்கு தளம் என்ன அதன் செல் நெறி பற்றிய எந்த உடன்பாடும் அங்கு இருக்க வில்லை என தெரிவித்தார்.

 
 
 
  • கருத்துக்கள உறவுகள்

இதையும் பாருங்க...நம்ம கம்பவாருதி சாமி சொல்லுது நம்ம பொட்டருக்கு தான் அட்வைச பண்ணி அனுப்பினாரமே...அட இராமா இதை ஐ.பி.சி நியூசு சொல்லுது

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப்புலிகள் ஜனநாயக தலைவர்களை கொன்றார்கள்; அவர்களுடன் டீல் போடவே கூட்டமைப்பு உருவானதாம்: வரலாற்றை உருட்டிப்பிரட்டிய சயந்தன்!

December 25, 2018
RAVIRAJAH-2-696x464.jpg

தமிழ் தேசிய கூட்டமைப்பு கொள்கையின் அடிப்படையில் உருவாகவில்லை, விடுதலைப்புலிகளுடன் டீல் செய்து உருவாக்கப்பட்டது என கூறி, தமிழ் தேசிய கூட்டமைப்பின் உருவாக்கம் பற்றியும் தனக்கு எதுவும் தெரியாதென பகிரங்கமாக போட்டுடைத்துள்ளார் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் கே.சயந்தன்.

சமய சொற்பொழிவுகளை நடத்திவரும் கொழும்பு கம்பன்கழகம், அண்மையில் அரசியல்கட்சிகளை உள்ளடக்கி, எதிர்காலத்தில் தமிழ் மக்களிற்கு தலைமை தாங்க தகுதியானவர்கள் யார் என்ற கருத்தாடற்களம் ஒன்றை நடத்த திட்டமிட்டிருந்தனர். எனினும், பல கட்சிகள் அதில் கலந்துகொள்ளவில்லை. தமிழரசுக்கட்சி, புளொட், ரெலோ, ஈ.பி.டி.பி, தமிழ் மக்கள் கூட்டணி ஆகிய கட்சிகள் மாத்திரமே அதில் கலந்து கொண்டிருந்தன.

இதையடுத்து, மக்களின் கேள்விகளிற்கு, அரசியல்கட்சிகளின் பிரதிநிதிகள் பதிலளிக்கும் நிகழ்ச்சியாக அது மாற்றப்பட்டது.

இதன்போது, தமிழ் தேசிய கூட்டமைப்பு எப்படி உருவாக்கப்பட்டது? கொள்கையின் அடிப்படையல் உருவானதா?, ஏதும் நோக்கத்துடன் உருவானதா?, அல்லது வெறும் தேர்தல் கூட்டா? என எழுப்பப்பட்ட கேள்விக்கே, இப்படி தப்பும்தவறுமாக பதிலளித்தார் கே.சயந்தன்.

அவர் அதற்கு பதிலளிக்கும்போது- “கூட்டமைப்பு உருவானது, விடுதலைப்புலிகளுடன் செய்யப்பட்ட டீல். ஜனநாயக தேர்தலில் போட்டியிடுபவர்கள் வரிசையாக இலக்கு வைக்கப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டனர். நீலன் திருச்செல்வம், சரோஜினி யோகேஸ்வரன், தங்கத்துரை என வரிசையாக கொல்லப்பட்டனர். தேர்தலில் போட்டியிட்டு கொல்லப்படாமல் இருக்க விடுதலைப்புலிகளுடன் ஒரு டீலுக்கு போக வேண்டியிருந்தார்கள்.

விடுதலைப்புலிகள் தாமே ஏகபிரதிநிதிகள் என்று கூறினாலும், அதை சர்வதேச சமூகம் ஏற்றுக்கொள்ளவில்லை. கூட்டமைப்பின் ஊடாக அதை நிறுவிக்கொள்ள வேண்டிய தேவை அவர்களிற்கும் இருந்தது. கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் விடுதலைப்புலிகளே ஏக பிரதிநிதிகள் என குறிப்பிடப்பட்டிருந்தது. தேர்தலில் கூட்டமைப்பை மக்கள் அங்கீகரித்த பின்னர், விடுதலைப்புலிகளே ஏகபிரதிநிதிகள் என்பதை சர்வதேச சமூகம் அங்கீகரித்தது. இதைதவிர, கூட்டமைப்பு உருவாக்கத்தின் பின்னால் எதுவும் கிடையாது“ என குறிப்பிட்டார்.

இதன்பின்னர் உரையாற்றிய நீண்டகால அரசியல் செயற்பட்டாளரான ரெலோவின் எம்.கே.சிவாஜிலிங்கம், சயந்தன் கூறியவை தவறு என்பதை குறிப்பிட்டு, தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்டதன் வரலாற்று பின்னணியை புரிய வைத்திருந்தார்.

 

http://www.pagetamil.com/29700/

 

  • கருத்துக்கள உறவுகள்

கடைசியில் சாவகச்சேரியைச்சேர்ந்த நடராஜா ரவிராஜ்ஜையும் இயக்கம் போட்டுத்தள்ளியது என முடித்துவிட்டார். 

தவிர சரோஜினி யோகேஸ்வரனைப்போடும்போது அதிகால ஐந்துமணிக்கு மேல்ல் இருக்கும் அந்தவேளையில் மாவை சேனாதிராஜாவின் குடும்பம் இந்தியாவில் சுடப்படும்போது மாவையர் சரோஜினி யோகேஸ்வரன் அவர்களது வீட்டில்தான் நின்றார் அவருக்குச் சூடுபட்டதும் பின்னாலை மதில் பாய்ந்து தப்பி ஓடியதாக ஒருதகவல்

On 12/26/2018 at 3:35 AM, கிருபன் said:

வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் கே. சயந்தன் தெரிவித்துள்ளார்.

சயந்தன் தெரியாததை கதைக்காமல் தான் பேஸ்புக் ஊடாக பெண்களுடன் செய்ய முயற்சித்த அநாகரிக டீல்கள் பற்றி கதைக்கலாமே!

சயந்தன் தெரியாததை கதைக்காமல் கைது செய்யப்பட்ட வாள்வெட்டுக் குழுக் காடையர்களை விடுதலை செய்ய முயற்சித்த அநாகரிக டீல் பற்றி கதைக்கலாமே!

அடுத்த தேர்தலில் பார்ப்பம் , ராசா இப்ப எதையும் சொல்லும் 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கூத்தமைப்பில் இருப்பவர்கள் நாளை இந்த நாடு இப்படி ஆனத்திற்கு ஒட்டு மொத்தமும் விடுதலைப்புலிகள் தான் காரணம் என்று சொல்வதற்கு  வெகு காலம் இல்லை

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பிரபாதாசன் said:

அடுத்த தேர்தலில் பார்ப்பம் , ராசா இப்ப எதையும் சொல்லும் 

கூட்டணியின் பழைய வாக்குவங்கி இப்போதும் கொஞ்சம் இருக்கிறது.இளசுகளால்த் தான் அவர்களுக்குப் பிரச்சனையே.எருமைமாடு நின்றாலும் அந்த வாக்குகள் மாறாது.அதனால்த் தான் செருப்பாக இருந்தாலும் வெல்லலாம் என்ற எண்ணத்தில் ரெலோ புளட் ஒட்டிக் கொண்டிருக்கின்றன.
இருந்தாலும் இனிவரும் தேர்தல்கள் மிகவும் சவாலாகவே இருக்கும்.

43 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

இந்த கூத்தமைப்பில் இருப்பவர்கள் நாளை இந்த நாடு இப்படி ஆனத்திற்கு ஒட்டு மொத்தமும் விடுதலைப்புலிகள் தான் காரணம் என்று சொல்வதற்கு  வெகு காலம் இல்லை

உந்த ரெக்கோட் ஏற்கனவே பாடத் தொடங்கிவிட்டது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.