Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிங்கள இராணுவத்தினரின் நல்லிணக்க ராகம் நிகழ்வில் மதுப்போத்தல்கள்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள இராணுவத்தினரின் நல்லிணக்க ராகம் நிகழ்வில் மதுப்போத்தல்கள்!

தமிழீழத்தில் திட்டமிட்டு இளம் சமூதாயத்தை மது மற்றும் போதைக்கு அடிமையாக்கும் நடவடிக்கைகள் இனப்படுகொலை சிங்கள இராணுவத்தினரால் தொடரப்பட்டு வருகிறது.

அவ்வகையில் யாழ்.கோட்டை பண்ணைப்பகுதியில் இனப்படுகொலை சிங்கள இராணுவத்தினரின் ஏற்பாட்டில் நடைபெறும் ‘நல்லிணக்க ராகம்’ எனும் நிகழ்வில் இளம் சமூகத்தினரிற்கான பரிசுகளாக மதுபானங்கள் வழங்கப்பட்டுவருகின்றமை அம்பலமாகியுள்ளது.

49267126_2515862548429087_14814808505738

காட்சிக்கூடமொன்றில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள மதுபான போத்தல்கள் மீது அங்கு வைக்கப்பட்டுள்ள வளையங்களை இலக்கு வைத்து எறிவதன் மூலம் பரிசில்களை பெற்றுக்கொள்ளும் போட்டியே இனப்படுகொலை சிங்கள படையினரால் நடத்தப்படுகின்றது.

பியர் போத்தல்கள , டின்கள் மீது எவரும் வளையங்களை வீசி ஏறிந்து பரிசுகளை வெல்ல அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இதே பகுதிகளில் நடத்தப்படுகின்ற இனப்படுகொலை சிங்கள படையினரது களியாட்ட விழாக்களில் மது போத்தல்களினை இளம் சமூகத்திடையே இலவசமாக அள்ளிவீசுவது படையினரது வழமையாகும்.

இலங்கையின் கூடிய மதுபாவனை மிக்க மாவட்டமென யாழ்ப்பாணம் சொல்லப்படுவது தெரிந்ததே.

49008929_2515862488429093_4018181431439149143008_2515862415095767_6622852442448948972845_2515862425095766_3944053448416149079395_2515862475095761_17225898735058

https://www.thaarakam.com/2018/12/29/சிங்கள-இராணுவத்தினரின்-2/?fbclid=IwAR3-YWwRGRoFFmM23aFO_EnrBeZ9O0N-tzQXT3Hooj2BrjkGYGa37GxBIG4

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, nunavilan said:

பியர் போத்தல்கள , டின்கள் மீது எவரும் வளையங்களை வீசி ஏறிந்து பரிசுகளை வெல்ல அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இதே பகுதிகளில் நடத்தப்படுகின்ற இனப்படுகொலை சிங்கள படையினரது களியாட்ட விழாக்களில் மது போத்தல்களினை இளம் சமூகத்திடையே இலவசமாக அள்ளிவீசுவது படையினரது வழமையாகும்.

இலங்கையின் கூடிய மதுபாவனை மிக்க மாவட்டமென யாழ்ப்பாணம் சொல்லப்படுவது தெரிந்ததே.

மேலைத்தேய கலாச்சாரங்களை புகுத்தினால் தான் தமிழ்ச்சனம் முன்னேற்ற பாதையை நோக்கி நகரும்....:127_older_man:

11 hours ago, nunavilan said:

பியர் போத்தல்கள , டின்கள் மீது எவரும் வளையங்களை வீசி ஏறிந்து பரிசுகளை வெல்ல அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.

இதுவும் சொறிலங்காவின் சிங்கள-பௌத்த கலாசாரம் தானே!

On 12/29/2018 at 11:40 PM, குமாரசாமி said:

மேலைத்தேய கலாச்சாரங்களை புகுத்தினால் தான் தமிழ்ச்சனம் முன்னேற்ற பாதையை நோக்கி நகரும்....:127_older_man:

மதுவை அருந்தி இட்டு தெருவில் போவோருக்கு இடைஞ்சல் பண்ணும் கலாச்சாரம் எமது பாரம்பரிய கலாச்சாரமே. ஒரு திருமணவிழாவில் அழகாக வைன் போத்தல்களை மேசையில் வைத்து பரிமாறுவது விழா முடியும்வரை அதே அழகுடன் நேரத்தியாக மண்டபம் காட்சியளிப்பது  மேற்கத்தய கலாச்சாரம் என்றால்  அவர்கள்  உணவின.இறுதியில்  மிக சொற்ப அளவில்  பாவிக்கும் விஸ்கியை  சமயலறையிலும் கார்  டிக்கிக்குள்ளும் ஒளித்து வைத்து போத்தல்கணக்காக பாவித்து சுற்றடலை நாசமாக்குவது  நமது நடைமுறைக்  கலாச்சாரம். அப்படி இருக்க நீங்கள் எப்போதும் மேற்கத்தயவர்களை குறை கூறுவது நியாயம் இல்லை குமாரசாமி.. எம்மை முதலில் திருத்திக்கொண்டு மற்றவரகளின் குறைபாடுகளை விமர்சிக்கலாமே. 

Edited by tulpen

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.