Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கலாநிதி தேவநேசன் நேசையா, தேசமான்ய விருதை ஜனாதிபதியிடம் கையளித்தார்…

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கலாநிதி தேவநேசன் நேசையா, தேசமான்ய விருதை ஜனாதிபதியிடம் கையளித்தார்…

January 4, 2019

49380192_318236312354321_289831922641246

ஜனநாயகத்தை மீறியமைக்காக கலாநிதி தேவநேசன் நேசையா தனக்கு வழங்கப்பட்ட தேசமான்ய விருதை ஜனாதிபதியிடம் உத்தியோகபூர்வமாக நேற்று கையளித்துள்ளார். ஜனநாயக கோட்பாடுகளுக்கும் நடைமுறைகளுக்கும் முரணான வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்பட்டு வருவதாக கவலை தெரிவித்திருக்கும் ஓய்வுபெற்ற சிவில் சேவை அதிகாரியான கலாநிதி தேவநேசன் நேசையா கடந்த வருடம் தனக்கு ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட தேசமான்ய விருதுக்கான பதக்கத்தையும் சான்றிதழையும் திருப்பியனுப்பப்போவதாக அறிவித்திருக்கிறார்.

தற்போது வெளிநாட்டில் இருக்கும் கலாநிதி நேசையா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு பகிரங்கக் கடிதமொன்றை எழுதியிருக்கிறார்.

1959 ஆம் ஆண்டில் இருந்து இலங்கை சிவில் சேவையில் பல்வேறு உயர்பதவி நிலைகளில் பணியாற்றிய அவர் தனது கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது ;

” விசுவாசமான ஒரு இலங்கையன் என்ற வகையிலும் தகுதியானவன் என்று என்னைக் கண்டு 2017 மார்ச்சில் தங்களால் தரப்பட்ட தேசமான்ய விருதைப் பெருமையுடன் பெற்றுக்கொண்டவன் என்ற முறையிலும் உங்களுக்கு இக்கடிதத்தை எழுதுகிறேன்.எமது மகத்தான தேசத்துக்கு நான் செய்திருக்கக்கூடிய சேவைகளுக்கு ஜனாதிபதியிடமிருந்து கிடைத்த அங்கீகாரமாக எனக்கு அளிக்கப்பட்ட தேசமான்ய விருதைக் கொண்டாடுவதற்கு அன்று மூன்று கண்டங்களில் இருந்து எனது பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் நாட்டுக்கு வந்திருந்தார்கள்.

” உங்களை முன்கூட்டியே நான் பெரிதாக தெரிந்தவன் அல்ல.ஆனால், நீங்கள் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டபோது எனது குடும்பத்தவர்களும் நண்பர்களும் நானும் பெருமகிழ்ச்சி அடைந்தோம். அந்த மகிழ்ச்சியும் நம்பிக்கையும் கடந்த சில நாட்களாக எமது 70 வருடகால பழமைவாய்ந்த ஜனநாயகத்தை அப்பட்டமாக நீங்கள் அவமதித்து முன்னெடுத்திருக்கின்ற நடவடிக்கைகள் இல்லாமல் செய்துவிட்டன.

“நீங்கள் எனக்குத் தந்த தேசமான்ய பதக்கத்தையும் சான்றிதழையும் கவலையுடன் திருப்பித்தருவதை விட வேறு வழி எனக்கு ஒரு விசுவாசமான , தேசப்பற்றுடைய இலங்கையன் என்ற வகையில் தெரியவில்லை. நான் இப்போது வெளிநாட்டில் இருக்கிறேன்.நாடு திரும்பியதும் பதக்கத்தையும் சான்றிதழையும் உங்கள் அலுவலகத்துக்கு அனுப்பிவைக்க ஏற்பாடுகளைச் செய்வேன்.

” எனது இந்த முடிவு எளிதாகவோ அல்லது அவசரமாகவோ எடுக்கப்பட்ட ஒன்றல்ல.60 வருடங்களுக்கு முன்னர் இலங்கை சிவில் சேவையில் முதலில் இணைந்துகொண்ட நாளில் இருந்து நான் வரித்துக்கொண்ட கோட்பாடுகளின் பிரகாரமே செயற்பட்டுவந்திருக்கின்றேன். அது எனக்குச் சுமையாக இருந்தாலும் பெருமையுடன் ஏற்றுக்கொண்ட சுமை.எனது நீண்டகால சிவில் சேவையில் எனது விழுமியங்களை விட்டுக்கொடுப்பதற்கு மறுத்த காரணத்தால் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கங்களின் கீழும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அரசாங்கங்களின் கீழும் நான் அடிக்கடி தொல்லைகளுக்குள்ளாக்கப்பட்டிருந்தேன்.

” நீங்கள் தந்த தேசமான்ய விருதில் பெருமைப்பட இனிமேலும் எனக்கு எதுவுமில்லை என்பதால் நான் இதுவரை மதித்துவைத்திருந்த பதக்கத்தையும் சான்றிதழையும் திருப்பியனுப்புவதைத் தவிர எனக்கு வேறு தெரிவு இருக்கவில்லை என தெரிவித்த அவர்  தனக்கு வழங்கப்பட்ட தேசமான்ய விருதை ஜனாதிபதியிடம் உத்தியோகபூர்வமாக  நேற்று கையளித்தமை குறிப்பிடத்தக்கது.

 

http://globaltamilnews.net/2019/108857/

 

19 hours ago, கிருபன் said:

ஜனநாயகத்தை மீறியமைக்காக கலாநிதி தேவநேசன் நேசையா தனக்கு வழங்கப்பட்ட தேசமான்ய விருதை ஜனாதிபதியிடம் உத்தியோகபூர்வமாக நேற்று கையளித்துள்ளார்.

ஈற்றில் எடுத்த முடிவு பாராட்டுக்கு உரியது.

 

19 hours ago, கிருபன் said:

கடந்த சில நாட்களாக எமது 70 வருடகால பழமைவாய்ந்த ஜனநாயகத்தை அப்பட்டமாக நீங்கள் அவமதித்து முன்னெடுத்திருக்கின்ற நடவடிக்கைகள் இல்லாமல் செய்துவிட்டன.

சிங்கள-பௌத்த அரசுகளின் "போலி ஜனநாயகத்தை" 70+ வருடங்களாக "ஜனநாயகம்" என்று நம்பியமை தனது அறிவிலித்தனம் என்பதை உணரும் காலமும் வரும். அனால் இவர் உயிருடன் இருப்பாரோ தெரியவில்லை.

On 1/4/2019 at 11:56 AM, கிருபன் said:

60 வருடங்களுக்கு முன்னர் இலங்கை சிவில் சேவையில் முதலில் இணைந்துகொண்ட நாளில் இருந்து நான் வரித்துக்கொண்ட கோட்பாடுகளின் பிரகாரமே செயற்பட்டுவந்திருக்கின்றேன்.

"வரித்துக்கொண்ட கோட்பாடுகள்" என்ன என்டு சொன்னால் நல்லாயிருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்கால் அவலம் முடியுமுன்னே சென்னையிலிருந்து படையெடுத்து மகிந்த கையால் பரிசுப்பொருளை அள்ளிச்சென்ற திருமாவளவன், தமிழர் இன அழிப்பிஐ நியாயப்படுத்தியதற்காக லங்கரத்தினா விருதினை மகிந்த கையால் பெற்ற இந்து ராம், சிறீலங்காவின் சுதந்திரதின தேனீர் விருந்தில் தமிழர்தரப்பில் யாரும் இருபத்து ஐந்து வருடமாக பங்குபற்றாது இருந்துவந்த நிலையில் முதன்முதலில் கலந்துகொண்டு சிறப்பித்த (?) சுமந்திரன் மகிந்தவின் இன அழிப்புக்கு இராஜபாட்டையை திறந்துவிட்ட ரணிலிடமிருந்து சிங்கக்கொடியினைப் பறித்து யாழில் நடந்த மேதின ஊர்வலத்தில் உயர்த்திக்காட்டிய சிங்கக்கொடியுடையோன் சம்பந்தன் 

இவர்களைவிட திரு தேவநேசன் நேசையா அவர்கள் சிறப்பானவரே அவருக்கான விருது சிறீலங்காவின் இறையாண்மைக்கு இணைவாக தான் அரசாங்கத்தில் வேலைசெய்தகாலத்தில் இருந்துள்ளார் மற்றப்படி அவர் யாருக்கும் சொம்பு தூக்க்கியதாக நான் இன்னமும் அறியவில்லை யாராவது அறிந்தால் கூறவும்

  • கருத்துக்கள உறவுகள்
On 1/4/2019 at 6:26 AM, கிருபன் said:

உங்களை முன்கூட்டியே நான் பெரிதாக தெரிந்தவன் அல்ல.ஆனால், நீங்கள் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டபோது எனது குடும்பத்தவர்களும் நண்பர்களும் நானும் பெருமகிழ்ச்சி அடைந்தோம். அந்த மகிழ்ச்சியும் நம்பிக்கையும் கடந்த சில நாட்களாக எமது 70 வருடகால பழமைவாய்ந்த ஜனநாயகத்தை அப்பட்டமாக நீங்கள் அவமதித்து முன்னெடுத்திருக்கின்ற நடவடிக்கைகள் இல்லாமல் செய்துவிட்டன.

சொந்த  மொழி பேசிய மக்களை தாங்கள் குறிப்பிட்ட 70 வருடங்களில்.. இனக்கலவரங்கள் மூலமும்.. இன அழிப்பு போர் மூலமும் கொன்று வந்த போது.. மெளனம் காத்து விட்டு.. ஏன் சனநாயகம் காத்து விட்டதாக.. இருந்து விட்டு.. இப்ப மட்டும்..?!

ஏதோ மைத்திரின் பச்சோந்தி தனத்துக்கு..  இப்ப தான்.. தன் எதிர்ப்பை பதிவு செய்கிறார் என்பதைச் சொல்லிட்டு போயிருக்கலாம். அதுக்கு மேல விளக்கம் கொடுக்க எதுவுமில்லை.  கொடுத்த விளக்கமும்.. பெரிய எடுப்பாக உள்ளது. 😂

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கர் 

தான் சேர்ந்திருந்த கூட்டத்துக்கு விசுவாசமாகவும் அவர்கள் மோசமானவர்களாயிருந்தாலும் தன்னளவில் ஒருவர் சுத்தமாக இருக்கிறார் எனில் அவரை நாம் பாராட்டத்தான் செய்யவேண்டும். இவரைப்போல் எங்களிடத்தில் யாருமில்லையே தமிழர் உரிமை தேசியம் அது இது என வருபவர்கள் எப்போதும் எமதினத்தின் வீரியத்தில் காயடிப்பு நடாத்துபவர்களாக இருக்கிறார்களே தவிர யாரும் மாறவில்லையே. 

மற்றும்படி நான் அவருக்காகக் குத்திமுறியவில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.