Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தலைமையை ஏற்கவும்: சி.விக்கு, சங்கரி அழைப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் விடுதலை கூட்டணியின் தலைமையை ஏற்குமாறு, வட மாகாண முன்னாள் முதலைமைச்சரும் நீதியரசருமான சி.வி விக்னேஷ்வரனுக்கு, கூட்டணியின் செயலாளர் கநாயகம் வீ. ஆனந்த சங்கரி அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பாக இன்று (05) விடுக்கப்பட்டுள்ள ஊடக, கூட்டணியின் செயலாளர் நாயகம் வி. ஆனந்த சங்கரி கூறியுள்ளதாவது,

சுயநலத்தை உதறி தள்ளிவிட்டு, ஒன்றுபட்டு செயற்பாட வருமாறு, அக்கறைக் கொண்ட தமிழ் கட்சிகளுக்கு அழைப்பு விடுப்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ் மக்களின் பிரச்சினைகள் நாளாந்தம் வளர்ந்துகொண்டே போகின்றதேயன்றி, தீர்வு எதுவும் ஏற்படுவதாக தெரியவில்லை என்றும்  நடைமுறைகளை அவதானிக்கும்போது மேலும் எத்தனை தீபாவளிகள் தாண்டும் என தெரியவில்லை என்றும் சுயநலம் கருதி சிலர் செயற்பட்டமையாலேயே இந்த நிலை ஏற்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

எந்தவொரு பதவிக்கும் ஆசைப்படாது, 60 ஆண்டுக்கு மேல், மக்கள் சேவையில் ஈடுபாடு கொண்டிருந்த தான், தனது அரசியலில், இன்றைய நிலைப்பாட்டை, நம் மக்களுக்கத் தெளிவுப்படுத்த விரும்புவதாகவும் கூறினார்.

சட்டக்கல்லூரியில், 60 ஆண்டுகள், விக்னேஸ்வரனை தான் அறிவதாகவும் அவரைப் பற்றிய தப்பான அரசியல் விமர்சனங்கள் வந்தபோது, அவற்றையும்  தான் கண்டித்துள்ளதாகவும் கூறியுள்ள அவர், ஏனைய சிலர், தொடர்ச்சியாக செய்தது வருவதுபோல, அவர் நம்மினத்தை விற்கவோ, காட்டிக்கொடுக்கவோ மாட்டார் என்பதை தான் நன்றாக அறிவதாகவும் கூறியுள்ளார்.

இன்றுவரை தேர்தல்களில் தமிழர் விடுதலை கூட்டணி தனித்து, எல்லா வட்டாரங்கள், தொகுதிகளிலும் போட்டியிடும் தீர்மானத்துடனேயே உள்ளது என்றும் அப்படி இருப்பதற்கு நியாயப்படுத்தகூடிய பல காரணங்கள் உண்டு என்பதை, சகல கட்சிகளின் தலைவர்களும், தம் தம் மனச்சாட்சியைத் தொட்டு கேட்க வேண்டும் என்றும், ஆகவே, சி.வி.விக்னேஸ்வரன், தமிழர் விடுதலை கூட்டணியின் தலைமையை ஏற்கும் பட்சத்தில், அவருடன் இணைந்து செயற்பட, தாங்கள் அனைவரும் தயாராக இருப்பதாகக் கூறியுள்ளார்.

இதே ஏற்பாட்டைதான், நான்கு ஆண்டுகளுக்கு முன்னர், சி.விக்கு, கட்சியின் தலைவர் பதவியை வழங்க முன்வந்ததாகவும் குறிப்பிட்டுள்ள அவர், தன்னைப் பொறுத்த வரையில், பிரச்சினைத் தீரவேண்டும் என்பதேயொழிய, எதுவித பதவியையும் இலக்கு வைத்து இன்றுவரை செயற்படவில்லை என்பதை உறுதியாக கூறி, நல்லெண்ணம் படைத்த அனைவரையும் ஒன்று சேர வருமாறு அழைப்பதாகவும்  அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/தலைமையை-ஏற்கவும்-சி-விக்கு-சங்கரி-அழைப்பு/150-227530

  • கருத்துக்கள உறவுகள்

ஹாஹா...சீ வி போவாரோ 😎

5 hours ago, பிழம்பு said:

தமிழர் விடுதலை கூட்டணியின் தலைமையை ஏற்குமாறு, வட மாகாண முன்னாள் முதலைமைச்சரும் நீதியரசருமான சி.வி விக்னேஷ்வரனுக்கு, கூட்டணியின் செயலாளர் கநாயகம் வீ. ஆனந்த சங்கரி அழைப்பு விடுத்துள்ளார்.

இந்தப் பதவி தான் மிக மோசமான சுயநலவாதியான, உடும்புக்கறி புகழ் ஆனந்தசங்கரி முன்வைக்கும் படுகுழி!  

முன்னர் தமிழர் விடுதலை கூட்டணியின் தலைமைத்துவ பதவியை வைத்திருந்த சம்மந்தன் இயங்க முடியாதபடி இருந்தமையை யாரும் மறந்திருக்க முடியாது.

தமிழர் விடுதலை கூட்டணியி ன் செயலாளர் நாயகம் பதவியையும், பொருளாளர் பதவியையும், நிறைவேற்று குழுவில் 67% ஆன இடங்களையும் வட மாகாண முன்னாள் முதலைமைச்சரும் நீதியரசருமான சி.வி விக்னேஷ்வரன் சொல்பவர்களுக்கு வழங்க ஆனந்தசங்கரி முன்வந்தால் அதில் கொஞ்சமாவது அர்த்தம் இருக்கும். இல்லையென்றால் ஆனந்தசங்கரி வழமைபோலவே கபட நோக்கத்துடன் செயற்படுவது உறுதி.

வட மாகாண முன்னாள் முதலைமைச்சரும் நீதியரசருமான சி.வி விக்னேஷ்வரனை தங்கள் கட்சியுடன் இணைந்து செயற்படுமாறு அழைக்கும்  கபடத் தன்மைகள் நிறைந்த சுரேஷ் பிரேமச்சந்திரனும் இதைப் போன்றதொரு கபட நிலைப்பாட்டிலேயே இருப்பதாக தெரிகிறது.

வட மாகாண முன்னாள் முதலைமைச்சரும் நீதியரசருமான சி.வி விக்னேஷ்வரனை தங்கள் கட்சியுடன் இணைந்து செயற்படுமாறு அழைக்கும்  கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தமிழர் நலன்பற்றி சிந்திக்காமல் தனது சொந்தக்கட்சியின் நலன்களை மட்டுமே முன்னிறுத்தி இயங்கிவருவது அனைவரும் அறிந்ததே. மேலும் இவரது முதிர்ச்சியற்ற கிணற்றுத் தவளை அரசியல் யாருக்கும் உதவப்போவதில்லை. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, ரதி said:

ஹாஹா...சீ வி போவாரோ 😎

அறிக்கை எதுவும் விடாமல் அமைதியாக ஈழப்போராட்டத்தை காவு வாங்கியவர்கள் கூட்டமைப்பினர். சங்கரி அறிக்கை விட்டே ஈழப்போராட்டத்தை காவு வாங்கியவர்.

இதில் யார் திறம்? 
அல்லது கட்சியின் கொள்கைகளா?  கட்சியில் இருப்பவர்களா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.