Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

146 ஆண்டுகள்... 5 நாள் போராட்டம்... வெளிப்பட்ட சுனை லிங்கம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புதுக்கோட்டை மாவட்டத்திலிருக்கிறது நார்த்தாமலை கிராமம் இருக்கும் மேலமலையில் விஜயாலீசுவர் கோயில் மற்றும் குடைவரைக் கோயில்கள் காணப்படுகின்றன. அந்தக் கோயிலுக்குச் செல்லும் வழியில் மலையில் தலவிரி சிங்கம் என்னும் நீர் நிரம்பிய சுனை உள்ளது. இந்தச் சுனைக்கு அருகே இருக்கும் கல்வெட்டில், ‘1872-ம் ஆண்டு புதுக்கோட்டை மாவட்டம் தொண்டைமான் ராணி சுனை நீரை இறைத்துச் சிவ லிங்கத்தை வழிபட்ட தகவல் காணப்படுகிறது. அதற்குப் பின் இந்தச் சுனை லிங்கத்தை யாரும் வழிபட்டதாக ஆதாரம் இல்லை. சிலர் 1950 வாக்கில் சுனை நீரை இறைக்கப்பட்டதாகவும் அப்பணி பாதியிலேயே நிறுத்தப்பட்டது என்றும் கூறுகிறார்கள். 

சுனை லிங்கம்

146 ஆண்டுகளுக்குப் பிறகு, சுனை நீரை இறைத்து சிவலிங்கத்தை வழிபடும் முயற்சி கடந்த 31-ம் தேதி தொல்லியல் துறையின் அனுமதி பெற்றுத் தொடங்கப்பட்டது. ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ அமைப்பினர் இந்தப் பணியை மேற்கொண்டனர். தொடர்ந்து ஐந்து நாள்கள் கடுமையாக உழைத்ததன் பலனாக நேற்று லிங்கம் வெளிப்பட்டு பக்தர்களைப் பரவசத்துக்கு உட்படுத்தியிருக்கிறது. பக்தர்கள், தேவாரம் பாடி சிவபெருமானுக்கு வழிபாடு மேற்கொண்டனர்.

 

நார்த்தாமலை சுனை லிங்கம்

இது குறித்து இந்தப் பணியை ஒருங்கிணைத்த  'யாதும் ஊரே யாவரும் கேளிர்’ குழுமத்தைச் சேர்ந்த பார்த்திபன் என்பவரிடம் பேசினோம். 

“இரண்டு மாதங்களுக்கு முன்பு சித்தன்ன வாசல் சுனையில் மூழ்கியிருந்த நீரை இறைத்து சிவபெருமானுக்குப் பூஜை செய்தோம். இங்கு கல்வெட்டைப் படித்ததும் ஆங்கிலப் புத்தாண்டு தினத்தன்று சுனை நீரை இறைத்து லிங்கத்தைத் தரிசிக்க வேண்டும் என்று எண்ணி தொல்லியல் துறையிடம் அனுமதி பெற்றோம். 31-ம் தேதி காலையில் நீரை இறைக்கத் தொடங்கிய பணி மறுநாள் மதியம் வரை தொடர்ந்தது. நீருக்கு அடியில் 7 அடிக்கும் மேலே சேறு சேர்ந்திருந்தது. இயந்திர மோட்டார் மூலம் சேற்றை வெளியேற்றுவதற்கு முயற்சி செய்தோம். ஆனால், முடியவில்லை. அதன் பிறகு வாளியால் சேரை இறைத்து வெளியேற்றத் தொடங்கினோம். அதன் பிறகு, கிராம மக்களும் சிவனடியார்களும் என்று நூற்றுக்கு மேற்பட்டோர் உதவிக்கு வந்து சேர்ந்துவிட்டார்கள். அனைவரின் உழைப்புடன் சுனையில் தேங்கியிருந்த சேற்றை வெளியேற்றியதன் பலனாக நான்காவது நாள் சிவபெருமான் காட்சியளித்தார். ஐந்தாவது நாளான நேற்று 04.01.2019 அன்று இடத்தை சுத்தம் செய்து முறைப்படி வழிபாடு செய்தோம்’’ என்று பரவசத்துடன் தெரிவித்தார்.

சுனை லிங்கம்

இதையொட்டி நார்த்தாமலை திருவிழாக் கோலம் பூண்டிருக்கிறது. கிராம மக்களும், சிவனடியார்களும் பரவலாக வந்து சுனை லிங்கத்தைத் தரிசித்து சென்றனர். மழை பெய்து மீண்டும் சுனை நிரம்பும் வரை லிங்கத்தைத் தரிசிக்கலாம். வாய்ப்பிருக்கும் மக்கள் ஒருமுறையாவது சுனை லிங்கத்தைத் தரிசித்து, இறைவனின் அருள் பெறலாம்.

https://www.vikatan.com/news/spirituality/146445-after-146-years-worship-for-sunai-lingam.html

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புராதனத்தை சீரமைத்த தம்பிகளுக்கு நன்றிகளும் வாழ்த்துகளும்.:91_thumbsup:

புதுக்கோட்டை அரசன் விஜய ரகுநாத தொண்டைமான் தன்னிடம் அரண்மனையில் அடைக்கலம் புகுந்த  வீரபாண்டிய கட்டப்பொம்மனை பிரித்தானியரிடம் காட்டிக்கொடுத்த அரசன். அவரின் ராணி  வம்சாவழி வழிபட்ட  அவமான சின்னமான லிங்கத்தை தொல்பொருட்காட்சி சாலையில் வைத்து அந்த வரலாற்றை மக்களுக்கு கூறுவதற்கு பதிலாக அதற்கு பூஜை செய்து வழிபடும் லூசுக்கூட்டத்தை எவ்வாறு அழைக்கலாம்? 

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்
On 1/6/2019 at 4:43 AM, குமாரசாமி said:

புராதனத்தை சீரமைத்த தம்பிகளுக்கு நன்றிகளும் வாழ்த்துகளும்.:91_thumbsup:

புதைந்து போன வரலாற்றில் நம்ம இனம் இன்று 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

புதைந்து போன வரலாற்றில் நம்ம இனம் இன்று 

சீனன் வடலிக்கை கிடந்த கலோடையும் கரிச்சட்டியையும் தங்கடை மூதாதையர்ரை எண்டு கதை விட கோமாலிலை இருக்கிறசனம்......ஒரு பழைய சிவலிங்கத்தை கண்டவுடனை சிலிர்த்தெழுந்து  பழைய வரலாறெல்லாம்  இழுத்து விடுகினம்.

  • கருத்துக்கள உறவுகள்
On 1/8/2019 at 1:37 AM, குமாரசாமி said:

சீனன் வடலிக்கை கிடந்த கலோடையும் கரிச்சட்டியையும் தங்கடை மூதாதையர்ரை எண்டு கதை விட கோமாலிலை இருக்கிறசனம்......ஒரு பழைய சிவலிங்கத்தை கண்டவுடனை சிலிர்த்தெழுந்து  பழைய வரலாறெல்லாம்  இழுத்து விடுகினம்.

ம்ம் அம்பாறையில் ஓர் கிராமம் அழிந்து போய்விட்டது பல வருட காலம் யாரும் உள்ளே செல்வதில்லை ஆலங்குளம் என்ற கிராமம் புராதான சிவன் ஆலயம் . முகநூலில் எனது தம்பி ஒருத்தன் அங்கே சென்று அதை படம் பிடித்து அதன் வரலாற்றை முகநூலில் சித்தரித்த போது கிழக்கு பலகலைக்கழத்திலிருந்து ஆராய்ச்சி செய்து அறிக்கை விட்டு கட்டுரையும் வெளியிட்டுள்ளார்கள் இன்னும் சில காலத்தின் பின் அந்த கிராமமும் இராது 

  • கருத்துக்கள உறவுகள்

அம்பாறை மாவட்டத்தில் உளள புராதன சிவன் ஆலயம் ஒன்றின் புகைப்படங்களைப் பிரசுரித்து அவ்வாலயம் தமிழர்களால் பாதுகாக்கப்படவேண்டும் என்ற தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார். அப்புகைப்படங்களில் இருந்து அது ஒரு புராதன ஆலயமாக இருக்கலாம் என்பதை கிழக்குப் பல்கலைக்கழக வரலாற்றுத் துறைத் தலைவர் எஸ். சிவகணேசனிடம் எடுத்துக் கூறிய போது அவ்விடத்தில் ஆய்வு செய்வதற்கான சகல ஏற்பாடுகளையும் அவர் மேற்கொண்டிருந்தார். அவரின் முயற்சிக்கு பல்கலைக்கழக துணைவேந்தர், கலைப்பீடாதி ஆகியோர் வழங்கிய ஆதரவும், உதவிகளும் ஆய்வுக் குழுவினரைப் பெரிதும் உற்சாகப்படுத்தியது.

இந்த ஆய்வுக்குழுவில் வரலாற்றுத் துறை தலைவர் எஸ். சிவகணேசன், மற்றும் விரிவுரையாளர் செல்வி கிறிஸ்ரினா நிரோசினி, ஊடகவியலாளர் திரு.வை.சத்தியமாறன் ஆகியோருடன் கிழக்குப் பல்கலைக்கழக சமூகவியல்துறைத் தலைவர் கலாநிதி தில்லைநாதன் அவர்களும் இணைந்து கொண்டமை ஆலயம் அமைந்துள்ள வட்டாரத்தின்; சமூக நிலமைகளை அறிந்து கொள்ளப் பெரிதும் உதவியது. இவ்வாலயம் அம்பாறை மாவட்டத்தில் தீகவாபி> குடுவில் ஆகிய வட்டாரங்களை உள்ளடக்கிய ஆலங்குளம் என்ற இடத்தில் அமைந்துள்ளது. இவ்வட்டாரத்தில் புழக்கத்தில் இருந்து வரும் பல இடப்பெயர்கள் பண்டுதொட்டு இங்கு தமிழர்கள் வாழ்ந்து வந்ததன் அடையாளங்களாகக் காணப்படுகின்றன. ஆயினும் தற்போது இங்கு ஒரு தமிழ்க் குடியிருப்பைத் தானும் காணமுடியவில்லை. இந்நிலையில் ஆலயத்தைச் சுற்hடலில் பரந்த அளவில் வாழ்ந்து வரும் ஏனைய இன மக்கள் தமிழர்கள் இங்கு வாழவில்லை எனவும்> அவர்கள் கரும்புத் தோட்டங்களில் வேலைசெய்வதற்காக இங்கு வந்த போது அவர்களின் வழிபாட்டிற்காகவே முன்பொரு காலத்தில் கட்டப்பட்ட ஆலயமே தற்போது அழிவடைந்த நிலையில் காணப்படுகிறது என அவர்கள் எம்மிடம் கூறிய புதுக்கதை எமக்கு அதிர்ச்சியான செய்தியாக இருந்தது. ஏனெனில் இற்றைக்கு ஐந்து சகாப்தங்களுக்கு முன்னரே குடுவில் என்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பிராமிக் கல்வெட்டுக்களை ஆய்வு செய்த பேராசிரியர் பரணவிதான அக்கல்வெட்டுக்களில் ஒன்றை ஆதாரமாகக் காட்டி இற்றைக்கு 2200 ஆண்டுகளுக்கு முன்னரே இவ்விடத்தில் வாழ்ந்த “திஸ” என்ற தமிழ்ப் பெண்ணின் தலைமையில் தமிழ் வணிகர்கள் ஒன்று சேர்ந்து வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டதை உறுதிப்படுத்தி இருந்தார். பேராசிரியர் இந்திரபாலா இலங்கையில் 2300 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழர்கள் மொழியால் ஒரு இனக்குழுவாக வாழத் தொடங்கியதற்கு இக்கல்வெட்டையும் முக்கிய ஆதாரமாகக் காட்டுகின்றார். அண்மையில் கிழக்கிலங்கையில் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் மேலாய்வில் எழுத்துப் பொறித்த மட்பாண்டச் சாசனங்கள் பல கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட இச்சாசனங்கள் தமிழ் மொழியில்> தமிழ் வரிவடிவத்தில் எழுதப்பட்டுள்ளன. அவற்றுள் நாகன்> ணாகன்> தம்பன்> வண்ணக்கன் முதலான பெயர்கள் பொறித்த சாசனங்கள் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கன. இச்சாசனங்கள் பற்றி பேராசிரியர் பத்மநாதன் அண்மையில் வெளியிடப்பட்ட நூல் ஒன்றில்; விரிவாக ஆராய்ந்துள்ளார். இவ்வகையான மட்பாண்டச் சாசனங்கள் தமிழகத்தை அடுத்து கிழக்கிலங்கையிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை கிழக்கிலங்கைத் தமிழரின் பூர்வீக வரலாற்றுக்கு புதுவெளிச்சமூட்டுவதாக உள்ளது. தொல்லியல் அறிஞர்கள் தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு பெருங்கற்காலப் பண்பாடு என்ற புதிய நாகரிகத்தை அறிமுகப்படுத்தியவர்கள் நாக இன மக்கள் எனக் கூறுகின்றனர். இப்பண்பாட்டு மக்கள் கிழக்கிலங்கையில் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் பல இடங்களில் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அப்பண்பாட்டு மக்கள் பயன்படுத்திய மட்பாண்டங்களில் நாகன், ணாகன் முதலான பெயர்கள் இடம்பெற்றிருப்பது கிழக்கிலங்கையில் வாழ்ந்த பூர்வீக தமிழர்கள் நாக இனக்குழுவைச் சேர்ந்தவர்கள் என்பதை மேலும் உறுதி செய்வதாக உள்ளது. இவ்வரலாற்றுப் பின்னணியிலேயே அம்பாறை ஆலங்குள ஆலயத்தின் தோற்றத்திற்கான காரணங்களை நோக்குவது பொருத்தமாகும்.

நீண்ட காலத்திற்கு முன்னரே ஆலங்கேணியில் வாழ்ந்த தமிழர்கள் இவ்வாலயத்தைக் கைவிட்டதன் காரணமாக தற்போது இவ்வாலயம் பெருமளவுக்கு அழிவடைந்து ஆலமரங்களுக்கு மத்தியில் வழிபடப்பட முடியாத ஆபத்தைத் தரும் வெறும் கட்டிடமாகக் காணப்படுகின;றது. ஆலயத்திற்கு உள்ளேயும், வெளியேயும் வளர்ந்துள்ள பெரிய ஆலமரங்களின் கிளைகளும், வேர்களும் ஆலயச் சுவர்கள் சிலவற்றிற்கு பாது காப்பு அரண்களாக உள்ளன. இவ்வாலயம் சிறிய விமானத்துடன் கூடிய கர்ப்பக்கிரகம், அந்தராளம், முன்மண்டபம், பலிபீடம், கொடிக்கம்பம் என்பவற்றைக் கொண்டு கட்டப்பட்டதை ஆய்வுக் குழுவினரால் அடையாளப்படுத்த முடிந்தது. நீண்டகால வரலாற்றைக் கொண்டிருக்கும் இவ்வாலயம் பிற்காலத்தில் சீமேந்து கொண்டு மீள் உருவாக்கம் செய்யப்பட்டதை ஆலயத்தின் கட்டிட வடிவங்களும் விமானத்தின் கலை வடிவங்களும் உறுதி செய்கின்றன. ஆயினும் இவ்வாலயம் மிகத் தொன்மையானதென்பதை ஆலயத்திற்கு உள்ளேயும், வெளியேயும் புதையுண்டு காணப்படும் பெருமளவு செங்கற்கள் உறுதிசெய்கின்றன. அதிலும் கற்பக்கிரகம், அந்தராளம் என்பவற்றின் உட்பாகங்கள் முழுக்க செங்கற்களால் கட்டப்பட்டவையாகக் காணப்படுகின்றன. செங்கற்கள் கொண்டு கட்டப்பட்ட அந்தராளத்தின் முன்பக்கச் சுவர் சீமேந்து கொண்டு பூசப்பட்ட நிலையில் செங்கற் சுவர் தெளிவாகக் காணப்படுகிறது. இந்த வேறுபாடுகளைக் கொண்டு செங்கற்களால் கட்டப்பட்ட கர்பக்கிரகம், அந்தராளம் ஆலயத்தின் தொடக்ககால நிலையில் அதன் வெளிப்புறம் மட்டும் பிற்காலத்தில் சீமேந்து கொண்டு மீள் உருவாகம் செய்யப்பட்டதாகவும், முன் மண்டபம், பலிபீடம் முதலான கட்டிடங்கள் ஆலயம் தோன்றிய கால அத்திவாரங்களை அடிப்படையாகக் கொண்டு கட்டப்பட்டதாக அல்லது ஆலயத்தை விரிவுபடுத்த பிற்காலத்தில் சீமேந்து கொண்டு கட்டப்பட்ட ஆலய பாகங்களாக இருக்கலாம் எனக் கூறமுடியும்.

இவ்வாலயத்தின் தோற்றகாலத்தை உறுதியாகக் கூறக்கூடிய கல்வெட்டுக்களோ> விக்கிரகங்களோ இதுவரை கிடைக்கவில்லை. ஆலயத்தின் கர்பக்கிரகம், அந்தராளம் என்பவற்றிற்கு உள் நுளைய முடியாதவாறு பெரிய ஆலமர வேர்கள் காணப்படுகின்றன. அதற்குள் கொடிய விசப்பாம்புகள் குடியிருப்பதற்குரிய தடயங்கள் பரவலாகக் காணப்படுகின்றன. இதனால் அச்சமின்றி அக்கட்டிடப் பகுதிகளுக்குச் சென்று ஆய்வினை மேற்கொள்ள முடியவில்லை. இருப்பினும் வெளியில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களைக் கொண்டு கர்பக்கிரகத்தில் தெய்வ விக்கிரகங்களை வைப்பதற்கு பயன்படுத்தப்பட்ட பீடம் முழுமையாக சிதைவடைந்துள்ளமை தெரிகின்றது. அவ்விடம் ஆழமாகத் தோண்டப்பட்டு பீடம் இருந்த இடம் பெரும் குழியாகக் காணப்படுகின்றது. பீடத்தின் பின்பக்கச் சுவரில் இருக்கும் திருவாசி புகைபடர்ந்த நிலையில் அதன் கலைவடிவங்கள்; தெளிவற்றுக் காணப்படுகின்றன. இருப்பினும் எடுக்கப்பட்ட புகைப்படங்களைக் கொண்டு இவ்வாலயம் மிகப் பழமையானது என்பதை உறுதிப்படுத்த முடிகிறது. அவற்றுள் கர்பக்கிரகத்தின் மேற்பக்கச் சுவரில் குறுக்காகவைக்கப்பட்ட நான்கு கற்பலகைகள் மீது மேல் நோக்கி வட்டமாக இரு தளங்களில் கட்டப்பட்ட விமானத்தின் அமைப்பு, விமானம் அமைப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட செங்கற்களின் அமைப்பும்> அவற்றின் நீள அகலங்கள், கர்பக்கிரம், அந்தராளம் என்பவற்றின் வடிவமைப்பு, அவற்றின் நீள> அகலங்கள், வாசற்பகுதிகளில் அமைக்கப்பட்ட அகலமான கற்தூண்கள் என்பன 11 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பொலநறுவை, திருமங்களாய் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்ட சோழர் கால ஆலயங்களை நினைவுபடுத்துவதாக உள்ளன. எதிர்காலத்தில் தொல்லியல் திணைக்கள அனுமதியுடன் இவ்வாலயப் பகுதியில் விரிவான தொல்லியல் அகழ்வாய்வு மேற்கொள்ளப்பட்டால் இவ்வாலயத்தின் தோற்றகாலம், அதன் கலைமரபுகள்> வழிபடப்பட்ட தெய்வங்கள்> காலரீதியான ஆலய வளர்ச்சி> மாற்றம்> ஆலயத்திற்கு சொந்தமாக இருந்த அசையும்> அசையாத சொத்துக்கள்> ஆலயத்தைப் பராமரித்த மக்கள்> வழிபாட்டு மரபுகள் தொடர்பான பல உண்மைகள் வெளிச்சத்திற்கு வரும் என்பதில் ஐயமில்லை.
அம்பாறை மாவட்டத்தின் வரலாற்றில் இருந்து மறைந்து போகும் ஒரு சைவத் தமிழ்க் கிராமம்

49422652-2002438723207405-86023689990632

49491005-2002439446540666-37902642760027

49708661-2002438586540752-83053343179119

49801143-2002439119874032-40674539018492

49579429-2002439713207306-59004019077587

உள்ளே இருந்த அனைத்து பகுதிகளும் உடைத்து சூறையாடப்பட்டுள்ளது  

  • 2 weeks later...

 

சொந்த காசில் சூனியம் என்று கூறுவாரகளே. அதுஇது தானோ?  கஷரப்பட்டு மகளின் கடும் உழைப்பினால் வெளியே எடுத்த லிங்கத்தை ஆவணப்படுத்தி அரும்பொருட் காட்சியகத்தில் வைத்து வரலாறு கூறாமல்  இப்படி புனிதப்படுத்தி உழைக்காமல்  கூட்டம் இருந்து சாப்பிட கொடுத்துவிட்டார்கள்.

இன்னும்  சில ஆண்டுகளின் பின்னர்   சிவன் ஒரு சிவாச்சாரியார் கனவில் வந்து அந்த லிங்கம் பற்றிச் சொல்ல அந்த ஏழைச்சிவாச்சாரியார் பத்து நாள்விரதம் இருந்து  லிங்கத்தை எடுத்து பிரதிஷடைசெய்ய அவருக்கு சிவன் அருளினான் என்று அவன் புரளிக்கதை (புராணம்) எழுத அதைச் சைவ சமய பாடத்தில் எதிர் கால சந்ததி படிக்கும். 

B5827-AD7-B63-A-4-B4-F-B3-D6-E9-A538-ABC

Edited by tulpen

On 1/20/2019 at 7:32 AM, tulpen said:

 

சொந்த காசில் சூனியம் என்று கூறுவாரகளே. அதுஇது தானோ?  கஷரப்பட்டு மகளின் கடும் உழைப்பினால் வெளியே எடுத்த லிங்கத்தை ஆவணப்படுத்தி அரும்பொருட் காட்சியகத்தில் வைத்து வரலாறு கூறாமல்  இப்படி புனிதப்படுத்தி உழைக்காமல்  கூட்டம் இருந்து சாப்பிட கொடுத்துவிட்டார்கள்.

இன்னும்  சில ஆண்டுகளின் பின்னர்   சிவன் ஒரு சிவாச்சாரியார் கனவில் வந்து அந்த லிங்கம் பற்றிச் சொல்ல அந்த ஏழைச்சிவாச்சாரியார் பத்து நாள்விரதம் இருந்து  லிங்கத்தை எடுத்து பிரதிஷடைசெய்ய அவருக்கு சிவன் அருளினான் என்று அவன் புரளிக்கதை (புராணம்) எழுத அதைச் சைவ சமய பாடத்தில் எதிர் கால சந்ததி படிக்கும். 

B5827-AD7-B63-A-4-B4-F-B3-D6-E9-A538-ABC

2000 வருடங்கள் உழைக்காமல் உண்ட கூட்டம், நல்ல வாய்ப்பு கிடைத்தால் சும்மாவா இருக்கும்? பிச்சைக்காரர்கள் கூட இரந்து தான் வயிறு பிழைப்பர், இந்த கூட்டம் ஏமாற்றி பிழைக்கும் கூட்டம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

.

Edited by குமாரசாமி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.