Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரெக்ஸிற் வாக்கெடுப்பில் தெரேசா மே தோல்வி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

rejected-theresa-mays-deal-by-230-votes-in-uk-parliament-2.jpg

பிரெக்ஸிற் வாக்கெடுப்பில் தெரேசா மே தோல்வி!

பிரெக்ஸிற் திட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பாக, பிரித்தானிய நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் பிரதமர் தெரேசா மேயின் தரப்பு தோல்வியடைந்தது.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவது தொடர்பான பிரெக்ஸிற் மீதான வாக்கெடுப்பில் 432 பேர் பிரெக்ஸிற்றிற்கு எதிராகவும் 202 பேர் பிரெக்ஸிற்றிற்கு ஆதரவாகவும் வாக்களித்தனர்.

இதன்மூலம் மேயின் தரப்பு 230 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறுவது தொடர்பாக முடிவுசெய்யும் பொதுவாக்கெடுப்பு கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்றது.

இதில் பெரும்பாலானோர் பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலக ஆதரவு தெரிவித்தனர். பிரிரித்தானியாவின் இந்த வெளியேற்ற முடிவே பிரெக்ஸிற் எனக் குறிப்பிடப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கான செயற்பாடு 2019 ஆம் ஆண்டின் மார்ச் 29 ஆம் திகதிக்குள் நிறைவுசெய்யப்பட வேண்டும். ஆனால், இதுவரை அதற்கான விதிகள் வகுக்கப்படவில்லையென கூறப்படுகிறது.

இதனிடையே பிரெக்ஸிற்றை அமுல்படுத்தத் தேவையான விதிகளை விரைந்து வகுக்க வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மே அறிவுறுத்தியிருந்தார்.

மேலும், மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் தோல்வியடைந்தால், அது மன்னிக்க முடியாத நம்பிக்கை மீறல் என்றும் குறிப்பிட்டார்.

இந்நிலையிலேயே இன்றைய பிரெக்ஸிற் வாக்கெடுப்பில் பிரதமர் மேயின் தரப்பு படுதோல்வியடைந்தது.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவதற்கான காலம் முடிவடைய இன்னும் 10 வாரங்களே உள்ளதால் தெரேசா மே அரசாங்கத்திற்கு இது பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

rejected-theresa-mays-deal-by-230-votes-rejected-theresa-mays-deal-by-230-votes-in-uk-parliament.jpg

http://athavannews.com/பிரெக்ஸிட்-வாக்கெடுப்பி/

  • கருத்துக்கள உறவுகள்

பிரதம மந்திரி தெரசா மே யின் பிரக்சிற் உடன்படிக்கை நிராகரிக்கப்பட்டது-

January 15, 2019

UK-PM.jpg?resize=736%2C544

பிரதம மந்திரி தெரசா மே இன் பிரக்சிற் உடன்படிக்கை 230 வாக்குகளால் நிராகரிக்கப்பட்டுள்ளது. ஆட்சியில் இருக்கும் அரசாங்கத்திற்கு இது  வரலாற்று தோல்வி மிகப்பெரிய தோல்வி என சுட்டிக்காட்டப்பட்டள்ளது.

எதிர்வரும் மார்ச் 29ஆம் திகதி ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா  வெளியேறுவதற்கான விதிகளை அமைக்கும் உடன்படிக்கையை ஏற்றுக்கொள்வதா அன்றி  நிராகரிப்பதா, என்பதற்காக பாராளுமன்ற உறுப்பினர்கள் 432 வாக்குகள் வாக்களித்தனர்.  இந்த வரலாற்றுத் தோல்வியை அடுத்து தொழிற்கட்சித் தலைவர் ஜெர்மி கோர்பின்  நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்படும் எனத் தெரிவித்துள்ளார்.  அல்லது அரசாங்கம் பாராளுமன்றைக் கலைத்து பொதுத்தேர்தலுக்கு செல்ல வேண்டும் எனக் கொரியுள்ளார்.

 

http://globaltamilnews.net/2019/110065/

  • கருத்துக்கள உறவுகள்

பிரெக்சிட் இப்ப என்ன நடக்கும்?...அம்மையாரின் ஆட்சி கவிழ்ந்துடுமா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
58 minutes ago, ரதி said:

பிரெக்சிட் இப்ப என்ன நடக்கும்?...அம்மையாரின் ஆட்சி கவிழ்ந்துடுமா?

காவடி எடுத்தால் எப்பிடியெண்டாலும் ஆடித்தான் இறக்குவினம்...😄

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

பிரெக்சிட் இப்ப என்ன நடக்கும்?...அம்மையாரின் ஆட்சி கவிழ்ந்துடுமா?

 

51 minutes ago, குமாரசாமி said:

காவடி எடுத்தால் எப்பிடியெண்டாலும் ஆடித்தான் இறக்குவினம்...😄

நாளுக்கு நாள் மாறும் பிரித்தானிய அரசியலில் இது பழைய செய்தி.

1. போன வருட இறுதியில், அம்மையாருக்கு எதிரான நம்பிக்கை இல்லாத தீர்மானம் அவரது கட்சியினுள் நடந்தது. அது வெல்லாததால், அவரது தலைமைப் பதவிக்கு எதிர்ப்பு, கட்சியினுள், அதன் விதிகள் படி, இன்னும் ஒரு வருடத்துக்கு வராது.

2. அவரது ஐரோப்பிய யூனியன் உடனான ஒப்பந்தம், பிரித்தானியா சார்பில் பலவீனமானது என பாராளுமன்று நேற்று நிராகரித்தது. அதையே நீங்கள் பேசினீர்கள்.

3. இன்று, அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இல்லை என பிரதான எதிர்க்கட்சியான தொழில் கட்சி கொண்டுவந்த நம்பிக்கை இல்லாத தீர்மானம் மாலை 7 மணிக்கு, தோல்வி அடைந்தது.

ஆகவே அம்மையாருக்கு உடனடியாக பதவிக்கு பிரச்சனை இல்லை. ஆனால்  பாவம்... இந்த பிரச்சனையினை தலையில் கட்டி விட்டு கழண்டு  கொண்ட டேவிட் கமரோனை தான் பிழை சொல்ல வேண்டும்.

இரண்டு வழிகள்:

இது நாட்டினைப் பாதிக்கும் ஆயத்தமில்லா யுத்தம். யுத்த காலத்தில் சகல கட்சிகளுடன் சேர்ந்து தேசிய அரசு அமைவது போல, அதே தீவிரத்துடன், தனியே நின்று பேசாது, கூட்டாக ஐரோப்பிய யூனியன் உடன் பேச வேண்டும்.

அல்லது 

மீண்டும் மக்களிடம் செல்ல வேண்டும்.

என்ன செய்வார்கள் என இரண்டு ஒரு நாளில் தெரியும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, Nathamuni said:

இந்த பிரச்சனையினை தலையில் கட்டி விட்டு கழண்டு  கொண்ட டேவிட் கமரோனை தான் பிழை சொல்ல வேண்டும்.

உந்த கழட்டி விட்ட சமாச்சாரத்திலை எனக்கு படத்திலை இருக்கிறவரைத்தான் ரொம்ப பிடிக்கும். நிண்டு இழுத்துப்பாத்தார் சரிவரேல்லை....கொழுவுப்படுற மாதிரி கொழுவி நைசாய் காய் வெட்டீட்டார்...😄

gettyimages-494428704.jpg?itok=ZCOtThd5

2 hours ago, Nathamuni said:

மீண்டும் மக்களிடம் செல்ல வேண்டும்.

மீண்டும் மக்களிட்டை போனால் அம்மையார் வீட்டை போவார் எண்டு இஞ்சை கதைக்கினம். :cool:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.