Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சாம்பார் வந்த கதை .. !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சாம்பார் வந்த கதை .. !

மராட்டியர்கள் நமக்குத் தந்த உணவுக் கொடைதான் சாம்பார். மராட்டியர்கள் புளிக்குழம்பு வைப்பதற்குப் பெயர் பெற்றவர்கள்.

தஞ்சையை ஆண்ட முதல் மராட்டிய மன்னரான வெங்கோஜியின் மகன் சாஹூஜி-1 காலத்தில் தான் சாம்பார் உருவானது. 12 வயதிலேயே ஆட்சிப் பொறுப்பை ஏற்றவர் அவர். மராட்டியர்கள் செய்யும் ஆம்தி, சாஹூஜிக்குப் பிடித்த உணவு வகைகளில் ஒன்றாம்.

ஆனால், சாஹூஜிக்குப் பிடித்தமான குழம்பை வைப்பதற்கு அடிப்படைத் தேவையான "கோகம் புளி" ஒரு நாள் வரவில்லை. இதை எப்படிச் சமாளிப்பது என்று யோசித்த சாரு விலாச போஜன சாலை, எனப்பட்ட தஞ்சை அரண்மனை சமையலறையின் நிபுணர்கள், நாம் பயன்படுத்தும் புளியம்பழத்தை வைத்து முதன்முறையாக ஒரு குழம்பை வைத்திருக்கிறார்கள்.

அத்துடன் துவரம்பருப்பு, காய்கறி, மசாலா பொருட்களையும் சேர்த்திருக்கிறார்கள். அதுவே இன்றைய சாம்பாரின் மூலகர்த்தா.

ஆச்சரியம் என்னவென்றால், ராஜா சாஹூஜிக்கு இந்த புதிய குழம்பு பிடித்துப் போய்விட்டது. எவ்வளவு பிடித்தது என்றால் தனது ஒன்றுவிட்ட சகோதரரான, மராட்டிய சிவாஜியின் மகன் சாம்போஜிக்கு விருந்தில் சாம்பாரைப் படைத்துள்ளார். அதன்பிறகு சாம்போஜியை கவுரவிக்கும் வகையில், அதற்கு சாம்போஜி ஆம்தி என்று பொருள்படும் வகையில், சாம்பார் என்ற பெயரை வைத்ததாக கூறப்படுகிறது.

சாம்பார் தொடர்பாக போஜன குதூகலம், சரபேந்திர பாஸ்திரம் என்ற இரண்டு நூல்களில் எழுதப்பட்டுள்ளன. பதினேழாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட இவை இரண்டும், உணவு செய்முறையை விளக்கும் புத்தகங்கள். மராட்டிய மன்னர்களுக்கு பொதுவாகவே எல்லாவற்றையும் ஆவணப்படுத்தும் பண்பு இருந்திருக்கிறது. அதன் வெளிப்பாடுதான், இந்த நூல்கள். பின்னால் இரண்டாம் சரபோஜி (1812) காலத்தில் புதுப்பிக்கப்பட்ட சரஸ்வதி மகால் நூலகத்தில் இந்த நூல்கள் பாதுகாக்கப்பட்டன.

ஆனால் சரபேந்திர பாஸ்திரத்தில் வேப்பம்பூ சாம்பார் செய்முறை மட்டும்தான் கொடுக்கப்பட்டுள்ளதாம். ஒரு வேளை அதற்குப் பிறகு மற்ற சாம்பார் வகை பிரசித்தி பெற்றிருக்கலாம். ஆனால் சாம்பார் என்ற வார்த்தை தெலுங்கில் இருந்து தமிழுக்கு வந்ததாக தமிழ் பேரகராதி குறிப்பிடுகிறது.

சம்பாரம் என்பது மசாலா பொருட்களை அரைத்துச் சேர்ப்பது என்றும், அதனால் தான் இதற்கு சாம்பார் என்று பெயர் வந்ததாகவும் கூறப்படுவதுண்டு.

https://www.dailythanthi.com/Districts/Chennai/2018/08/19112937/Day-One-Message-The-story-of-Sambhar.vpf

டிஸ்கி :

mullangi-sambar.JPG

குழம்பு சரி ? அதென்ன சாம்பார் ? இட்டலி , தோசை , சாப்பாடு  என எங்கிருந்து அன்றாட தமிழர் வாழ்வியலில் ஒட்டிக்கொண்டது ? என்ற தேடலின் விடை இதுதான் . பேராசிரியர் திரு.மு .இளங்கோவன் அவர்களின் "மராத்தியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும்" என்ற நூலில்  இது பற்றி குறிப்புகளை எழுதியுள்ளார் .

https://ta.m.wikipedia.org/wiki/மு._இளங்கோவன்

  • கருத்துக்கள உறவுகள்

இதுவரை... சாம்பார் தமிழர்களின் உணவு என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.
சாம்பாரின்.. நதிமூலத்தை பகிர்ந்த, புரட்சிக்கு நன்றி.

அதேபோல்... இப்போ, உலகம் எல்லாம் பிரபலமாக இருக்கின்ற  "பிட்சா" கூட...
முன்பு ஐரோப்பாவில் ஏழை மக்களால்....சமையலறையில்  என்ன பொருள் இருக்கின்றதோ...
அதனை குழைத்த மாவின்  மேல் தூவி சமைத்து சாப்பிடுவார்களாம்,  என்று எங்கோ வாசித்தேன்.   

  • கருத்துக்கள உறவுகள்

முக்கியமாக சமையல் பொருட்கள் தட்டுபாடானால் ஏதோ ஒன்றை செய்து அதற்கொரு பெயரும் வைத்து விட்டால்  சமையல் பிரபலம் ஆகிவிடும்.......!  😁

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, தமிழ் சிறி said:

2 hours ago, suvy said:

முக்கியமாக சமையல் பொருட்கள் தட்டுபாடானால் ஏதோ ஒன்றை செய்து அதற்கொரு பெயரும் வைத்து விட்டால்  சமையல் பிரபலம் ஆகிவிடும்.......!  😁

சும்மா யாரோ எழுதினா, நம்பிறதே?

உறைப்பாக இருந்ததால, தயிர் கூட சேர்த்த சிக்கின் ரிக்கா மசாலா, இந்தியாவில இல்லாத காரணத்தால் அது பிரிட்டிஸ் கறியாம், ஏற்றுக்கொள்ளலாமா?

மிளகால் கறியை உறைப்பாக்கி சாப்பிட்ட தமிழனுக்கு மிளகாய் உட்பட மரக்கறிகளை தந்தவன் பதினாறாம் நூறாண்டில் வந்த போர்த்துக்கேயன். அவன் வந்த பின் கறிப்புரட்சியே நடந்தது. 

இதுல, பதினெட்டாம், பத்தொன்பதாம் நூறாண்டின் மராட்டியர் சாம்பாரை எங்கிருந்து கொண்டுவந்தார்கள்?.

மராட்டியர் வைத்திருந்த தமிழ் சமையல்காரர், புதிதாக முயன்று இருக்கலாம்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, suvy said:

முக்கியமாக சமையல் பொருட்கள் தட்டுபாடானால் ஏதோ ஒன்றை செய்து அதற்கொரு பெயரும் வைத்து விட்டால்  சமையல் பிரபலம் ஆகிவிடும்.......!  😁

மிச்ச சொச்சத்தை வைச்சு தயாரிக்கிற சாப்பாடுகள் ஜேர்மனியிலை எக்கச்சக்கம்...
எங்கடை ஆக்களுக்கு சோறு இட்டலி மிஞ்சினால் அது வடையாய் உருமாறும்.....வடை மிஞ்சினால் அடுத்தநாள் வடைக்கறியாய் உருப்பெறும்......வடைக்கறி மிஞ்சினால்......மிஞ்சாது :cool:

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, குமாரசாமி said:

மிச்ச சொச்சத்தை வைச்சு தயாரிக்கிற சாப்பாடுகள் ஜேர்மனியிலை எக்கச்சக்கம்...
எங்கடை ஆக்களுக்கு சோறு இட்டலி மிஞ்சினால் அது வடையாய் உருமாறும்.....வடை மிஞ்சினால் அடுத்தநாள் வடைக்கறியாய் உருப்பெறும்......வடைக்கறி மிஞ்சினால்......மிஞ்சாது :cool:

சுண்டலை விட்டுட்டீங்கள்..... சுண்டல் மிஞ்சினால் அடுத்தநாள் பயித்தங்காய், அவரைக்காயுடன் மேக்கப் போட்டுக்கொண்டு புதிதாய் வரும்.......!  😁 

சமையலில் புது வகையான மசாலா பொருட்களை சேர்ப்பதும் விலக்குவதும் காலங் காலமாக நடந்து வருவது. ஆனால் இவர்கள் எழுதுவது மராட்டியர்கள் தான் இந்த உணவை தமிழகத்திற்கு தந்தது போல் எழுதுகிறார்கள். இது எல்லா இடங்களிலும் பகிரவும் படுகிறது.

உணவில் பருப்பை சேர்ப்பது என்பது தமிழர்களின் நெடிய மரபு. அது மராட்டியர்கள் கன்டுபிடிப்பு அல்ல.

மராட்டியர்கள் தமிழகத்திற்கு 350 வருடத்திற்கு முன்பு தான் வந்தவர்கள். ஆனால் பருப்பு உணவு என்பது இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பே  தமிழர்களின் உணவு புழக்கத்தில் இருந்தது. இது குறித்து சங்க இலக்கிய நூலான பெரும்பாணாற்றுப்படையில் உள்ளது.

"நெடுங்குரல் பூளைப் பூவின் அன்ன
குறுந்தாள் வரகின் குறள் அவிழ்ச் சொன்றி
புகர் இணர் வேங்கை வீ கண்டன்ன
அவரை வான் புழுக்கு அட்டி பயில்வுற்று
இன்சுவை மூரல் பெறுகுவிர் "

பாடலின் பொருள் :
நீண்ட ‘குரல்’ எனும் கொத்து உடையப் பூளையின் மலரைப் போன்ற குறுகியத் தாளையுடைய வரகின் சிறிய பருக்கைகளால் ஆன ‘சொன்றி’ எனும் சோற்றை,வண்ணமயமான வேங்கைப் பூவைக் கண்டது போலக் காட்சி தரும் அவரையின் நல்ல பருப்பை இட்டு துழாவியதால் இனிமையான சுவை உடைய மூரல் எனும் சோற்றைப் பெறுவீர்கள்!

அவரைப் பருப்பை இட்டு குழைத்த  உணவை அப்போதே உண்டு வந்திருக்கின்றனர்.

தமிழில் சாம்பு என்றால் குறைத்தல் அரைத்தல் என்று பொருள். சம்பல் என்ற தமிழ்  வார்த்தையும்  ஒப்பு நோக்குக.

போன தலைமுறையில் தான் எல்லாம் சமஸ்கிரதம் தந்தது என்று எழுதி தமிழை தாழ்த்தி வைத்தார்கள். இப்பொழுதும் அதையே செய்ய முனைகிறது ஒரு கும்பல்.  
 
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஆதித்ய இளம்பிறையன் said:

தமிழில் சாம்பு என்றால் குறைத்தல் அரைத்தல் என்று பொருள். சம்பல் என்ற தமிழ்  வார்த்தையும்  ஒப்பு நோக்குக.

போன தலைமுறையில் தான் எல்லாம் சமஸ்கிரதம் தந்தது என்று எழுதி தமிழை தாழ்த்தி வைத்தார்கள். இப்பொழுதும் அதையே செய்ய முனைகிறது ஒரு கும்பல்.  
 
நன்றி.

சம்பல் தமிழ் வார்த்தையா, விளக்க முடியுமா?

On 1/28/2019 at 11:28 AM, Nathamuni said:

நன்றி.

சம்பல் தமிழ் வார்த்தையா, விளக்க முடியுமா?

சம்பல் என்பது  இலங்கை தமிழ் வழக்கு என்று படித்ததேன்.  இந்த வார்த்தை மலாய் மற்றும் தமிழ் இரண்டு மொழிகளுக்கும் பொதுவானது என்று பல அகராதியில் இருக்கிறது.

"Historians believe that the Word Sambho is derived from "Sambho Mahadev" a honorific term used by Shaivites to praise Lord Shiva. Some historians claim that the word Sambavar came from "Sambuvarayar" a small chiefstains ruled in Thondaimandalam of ancient Tamil Nadu. Some historians believe that the term Sambavar came from Tamil word Sambal (Ta: சாம்பல்) meaning Ash used as the divine symbol for the followers of Lord Shiva. Some historians claim that the root word Sambal (Ta: சாம்பல்) denotes the skin colour of these group of people due to the tropical region temperature."

https://synonymsbot.com/sambuvarayar

சாம்பல் தமிழ்ச் சொல்லயின் சம்பலும் தமிழ் சொல்லயிருக்கவேண்டும் என்பது என் அனுமானம். இதனுடைய வேர்ச் சொல் அறிந்தால் தெரிந்து விடலாம். இணையத்தில் பல இடங்களில் இந்த வார்த்தை திராவிட மொழிக்கு குடும்பத்தைச் சார்ந்தது என்று வருகிறது.

குறிப்பு:
https://www.dictionary.com/browse/sambal
http://www.wikiwand.com/en/List_of_English_words_of_Dravidian_origin

https://forum.lowyat.net/topic/2879355/all
http://www.altergyan.com/40-awesome-words-tamil-malayalam/

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஆதித்ய இளம்பிறையன் said:

உங்கள் ஆய்வுக்கு நன்றி...

மலாக்கா, இந்தோனேசியா ஆகிய இடங்களுக்கு மிளகாய் எங்கிருந்து போனது என்பதை வைத்தே சம்பல் எங்கிருந்து போயிருக்கும் என்பதை ஊகிக்க முடியும்.

மிளகாய் முதல் முதலா போர்த்துக்கேயரால் கொண்டு வரப்  பட்டது . அவர்கள் உச்சியில் இருந்த மிளகை வீழ்த்துவார்கள் , என, கேரள சேர மன்னர்கள் பயந்ததால், போர்த்துக்கேயர், இலங்கை பக்கம் வந்தார்கள். அங்கே பயிரான மிளகாய், அங்கிருந்து போர்த்துக்கேயரால், தென்கிழக்கு, ஆபிரிக்கா, சீனா, இந்திய துணைக்கண்டம் என அனுப்பப்பட்டது.

ஏனெனில், இலங்கையில் சம்பல் இன்றும் புகழ் மிக்கதாக இருப்பதால், மிளகாய் உடன், சம்பலும் மலாக்கா, இந்தோனேசியா பரவி இருக்கலாம். 

சிறிய எண்ணிக்கையில் மலே  இன மக்கள் இலங்கையில் வாழ்கிறார்கள்.

மேலும், இலங்கை, மலாக்கா, இரண்டும் போர்த்துக்கேயர் கொலனியாகவும், இலங்கை, மலாக்கா, இந்தோனேசியா மூன்றுமே  பின்னே வந்த டச்சுக்காரர்கள் காலனியாக இருந்தன.

ஆகவே சம்பல் இந்த மூன்று நாடுகளிலும் பரவலாக புகழ் மிக்கதாக உள்ள அதேவேளை பிரிட்டிஷ் காரர்கள் வரும் வரை சுதந்திரமாக இருந்த இந்திய துணைக் கண்ட நாடுகளில் (இந்திய நாடு உருவாவதற்கு முன்னான, பல )  இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் சம்பலுக்கு, போர்த்துக்கேயருக்கு முன்னர்.. மிளகு பயன்படுத்தி இருப்பார்கள். இவர்கள் மிளகாயை அறிமுகப்படுத்த, மிளகின் இடத்தினை மிளகாய் பிடித்துக் கொள்ள, சம்பல் அடுத்த பாச்சலுக்கு தயாரானது என கருதுகிறேன்.

பெரி பெரி சாஸ் இன்று உலகம் முழுவதுமே  புகழுடன் வளர்ந்து வரும் நண்டூஸ் கோழி உணவு கடையின் வெற்றியின் ரகசியம். இது மொசாம்பிக் நாட்டில், போர்த்துக்கேயரால் அறிமுகப்படுத்தப் பட்ட, அபிரிக்கன் சாஸ் என்கிறது நண்டூஸ்.

உண்மையில் இது தேங்காய் பூ இல்லாத இலங்கை சம்பல் தான்.  ..... வினிகர்... தேசிக்காய் புளி....

அதே போர்த்துக்கேயர்.....

ஐரோப்பா அந்த காலத்தில் உறைப்புக்கு  தயாராக இல்லாத காரணத்தினால், அவர்களது ஆபிரிக்க காலனியான மொசாம்பிக் உடன் நின்று விட்டது. கிழக்கு கரையோரஆபிரிக்க நாடுகளான எத்தியோப்பியா, எரித்திரியா எங்கும், போர்த்துக்கேயரால் அறிமுகப்படுத்தப் பட்டதாகவே மிளகாய் தூள் சொல்லப் படுகின்றது.

ஆகவே, இன்று ஐரோப்பா உறைப்புக்கு  தயாரான போது நண்டூஸ் புகுந்து வென்றுள்ளது என்பதே எனது கணிப்பு.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப போத்துக்கேயரே உறைப்பு சாப்பிட மாட்டார்கள்.ஆனால் நாங்கள் வெழத்து வாங்குவம்😃

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.