Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எதிர்க்கட்சித் தலைவர் பதவியோ தமிழருக்கு தேவையாகவுள்ளது

Featured Replies

எதிர்க்கட்சித் தலைவர் பதவியை இழந்த கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தர் மீண்டும் அந்தப் பதவியை பெறுவதற்காக குரல் கொடுக்கத் தலைப்பட்டுள்ளார்.அதற்காக அவர் சபாநாயகர் கரு ஜயசூரிய மீது குற்றம் சுமத்தவும் தலைப்பட்டுள்ளார். 
 
நடப்பில் உள்ள ஐக்கிய தேசியக்கட்சியின் ஆட்சியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றம் சாட்டிய  இரண்டாவது நபர் சபாநாயகர் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.இதை நாம் கூறும் போது அப்படியானால் முதல் நபர் யார் என்ற கேள்வி எழும். முதலாம் நபர் மீள் குடியேற்ற அமைச்சராகவிருந்த டி.எம்.சுவாமி நாதன் ஆவார்.
 
அவர் மீள்குடியேற்ற அமைச்சராகவிருந்த போது அவர் மீது கடும் குற்றச்சாட்டுக்களை கூட்டமைப்பினர் முன்வைத்தனர். இப்போது சபாநாயகர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
 
பொதுவில் தமிழர்கள் அமைச்சர்களாக அல்லது பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்தால் அவர்களை எதிர்ப்பதில் முதலிடத்தில் இருப்பவர்கள் தமிழ்ப்பிரதிநிதிகளாகவே இருப்பர்.
 
அந்தவகையில் டி.எம்.சுவாமிநாதன் மீதான கூட்டமைப்பின் எதிர்ப்பு மரபுவழிப்பட்டது. அப்படியானால் சபாநாயகர் மீதான எதிர்ப்பு எதற்கானது என்றால் எதிர்க்கட்சித்தலைவராக மகிந்த ராஜபக்­வே இருக்க முடியுமென சபாநாயகர் அறிவித்தமைதான்.
 
ரணில் விக்கிரமசிங்கவின் நம்பிக்கையை பாராளுமன்றத்தில் பல தடவைகள் நிரூபித்து அதனை ஜனாதிபதிக்கு அறிவித்துக்கொண்டே இருந்த காரணத்தால்தான் ரணில் விக்கிரமசிங்க மீண்டும் பிரதமராகக்கூடிய வாய்ப்புக் கிடைத்தது.
 
அப்போதெல்லாம் மகிந்த ராஜபக்­ தரப்பு சபாநாயகரை திட்டித்தீர்க்க, ஐக்கிய தேசியக் கட்சியினரும் கூட்டமைப்பினரும் சபாநாயகர் நீதியாகச் செயற்படுகின்றார் எனப் புகழாரம் சூட்டினர்.
 
ஆனால் இப்போது மகிந்த ராஜபக்­தான் எதிர்க் கட்சித் தலைவராக இருக்க முடியுமென சபாநாயகர் அறிவிக்க, அதன்வழி இரா.சம்பந்தர் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை இழந்தார்.
 
பதவியை இழந்ததன் காரணமாக சபாநாயகர் மீது இரா.சம்பந்தர் குற்றஞ்சாட்ட தலைப்பட்டுள்ளார். இங்குதான் கூட்டமைப்பின் தலைவர் தனக்கான பதவி மீது ஆசை கொண்டு கதைக்க முற்பட்டுள்ளார் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.
 
இது சிங்கள மக்கள் மத்தியில் கூட்டமைப்புக்கு எதிரான கருத்துருவாக்கம் ஏற்படுவதற்கு வழிவகுக்கும்.பாராளுமன்றம் கலைக்கப்பட்ட போது அது சட்டத்துக்கு முரணானது என்று நீதிமன்றம் சென்ற கூட்டமைப்பினர், இப்போது தங்களிடம் இருந்த எதிர்க்கட்சித் தலைவர் பதவியை நீக்கியமை சட்டத்துக்கு முரணானது என்றால்,
நீதிமன்றம் சென்று தங்களின் உரிமையை பெற்றுக்கொள்வதே புத்திசாலித்தனமானது. இதைவிடுத்து சபாநாயகரை குற்றஞ்சாட்டுவது என்பது விமர்சனத்தை ஏற்படுத்தக்கூடாது. 
 
சரி, எதிர்க்கட்சித் தலைவர் பதவியை இழந்த  சம்பந்தரும் அவர் தரப்பும் சபாநாயகர் மீது குற்றஞ் சாட்டும் அதேநேரம் இந்த நாட்டின் பிரதமரர் பாராளுமன்றத்தில் எழுந்து, சம்பந்தர் ஐயா! விடயத்தில் சபாநாயகர் நடந்து கொண்ட முறை தவறானது எனக் கூறாதது ஏன் என்றும் கேட்க வேண்டும் அல்லவா?  அதை செய்யாத போது சபாநாயகரை நோக்கி குற்றஞ்சாட்டுவது எந்த வகையிலும் பொருத்துடையதன்று.
 
  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தன் அவர்கள் எதிர்கட்ட்சித் தலைவர் விவகாரம் தொடர்பாக சபாநாயகரைக் குறை சொல்வதை இரண்டு வழிகளில் பார்க்கமுடியும்.

ஒன்று, மகிந்த என்பவர் அப்பதவியை வகிக்கத் தகுதி உடையவர் அல்ல, அவரது நோக்கங்கள் தவறானவை என்னும் ஆதங்கத்தில் அவரை பதவியில் அமர்த்தியதற்காக கரு ஜயசூரியவைக் குற்றம்சொன்னால் ஏற்றுக்கொள்ளலாம், சரிதான், நாட்டின் நண்மை கருதி செயற்படுகிறார் சம்பந்தர் என்று.

அப்படியில்லாமல், தனக்குக் கிடைக்கவேண்டிய பதவியை, எப்படி மகிந்தவிற்குக் கொடுத்தீர்கள் என்று பொறாமைப்பட்டு குறைகூறினால், அது சுத்த சுயநலமாகத்தான் இருக்கமுடியும்.

இதில் வேடிக்கை என்னவென்றால், எந்த அரசைக் கொண்டுவரவேண்டும் என்று சம்பந்தரும் சுமந்திரனும் அயராது பாடுபட்டார்களோ, அந்த அரசின் ஒரு உறுப்பினரான சபாநாயகர் கரு ஜயசூரியதான் மகிந்தவை எதிர்க் கட்சித் தலைவராக நியமித்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல், இந்த நியமனம் பற்றி சம்பந்தனும் சுமந்திரனும் சேர்ந்தே மீண்டும் ஆட்சிக்குக் கொண்டுவந்த அரசின் பிரதமாரான ரணில் வாயே திறக்கவில்லை. இதிலிருந்து தெரிவது என்ன? சிங்களம் தமிழ்த் தலைவர்களைப் பாவித்து தனது இருப்பைத் தக்கவைத்துக்கொள்ளுமேயன்றி, தமிழர்க்கு எதுவுமே தரப்போவதில்லை என்பதுதானே? செல்லாகாசான எதிர்க்கட்சித் தலைவர் பதவியையே சம்பந்தனுக்குத் தரமறுக்கும் சிங்களம், தமிழருக்கு வேறு என்னதான் தருமென்று எதிர்பார்க்கலாம்? 

சரி, சம்பந்தர் ஆசைப்பட்டவாறு அவருக்கே எதிர்க்கட்சித் தலைவர் பதவி கிடைக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அதை வைத்து என்ன செய்யப்போகிறார்? கடந்த 3 வருடங்களாக எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபொழுது செய்ய முடியாதவற்றை இப்போது செய்து விடலாம் என்று அவர் நம்புகிறாரா? 

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தர் தனது, சாணக்கிய அரசியலை சிங்களவரிடம் பாவித்து...
பறி போன எதிர்க்கட்சி  தலைவர் பதவியை... மீண்டும் எடுக்க முடியாதா?

  • கருத்துக்கள உறவுகள்

முடியாது என்றால் போதிய முயற்சி எடுக்கவில்லை!

ஐயாவும், ம.சு வும் ரணில பிரதமராக்க எடுத்த முயற்சில 5/10 வீதம் தமிழ் மக்களோட உரிமைக்கு முயற்சி செய்திருந்தா வரலாற்றில இடம்பெற்றிருப்பினம். இனியும் இடம்பெறுவினம் காக்கை வன்னியன், எட்டப்பன், கருணாநிதி, முரளிதரன் வரிசையில!!!

  • கருத்துக்கள உறவுகள்

ஆறு கடக்கும்வரை அண்ணன் தம்பி கடந்தபின் சேர்ந்து அடிக்கிறார்கள் ராஜதந்திரிகளை. இதைகூட தீர்க்க முடியாதவர்கள்,  விக்கியருக்கு கரிபூசுவதில் தீவிரம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.