Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காவல்துறைக்கு பயந்து கங்கையில் பாய்ந்த இருவர் பலி – கிண்ணியாவில் பதற்றம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 
January 29, 2019

Kiniya2.jpg?zoom=1.1024999499320984&resi
திருகோணமலை கிண்ணியா காவல்துறைப்பிரிவுக்குட்பட்ட கங்கை சாவத்து பாலத்துக்கு அருகில் இன்று காலை முதல் பதற்ற நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. கிண்ணியாப் பகுதியைச் சேர்ந்த மூவர் சட்டவிரோதமாக மணல் ஏற்ற முற்பட்டதாகத் தெரிவித்து, விசேட காவல்துறை அதிரடிப்படையினர், அவர்களைக் கைது செய்ய முயற்சித்த வேளை தப்பிச்செல்ல முற்பட்ட வான் நோக்கித் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் அச்சம் காரணமாக அவர்கள் கங்கையில் குதித்த நிலையில் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர் என்பதுடன், மற்றுமொருவர் மீட்கப்பட்டுள்ளார்.

கிண்ணியா, இடிமண் பகுதியைச் சேர்ந்த இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதனையடுத்து, விசேட காவல்துறை அதிரடிப்படையினருக்கும் பிரதேசவாசிகளுக்கும் இடையில் முறுகல் ஏற்பட்டதையடுத்து, அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

தற்போது குறித்த பகுதியில பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பில் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக, கிண்ணியா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

http://globaltamilnews.net/2019/111560/

  • கருத்துக்கள உறவுகள்

வவுனியாவில் சட்டவிரோதமாக பம்ம்பைமடுவில் வீட்டைகட்டிப்போட்டு...இசுலாமியர் கர்த்தால் நடத்தி குப்பை கொட்டவிடாமல் செய்யினம்...இங்கை என்னடாவென்றால் கள்ள மணல் பிடிக்கப்போக கல்லாலை எறியினம்....சிரியா,ஈராக்கு,சவுதி ,பாகிஸ்தான் காரை எல்லோரும் வந்து சேர்ந்திட்டினமோ..

  • கருத்துக்கள உறவுகள்

கடற்படையினரின் சூட்டினால் ஆற்றில் குதித்த இரு இளைஞர்கள் மரணம் – மக்கள் ஆவேசம்

 

kinniya-tension-1-300x198.jpgதிருகோணமலை – கிண்ணியாவில், சட்டவிரோதமாக மண் அகழ்வில் ஈடுபட்டவர்களை நோக்கி சிறிலங்கா கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்திய போது, ஆற்றில் குதித்த இருவர் உயிழந்தனர். இதையடுத்து, அப்பகுதி மக்கள் கடற்படையினர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

நேற்றுக்காலை மகாவலி ஆற்றில் சட்ட விரோமாக மண் அகழ்ந்து கொண்டிருந்தவர்கள் மீது கடற்டையினர் துப்பாக்கிச் சூடு நடத்திய போது, அவர்கள் ஆற்றில் குதித்தனர்.

அவர்களில் இருவர் காணாமல் போயினர். அவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. அப்துல் ராவூப் முகமட் பாரிஸ் (22), பசீர் முகமட் ரமீஸ் (19) ஆகியோரே உயிரிழந்தவர்களாவர்.

இதனால் ஆத்திரமடைந்த மக்கள், கடற்படையினரை ஆவேசமாகத் தாக்கியுள்ளனர்.

இந்தச் சம்பத்தில் 12 கடற்படையினர் காயமடைந்தனர் என்றும், அவர்களின் 4 பேர் மோசமான காயங்களுக்கு உள்ளாகினர் என்றும் சிறிலங்கா கடற்படை தெரிவித்துள்ளது,

இந்தச் சம்பவத்தினால் அங்கு பதற்ற நிலை காணப்படுகிறது. சிறிலங்கா காவல்துறையினரும், சிறப்பு அதிரடிப்படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

http://www.puthinappalakai.net/2019/01/30/news/36132

 

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லீம் திருப்பி அடித்தால் நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு களங்கம் வராது போல் உள்ளது .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.