Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமைச்சர் அலிசாகிர் மௌலானா தன் உயிரை பணயம் வைத்து விடுதலை புலிகள் இயக்கத்தை இரண்டாக பிளவுபடுத்தினார்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

51607339_2107496312670023_1282508858429800448_n.jpg?_nc_cat=103&efg=eyJpIjoidCJ9&_nc_ht=scontent.fcmb2-1.fna&oh=b291f93cefab29cf4e2d5fc0bf1c84ef&oe=5CF63A8E

அமைச்சர் அலிசாகிர் மௌலானா தன் உயிரை பணயம் வைத்து விடுதலை புலிகள் இயக்கத்தை 
இரண்டாக பிளவுபடுத்தியதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டார்.

மட்டக்களப்பு - ஏறாவூர் தள வைத்தியசாலையின் 
நிர்மாணிக்கப்படவுள்ள நான்கு மாடிக்காட்டத்திற்கான
அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. அங்கு உரையாற்றிய அவர் இதனை குறிப்பிட்டார்.
 
அங்கு மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
 
அலிசாஹிர் மௌலானா எனது நீண்ட கால நண்பர் . அவரை தேசிய  அரசிலுக்குள் கொண்டுவந்தது நான் தான்.தன் உயிரை பணயம் வைத்து விடுதலை புலிகள் இயக்கத்தை இரண்டாக பிளவுபடுத்தியனார்.இதுதான் உண்மையான வரலாறு.கருனாவை பிரித்து கிழக்கினை பிரித்திருக்காவிட்டால் இன்றும் எல் டி டியை எம்மால் தோற்கடித்திருக்க முடியாதிருக்கும் என குறிப்பிட்டுள்ளா
  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் வெட்கித் தலைகுனியவேண்டிய சம்பவம். ஒரு சாதாரண அரசியல்வாதியால் எமதினத்தின் விடுதலைப் போராட்டம் துண்டாடப்பட்டுக் காணாமல்ப் போகச் செய்யப்பட்டிருக்கிறது. 

52 minutes ago, ragunathan said:

தமிழர்கள் வெட்கித் தலைகுனியவேண்டிய சம்பவம். ஒரு சாதாரண அரசியல்வாதியால் எமதினத்தின் விடுதலைப் போராட்டம் துண்டாடப்பட்டுக் காணாமல்ப் போகச் செய்யப்பட்டிருக்கிறது. 

கருணா இப்போது துரோகிப் பட்டியலிலிருந்து நீக்கம்.

கருணாவின் மச்சான், அலி சாகிர் மவுலானா துரோகிப் பட்டியலில் இணைவு.

இன்னும் கொஞ்ச நாளில், மவுலானாவையும் நீக்கி, இன்னொருவர் பரிந்துரைக்கப்படுவார் -  அதுவும் சிங்கள அரசியல்வாதிகளினால்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, thulasie said:

கருணா இப்போது துரோகிப் பட்டியலிலிருந்து நீக்கம்.

கருணாவின் மச்சான், அலி சாகிர் மவுலானா துரோகிப் பட்டியலில் இணைவு.

இன்னும் கொஞ்ச நாளில், மவுலானாவையும் நீக்கி, இன்னொருவர் பரிந்துரைக்கப்படுவார் -  அதுவும் சிங்கள அரசியல்வாதிகளினால்.

நீங்கள் தானோ அடுத்தது  
6 hours ago, satan said:
 
நீங்கள் தானோ அடுத்தது  

உளறுவாயன் ராஜித சேனாரத்னவை கேட்டுப் பாருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

யார் யார் தன் இனத்தை சிங்களவனுக்கு காட்டிக்காெடுக்கிறானாே, அவனை சிங்களவன் முழுமையாக நம்பமாட்டான். தனக்கும் ஒருநாள்  அவன் துராேகம் செய்வான் என்னும் பயத்தில் ஒன்று ஆளை முடிப்பான் அல்லது அவன் செய்ததை அவனுக்கே திருப்பிவிடுவான். எதற்கும் நீங்களும் ஜாக்கிரதையாய் இருக்கிறது நல்லது. ராெம்பத்தான் முறியிறீங்கள் அவனுக்காக.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, thulasie said:

கருணா இப்போது துரோகிப் பட்டியலிலிருந்து நீக்கம்.

கருணாவின் மச்சான், அலி சாகிர் மவுலானா துரோகிப் பட்டியலில் இணைவு.

இன்னும் கொஞ்ச நாளில், மவுலானாவையும் நீக்கி, இன்னொருவர் பரிந்துரைக்கப்படுவார் -  அதுவும் சிங்கள அரசியல்வாதிகளினால்.

உங்களின் புலியெதிர்ப்பு அரசியல் என்பது எவர் எழுதும் கருத்தையும் சரியான புரிதல் இல்லாமல் எகத்தாளத்துடன் விமர்சிக்க வைத்துவிடுகிறது. நீங்கள் யாழ்க்களத்திற்குப் புதியவர் அல்ல, உங்களின் பெயர் வேண்டுமென்றால் புதியதாக இருக்கலாம். சரி, அது என் பிரச்சனையல்ல.

நான் அலிசாகிர் மெளலானா பற்றி இங்கே குறிப்பிட்டது அவரைத் துரோகியாக்கும் நோக்கத்துடன் அல்ல. அவர் ஒரு சாதாரண அரசியல்வாதி. ஆனால், அவரால் ஒரு மிகப்பெரிய விடுதலை இயக்கத்தை இரண்டு துண்டுகளாகப் பிரித்துப்போடும் வல்லமை இருந்திருக்கிறது. எமக்குள் இருக்கும் மிகவும் பலவீனமான, சொந்த லாபங்களுக்காக இனத்தைக் காட்டிக் கொடுக்கும் ஒரு பிரிவைப் பற்றியே எனது ஆதங்கம் அமைந்திருந்தது.

எனது கருத்துக்கூட உங்களுக்குப் புலியெதிர்ப்பு அரசியலை செய்ய உதவியதையிட்டு வருந்துகிறேன். மாற்றுக்கருத்து மாணிக்கங்கள் என்கிற பெயரில் நீங்கள் எழுதுவது சுத்தமான புலியெதிர்ப்பன்றி வேறில்லை.

சுமந்திரன் தலைமையிலான தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு மேலான உங்களின் அபிமானம் என்பது உங்களது சொந்த விருப்பமும் தெரிவும். அதில் யாரும் தலையிடத் தேவையில்லை. அவர்களை ஆதரிக்கும்பொழுது அவர்கள் செய்ய எத்தனிக்கும் அல்லது செய்துவரும் நல்ல விடயங்கள் பற்றிப் பேசுங்கள். அவர்கள் அவ்வாறு செயற்படுவதற்கான நியாயங்களை எடுத்துரையுங்கள். உங்களுடன் தர்க்கிப்பவர்கள் புரிந்துகொள்வார்கள். அதைவிடுத்து, உங்களின் கருத்தை முன்வைக்க, புலியெதிர்ப்பு பேசுகிறீர்கள். அடிக்கடி "தேசியத்தலைவர்" என்கிற ஏளனமும் இப்போது  உங்களின் கருத்துக்களில் காணக் கிடைக்கிறது. இப்படி எழுதுவதால் மட்டும் உங்கள் கருத்து ஏற்றுக்கொள்ளப்படும் என்று நினைக்கவேண்டாம்.

புலியெதிர்ப்பின்றி உங்களின் அரசியலைச் செய்யமுடியுமா என்று பாருங்கள், முடிந்தால் பலருக்கு உதவியாக இருக்கும்.

உங்களைப் பொறுத்தவரை புலிகள் பயங்கரவாதிகளாகவோ அல்லது கொடூரமானவர்களாகவோ இருக்கலாம், ஆனால் இங்கே பலருக்கு அவர்கள் விடுதலைப் போராளிகள், இறுதிவரை இனத்திற்காகப் போரிட்டு மடிந்தவர்கள். உங்களின் அரசியலை முன்னெடுக்க அவர்களைக் கொச்சைப்படுத்த வேண்டாமே? 

1 hour ago, ragunathan said:

நான் அலிசாகிர் மெளலானா பற்றி இங்கே குறிப்பிட்டது அவரைத் துரோகியாக்கும் நோக்கத்துடன் அல்ல. அவர் ஒரு சாதாரண அரசியல்வாதி. ஆனால், அவரால் ஒரு மிகப்பெரிய விடுதலை இயக்கத்தை இரண்டு துண்டுகளாகப் பிரித்துப்போடும் வல்லமை இருந்திருக்கிறது. 

மாபெரும் இந்திய இராணுவத்தாலேயே, புலிகளைத் துண்டாட முடியவில்லை.  

எங்கேயோ இருந்த அலி சாஹிர் மௌலானாவிற்கு அந்த வல்லமை இருந்தது என்று, ராஜித சேனாரத்ன என்ற உளறுவாயன் சொன்னதை  கேட்டு, எந்த அடிப்படையில் நம்புகிறீர்கள்?

கருணாகூட,  துரோகி கிடையாது.

தேசியத் தலைவருக்கும், கருணாவிற்கும் ஏற்பட்ட, புகைச்சல், கொழுவல் போன்றவை  விஸ்வரூபமாகி, கருணாவை போட்டுத் தள்ள எத்தனிக்கும்போதுதான்,  இலங்கை இராணுவம் கருணாவை பாதுகாக்க முயற்சித்தது. 

இதன்பிறகு நடந்தது, சின்ன பிள்ளைக்கும் தெரிந்ததுதானே!

கருணாவை கொழும்புக்கு கூட்டிக்கொண்டு வந்த டாக்ஸி டிரைவர் தான், நீங்கள் சொல்லும் சாதாரண அரசியல்வாதி. 

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய ராணுவத்தால் புலிகளைத் துண்டாட முடியவில்லை

கருணா துரோகியில்லை

தேசியத் தலைவருக்கும் கருணாவுக்கும் இருந்தது வெறும் வேலிப் பிரச்சினைதான்

கருணாவைப் பாதுக்காகவே இலங்கை ராணுவம் முயன்றது, அவரைக் கொண்டு எந்தவித தகவல்களும் இலங்கை ராணுவத்தால் எடுக்கப்படவில்லை அல்லது எடுக்கமுடியவில்லை, ஏனென்றால் இறுதிவரை கருணா புலிகள் பற்றி ராணுவத்திடம் வாயே திறக்கவில்லை. ஏனென்றால், அவருக்கு தேசியத் தலைவர் மீதும் போராட்டம் மீது அவ்வளவு விசுவாசம். 

அலிசாகீர் ஒரு டாக்ஸி ஓட்டுனர்தான், அவருக்கும் அன்றைய ஐக்கிய தேசியக் கட்சி ரணில், மிலிந்த மொரகொட போன்றவர்களுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. தாமே புலிகளை உடைத்தோம் என்று அன்று ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் சொன்னவை எல்லாமே உளறல்கள்தான்.

எவருமே துண்டாடாமல், துரோகம் இழைக்காமல், புலிகள் தாமகாவே தம்மை அழித்துக்கொண்டார்கள்.

நீங்கள் சொல்வதால் சரியாகத்தான் இருக்கும். 

நான் நம்பீட்டன்
 
12 minutes ago, thulasie said:

மாபெரும் இந்திய இராணுவத்தாலேயே, புலிகளைத் துண்டாட முடியவில்லை.  

எங்கேயோ இருந்த அலி சாஹிர் மௌலானாவிற்கு அந்த வல்லமை இருந்தது என்று, ராஜித சேனாரத்ன என்ற உளறுவாயன் சொன்னதை  கேட்டு, எந்த அடிப்படையில் நம்புகிறீர்கள்?

கருணாகூட,  துரோகி கிடையாது.

தேசியத் தலைவருக்கும், கருணாவிற்கும் ஏற்பட்ட, புகைச்சல், கொழுவல் போன்றவை  விஸ்வரூபமாகி, கருணாவை போட்டுத் தள்ள எத்தனிக்கும்போதுதான்,  இலங்கை இராணுவம் கருணாவை பாதுகாக்க முயற்சித்தது. 

இதன்பிறகு நடந்தது, சின்ன பிள்ளைக்கும் தெரிந்ததுதானே!

கருணாவை கொழும்புக்கு கூட்டிக்கொண்டு வந்த டாக்ஸி டிரைவர் தான், நீங்கள் சொல்லும் சாதாரண அரசியல்வாதி. 

அலிசாகீரின் வல்லமையில்லை, எமது பலவீனமே நாம் அழிந்துபோகக் காரணம்.

1 hour ago, ragunathan said:

எனது கருத்துக்கூட உங்களுக்குப் புலியெதிர்ப்பு அரசியலை செய்ய உதவியதையிட்டு வருந்துகிறேன். மாற்றுக்கருத்து மாணிக்கங்கள் என்கிற பெயரில் நீங்கள் எழுதுவது சுத்தமான புலியெதிர்ப்பன்றி வேறில்லை.

2009 இற்கு முன்னிருந்த புலி அரசியலில் இருந்த  சாதக, பாதகங்களை ஒருவர் அலசுவதால், மாற்றுக் கருத்துக்கள் வருவது இயல்புதானே!

அந்த அடிப்படையில்தான், தமிழ்க் கூட்டமைப்பினரும் செயல்படுகின்றனர்.

அதற்காக, எல்லாருமே புலியெதிர்ப்பு அரசியல் செய்கிறார்கள் என்று சொல்வதைத் தவிருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

சீ

வேண்டாம் துளசி

வேறெங்காவது போய் விளையாடுங்கள்

16 minutes ago, thulasie said:

மாபெரும் இந்திய இராணுவத்தாலேயே, புலிகளைத் துண்டாட முடியவில்லை.  

எங்கேயோ இருந்த அலி சாஹிர் மௌலானாவிற்கு அந்த வல்லமை இருந்தது என்று, ராஜித சேனாரத்ன என்ற உளறுவாயன் சொன்னதை  கேட்டு, எந்த அடிப்படையில் நம்புகிறீர்கள்?

கருணாகூட,  துரோகி கிடையாது.

தேசியத் தலைவருக்கும், கருணாவிற்கும் ஏற்பட்ட, புகைச்சல், கொழுவல் போன்றவை  விஸ்வரூபமாகி, கருணாவை போட்டுத் தள்ள எத்தனிக்கும்போதுதான்,  இலங்கை இராணுவம் கருணாவை பாதுகாக்க முயற்சித்தது. 

இதன்பிறகு நடந்தது, சின்ன பிள்ளைக்கும் தெரிந்ததுதானே!

கருணாவை கொழும்புக்கு கூட்டிக்கொண்டு வந்த டாக்ஸி டிரைவர் தான், நீங்கள் சொல்லும் சாதாரண அரசியல்வாதி. 

  • கருத்துக்கள உறவுகள்
Just now, thulasie said:

2009 இற்கு முன்னிருந்த புலி அரசியலில் இருந்த  சாதக, பாதகங்களை ஒருவர் அலசுவதால், மாற்றுக் கருத்துக்கள் வருவது இயல்புதானே!

அந்த அடிப்படையில்தான், தமிழ்க் கூட்டமைப்பினரும் செயல்படுகின்றனர்.

அதற்காக, எல்லாருமே புலியெதிர்ப்பு அரசியல் செய்கிறார்கள் என்று சொல்வதைத் தவிருங்கள்.

உங்களின் கருத்தை முன்னிறுத்த அல்லது எதிர்த்து வாதிடுபவரை மடக்க அல்லது கருத்தின் போக்கைத் திசை திருப்ப நீங்கள் புலியெதிர்ப்பைப் பாவிக்கிறீர்கள். 

எல்லோரும் பிலியெதிர்ப்பு அரசியல் செய்கிறார்கள் என்று நான் சொல்லவில்லை. கூட்டமைப்பில்கூட சுமந்திரன் தவிர்ந்த ஏனையவர்கள் புலிகளை விமர்சிப்பதில்லை. ஏனென்றால், மக்களுக்கு இன்னும் புலிகள் மீதான அபிமானம் இருப்பது அவர்களுக்கு நன்கே தெரிந்திருக்கிறது.

முடிந்தால் புலிகளை மேற்கோள் காட்டாமல் உங்களால் உங்களது அரசியலை முன்னெடுக்க முடியுமா என்று பாருங்கள். இல்லையென்றால், நீங்கள் செய்யும் அரசியலுக்கு வேறு பெயர் இருக்க முடியாது, புலியெதிர்ப்பு அரசியல் என்பதைத்தவிர ! 

புலிகள் எங்கே தவறிழைத்தார்கள் என்று எப்போதுமே விமர்சிப்பது புலியெதிர்ப்பு அரசியல். ஆனால், கூட்டமைப்பு என்ன நல்ல விடயங்களைச் செய்கிறதென்பது சரியான அரசியல். நீங்கள் எந்த ரகம்? 

4 minutes ago, ragunathan said:

அலிசாகீர் ஒரு டாக்ஸி ஓட்டுனர்தான், அவருக்கும் அன்றைய ஐக்கிய தேசியக் கட்சி ரணில், மிலிந்த மொரகொட போன்றவர்களுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. தாமே புலிகளை உடைத்தோம் என்று அன்று ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் சொன்னவை எல்லாமே உளறல்கள்தான்.

ஒரு கட்சியில் உள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும்,  எல்லாம் சரியாக தெரிய வேண்டும் என்ற அவசியம் இல்லைதானே!

நீங்கள் சொல்லும் சாதாரண அரசியல்வாதி, கருணாவை காரில் கொழும்பிற்கு கூட்டிக்கொண்டு வந்ததுகூட, ரணிலுக்கு தெரியாது என்று அவரே சொல்லி இருக்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

நல்லது, ராஜித்த சேனாரத்ன சொல்வது உளறல், ரணில் தனக்குத் தெரியாதென்று சொல்வது சத்தியவாக்கு !!!

எமக்குத் தேவையென்றால் சத்தியவாக்கு, இல்லையென்றால் உளறல்!!!!

2 minutes ago, ragunathan said:

உங்களின் கருத்தை முன்னிறுத்த அல்லது எதிர்த்து வாதிடுபவரை மடக்க அல்லது கருத்தின் போக்கைத் திசை திருப்ப நீங்கள் புலியெதிர்ப்பைப் பாவிக்கிறீர்கள். 

எதிர்த்து வாதாடுபவர், புலி அரசியலின் பாதக நிலைப்பாடுகளை சரி வர புரியாமல் இருந்தால், அதை நிவர்த்திப்பதுதானே நல்லது.

அதை ஏன், புலியெதிர்ப்பு என்ற கட்டமைப்பினுள் உட்புகுத்துகிறீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வெட்டிப் பிரதாபங்களை எல்லாம் 2004 இல் கருணா கும்மானுக்கு அடிவிழேக்க சொல்லி இருக்கலாமே. அப்ப எல்லாம்.. ஓடி ஒளிச்சிட்டு.. இப்ப 23 நாடுகள் ஒன்று சேர்ந்து அவைட பூகோள நலனுக்காக தமிழர்களை அடிச்சு அடிமையாக்கினதன் பின்.. இவை... விடும் சத்தம்.. வெறும் சவடால். அதுக்கு மேல இதில் எதுவும் இல்லை. 🤣😂

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வாறான ஒரு  நிகழ்வு  நடந்தது  உண்மை

அதற்காக  நாம் வெட்கப்படணும்
 
ஆனாலும் முரளிதரன்  முடிந்தவரை  எம்மை  காட்டிக்கொடுத்தார்

எமது இரகசியங்களை  விற்றார்

அதுக்கும்  மேலாக எமது பலத்தை எதிரி  அறியவும் உதவினார்

அவற்றை  வைத்துக்கொண்டு

எமக்குள் இருந்த  சிறு  சிறு சச்சரவுகள் பிணக்குகளையும் சேர்த்து

முடிந்ததுக்கும்  மேலாக   சிங்களவர்கள் ஊதிப்பெருப்பித்தனர்

 அதேநேரம்

அதற்கு  தயாராக இல்லாதிருந்த

கிழக்கு மாகாண  போராளிகள்  பல ஆயிரம் பேருக்கு  தலை  வணங்கணும்

இந்த தியாகங்கள்

தூர  நோக்க சிந்தனைகளுக்காக

தமிழன்  இவற்றுக்காக  மார் தட்டும்  காலம்  வரும்

வரணும்

Edited by விசுகு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.