Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புல­னாய்வு துறையில் அதி­க­ளவு முஸ்­லிம்கள் இருந்­து, புலிகளை அழித்­தொ­ழிப்­பதில் பெரும் பங்­காற்றினர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
புல­னாய்வு துறையில் அதி­க­ளவு முஸ்­லிம்கள் இருந்­து, புலிகளை அழித்­தொ­ழிப்­பதில் பெரும் பங்­காற்றினர்புல­னாய்­வுத்­து­றையில் முஸ்­லிம்கள் அதி­க­ளவில் இணைந்து நாட்­டுக்­காகப் பாரி­ய­ளவில் பங்­காற்­றி­யுள்­ள­தாக முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­தா­பய ராஜபக்ஷ தெரி­வித்தார்.
 
கண்டி மாவட்­டத்தில் உடு­நு­வர எல­மல்­தெ­னி­யவில் “எலிய” அமைப்­பினால் தொழி­ல­திபர் ஏ.எல்.எம். பாரிஸின் ஏற்­பாட்டில் நேற்­று­முன்­தினம் நடாத்­தப்­பட்ட கருத்­த­ரங்கில் கலந்­து­கொண்டு  அவர் உரை­யாற்­றினார்
 
கண்டி மாவட்­டத்தின் சகல பகு­தி­க­ளி­லி­ருந்தும் பெருந்­தொ­கை­யான முஸ்­லிம்கள் கலந்­து­கொண்ட இந்­நி­கழ்வில் பரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான மகிந்­தா­னந்த அளுத்­க­மகே, கெஹ­லிய ரம்­புக்­வெல்ல, அநு­ராத ஜய­ரட்ன, ஆனந்த அளுத்­க­மகே, திலும் அமு­னு­கம மற்றும் பேரா­சி­ரியர் ரிஸ்வி ஷெரீப் உட்­படப் பலரும் கலந்து கொண்­டனர்.
 
இதில் தொடர்ந்தும் உரை­யாற்­றிய முன்னாள் பாது­காப்பு செய­லாளர்,
 
நாட்டில் சிறு­பான்மை தமிழ், முஸ்லிம் மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு எட்­டப்­ப­டா­மைக்குக் காரணம் சிறு­பான்மை மக்­களின் பிரச்­சி­னை­களை  அர­சி­யல்­வா­திகள் தமது வாக்­கு­க­ளுக்­காகப் பயன்­ப­டுத்தி வரு­கின்­ற­மை­யாகும்.
 
சிங்­கள, தமிழ் , முஸ்லிம் மக்கள் யாவரும் பொது­வான பிரச்­சி­னை­க­ளுக்­குட்­பட்­டுள்­ளனர். இது பொரு­ளா­தாரம், கல்வி, சுகா­தாரம், வறுமை, வீடு, தொழில் முத­லா­னவை சார்ந்த பிரச்­சி­னை­க­ளாகும். இவை தீர்க்­கப்­பட வேண்டும்.
 
இப்­பி­ரச்­சி­னைகள் சகல சமூ­கங்­க­ளுக்கும்  பொது­வான  பிரச்­சி­னை­க­ளாகும். இப்­பி­ரச்­சி­னை­க­ளுக்கு காரணம்  சிங்­க­ள­வர்­களும் முஸ்­லிம்­களும் தான் என்று தமிழ் அர­சி­யல்­வா­தி­களும், தமி­ழர்­களும் முஸ்­லிம்­களும் தான் காரணம் என்று சிங்­கள  அர­சி­யல்­வா­தி­களும், சிங்­க­ள­வர்­களும் தமி­ழர்­களும் என்று முஸ்லிம் அர­சி­யல்­வா­தி­களும் தமது  மக்­க­ளிடம் கூறி­வ­ரு­கின்­றனர். இந்த அர­சியல் போக்கு சிறு­பான்மை தமிழ், முஸ்­லிம்­களின் பிரச்­சி­னை­களை அர­சி­யல்­ம­யப்­ப­டுத்­தி­யுள்­ளது.
 
இந்­நாட்டு மக்­களின் பிரச்­சி­னைகள் எது­வித அர­சியல் பேத­மு­ம­மின்றி தீர்க்­கப்­பட வேண்டும். இதில்  தீர்வு காணப்­பட வேண்­டிய பிரச்­சி­னை­களுள் வறுமை ஒழிப்பு மிக முக்­கி­ய­மான  பிரச்­சி­னை­யாகும். இதற்­காக சரி­யான பொரு­ளா­தாரக் கொள்­கையின் கீழ் வேலைத்­திட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­பட வேண்டும்.  பொரு­ளா­தாரப் பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காணும்­போது சகல இனத்­த­வர்­களும் கெள­ர­வ­மாக வாழும் நிலை உரு­வாகும்.
 
இந்­நாட்டில் எதிர்­கா­லத்தில்  சகல இனத்­த­வர்­களும் அச்சம், பீதி­யின்றி கௌர­வ­மாக வாழும் சூழ்­நி­லையை ஏற்­ப­டுத்த வேண்டும். மக்­களின் மத சுதந்­திரம்  உறு­திப்­ப­டுத்­தப்­பட வேண்டும். பாதாள குழுக்கள் கப்பம் பெறும் நிலையை இல்­லா­ம­லாக்­குவோம்.
 
மகிந்த ராஜபக் ஷவின் ஆட்­சியில், முப்­பது வருட கொடிய பயங்­க­ர­வாத யுத்தம் முடி­வுக்கு கொண்­டு­வ­ரப்­பட்­டது.  இப்­ப­யங்­க­ர­வா­தத்தால் சிங்­கள, தமிழ், முஸ்லிம் மக்கள் யாவரும் பாதிக்­கப்­பட்­டி­ருந்­தனர். மகிந்த ராஜபக் ஷ ஆட்­சியில் பயங்­க­ர­வாத யுத்­தத்தை முடி­வுக்கு கொண்­டு­வந்­தமை மக்கள் ஆணைக்கு மாற்­ற­மான செய­லல்ல.
 
மகிந்த ராஜபக் ஷவின் ஆட்­சியில் யுத்­தத்தை முடி­வுக்கு கொண்­டு­வந்­த­மையால் அர­சி­யல்­வா­தி­க­ளாலும் எதி­ரி­க­ளாலும்  நாம் இன­வா­தி­க­ளாக அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்டோம்.  நாம் தமிழ், முஸ்லிம் மக்­க­ளுக்கு எதி­ரா­ன­வர்­க­ளாக காட்­டப்­பட்டோம். மகிந்த ராஜபக் ஷவின் அர­சாங்கம் சிங்­கள, தமிழ், முஸ்லிம் மக்கள் யாவ­ருக்கும் நன்­மை­களை ஏற்­ப­டுத்­தி­யது.
 
கொழும்பில் சேரி­களில் மக்கள் எது­வித வச­தி­க­ளற்ற நிலையில் சுகா­தாரப் பிரச்­சி­னை­க­ளுடன் வாழ்­கின்­றனர். இந்­நி­லையை மாற்­றி­ய­மைக்க வேண்டும். நாம் கொழும்பில் மாடி­வீட்டுத் திட்­டங்­களை உரு­வாக்கி சேரிப்­புற மக்­களை குடி­ய­மர்த்­தினோம். மக்கள், தோட்­டங்­களில் அல்­லது சேரி­களில் வாழ்ந்த விகி­தா­சாரத்­திற்­கேற்ப மாடி­வீட்டுத் திட்­டங்­களில் குடி­யேற்­றப்­பட்­டனர்.
 
இவ்­வி­கி­தா­சாரத்தில் எது­வித மாற்­றங்­க­ளையும் செய்­ய­வில்லை. இக்­கு­டி­யேற்­றத்தில் இன, மத பேதங்கள்  பார்க்­கப்­ப­ட­வில்லை. ஆனால், சில அர­சி­யல்­வா­திகள் சிங்­கள மக்­களை குடி­யேற்றி விட்டு  தமிழ், முஸ்லிம் மக்­களை கொழும்­பி­லி­ருந்து வெளி­யேற்ற முற்­ப­டு­வ­தாக பிர­சாரம் செய்­தனர். இதனை மக்­களில் ஒரு சாரார் நம்­பினர். இதனால் முஸ்­லிம்கள் மத்­தியில் எனக்­கெ­தி­ரான நிலைப்­பா­டுகள் ஏற்­பட்­டன.   ஆனால், இதன் உண்­மைத்­தன்­மையை இன்று மக்கள் புரிந்­து­கொண்­டுள்­ளனர்.
 
நாட்டில் நீதி, நியாயம் இல்லை என்று தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. நாம் எதிர்­கா­லத்தில் நீதி நியா­யத்தை உறு­திப்­ப­டுத்­துவோம். சிங்­கள, தமிழ் முஸ்லிம் மக்கள் யாவரும் கௌர­வ­மாக வாழ்­வதை விரும்­பு­கின்­றனர். இதனை உறு­திப்­ப­டுத்­து­வது எமது கட­மை­யாகும்.
 
நாட்டில் பயங்­க­ர­வா­தத்தை ஒழித்து சமா­தா­னத்தை நிலை நாட்­டி­ய­மையால் முஸ்லிம் சமூகம் சுதந்­தி­ர­மாக வர்த்­தக நட­வ­டிக்­கை­களில் ஈடு­படும் நிலை உரு­வா­கி­யது. எம்­மிடம் வெள்ளை வேன் இல்லை. இந்­நாட்டில் வெள்ளை வேன்கள் 1988, 89, 90களில் இருந்­தன. நாம் அர­சியல் பழி­வாங்­கல்­களில் ஈடு­ப­ட­வில்லை.
 
விடு­தலைப் புலிகள் இயக்­கத்­தினர் கொழும்பில் பல­மிக்க கட்­ட­மைப்பைக் கொண்­டி­ருந்­தனர். இதனால் கொழும்பில் பொரு­ளா­தார மையங்­களில்  குண்­டுகள் வெடித்­தன. அப்­பாவிப் பொது­மக்கள் உயி­ரி­ழந்­தனர். அர­சியல் தலை­வர்கள் கொல்­லப்­பட்­டனர். விடு­தலைப் புலி­களின் கட்­ட­மைப்பை அழித்­தொ­ழிப்­பதில் புல­னாய்­வுத்­துறை அதி­கா­ரிகள் பெரும் பங்­க­ளிப்பு செய்­தனர். முஸ்லிம் சமூகம் தேசிய பாது­காப்­புக்கு பங்­க­ளிப்பு செய்­துள்­ளது. பாது­காப்­புத்­து­றையில் புல­னாய்வுப் பிரிவில்   அதி­க­ளவு முஸ்­லிம்கள் இருந்­தனர். இப்­பு­ல­னாய்வுத்துறை அதி­கா­ரிகள் நாட்­டுக்­காகப் பணி­யாற்­றினர். Vidivelli
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சிறுபான்மையினத்தை இன்னொரு சிறுபான்மையினத்திற்கெதிராக மோதவிட்டு, பிரித்தாளும் தந்திரத்தினூடாக அவர்களை ஒவ்வொருவராய் அழிப்பதில் பெரும்பான்மை மிகவும் சாதுரியமாக செயற்பட்டு வருகிறது. 

2009 வரை தமிழர்களை அழிப்பதற்கு முஸ்லீம்களைப் பாவித்த சிங்கள அரசு, அதன் பின்னர் தனது கோரக் கரங்கள் முஸ்லீம்கள் மீது இறக்கியது. அளுத்கமை, கண்டிக் கலவரங்கள் சிங்களவர்களால் முஸ்லீம்கள் மீது திட்டமிட்ட வகையில் நடத்தப்பட்டவை. முஸ்லீம்களுக்கெதிரான வன்முறைகளின் சூத்திரதாரியான ஞானசார தேரரின் பொதுபல சேனாவின் போஷகர் இங்கே முஸ்லீம்களைப் பாராட்டும் அதே முன்னாள் பாதுகாப்புச் செயலளார்தான் என்பது முஸ்லீம்களுக்குத் தெரியாமல்ப் போனது வியப்புத்தான். 

தமிழர்களை அழித்ததில் முஸ்லீம்கள் பெருமை கொள்ளலாம், ஆனால், அவர்களுக்கும் இது நடக்கும். அப்போது அவர்களுக்காகக் குரல் கொடுக்க எவருமே இருக்கப்போவதில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லிம்கள் மீது கைவைத்தால் சவூதி போன்ற மத்திய கிழக்கு நாடுகள் பார்த்துக்கொண்டிருக்குமா! சிங்களவர்கள் ஒரு எல்லைக்கு மேல் முஸ்லிம்களை அடக்கமாட்டார்கள். ஆனால் முஸ்லிம்களை வடமாகாணத்தில்  அதிகளவில் குடியேற ஊக்குவிப்பதன் மூலம் தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் உள்ள இடைவெளியை இன்னும் அதிகமாக்குவார்கள்.  

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ragunathan said:

ஒரு சிறுபான்மையினத்தை இன்னொரு சிறுபான்மையினத்திற்கெதிராக மோதவிட்டு, பிரித்தாளும் தந்திரத்தினூடாக அவர்களை ஒவ்வொருவராய் அழிப்பதில் பெரும்பான்மை மிகவும் சாதுரியமாக செயற்பட்டு வருகிறது. 

2009 வரை தமிழர்களை அழிப்பதற்கு முஸ்லீம்களைப் பாவித்த சிங்கள அரசு, அதன் பின்னர் தனது கோரக் கரங்கள் முஸ்லீம்கள் மீது இறக்கியது. அளுத்கமை, கண்டிக் கலவரங்கள் சிங்களவர்களால் முஸ்லீம்கள் மீது திட்டமிட்ட வகையில் நடத்தப்பட்டவை. முஸ்லீம்களுக்கெதிரான வன்முறைகளின் சூத்திரதாரியான ஞானசார தேரரின் பொதுபல சேனாவின் போஷகர் இங்கே முஸ்லீம்களைப் பாராட்டும் அதே முன்னாள் பாதுகாப்புச் செயலளார்தான் என்பது முஸ்லீம்களுக்குத் தெரியாமல்ப் போனது வியப்புத்தான். 

தமிழர்களை அழித்ததில் முஸ்லீம்கள் பெருமை கொள்ளலாம், ஆனால், அவர்களுக்கும் இது நடக்கும். அப்போது அவர்களுக்காகக் குரல் கொடுக்க எவருமே இருக்கப்போவதில்லை. 

உண்மை! ஆனால், இது அதிகரித்தது வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப் பட்ட பின்னர். சிலாபம், புத்தளம் ஆகிய இடங்களில் போய்க் குடியிருந்த வடக்கு முஸ்லிம்களின் கோபத்தை சிங்கள இராணுவம் தனக்குச் சாதகமாகப் பாவித்துக் கொண்டது. 

 கிருபன் சொல்வது போல முஸ்லிம்களுக்கு தமிழரோ சிங்களவரோ முற்றாக நெருக்குதல் கொடுப்பது இயலாத காரியம்! மத்திய கிழக்கை மறந்து விடக் கூடாது. மேற்கு நாடுகளாவது எண்ணையோ கனிமமோ தேடித் தான் வருவார்கள், மத்திய கிழக்கினர் தேடுவது சனக்கூட்டம்- அது எந்த நாட்டிலும் இருக்கிறது!

இது கோத்தபாயாவின் தேர்தல் பரப்புரை.

தமிழர் யாரும் இவருக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்று  தெரியும்.

முஸ்லிம்களுக்கு வால் பிடிக்கிறார் போல விளங்குது.

1 hour ago, கிருபன் said:

ஆனால் முஸ்லிம்களை வடமாகாணத்தில்  அதிகளவில் குடியேற ஊக்குவிப்பதன் மூலம் தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் உள்ள இடைவெளியை இன்னும் அதிகமாக்குவார்கள்.  

இப்பொழுது இடைவெளி குறைந்திருக்கிறதா?

குடியேற்றத்தினால், தமிழ், முஸ்லீம் உறவின் இடைவெளி நன்கு  குறையும்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, thulasie said:

குடியேற்றத்தினால், தமிழ், முஸ்லீம் உறவின் இடைவெளி நன்கு  குறையும்.

எப்படி? கிழக்கு மாகாணத்தில் இருப்பது போன்றா?

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Justin said:

உண்மை! ஆனால், இது அதிகரித்தது வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப் பட்ட பின்னர். சிலாபம், புத்தளம் ஆகிய இடங்களில் போய்க் குடியிருந்த வடக்கு முஸ்லிம்களின் கோபத்தை சிங்கள இராணுவம் தனக்குச் சாதகமாகப் பாவித்துக் கொண்டது. 

 கிருபன் சொல்வது போல முஸ்லிம்களுக்கு தமிழரோ சிங்களவரோ முற்றாக நெருக்குதல் கொடுப்பது இயலாத காரியம்! மத்திய கிழக்கை மறந்து விடக் கூடாது. மேற்கு நாடுகளாவது எண்ணையோ கனிமமோ தேடித் தான் வருவார்கள், மத்திய கிழக்கினர் தேடுவது சனக்கூட்டம்- அது எந்த நாட்டிலும் இருக்கிறது!

வடக்கிலிருந்து முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டதும், காத்தான்குடி, ஏறாவூர் பள்ளிவாசல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களும் புலிகளை சர்வதேசத்தில் மிகவும் அந்நியப்படுத்தப் பேரினவாதிகளுக்கும் அவர்களோடிணைந்த முஸ்லீம் அரசியல்வாதிகளுக்கும் நன்கே பயன்பட்டது. அதுமட்டுமல்லாமல், யாழ்ப்பாண முஸ்லீம்களின் வெளியேற்றம் என்பது இனச்சுத்திகரிப்பு ரீதியில் பார்க்கப்பட வேண்டும் என்றும் பரவலாக முஸ்லீம்கள் கேட்டு வந்திருக்கின்றனர். இதில் வேதனை என்னவென்றால், இதே காலத்தில் சிங்களவர்களாலும், முஸ்லீம் ஊர்காவல்ப் படையினராலும் கொல்லப்பட்ட அல்லது காணாமலாக்கப்பட்ட தமிழ் மக்கள் பற்றிய அவலங்கள் சர்வதேசத்தின்முன்னால் சிங்களவர்களாலும், முஸ்லீம் அமைச்சர்களாலும் திட்டமிட்ட முறையில் மறைக்கப்பட்டோ அல்லது பயங்கரவாதிகளின் கொலைகள் என்கிற பெயரில் நியாயப்படுத்தப்பட்டோதான் வந்திருக்கிறது.

முஸ்லீம்கள் மீதான மற்றைய இனங்களின் அடக்குமுறைக்கெதிராக முஸ்லீம் நாடுகள் குரல் கொடுக்கும் என்பதோ அல்லது ராஜதந்திர ரீதியில் அழுத்தம் கொடுக்கும் என்பதோ நடக்கப்போவதில்லை. இதற்கு மிகச் சிறந்த உதாரணம், 1950 களிலிருந்து தமது நாட்டை மீளப்பெறப் போராடிவரும் பாலஸ்த்தீனர்கள். இஸ்ரேலின் ஆக்கிரமிப்பிற்கெதிரான இவர்களது போராட்டம் இன்றுவரைக்கும் வெற்றியளிக்காமல் இருப்பதன் காரணமே சுற்றிவர இருக்கும் முஸ்லீம் நாடுகளின் கையாலாகாத்தனமும், பொறுப்பின்மையும்தான். 1967 இலும், 1973 இலும் இஸ்ரேல் மீதான அரபுநாடுகளின் வலிந்த போர்களின்போது இஸ்ரேலினால் இவை கூட்டாகத் தோற்கடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஜோர்டான் எகிப்து ஆகிய நாடுகள் இஸ்ரேலுடன் சமரசம் செய்துகொள்ள, ஏனைய நாடுகள் தமது வாலைச் சுருட்டிக் கொண்டதுதான் வரலாறு. இன்றைக்கு ஈரானின் உதவியுடன் ஆங்காங்கே போராடிவரும் ஹிஸ்பொல்லாவாகட்டும், அல்லது பாலஸ்த்தீன ஹமாஸாகட்டும், இன்றுவரை இஸ்ரேலுக்கெதிரான தீர்க்கமான வெற்றியொன்றை ஈட்டமுடியாமலிருப்பதற்குக் காரணம்கூட முஸ்லீம்நாடுகளின் இயலாத்தனமும் மெத்தனமும்தான். 

இவ்வாறே அண்மையில் பர்மிய பெளத்தப் பயங்கரவாதிகளால் இனவழிப்புக்கு உற்படுத்தப்பட்ட ரொகிங்கிய முஸ்லீம்கள் பற்றி எந்த மத்திய கிழக்கு நாடு இதுவரை வாய்திறந்தது? கிராமங்கள் எரித்துச் சூறையாடப்பட்டு, மக்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டு, பெண்கள் கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு ஒரு திட்டமிட்ட இனச் சுத்திகரிப்பு அரங்கேறிய வேளையில், எங்கே இந்த முஸ்லீம் நாடுகள் போயிருந்தன? 

ஆக, முஸ்லீம்கள் மீதான நெருக்குவாரங்களுக்கெதிராக மத்திய கிழக்கு கொத்தித்தெழும் அல்லது கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்பதெல்லாம் கொஞ்சம் ஓவர்தான். வேண்டுமென்றால், இலங்கை மத்திய கிழக்கிடமிருந்து முஸ்லீம் அமைச்சர்களூடாகப் பெற்றுக்கொள்ளும் உதவிகளும், நோன்புப் பெருநாளுக்கான பேரீச்சைப் பழங்களும் குறையலாம். ராஜதந்திர ரீதியில் எல்லாம் அவர்கள் செயற்படப்போவதில்லை.

மத்திய கிழக்கில் சுன்னி சியா என்று ஒன்றோடு ஒன்று மோதி தமக்குள் அழிந்துகொண்டிருக்கும் முஸ்லீம்கள் தென்னாசியாவில் எந்தப் பிரிவு என்று தெரியாமல் வாழ்ந்துவரும் ஒரு முஸ்லீம் இனத்திற்கெதிரான வன்முறைகளுக்கெதிராகப் போர்க்கொடி தூக்கும் என்று எதிர்பார்க்க முடியாது.

முஸ்லீம்களின் சகோதர உணர்விற்கு இன்னொடு உதாரணமும் உண்டு. அதாவது இஸ்லாமிய அடிப்படைவாத ஐஸிஸ் பயங்கரவாதிகளுடன் இணைவதற்கென்று சர்வதேசமெங்குமிருந்து சென்ற முஸ்லீம் இளைஞர்கள் அங்கே நடத்தப்பட்ட விதம்பற்றி இப்போது கதைகள் வருகின்றன. அரபுக்கள், அரபு அல்லாத முஸ்லீம்கள் என்று பாகுபாடு காட்டப்பட்டு, அதற்கேற்றவாறு நடத்தப்பட்ட அதே முஸ்லீம்கள் இருக்கிறார்கள்.

முஸ்லீம்களுக்காக முஸ்லீம்கள் குரல் கொடுக்கப்போவதில்லை. வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகைக்குப் பிறகு அமெரிக்க தூதரகம் முன்னாலும், பிரித்தானியத் தூதரகம் முன்னாலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வெய்யில் ஏறக் கலைந்துபோவது போன்றதே  முஸ்லீம்களின் அவர்கள் சகோதரர்கள் மீதான கரிசணையென்பது.

4 hours ago, கிருபன் said:

எப்படி? கிழக்கு மாகாணத்தில் இருப்பது போன்றா?

போர் காலத்தில், தமிழ், முஸ்லிம்களிடம் காணப்பட்ட உறவின் விரிசல், இடைவெளி தற்போது இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, thulasie said:

போர் காலத்தில், தமிழ், முஸ்லிம்களிடம் காணப்பட்ட உறவின் விரிசல், இடைவெளி தற்போது இல்லை.

இப்ப தான் அதிகரிக்கின்றது, தமிழர்களின் வறுமை, அதிகாரமில்லாத தன்மையை வைத்து மதமாற்றமும், நில ஆக்கிரமிப்பும் நன்றாக நடக்கின்றது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, கிருபன் said:

முஸ்லிம்கள் மீது கைவைத்தால் சவூதி போன்ற மத்திய கிழக்கு நாடுகள் பார்த்துக்கொண்டிருக்குமா! 

எந்த ஒரு முஸ்லீம் நாடுகளும் வராது வாப்பா. நீங்கள் இப்படி மனப்பால் குடிக்கா வாணாம். கிட்டத்துல ஈக்க யேமனுகே போமாட்டானுக. அரபு நாடுகள், இந்த சிறிலங்கா சோனகனுக்கா வருவாங்க?  

44 minutes ago, ஏராளன் said:

இப்ப தான் அதிகரிக்கின்றது, தமிழர்களின் வறுமை, அதிகாரமில்லாத தன்மையை வைத்து மதமாற்றமும், நில ஆக்கிரமிப்பும் நன்றாக நடக்கின்றது.

மத மாற்றம் நடந்தால், ஒன்றுக்குள் ஒன்றாகி விடுவார்களே!

விரிசல், இடைவெளி இனி ஏது?

3 hours ago, ragunathan said:

முஸ்லீம்களுக்காக முஸ்லீம்கள் குரல் கொடுக்கப்போவதில்லை. வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகைக்குப் பிறகு அமெரிக்க தூதரகம் முன்னாலும், பிரித்தானியத் தூதரகம் முன்னாலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வெய்யில் ஏறக் கலைந்துபோவது போன்றதே  முஸ்லீம்களின் அவர்கள் சகோதரர்கள் மீதான கரிசணையென்பது.

ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்று கூடினால், பின்னால் கலையத்தானே வேண்டும்?

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, thulasie said:

ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்று கூடினால், பின்னால் கலையத்தானே வேண்டும்?

உங்க அறிவோ அறிவுண்ணே !!!!!!! (உபயம் : செந்தில் கவுண்டமணி - வைதேகி காத்திருந்தாள்)

36 minutes ago, ragunathan said:

உங்க அறிவோ அறிவுண்ணே !!!!!!! (உபயம் : செந்தில் கவுண்டமணி - வைதேகி காத்திருந்தாள்)

பந்தி பந்தியாக, உப்புச் சப்பில்லாமல் எழுதுவதுதான் உங்கள் அறிவு என்றால், நான் ஒன்றும் செய்ய முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, thulasie said:

பந்தி பந்தியாக, உப்புச் சப்பில்லாமல் எழுதுவதுதான் உங்கள் அறிவு என்றால், நான் ஒன்றும் செய்ய முடியாது.

உங்களுக்கு நான் எழுதுவது புரிந்தால் ஏன் இந்தப்பாடு ??!!!

நான் எழுதியது ஜஸ்டினுக்கு. அவருக்கு விளங்கியிருக்கும். நீங்கள் ஒன்றும் கஷ்ட்டப்படவேண்டாம்.

5 minutes ago, ragunathan said:

உங்களுக்கு நான் எழுதுவது புரிந்தால் ஏன் இந்தப்பாடு ??!!!

நான் எழுதியது ஜஸ்டினுக்கு. அவருக்கு விளங்கியிருக்கும். நீங்கள் ஒன்றும் கஷ்ட்டப்படவேண்டாம்.

தங்களின் எழுத்து, பெரும்பாலும் யதார்த்தத்திற்கு எதிரானது.

அதை புரிவதனாலோ, புரியாமல் இருப்பதாலோ - பயன் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, thulasie said:

தங்களின் எழுத்து, பெரும்பாலும் யதார்த்தத்திற்கு எதிரானது.

அதை புரிவதனாலோ, புரியாமல் இருப்பதாலோ - பயன் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை.

யாழிலேயே சரியான நேரத்தில் துல்லியமாக பக்கம் சாராமல் எல்லோருக்கும் விளங்கக் கூடிய மாதிரி எழுதும் முதலாவது ஆள் என்றால் அது ரகுநாதன் தான் என்பதை பெருமையுடன் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

அத்துடன் ஆங்கில மொழி பெயர்ப்பிலும் அவரை மிஞ்ச யாழில் ஆள் கிடையாது.எத்தனையோ தடவை ஆச்சரியமாகவும் பொறாமையாகவும் பார்த்த நாட்கள் எத்தனையோ.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, thulasie said:

மத மாற்றம் நடந்தால், ஒன்றுக்குள் ஒன்றாகி விடுவார்களே!

விரிசல், இடைவெளி இனி ஏது?

மாறினவையோ மாறாதவையோ?!

5 minutes ago, ஏராளன் said:

மாறினவையோ மாறாதவையோ?!

விரிசல், இடைவெளிகளை தமிழ் பேசும் இனங்கள் இனிமேல் ஒருபோதும் தாங்காது.

5 hours ago, ragunathan said:

முஸ்லீம்களுக்காக முஸ்லீம்கள் குரல் கொடுக்கப்போவதில்லை. வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகைக்குப் பிறகு அமெரிக்க தூதரகம் முன்னாலும், பிரித்தானியத் தூதரகம் முன்னாலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வெய்யில் ஏறக் கலைந்துபோவது போன்றதே  முஸ்லீம்களின் அவர்கள் சகோதரர்கள் மீதான கரிசணையென்பது.

வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகைக்குப் பிறகு அமெரிக்க தூதரகம் முன்னாலும், பிரித்தானியத் தூதரகம் முன்னாலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவது முஸ்லிம்கள்தானே!  குரல் எழுப்புவதும் முஸ்லிம்களுக்குத்தானே!

முஸ்லீம்களுக்காக முஸ்லீம்கள் குரல் கொடுக்கப்போவதில்லை என்று ஏன் முரணாகச் சொல்கிறீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, thulasie said:

விரிசல், இடைவெளிகளை தமிழ் பேசும் இனங்கள் இனிமேல் ஒருபோதும் தாங்காது.

விரிசல் இடைவெளிகளை ஏற்படுத்துபவர்கள் யார்?! 

4 minutes ago, ஏராளன் said:

விரிசல் இடைவெளிகளை ஏற்படுத்துபவர்கள் யார்?! 

பாழாய்ப்போன மனுஷ பிறவிகள்தான்,

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, thulasie said:

வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகைக்குப் பிறகு அமெரிக்க தூதரகம் முன்னாலும், பிரித்தானியத் தூதரகம் முன்னாலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவது முஸ்லிம்கள்தானே!  குரல் எழுப்புவதும் முஸ்லிம்களுக்குத்தானே!

முஸ்லீம்களுக்காக முஸ்லீம்கள் குரல் கொடுக்கப்போவதில்லை என்று ஏன் முரணாகச் சொல்கிறீர்கள்?

முஸ்லீம்களின் தங்களது சகோதரர்கள் மீதான கரிசணை அல்லது கடமையென்பது வெறும் ஆர்ப்பாட்டம் ஒன்றுடன் நின்றுவிடும், வேறு ஒன்றும் உறுப்படியாகச் செய்யப்போவது கிடையாது என்பதை விளக்கவே அவ்வாறு எழுதினேன்.

மேலும், பந்தி பந்தியாக, விளக்கமில்லாமல், யதார்த்தத்திற்கு ஒவ்வாமல் எழுதுகிறேன் என்று குறை சொல்லுமுன்னர் என்ன சொல்லவருகிறேன் என்றாவது ஒருமுறை பாருங்கள். நான் எழுதியவை அண்மைக்காலமாக முஸ்லீம்கள் தமது சகோதரர்மேல் அவ்வளவாக அக்கறை காட்டுவதில்லை என்பதை விளக்கவே பாலஸ்த்தீனர்களையும், ரொகிங்கியர்களையும் உதாரணமாக எழுதியிருந்தேன்.  கிருபனும், ஜஸ்டினும் கூறிய மத்திய கிழக்கு நாடுகளின் அழுத்தம் என்பதற்கான பதிலே அது.

57 minutes ago, ஈழப்பிரியன் said:

யாழிலேயே சரியான நேரத்தில் துல்லியமாக பக்கம் சாராமல் எல்லோருக்கும் விளங்கக் கூடிய மாதிரி எழுதும் முதலாவது ஆள் என்றால் அது ரகுநாதன் தான் என்பதை பெருமையுடன் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

அத்துடன் ஆங்கில மொழி பெயர்ப்பிலும் அவரை மிஞ்ச யாழில் ஆள் கிடையாது.எத்தனையோ தடவை ஆச்சரியமாகவும் பொறாமையாகவும் பார்த்த நாட்கள் எத்தனையோ.

உங்கள் ஆதரவிற்கும் புரிதலுக்கும் நன்றி ஈழப்பிரியன்

Just now, ragunathan said:

முஸ்லீம்களின் தங்களது சகோதரர்கள் மீதான கரிசணை அல்லது கடமையென்பது வெறும் ஆர்ப்பாட்டம் ஒன்றுடன் நின்றுவிடும், வேறு ஒன்றும் உறுப்படியாகச் செய்யப்போவது கிடையாது என்பதை விளக்கவே அவ்வாறு எழுதினேன்.

முஸ்லீம்களுக்காக முஸ்லீம்கள் குரல் கொடுக்கப்போவதில்லை என்று சொல்லி நீங்களே முரண்பட்டுக்கொள்கிறீர்கள்.

ஆர்ப்பாட்டம் என்பது, தன் மீதோ தன் சமூகம் மீதோ நிகழ்ந்த அநியாயத்தை வெளிக்கொணர்ந்து, பிறரை அறியச் செய்து, அதற்கு நியாயம் கேட்பதின் ஒரு முதற்படி.

அதன் பின்னால் உள்ள விளைவுகள், நன்மைகள் எல்லாம், ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் குரல் கொடுத்ததன் விளைவுகள்.

அந்த விளைவுகள், அனுகூலமாகவும் அமையலாம், பிரதிகூலமாகவும் அமையலாம். 

ஆர்ப்பாட்டத்திற்கு அப்பால், உருப்படியாக எது நல்லது என்று நினைக்கிறீர்கள்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.