Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

படகு அகதிகளுக்கு அடித்தது அதிர்ஷ்டம்; அமெரிக்கா சென்று வாழ்வதற்கு வசதி

Featured Replies

படகு அகதிகளுக்கு அடித்தது அதிர்ஷ்டம்; அமெரிக்கா சென்று வாழ்வதற்கு வசதி

சிட்னி,ஏப்.19

அகதி அந்தஸ்து கோரும் பொருட்டு ஆஸ்திரேலியா நோக்கிப் படகில் சென்ற வேளை பிடிபட்டு

இப்போது பசுபிக் தீவான நவ்றுவில் தங்கவைத்து விசாரிக்கப்படும் 83 இலங்கைத் தமிழர்களும்

அமெரிக்காவில் அகதிகளாக ஏற்றுக்கொள்ளப்படும் எதிர்பாராத திருப்பமும் வாய்ப்பும் கிடைத்துள்ளன.

வாஷிங்டனில் கடந்த வாரம் அமெரிக்காவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையில் கைச்சாத்தான "பரஸ்பர உதவி ஒப்பந்தம்' இலங்கைத் தமிழர்களுக்குப் பெரும் வரப்பிரசாதமாகக் கிடைத்துவிட்டது.

இந்த ஒப்பந்தத்தின் பிரகாரம், "நவ்று' தீவில் வைத்து விசாரிக்கப்படும் 83 இலங்கைத் தமிழர்கள் அமெரிக்காவில் அகதிகளாக ஏற்றுக்குடியமர்த்தப்படுவர்.

அதே போன்று ஹெய்ட்டியிலிருந்து அமெரிக்காவுக்கு அகதி அந்தஸ்துக் கோரிச் சென்ற கியூபா வாசிகளை ஆஸ்திரேலியா ஏற்றுக்கொள்ள உள்ளது.

ஆஸ்திரேலியாவில் விரைவில் நடைபெற இருக்கும் தேர்தலில், "நவ்று' விசாரணை முக்கிய பிரச்சினையாக எடுத்துக்கொண்ட சவேர்டிங் கட்சி அரசுக்குத் தோல்வி ஏற்படாமல் தடுக்கும் உள்நோக்கத்துடனேயே அமெரிக்கா ஆஸ்திரேலியா ஒப்பந்தம் திடுதிப்பென கைச் சாத்தானதாக அரசியல் அவதானிகள் தெரிவித்தனர்.

அகதிகளைப் பரிமாறிக்கொள்ளும் புதிய நடைமுறை முற்றிலும் அரசியல் நோக்கம் கொண்டது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை இந்த ஏற்பாடு அகதிப் பரிமாற்றத்துக்கு நிரந்தரமாக வசதி செய்ய மாட்டாது என்றும் அவதானிகள் தெரிவித்தனர்.

இவ்வருடம் பெப்ரவரி இறுதியில் இந்தோனேஷியாவில் இருந்து படகு அகதிகளாக ஆஸ்திரேலியா நோக்கிச் சென்ற 83 இலங்கைத் தமிழர்கள் வழிமறிக்கப்பட்டு முதலில் கிறிஸ்மஸ் தீவில் தங்கவைக்கப்பட்டு இப்போது "நவ்று' தீவில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

அந்த விசாரணையின் போது, அகதி அந்தஸ்துக் கோரிச் சென்ற மாணவன் ஒருவன் பின்வருமாறு விசாரணையின் போது தெரிவித்தார்.

கடந்த வருடத்தில் திருகோணமலையில், மாணவர்களான எனது நண்பர்கள் ஐவர், இலங்கையில் விசேட அதிரடிப் படையினரால் ஒரே இரவில் கர்ண கொடூரமாகக் கொலைசெய்யப்பட்டனர்.

அதன் பின்னர் அங்கு இருப்பது எனது உயிருக்கு ஆபத்தென நினைத்து நான் முதலில் கொழும்பு வந்தேன் என்றார். (அ)

உதயன்

இதை அதிஸ்டம் என சொல்லி அவர்களின் துயரை கொச்சைப்படுத்திவிட்டது உதயன்

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைத் தகவலின் படி, அமெரிக்காவில் கூடத் தடுப்பு முகாம் ஒன்றில் தான் தங்க வைக்கப்படுகின்றார்கள். அங்கே அவர்களுக்கு குடியுரிமை கொடுக்கப்படுமா என்பது ஐயமே. அமெரிக்கா அனுப்பபடுகின்றார்கள் என்பதற்காக நல்வாழ்வு கிடைத்துடும் என்ற பொருளல்ல.

சமீபத்தில் கூட அகிலன் என்ற ஒருவரும், பெண் ஒருவரும் சுமார் 5 ஆண்டுகளுக்கு மேலாகத் தடுத்து வைக்கப்பட்டுத் தான் விடுவிக்கப்பட்டனர்.

  • கருத்துக்கள உறவுகள்

தூயவன் சொல்வது போலத்தான் நானும் நினைத்தேன். அமெரிக்கா தடுப்புமுகாம்களை விட அவுஸ்திரெலியா தடுப்பு முகாம்கள் பரவாயில்லை. குடியுரிமை நிராகரிக்கப்பட்டு இலங்கைக்கு திருப்பி அனுப்பவும் வாய்ப்பு இருக்குது

இந்தச் செய்தி தவறாகப் போய்ச்சேர்ந்திருக்கிறது என்று கருதுகிறேன்.

இரு நாட்டு அரசாங்கத்தினது அகதிப் பரிமாற்றமே தவிர, ஹொலிவூட்டிலோ கலிபோர்னியாவிலோ வீடு எடுத்துக் கொடுப்பார்கள் என்று அர்த்தமல்ல. அகதி அந்தஸ்து பரிசீலிக்கப்பட்டே அடுத்த கட்டத்துக்குப் போவார்கள், அந்தவகையில் அவுஸ்திரேலியாவில் இருந்திருந்தால் அமெரிக்காவோடு ஒப்பிடும் போது வாய்ப்பு அதிகம் என்று நினைக்கிறேன். அத்துடன் நேற்றைய பிந்திய செய்திப்படி அனைவருமே அனுப்பப்படவில்லை.

முன்பும் உதயனில் , அவுஸ்திரேலியாவுக்கு இலவச விசா என்று குழப்பி அங்குள்ள சனங்கள் அலைந்து நொந்தது தான் மிச்சம்.

:angry: அகதிகள் பரிமாற்றமா அல்லது கைதிகள் பரிமாற்றமா?

என்ன இருந்தாலும் இலங்கைக்கு திருப்பி அனுப்பபட மாட்டார்கள் என நினைக்க சந்தோசமாக உள்ளது. அமெரிக்காவில் இவர்கள் கைதிகளாக நடத்தப்படுவார்கள் என நான் நினைக்கவில்லை. எப்போதும் அமெரிக்காவை எதிர்மறையாக பார்ப்பது தவறு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதிர்ஸ்டமா? CIA, FBI எல்லாம் போட்டிபோட்டுக் கொண்டு இவர்களைப் பந்தாடப் போகிறது போலல்லவா தெரிகிறது! :unsure::unsure:

  • கருத்துக்கள உறவுகள்

ஈழவன் 85

இதை அதிஸ்டம் என சொல்லி அவர்களின் துயரை கொச்சைப்படுத்திவிட்டது உதயன்

ஈழவன் சொல்வது முற்றிலும் உண்மையே. சிலவேளைகளில் நம்மை அறியாமலேயே நாம் சில வார்த்தைகளை உதிர்த்துவிடுகிறோம். அது நமது அடிமனத்திலிருந்து வெளிப்பட்டு விடுகின்றது. புலம்பெயர் வாழ்க்கை ஏதோ பொருளாதார ரீதியில் சிறப்பானதாக இருப்பினும் பலருக்கு அது மகிழ்ச்சியான வாழ்க்கையைத் தருகின்றது என்பதில்லை. செய்தியை எழுதியவர் அங்கு தான் அனுபவிக்கும் துயரங்களால் அகதி வாழ்வை அதிஸ்டமானதாகக் கருதுகிறார். அவரிலும் பிழை கூறமுடியாது.

~அன்னை மண்தந்திடு கூழதுவாயினும் அருமையை மறவாரேல்

அன்னியன் பிச்சையில் அமிழ்தமருந்தினும் அகமகிழ்ந்திடுவாரோ...|

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அமெரிக்காவில் தடுத்து வைக்கப்படுவார்கள் என்பது உண்மையே, ஆனால் அங்கு மனித உரிமை மீறல்கள் இல்லை!. அதனால் உயிராபத்துக்கள் தடுக்கப்படும். தற்போதுள்ள நிலமையில் இது ஆறுதலான செய்தி தானே?!.

புலம்பெயர் அகதி வாழ்வு எவ்வளவு இன்னல் நிறைந்தது என்பது இன்னும் உதயனுக்கு புரியவில்லைபோல.....

தமிழ் அகதிகள் எங்கும் பகடைக்காய் ஆக்கப்படுகிறார்கள் என்பதற்கு இது மற்றுமொரு உதாரணம். கியூபா அகதிகளைக் பெற்றுக்கொண்டு தமிழ் அகதிகளை அமெரிக்காவுக்கு அனுப்பி வைப்பதன் உண்மையான காரணம் என்ன என்பதை அவுஸ்திரேலியா வெளியிடுமா? தமிழ் அகதிகளைப் புறந்தள்ளுமளவுக்கு அப்படி என்ன குறைபாட்டை அவுஸ்திரேலியா நம்மவரில் கண்டுவிட்டது. அகதியாக சென்றவர்கள் அமெரிக்காவுக்கு அனுப்பிவைக்கப்படுவதை அதிஸ்டமென்று ஆலவட்டம் போட்டு சொல்வது எந்தளவுக்குச் சரி என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

  • தொடங்கியவர்

அவர்கள் இலங்கைக்கு திருப்பி அனுப்பப் படுவதை விட இது நல்லதுதான்

மற்றது இலங்கை அமைச்சர்கள் எல்லோரும் போய் பேசிச்சினம் அவையலுண்ட கதயெல்லாம் எடுபடல எண்டு சந்தோச படலாம்

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் அகதி வாழ்வு எவ்வளவு இன்னல் நிறைந்தது என்பது இன்னும் உதயனுக்கு புரியவில்லைபோல.....

இலங்கை இராணுவக் கெடுபிடிகள் புலம் பெயர் நாடுகளில் இல்லை தானே.

தமிழ் அகதிகள் எங்கும் பகடைக்காய் ஆக்கப்படுகிறார்கள் என்பதற்கு இது மற்றுமொரு உதாரணம். கியூபா அகதிகளைக் பெற்றுக்கொண்டு தமிழ் அகதிகளை அமெரிக்காவுக்கு அனுப்பி வைப்பதன் உண்மையான காரணம் என்ன என்பதை அவுஸ்திரேலியா வெளியிடுமா? தமிழ் அகதிகளைப் புறந்தள்ளுமளவுக்கு அப்படி என்ன குறைபாட்டை அவுஸ்திரேலியா நம்மவரில் கண்டுவிட்டது. அகதியாக சென்றவர்கள் அமெரிக்காவுக்கு அனுப்பிவைக்கப்படுவதை அதிஸ்டமென்று ஆலவட்டம் போட்டு சொல்வது எந்தளவுக்குச் சரி என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

அவ்வளவு தூரம் கரிசனை எடுத்து எங்கள் உறவுகளுக்காக அறிக்கை எல்லாம் விடமாட்டார்கள். தற்போதைய அரசாங்கத்துக்கு தலையாய தேவை அகதிகளை வைத்திருப்பதால் எழும் உள்ளூர்வாசிகளின் கண்டனம், எதிர்க்கட்சியின் குற்றச்சாட்டுக்களை துடைத்து அடுத்த தேர்தலில் வரவேண்டும் என்பதே.

  • கருத்துக்கள உறவுகள்

அதிர்ஷ்டம் இல்லா விட்டாலும் நிம்மதியான விஷயம் என்றே நினைக்கிறேன். இங்கே அப்படித் தடுப்பு முகாம் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. சூடான் எதியோப்பியா நாட்டுக் காரர்களைத் தான் அமெரிக்கா அகதிகளாக உள்ளே வர அனுமதிப்பதுண்டு. இலங்கைத் தமிழர்களை ஏற்றுக் கொள்வது இது தான் முதல் தடவை என நம்புகிறேன். இங்கே வேலை விசாவில் வருபவர்களுக்குத் தான் வரிச்சுமையும் வதிவிடச் சட்ட விதிகளும் தொல்லை. அகதிகளாக வந்தால் அரச உதவிகள் கிடைக்கலாம். ஆனால் வேலை பார்க்க முடியுமோ தெரியாது. மேலும், கியூபக் குடியேற்றக் காரர்கள் அதிகமாக ஹவாய் தீவுப் பகுதியில் தான் வசிப்பார்கள். எம்மவரை அங்கே தங்க அனுமதித்தால் அது அவர்களுக்கு நல்லது தான். உல்லாசப் பயணத்துறையில் சட்டத்திற்குப் புறம்பாக சிறு வேலைகள் பார்க்க முடியும். இது எல்லாம் ஏன்? இங்கே வீட்டை விட்டு வெளியே போனால் மாலையில் உயிரோடு திரும்பி வரும் வாய்ப்புகள் சிறி லங்காவில் உள்ளதை விட மிக அதிகம்.

  • தொடங்கியவர்

இலங்கையிலிருந்து அமரிக்காவுக்கு நேராக அகதிகள் போகவில்லை குவாண்டரோமவிற்கே அனுப்பப் போகிறார்கள், அங்கு இவர்களுக்கு அகதி அந்தஸ்து கொடுக்கலாம என்று பரீட்சித்த கொடுக்கலாம் என்று முடிவு செய்யப் படும் பட்சத்திலேயே அவர்கள் அமெரிக்காவுக்குள் அனுமதிக்கப் படுவார்கள். இவர்கள் அமெரிக்காவுக்கு அனுப்புவதற்கு பதிலாக, அமெரிக்கவிளுள்ள கியூபா அகதிகளை அவுஸ்ரேலியா பொறுப்பேற்கிறது. இது ஏதோ வியாபாரம் போலல்லவ உள்ளது..........?

தமிழ் அகதிகள் எங்கும் பகடைக்காய் ஆக்கப்படுகிறார்கள் என்பதற்கு இது மற்றுமொரு உதாரணம். கியூபா அகதிகளைக் பெற்றுக்கொண்டு தமிழ் அகதிகளை அமெரிக்காவுக்கு அனுப்பி வைப்பதன் உண்மையான காரணம் என்ன என்பதை அவுஸ்திரேலியா வெளியிடுமா? தமிழ் அகதிகளைப் புறந்தள்ளுமளவுக்கு அப்படி என்ன குறைபாட்டை அவுஸ்திரேலியா நம்மவரில் கண்டுவிட்டது. அகதியாக சென்றவர்கள் அமெரிக்காவுக்கு அனுப்பிவைக்கப்படுவதை அதிஸ்டமென்று ஆலவட்டம் போட்டு சொல்வது எந்தளவுக்குச் சரி என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

அவுஸ்திரேலிய அரசாங்கம் எம்மவர் மீது எந்த குறையும் காணவில்லை.இங்கு அமைதியாகவும் கடின உழைப்பையும் நேர்மையான வாழ்கையை கடைபிடிகின்றனர் இங்கு எம்மவ்ருக்கு எனதனி மரியாதை இருக்கு மற்ற இனங்களிலும் பார்க்க.இங்கு சாதாரணமாக தற்போது அகதி அந்தஸ்து கொடுத்து கொன்டுதான் இருகின்றார்கள் நானறிந்த பலருக்கு கிடைத்திருகிறது.ஆனால் இந்த 83 பேரில் கடும்போக்கை கடைபிடிப்பதற்கான காரணம் கடல் எல்லையை சட்ட விரோதமாக மீறி வந்ததே.இதனை ஜோன் கவார்ட் சட்டவிரோதமாக கடலால் வந்தவர்களை நாம் குடியேற்ற மாட்டோம் என சொல்லி இருகிறார்.இதற்கான காரணம் மறுபடியும் தேர்தலில் நிற்கின்றார்.சட்ட விரோதமாக கடல் எல்லையை கடந்த இவர்கள் குடியேற்றப்பட்டால் பல்வேறு நாடுகளில் இருந்து பலர் இவ்வாறு வரக்கூடும் இப்படி இவர்கள் மீது மென்போக்கை கடைபிடித்தால் இதனை முன்னுதாரணமாக கொண்டு பலர் இங்கு வரக்கூடும் இதனால் தனக்கு அடுத்த தேர்தலில் சிக்கல் ஏற்படும் என நினைகிரார் என நான் நினைகிறேன்

அகதிகளாக சொந்த நாட்டை விட்டு தப்பி வருபவர்கள் சட்டபூர்வமாக கடலைக் கடக்கவேண்டுமென்று எதிர்பார்ப்பது எப்படிச் சரி. உயிருக்குப் பயந்து சொத்து சுகங்களை விட்டு தப்பிவரும் அகதி மக்கள் கடல் மார்க்கமாக அல்லது வேறு ஏதாவது முறையில் சட்டபூர்வமாக அவுஸ்திரேலியாவுக்குள் நுழைவதற்கு அரசின் விதிமுறைகள் அல்லது கையேடு ஏதாவது இருந்தால் கள உறவுகள் அதை மொழிபெயர்ப்பு செய்து இங்கு பதிவு செய்யுங்கள். அப்படி ஒன்றும் இல்லையென்றால் அங்குள்ள தமிழ் அமைப்புகளினூடாக அரசை ஏனென்று இதற்கு நியாயம் கேளுங்கள்.

அது சரி கியூப அகதிகளை எந்த நோக்கத்தில் அவுஸ்திரேலியா அரசாங்கம் பொறுப்பேற்கின்றது, அவர்கள் சட்ட விரோதமாக அமெரிக்காவுக்குள் புகுந்தவர்கள், அப்படியென்றால் அமெரிக்கா போக விரும்புவர்கள் அவுஸ்திரேலியாவுக்கும், அவுஸ்திரேலியா போக விரும்பியவர்கள் அமெரிக்காவுக்கும் சட்ட விரோதமாகச் சென்றால் சரி போல இருக்கின்றது? :lol:

அதாவது சட்டவிரோதமாக படகில் கடல் எல்லையை கடந்து வந்தவர்களை தாம் நாட்டுக்குள் எடுக்கவில்லை என ஜோன் ஹவார்ட் பிரச்சாரம் செய்ய உதவியாக இருக்கும் அத்துடன் அவர் இப்படி இனிமேல் வருபவர்களுக்கு அடிபணியமாட்டோம் என மக்களிடம் பிரச்சாரம் செய்து 5வது முறையாக பிரதமராகலாம் என அவர் யோசித்திருப்பார் அமெரிக்கரும் இதனையே செய்திருகின்றனர் ஆனால் அவர்களுக்கு ஒரு நிலையான புகழிடம் கிடைப்பது அவர்களுக்கு நல்லதே.இவர்களை வைத்து சில பிணம்தின்னி கழுகுகள் அரசியல் நடத்தியது வேதனை செல்போன் கொடுகிறன் அதை புடுங்கிறன் என ஊரை ஏமாத்திகொண்டு திரியுதுகள

இது அவுஸ்திரேலிய குடிவரவு தினைக்களத்தின் இனையம்

http://www.immi.gov.au/refugee/index.htm

http://www.humanrights.gov.au/human_rights...kers/index.html

http://www.rrt.gov.au/

Australia's refugee detention policy

http://www.smh.com.au/articles/2002/07/31/1027926913916.html

குடிவரவு அமைசரின் இணையம்

http://www.minister.immi.gov.au/humanitarian/index.htm

மேலும் சில அரச சார்பர்ற இணையங்கள்

http://www.refugeesaustralia.org/

http://www.amnesty.org.au/Act_now/campaign...ss_-_fact_sheet

http://www.rilc.org.au/

Edited by ஈழவன்85

  • கருத்துக்கள உறவுகள்

ஈராக்கில் ஒரு வருடம் பணியாற்றினால் கிறீன் காட்

கொடுப்பதாக நான் முன்னர் அறிந்தேன்

எம்மவரும் இதில் சேர்க்கப்படாமல் இருக்க இறைவனை வேண்டுகின்றேன்..

  • கருத்துக்கள உறவுகள்

ஈராக்கில் ஒரு வருடம் பணியாற்றினால் கிறீன் காட்

கொடுப்பதாக நான் முன்னர் அறிந்தேன்

எம்மவரும் இதில் சேர்க்கப்படாமல் இருக்க இறைவனை வேண்டுகின்றேன்..

அதில் உண்மையில்லை குகதாசன். சட்ட விரோதக் குடியேற்றக்காரர்களாக அமெரிக்காவில் இருக்கும் மெக்ஸிகோ மற்றும் தென்னமெரிக்க நாட்டவர்களை வேண்டுமானால் அவர்கள் அமெரிக்க இராணுவ சேவையில் இணைந்த பின்னர் வதிவிட விசா வழங்கலாம் என ஒரு காங்கிரஸ் உறுப்பினர் முன்மொழிந்திருந்தார். ஆனால் அப்படிச் சட்டமெல்லாம் கிடையாது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்குவாழந்தாலும் அகதி அகதிதானே.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.