Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிளிநொச்சியில் ஒருவர் வெட்டிக்கொலை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கிளிநொச்சியில் ஒருவர் வெட்டிக்கொலை

March 5, 2019

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

53391155_983417348521315_216023817615572

கிளிநொச்சி உதயநகர் கிழக்கு பகுதியில் ஓருவர் இன்று(05-03-2019) காலை ஏழு நாற்பதைந்து மணியளவில் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

கூட்டுறவு காப்புறுதி நிறுவனத்தின் கிளிநொச்சி கிளை முகாமையாளரான 32 வயதான காந்தலிங்கம் பிறேமரமணன் என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். வவுனியா வேப்பங்குளத்தை சேர்ந்த இவர் ஒரு பிள்ளையின் தந்தை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இன்று காலை தனது அலுவலகப் பணிப்பாளருடன் கிளிநொச்சி ஏ9 வீதியில் அமைந்துள்ள அலுவலகத்திற்கு உதயநகர் கிழக்கில் தங்கியிருக்கும் இடத்திலிருந்து புறப்படும்போதே உந்துருளியில் வந்த ஒருவர் சரமாறியாக வெட்டியுள்ளார். தலை, கை, கால் மற்றும் உடம்பில் வெட்டுக்காயங்களுக்குள்ளான அவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல முன் உயிரிழந்துள்ளார்.

உறவினர் ஒருவரே வெட்டியதாகவும் வெட்டிய நபர் கிளிநொச்சி காவல்நிலையத்தில் நிலையத்தில் சரணடைந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்ற நிலையில் மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி காவல்துறையினர்; மேற்கொண்டு வருகின்றனர்.

 

http://globaltamilnews.net/2019/115119/

 

 

  • கருத்துக்கள உறவுகள்

வவுனியாவில் இருந்து கிளிநொச்சிக்கு உந்துருளியில் வந்த 33 வயதான இந்த நபர், கிளிநொச்சி உதயநகர் பகுதியில், இன்னுமொரு உந்துருளியில் வந்த நபரினால் தடுத்து நிறுத்தப் பட்டு, வெட்டிக் கொல்லப் பட்டுள்ளார்.

தனிப்பட்ட கருத்து மோதலே காரணமாக இருக்கலாம் என போலீசார் கருதி விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

http://www.dailymirror.lk/breaking_news/Kilinochchi-Co-op-Insurance-branch-manager-hacked-to-death/108-163432

  • கருத்துக்கள உறவுகள்

வேலைக்கு செல்லும் வழியில் ரமணன் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் காரணம் வெளியானது..

Untitled.jpg

சென்றவாரம்  வேலைக்கு செல்லும் போது  நபர் ஒருவர்  வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் 
கிளிநொச்சி உதயநகர் கிழக்கு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது ..

கிளிநொச்சியில் காப்புறுதி நிறுவனத்தின் முகாமையாளராக கடமையாற்றி வந்த 32 வயதுடைய பிரேம ரமணன் என்ற நபரே  கடந்த  5 ஆம் திகதி வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

இந்நிலையில் சில மணித்தியாலங்களின் பின்னர்  குறித்த சம்பவத்துடன் தொடர்புடையதாக தெரிவித்து  நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபரை கிளிநொச்சி காவல் துறையினர் அழைத்து சென்று விசாரணைக்குட்படுத்திய வேளையில் பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொலை செய்யப்பட்ட பிரேம ரமணன் , கைது செய்யப்பட்ட  நபரின் நண்பராவார்.

தாம் வெளிநாட்டுக்கு செல்வதற்கு முன்னர் குடும்ப வறுமையினை போக்க தனது மனைவியினை நண்பரிடம் பேசி அவரின் காப்புறுதி  நிறுவனத்திற்கு தொழிலுக்காக அனுப்பி வைத்துள்ளார்.

இதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட பிரேம ரமணன் நண்பனின் மனைவியுடன் தகாத முறையில் பழகி வந்துள்ளார்.

அது மாத்திரமின்றி தகாத உறவில் இருந்த போது பதிவு செய்யப்பட்ட காணொளிகள் மற்றும் எடுத்துக்கொள்ளப்பட்ட புகைப்படங்கள் என அனைத்தையும் நண்பனின்   கையடக்க தொலைபேசிக்கு அனுப்பியும்  வைத்துள்ளார்.

இந்த நிலையிலேயே அவர் நாட்டிற்கு திரும்பியவுடன் தனது மனைவியிடம் கூறிவிட்டு பிரேம ரமணனை கொலை செய்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

தலை, கை, கால் மற்றும் உடம்பில் வெட்டுக்காயங்களுக்குள்ளான ரமணன்  வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல முன் உயிரிழந்தார்

https://www.madawalaenews.com/2019/03/ramm.html

 

இவர் போன்ற காவாலிகளை வெட்டி கொன்றதில் தப்பு இல்லை .....நம்பிக்கை துரோகிகளை இப்படித்தான் செய்ய வேண்டும் ...

  • கருத்துக்கள உறவுகள்

எமக்கு ஒன்று மட்டும் விளங்கவில்லை.. கூடப் பழகும்.. ஒருவன்..  காவாலி என்பது நடத்தையில் தெரிந்ததும் விலக வேண்டியது தானே.. மனைவிகளின் புத்திசாலித்தனம்.  படுக்கை அறை பகிரும் வரை... ஏன் விட்டுக்கொடுக்கிறார்கள்.. என்பது மர்மாவே இருக்குது. 

இதில்.. இவர் மனைவியிலும் குற்றமுள்ளது. காவாலி அதையும் பயன்படுத்தியுள்ளார்.. என்றே தோன்றுகிறது. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.