Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

2019 ஐ.பி.எல். ரி-20 தொடர் செய்திகள்

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சொந்த ஊரில் கொல்கொத்தாவை பதம்பார்த்த டில்லி கெபிட்டல்ஸ் 7 விக்கெட்டுகாளால் அபார வெற்றி

 

சொந்த ஊரில் கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணியை பதம்பார்த்த டில்லி கெபிட்டல்ஸ் அணி, தவானின் சிறப்பான துடுப்பாட்டத்தின் உதவியுடன் 7 பந்துகள் மீதமிருக்க 7 விக்கெட்டுகளால் அபார வெற்றி பெற்றது.

SA-i-KAT72907.jpg

கொல்கொத்தா அணியின் கோட்டையான கொல்கொத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் முதலாவது வரலாற்று வெற்றியை டில்லி கெபிட்டல்ஸ் அணி பதிவுசெய்தது.

இவ்விரு அணிகளுக்கிடையே கடந்த 30 ஆம் திகதி டில்லியில் இடம்பெற்ற போட்டியில் டில்லி அணி சூப்பர் ஓவரில் வெற்றிபெற்றிருந்தது. 

RON_4931.jpg

இந் நிலையில் இன்றைய தினம் தனது செந்த ஊரில் பழி தீர்க்க வேண்டும் என்ற முனைப்புடன் கொல்காத்தா அணி களமிறங்கியது.

RON_5485.jpg

6 போட்டிகளில் விளையாடி 4 வெற்றி, 2 தோல்விகளை சந்தித்துள்ள கொல்கத்தா அணி, இதற்கு முதல் இடம்பெற்ற போட்டியில் சென்னைக்கு எதிராக வெறும் 108 ஓட்டங்களுக்குள் சுருண்டது. 

A70I7426.jpg

டில்லி கெப்பிட்டல்ஸ் அணி 6 போட்டிகளில் விளையாடி  3 வெற்றி, 3 தோல்வி என்று இதுவரை 6 புள்ளிகளைப் பெற்று ஆறாவது இடத்தில் உள்ளது. 

A70I7448.jpg

கடந்த ஆட்டத்தில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வெற்றிகொண்டிருந்தது டில்லி கெப்பிட்டல்ன்ஸ் அணி.

இவ்விரு அணிகளும் இதுவரை 22 போட்டிகளில் மோதியுள்ளன. அதில் கொல்கத்தா அணி 13 போட்டிகளிலும் டில்லி அணி 8 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளதுடன், ஒரு போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவடைந்திருந்தது.

A70I7577.jpg

12 ஆவது ஐ.பி.எல். தொடரின் 26 ஆவது லீக் போட்டி இன்றிரவு (12.04.2019) 8.00 மணிக்கு கொல்கொத்தாவின் ஈடன்கார்டன் மைதானத்தில் ஆரம்பமாகியது. 

இதில் டினேஸ் கார்த்திக் தலைமையிலான கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணியும் ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான டில்லி கெபிட்டலஸ் அணியும் மோதின.

A70I7658.jpg

இன்றைய போட்டியில் தனது சொந்த ஊரில் விளையாடிய கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணி போட்டியில் வெற்றிபெறுமென பலராலும் எதிர்பார்க்கப்பட்டது.

இப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற டில்லி கெபிட்டல்ஸ் அணியின் தலைவர் ஸ்ரேயாஸ் அய்யர் முதலில் கொல்கொத்தா நைட்ரைடர்ஸ் அணியை துடுப்பெடுத்தாடுமாறு பணித்தார்.

RON_5722.jpg

அதன்படி முதலாவதாக துடுப்பெடுத்தாடிய கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 178 ஓட்டங்களை குவித்தது.

இரு அணிகளுக்குமிடையிலான இப் போட்டி இறுதிவரை பரபரப்பாக நகர்ந்தது.

RON_6031.jpg

கொல்கொத்தா அணி சார்பாக சிறப்பாக துடுப்பெடுத்தாடிய சுகுப்மன் ஜில் 64 ஓட்டங்களையும் அன்று ரசல் 45 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்து வீச்சில் டில்லி கெபிட்டல்ஸ் அணி சார்பாக கிறிஸ் மொறிஸ், ரபடா மற்றும் போல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

RON_6069.jpg

இந்நிலையில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 179 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டில்லி கெபிட்டல்ஸ் அணி 7 பந்துகள் மீதமிருக்க 3 விக்கெட்டுகளை மாத்திரமிழந்து 7 விக்கெட்டுகளால் அபார வெற்றி பெற்றது.

டில்லி கெபிட்டல்ஸ் அணி சார்பாக சிறப்பாக துடுப்பெடுத்தாடிய சிகர் தவான் இறுதிவரை ஆட்டமிழக்காது 97 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார். அத்துடன் டில்லி அணியின் பன்ட் 46 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

SA-i-KAT72592.jpg

பந்துவீச்சில் கொல்கொத்தா அணி சார்பாக கிருஷ்ணா, ரசல் மற்றும் ரனா ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக டில்லி கெபிட்டல்ஸ் அணியின் சிகர் தவான் தெரிவுசெய்யப்பட்டார்.

நன்றி : ஐ.பி.எல்.இணையத்தளம்

 

http://www.virakesari.lk/article/53936

 

  • Replies 106
  • Views 10.8k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பட்லரின் அதிரடியில் மும்பையின் கனவு தகர்ந்தது

பட்லரின் அதிரடியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கோட்டையான மும்மை வான்கடே மைதானத்தில் 3 பந்துகள் மீதமிருக்க 4 விக்கெட்டுகளால் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி அபார வெற்றிபெற்றது.

GAZI_8209.jpg

ஐ.பி.எல். 12 தொடரின் 27 போட்டியில் முன்னாள் சம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி தனது சொந்த மைதானத்தில் வைத்து ராஜஸ்தான் ரோயல்ஸை இன்று எதிர்கொண்டது.

இன்றைய போட்டி மும்மை வான்கடே மைதானத்தில் பகலிரவுப்போட்டியாக இடம்பெற்றது.

இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கயி மும்மை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில், 5 விக்கெட்டுகளை இழந்து 187 ஓட்டங்களைப் பெற்றது.

மும்பை இந்தியன்ஸ் அணி சார்பில் குயின்டன் டீ கொக் அபாரமாக துடுப்பெடுத்தாடி 81 ஓட்டங்களையும் அணித் தலைவர் ரோகித் சர்மா 47 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்து வீச்சி ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி சார்பாக அர்சர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

VRP2487.jpg

இந்நிலையில் 20 ஓவர்களில் 188 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி ஜோஸ் பட்லரின் அதிரடியான ஆட்டத்தின் உதவியுடன் 3 பந்துகள் மீதமிருக்க வெற்றியிலக்கை அடைந்து 4 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.

ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி சார்பாக 89 ஓட்டங்களையும் ரஹானே 37 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

மும்பை இந்தியன்ஸ் சார்பில் பந்துவீச்சில் குர்னல் பாண்டியா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இப் போட்டியின் ஆட்டநாயகனாக ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் ஜோஸ் பட்லர் தெரிவுசெய்யப்பட்டார்.

 

http://www.virakesari.lk/article/53953

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

8 விக்கெட் வித்தியாசத்தில் ரோயல் செலேன்ஞர்ஸ் வெற்றி

201904132348283909_1_chahal1._L_styvpf-720x450.jpg

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்று இடம்பெற்ற போட்டியில் கோஹ்லி, வில்லியர்ஸின் அதிரடி ஆட்டத்தால் ரோயல் செலேன்ஞர்ஸ் பெங்களுர் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 28 ஆவது லீக் போட்டி மொஹாலியில் உள்ள பஞ்சாப் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்றது. இதில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களுர் அணிகள் மோதிக்கொண்டன.

நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற ரோயல்ஸ் செலேன்ஞ்சர்ஸ் பெங்களுர் அணி, முதலில் களத்தடுப்பைத் தெரிவு செய்தது.

இதையடுத்து, பஞ்சாப் அணியின் லோகேஷ் ராகுலும், கிறிஸ் கெயிலும் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கினர்.

இவர்கள் இருவரும் ஆரம்பம் முதல் சிறப்பான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இவர்களில் கெயில் 64 பந்துகளில் 99 ஓட்டங்களை பெற்றார்.

இறுதியில், பஞ்சாப் அணி 4 விக்கெட் இழப்புக்கு 173 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. இதனையடுத்து பெங்களுர் அணி 174 என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கியது.

இந்த அணியில் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாக பார்த்தீவ் பட்டேலும் pயும் களம் இறங்கினர்.

இருவரும் நிதானமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இவர்களில் பட்டேல் ஆட்டமிழந்து வெளியேற, அடுத்ததாக டி வில்லியர்ஸ் களம் இறங்கினார்.

விராட் கோலியும், டிவில்லியர்ஸ் ஜோடி இணைந்து அணியின் ஓட்ட எண்ணிக்கை அதிகரிக்கச் செய்தனர்.  ஆட்டத்தின்  இறுதியில் 19.2 ஓவர்களில் 8 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களுர் அணி வெற்றி பெற்றது.

 

http://athavannews.com/8-விக்கெட்-வித்தியாசத்தி/

 

  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஐ.பி.எல். ரி-20 தொடர்: கொல்கத்தாவை வீழ்த்தியது சென்னை அணி

287856-720x450.jpg

ஐ.பி.எல். ரி-20 தொடரின் 29ஆவது லீக் போட்டியாக நடைபெற்ற போட்டியில், சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், சென்னை சுப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின.

இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற சென்னை சுப்பர் கிங்ஸ் அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி களமிறங்கிய கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 161 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகபட்ச ஓட்டமாக, கிறிஸ் லின் 82 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். பந்து வீச்சில் அதிகபட்சமாக இம்ரான் தஹீர் 4 விக்கெட்டுகளையும், சர்துல் தாகூர் 2 விக்கெட்டுகளையும் பெற்றுக்கொண்டனர்.

இதனையடுத்து, 162 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய சென்னை சுப்பர் கிங்ஸ் அணி, 19.4 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால் அந்த அணி 5 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.

இந்த வெற்றியின் மூலம், சென்னை அணி புள்ளி பட்டியலில் 14 புள்ளிகளுடன் முதலிடத்திற்கு முன்னேறியது.

அத்தோடு அடுத்த சுற்றான பிளே ஓஃப் சுற்றுக்கான வாய்ப்பையும் சென்னை அணி உறுதி செய்துள்ளது.

இதன்போது அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக, சுரேஷ் ரெய்னா ஆட்டமிழக்காது 58 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். பந்து வீச்சில் சுனில் நரைன் மற்றும் பியூஸ் சவ்லா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக பந்து வீச்சில் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய சென்னை சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தஹீர் தெரிவுசெய்யப்பட்டார்.

 

 

http://athavannews.com/ஐ-பி-எல்-ரி-20-தொடர்-கொல்கத்த/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஐ.பி.எல். ரி-20 தொடர்: ஹைதராபாத் அணிக்கெதிரான போட்டியில் டெல்லி கெப்பிடல்ஸ் அணி வெற்றி

287886-720x450.jpg

ஐ.பி.எல். ரி-20 தொடரின் 30ஆவது லீக் போட்டியாக நடைபெற்ற போட்டியொன்றில், டெல்லி கெப்பிடல்ஸ் அணி 39 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

தைராபாத் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், சன்ரைசஸ் ஹைதராபாத் அணியும், டெல்லி கெப்பிடல்ஸ் அணியும் மோதின.

இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற சன்ரைசஸ் ஹைதராபாத் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி களமிறங்கிய டெல்லி கெப்பிடல்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 155 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக, ஸ்ரேயஸ் ஐயர் 45 ஓட்டங்களையும், கொலின் முன்ரோ 40 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். பந்து வீச்சில் காலீல் அஹமட் 3 விக்கெட்டுகளையும், புவனேஸ்வர் குமார் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதனைதொடர்ந்து, 156 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய சன்ரைசஸ் ஹைதராபாத் அணியால், 18.5 ஓவர்கள் நிறைவில், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 116 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது. இதனால் அந்த அணி 39 ஓட்டங்களால் தோல்வியை தழுவியது.

மறுபுறம் இந்த வெற்றியின் மூலம், டெல்லி கெப்பிடல்ஸ் அணி, 10 புள்ளிகளுடன் புள்ளிபட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியது.

இதன்போது அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக, டேவிட் வோர்னர் 51 ஓட்டங்களையும், ஜோனி பேயர்ஸ்டோவ் 41 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். பந்து வீச்சில் அதிகபட்சமாக கார்கிஸோ ரபாடா 4 விக்கெட்டுகளையும், கிறிஸ் மோறிஸ் மற்றும் கீமோ போல் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக டெல்லி அணியின் பந்து வீச்சில் அசத்திய கீமே போல் தெரிவுசெய்யப்பட்டார்.

 

 

http://athavannews.com/ஐ-பி-எல்-ரி-20-தொடர்-ஹைதராபாத/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மலிங்க அபாரம் ; 5 விக்கெட்டுகளால் பெங்களூரை வெற்றிகொண்டது மும்பை

பெங்களுர் ரோயல் சலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் லசித் மலிங்க அபாரமாக பந்துவீசி விக்கெட்டுகளை சாய்க்க 5 விக்கெட்டுகளால் மும்பை அணி தனது 5 வெற்றியை பதிவுசெய்தது.

m.jpg

ஐ.பி.எல். 12 தொடரின் 31 ஆவது போட்டியில் முன்னாள் சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி தனது சொந்த ஊரில் வைத்து பெங்களுர் ரோயல் சலன்ஞர்ஸ் அணியை எதிர்கொண்டது.

மும்பை அணிக்கு ரோகித் சர்மா தலைமை தாங்கிய அதேவேளை, பெங்களுர் அணிக்கு விராட் கோலி தலைமை தாங்கினார்.

mm.jpg

இரு அணிகளுக்குமிடையிலான போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று இடம்பெற்றது.

இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற மும்பை அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய பெங்களூர் அணியின் சார்பில் ஆரம்ப ஆட்டக்காரர்களாக பார்திவ் பட்டேல், விராட் கோலி ஆகியோர் களமிறங்கினர்.

அதில் அணித் தலைவர் விராட் கோலி 8 ஓட்டங்களுடனும் பார்திவ் படேல் 28 ஓட்டங்களுடனும் வெளியேறினர். 

அடுத்து இறங்கிய டி வில்லியர்ஸ், மொயின் அலி ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் அணியின் ஓட்ட எண்ணிக்கை வேகமாக உயர்ந்தது. 

mmmm.jpg

மேலும் இருவரும் அரை சதம் பதிவு செய்து அசத்தினர். அதில் மொயின் அலி 50 ஓட்டங்களுடன் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து களமிறங்கிய ஸ்டோனிஸ் ஓட்டமெதுவும்  எடுக்காமல் வெளியேறினார். 

அதிரடியாக ஆடிய டி வில்லியர்ஸ் 51 பந்தில் 4 சிக்சர், 6 பவுண்டரியுடன்  75 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்ததாக களமிறங்கிய அக்‌ஷ்தீப் நாத் 2 ஓட்டத்துடனும் பவன் நெகி ஓட்டமெதுவும் எடுக்காமலும் அடுத்தடுத்து வெளியேறினர். 

இறுதியில் பெங்களூர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 171 ஓட்டங்களை எடுத்தது. பெங்களூர் அணியில் அதிகபட்சமாக டிவில்லியர்ஸ் 75 (51) ஓட்டங்களையும் மொயின் அலி 50 (32) ஓட்டங்களையும் எடுத்தனர். 

mnm.jpg

மும்பை அணியில் சிறப்பாக பந்து வீசிய லசித் மலிங்க 4 விக்கெட்டுகளும், பெகரெண்டாராப் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதன்மூலம் மும்பை அணிக்கு 172 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 

பின்னர் 172 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்க மும்பை அணியில் குயின்டன் டீ கொக், அணித் தலைவர் ரோகித் சர்மா ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். 

சிறப்பான தொடக்கம் கொடுத்த அந்த ஜோடியில் ரோகித் சர்மா 28(19) ஓட்டங்களுடனும் டீ கொக் 40(26) ஓட்டங்களுடனும் எடுத்து அடுத்தடுத்து வெளியேறினர். அடுத்து களமிறங்கி அதிரடி காட்டிய இஷான் கிஷான் 21(9) ஓட்டங்களுடன் வெளியேறினார். அடுத்ததாக நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியத சூர்யகுமார் யாதவ் 29(23) ஓட்டங்களுடன்  வெளியேறினார். அடுத்ததாக குர்னால் பாண்ட்யா 11(21) ஓட்டங்களுடன் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.

இறுதியில் அதிரடி காட்டிய ஹர்திக் பாண்ட்யா 37(16) ஓட்டங்களையும்  பொல்லார்ட் ஓட்டமெதுவும் எடுக்காமலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். 

முடிவில் மும்பை அணி 19 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 172 ஓட்டங்களை எடுத்தது. பெங்களூர் அணியின் சார்பில் அதிகபட்சமாக மொயின் அலி, சாஹல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், சிராஜ் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். 

mmm.jpg

இதன்மூலம் பெங்களூர் ரோயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றிபெற்றது.

இப் போட்டியின் ஆட்டநாயகனாக லசித் மலிங்க தெரிவுசெய்யப்பட்டார்.

http://www.virakesari.lk/article/53996

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ராஜஸ்தானை 2 ஆவது முறையாகவும் வீழ்த்தியது கிங்ஸ் லெவன் பஞ்சாப்

ஐ.பி.எல். 12 தொடரின் 32 ஆவது போட்டியில் கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணிக்கு பதிலடி கொடுக்கும் நோக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியை பஞ்சாப் அணி 12 ஓட்டங்களால் தோற்கடித்தது. 

DMIPL_10878.jpg

இரு அணிகளுக்குமிடையிலான போட்டி நேற்றிரவு 8 மணிக்கு மொஹாலியிலுள்ள பிந்ரா மைதானத்தில் இடம்பெற்றது. 

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு ரவிச்சந்திரன் அஸ்வினும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கு ரஹானேவும் தலைமை தாங்கினர்.    

DMIPL_10255.jpg

8 அணிகள் இடையிலான 12ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் இடம்பெற்று வருகிறது. இதில் நேற்றிரவு மொகாலியில் அரங்கேறிய 32 ஆவது லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, முன்னாள் சாம்பியன் ராஜஸ்தான் ரோயல்ஸுடன்  மோதியது.

ராஜஸ்தான் அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டன. ஸ்டீவன் சுமித், லியாம் லிவிங்ஸ்டோன், கே.கவுதம் ஆகியோர் கழற்றிவிடப்பட்டு அவர்களுக்கு பதிலாக ஸ்டூவர்ட் பின்னி, சோதி மற்றும் அறிமுக வீரராக ஆஷ்டன் டர்னர் சேர்க்கப்பட்டனர். 

பஞ்சாப் அணியில் சாம் குர்ரன், சர்ப்ராஸ் கான், ஆண்ட்ரூ டை ஆகியோருக்கு பதிலாக டேவிட் மில்லர், முஜீப் ரகுமான், அர்ஷ்தீப் சிங் உள்ளிட்டோர் இடம் பிடித்தனர். 

DMIPL_9748.jpg

நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற ராஜஸ்தான் அணித் தலைவர் ரஹானே முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். 

இதன்படி கிறிஸ் கெய்லும், லோகேஷ் ராகுலும் பஞ்சாப் அணியின் இன்னிங்சை ஆரம்பித்தனர். உனட்கட்டின் பந்து வீச்சில் 2 சிக்சர்களை விளாசிய கெய்ல் சற்று நிதானமாக செயல்பட்டார். 6 ஆவது ஓவர் வரை களத்தில் நின்ற கெய்ல் (30 ஓட்டங்களுக்கு , 22 பந்து, 2 பவுண்டரி, 3 சிக்சர்) ஜோப்ரா ஆர்ச்சரின் வேகப்பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சனிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்து வந்த மயங்க் அகர்வால் 26 ஓட்டங்கள் (12 பந்து, ஒரு பவுண்டரி, 2 சிக்சர்) விளாசினார்.

9S6A9554.jpg

இதையடுத்து 3 ஆவது விக்கெட்டுக்கு, தடுமாறிக்கொண்டிருந்த மற்றொரு ஆரம்ப ஆட்டக்காரர் லோகேஷ் ராகுலுடன் டேவிட் மில்லர் கைகோர்த்தார். இருவரும் ஓட்ட எண்ணிக்கையை  உயர்த்துவதில் கவனம் செலுத்தினர். சோதி, உனட்கட்டின் ஓவர்களில் சிக்சர்கள் விரட்டிய இவர்கள் ஓட்ட எண்ணிக்கையை மிகவேகமாக உயர்த்தினர்.

அணியின் ஸ்கோர் 152 ஓட்டங்களாக உயர்ந்த போது ராகுல் 52 ஓட்டங்களுடன் (47 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். அதைத் தொடர்ந்து நிகோலஸ் பூரன் (5), மன்தீப்சிங் (0) அடுத்தடுத்து வெளியேறினர். இறுதி ஓவரின் முதல் பந்தில் டேவிட் மில்லர் (40 ஓட்டங்கள் , 27 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்) ஆட்டம் இழந்தார். அதிர்ஷ்டவசமாக எஞ்சிய பந்துகளை எதிர்கொண்ட அணித் தலைவர் அஸ்வின் ஒரு பவுண்டரியும், 2 சிக்சரும் விரட்டி பஞ்சாப் அணி சவாலான ஓட்ட எண்ணிக்கையை அடைவதற்கு உதவினார்.

2K1L4263.jpg

20 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 6 விக்கெட் இழப்புக்கு 182 ஓட்டங்களை குவித்தது. அஸ்வின் 17 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காது இருந்தார். ராஜஸ்தான் தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் 4 ஓவர்களில் 15 ஓட்டற்களை மாத்திரம் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.

DMIPL_9815.jpg

பின்னர் 183 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ராஜஸ்தான் அணி தனது இன்னிங்ஸை ஆரம்பித்தது. ஆரம்ப ஆட்டக்காரர் ஜோஸ் பட்லர் 23 ஓட்டங்களுடன் (17 பந்து, ஒரு பவுண்டரி, 2 சிக்சர்) பிகொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து சஞ்சு சாம்சனும், ராகுல் திரிபாதியும் ஜோடி சேர்ந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். இவர்கள் ஆடிய விதம் அந்த அணிக்கு நம்பிக்கை அளிப்பது போல் இருந்தது. ஓட்ட எண்ணிக்கை 97 ஆக இருந்தபோது (11.4 ஓவர்) இந்த ஜோடியை சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் பிரித்தார். அவரது பந்து வீச்சில் சாம்சன் (27 ஓட்டங்கள்)  போல்ட் முறையில் ஆட்டமிழந்தார்.

9S6A0513.jpg

அதன் பிறகு பஞ்சாப் அணியின் பந்துவீச்சாளர்கள்  கொடுத்த நெருக்கடியில் ராஜஸ்தான் திகைத்து போனது. திரிபாதி 50 ஓட்டங்களுடனும் (45 பந்து, 4 பவுண்டரி), அறிமுக வீரர் டர்னர் ஓட்டமெதுவுமின்றியும் ஜோப்ரா ஆர்ச்சர் ஒரு ஓட்டத்துடனும் அணித் தலைவர் ரஹானே 26 ஓட்டங்களுடனும் வெளியேறினர். இறுதி ஓவரில் ராஜஸ்தானின் வெற்றிக்கு 23 ஓட்டங்கள்  தேவைப்பட்டது. இந்த ஓவரில் அந்த அணி ஸ்ரேயாஸ் கோபாலின் (0) விக்கெட்டை பறிகொடுத்து 10 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது. 

2K1L4287.jpg

20 ஓவர் முடிவில் ராஜஸ்தான் அணியால் 7 விக்கெட் இழப்புக்கு 170 ஓட்டங்களையே எடுக்க முடிந்தது. இதன் மூலம் பஞ்சாப் அணி 12 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 9 ஆவது ஆட்டத்தில் ஆடிய பஞ்சாப் அணிக்கு இது 5 ஆவது வெற்றியாகும். ராஜஸ்தான் அணி சந்தித்த 6 ஆவது தோல்வியாகும். இந்த சீசனில் 2 ஆவது முறையாக பஞ்சாப்பிடம் தோற்றுள்ளது ராஜஸ்தான் ரோயல்ஸ்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக பஞ்சாப் அணியின் தலைவர் அஸ்வின் தெரிவு செய்யப்பட்டார்.

 

http://www.virakesari.lk/article/54039

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கனவோடு சென்ற சென்னைக்கு வீழ்ந்தது இடி !

 

ஐதராபத் அணியின் பந்துவீச்சுக்கு முகங்கொடுக்க தடுமாறிய சென்னை சுப்பர் கிங் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 132 ஓட்டங்களைப் பெற, வோர்ணர்,  பேர்ஸ்டோவின் அதிரடியில் சென்னையின் கனவுகளை தவிடுபொடியாக்கிய ஐதரபாத் அணி 6 விக்கெட்டுகளால் அபார வெற்றிபெற்றது.

csk.jpg

ஐ.பி.எல். 12 தொடரின் 33 ஆவது போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் ஐதராபாத் அணிகள் மோதின.

வெற்றிப்பயணத்தை நீடித்து, அடுத்த சுற்று வாய்ப்பை (பிளே–ஆப்) முதல்அணியாக உறுதிசெய்யும் ஆர்வத்துடன் சென்னை இப் போட்டியில் களமிங்கியது.

சென்னை அணியில் டோனிக்கு ஓய்வு அளிக்கப்பட்டு சுரேஷ் ரெய்னா தலைமைப் பொறுப்பை ஏற்றார். டோனிக்கு பதிலாக விக்கெட் காப்பாளர்  சாம் பில்லிங்ஸ் இடம் பிடித்தார். 

இதே போல் மிட்செல் சான்ட்னெர் நீக்கப்பட்டு கரண் ஷர்மா சேர்க்கப்பட்டார். ஐதராபாத் அணியில் ரிக்கி புய், அபிஷேக் ஷர்மா கழற்றி விடப்பட்டு யூசுப் பதான், ஷபாஸ் நதீம் திரும்பினர். 

நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற சென்னை அணித்தலைவர் ரெய்னா முதலில் துடுப்பாட்டத்தை தேர்ந்தெடுத்தார். 

இதன்படி ஷேன் வொட்சனும், பாப் டு பிளிஸ்சிஸ்சும் சென்னை அணியின் இன்னிங்சை தொடங்கினர். 

வலுவான அடித்தளம் அமைத்து தந்த இவர்கள் முதல் விக்கெட்டுக்கு 79 ஓட்டங்களை (9.5 ஓவர்) திரட்டினர். இதில் பிளிஸ்சிஸ் அடித்த ஒரு சிக்சர் தொடரின் 400 ஆவது சிக்சராக பதிவானது. வொட்சன் 31 ஓட்டங்களுடுன் போல்ட் முறையில் ஆட்டமிழந்தார்.

சென்னை அணி எப்படியும் 160 ஓட்டங்களை தாண்டும் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில் தொடக்க ஜோடி பிரிந்ததும் ஆட்டத்தின் போக்கு மாறியது. பிளிஸ்சிஸ் 45 ஓட்டகளுடன் (31 பந்து, 3 பவுண்டரி, 3 சிக்சர்) பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.

 அதன் பிறகு சுழற்பந்து வீச்சாளர் ரஷித்கான் சுழலில் சென்னை அணி தடம் புரண்டது. அவர், பொறுப்பு அணித் தலைவர் சுரேஷ் ரெய்னா (13 ரன்), கேதர் ஜாதவ் (1 ரன்) இருவரையும் ஒரே ஓவரில் எல்.பி.டபிள்யூ. ஆக்கினார். 

இதனால் ஓட்டவேகம் ஒரேயடியாக மந்தமானது. அடுத்து வந்த சாம் பில்லிங்சும் (0) தாக்குப்பிடிக்கவில்லை. கடைசி 6 ஓவர்களில் பந்து இரண்டு முறை மட்டுமே எல்லைக்கோடு பக்கம் சென்றது. 

20 ஓவர்கள் முழுமையாக ஆடிய சென்னை அணி 5 விக்கெட் இழப்புக்கு 132 ஓட்டங்களுக்கு கட்டுப்படுத்தப்பட்டது. அம்பத்தி ராயுடு 25 ஓட்டங்களுடனும் ரவீந்திர ஜடேஜா 10 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஐதராபாத் தரப்பில் ரஷித்கான் 2 விக்கெட்டும், நதீம், விஜய் சங்கர், கலீல் அகமது தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

பின்னர் களம் இறங்கிய ஐதராபாத் அணியில் டேவிட் வோர்னர் அதிரடி காட்டினார். 24 பந்துகளில் தனது 41-ஆவது அரைசதத்தை எட்டிய அவர் 50 ஓட்டங்களுடன் (25 பந்து, 10 பவுண்டரி) பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.  அடுத்து வந்த அணித் தலைவர் வில்லியம்சன் (3 ரன்), விஜய் சங்கர் (7 ரன்), தீபக் ஹூடா (13 ரன்) சீக்கிரம் வெளியேறினாலும் அதனால் அந்த அணிக்கு எந்த பாதிப்பும் இல்லை.

ஐதராபாத் அணி 16.5 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 137 ஓட்டங்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பேர்ஸ்டோ 61 ஓட்டங்களுடன் (44 பந்து, 3 பவுண்டரி, 3 சிக்சர்) களத்தில் இருந்தார். 9-வது ஆட்டத்தில் ஆடிய சென்னை அணிக்கு இது 2-வது தோல்வியாகும். ஐதராபாத் அணிக்கு 4-வது வெற்றியாகும்.

 

http://www.virakesari.lk/article/54123

  • கருத்துக்கள உறவுகள்

இதுவும் நல்லதுதான்.....அணி சீராக பயணிக்க தோனியின் அவசியம் பற்றி புரியவைத்த விளையாட்டு......!  🚣‍♀️

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

டெல்லியை வெற்றிகொண்டது மும்பை

ஐ.பி.எல். 12 ஆவது தொடரின் 34 ஆவது போட்டியில் தனது சொந்த ஊரில் வைத்து டெல்லி அணி மும்பை அணியிடம் 40 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

9S6A0799.jpg

இதையடுத்து மும்பையின் தொடர் வெற்றிக் கணக்கிற்கு முற்றுப்புள்ளி வைத்தது மும்பை.

டெல்லி கெபிட்டல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டி நேற்று இரவு 8 மணிக்கு டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்றது. 

இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற மும்பை இந்தியன்ஸ் அணித் தலைவர் ரோகித் சர்மா துடுப்பாட்டத்தை தெரிவுசெய்தார்.

DMIPL43.jpg

இதையடுத்து, மும்பை அணியின் ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்களாக ரோகித் சர்மா மற்றும் டி கொக் ஆகியோர் களமிறங்கினர். ரோகித் 30 ஓட்டங்களுடனும் டி கொக் 35 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்து வெளியேறினர்.  

2K1L5979.jpg

அடுத்து பென் கட்டிங் 2 ஓட்டங்களுடனும் சூர்யகுமார் யாதவ் 26 ஓட்டங்களுடனும்  ஆட்டமிழந்தனர். ஹர்திக் பாண்டியா 15 பந்துகளில் 32 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

இறுதியில், மும்பை அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 168 ஓட்டங்களை எடுத்தது. குருணால் பாண்டியா 37  ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார்.

9S6A0788.jpg

இதையடுத்து 169 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய டெல்லி அணி  20 ஒவர் முடிவில் 9 விக்கெட்டை இழந்து 128 ஓட்டங்களை எடுத்து மும்பை அணியிடம் தோல்வியை தழுவியது. 

9S6A1310.jpg

டெல்லி அணியில் அதிக பட்சமாக பிரித்வி ஷா 20 ஓட்டங்களையும் தவான் 35 ஓட்டங்களையும் அக்சார் பட்டேல் 26 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். ஏனைய வீரர்கள் சொற்ப ஓட்டங்களுடன் விக்கெட்டை பறிகொடுத்தனர்.

9S6A1272.jpg

இப் போட்டியின் ஆட்ட நாயகனாக ஹார்திக் பாண்டியா தெரிவுசெய்யப்பட்டார்.

 

http://www.virakesari.lk/article/54189

 

large.61DEA5AB-8A89-489F-B0BE-C94464818D

  • கருத்துக்கள உறவுகள்

நான் கிரிக்கட் சூதாட்டம் என்றால் இப்படித்தான் இருக்குமோ என்று சந்தேகப்பட்ட ஆட்டம் நேற்றையது.....!

 டெல்லி நேற்று வெரி டல்....டெல்லி நேற்று பாட்டிங் செய்யவே இல்லை ,ஓவர்கள் குறைந்தது கொண்டு வாறதை பற்றிய கவலை கொஞ்சம் கூட கிடையாது. அட ஒரு மனுஷன் ஸ்கோர் போர்ட்டை கூடவா பார்த்து விளையாட மாட்டாங்கள்........!  😯

Edited by suvy

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கோலி அதிரடி சதம் ; சொந்த மைதானத்தில் கொல்கொத்தாவை வீழ்த்தி திரில் வெற்றிபெற்றது பெங்களூர்

 

கொல்கொத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இடம்பெற்ற போட்டியில் விராட் கோலியின் சதம் கைகொடுக்க, கொல்கொத்தா நைட்ரைடர்ஸ் அணியை அதன் சொந்த மைதானத்தில் 10 ஓட்டங்களால் வீழ்த்தி பெங்களூர் அணி வெற்றிபெற்றது.

rcb.jpg

இதேவேளை, கொல்கொத்தா அணியின் நிதிஷ், ரானா, ரசல் ஆகியோரின் அதிரடி வீணானது.

ஐ.பி.எல். 12 ஆவது தொடரின் 35 ஆவது போட்டியில் தனது சொந்த ஊரில் வைத்து கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் பெங்களூர் ரோயல் சலஞ்சர்ஸை எதிர்கொண்டது.

A70I8640.jpg

இரு அணிகளுக்குமிடையிலான போட்டி நேற்றிரவு 8 மணிக்கு கொல்கொத்தாவின்  ஈடன் கார்டன் மைதானத்தில் இடம்பெற்றது.

A70I8786.jpg

இப் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற கொல்கொத்தா அணி பந்துவீச்சை தெரிவு செய்தது.

பெங்களூர் அணியின் ஆரம்பதுடுப்பாட்டடி வீரர்களாக பார்தீவ் பட்டேல், விராட் கோலி ஆகியோர் களமிறங்கினர். பார்தீவ் பட்டேல் 11 ஓட்டங்களுடனும் அக்‌ஷ்தீப் நாத் 13 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்து வெளியேறினர்.

A70I8927.jpg

விராட் கோலியுடன் ஜோடி சேர்ந்த மொயீன் அலி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மொயீன் அலி 28 பந்தில் 5 பவுண்டரி, 6 சிக்சருடன் 66 ஓட்டங்களுடன் எடுத்து ஆட்டமிழந்தார்.

A70I8913.jpg

முதலில் நிதானமாக ஆடிய விராட் கோலி அரைசதம் கடந்ததும் அதிரடியில் இறங்கினார். கடைசி கட்டத்தில் சிக்சர், பவுண்டரியுமாக விளாசினார். விராட் கோலி 56 பந்தில் 4 சிச்கர், 9 பவுண்டரியுடன் சதமடித்து 100 சதமடித்து வெளியேறினார். 

RON_7706.jpg

இறுதியில், பெங்களூர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 213 ஓட்டங்களைக் குவித்தது.

இதையடுத்து, 214 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்கியது. கிறிஸ் லின், சுனில் நரேன் ஆரம்ப ஆட்டக்காரர்களாக இறங்கினர்.

RON_8004.jpg

கிறிஸ் லின் ஒரு ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார். சுனில் நரேன் 18 ஓட்டங்களுடனும் ஷுப்மான் கில், ரொபின் உத்தப்பா ஆகியோர் 9  ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்து வெளியேறினர். 

RON_8094.jpg

நிதிஷ் ரானாவுடன் ஆண்ட்ரு ரசல் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி பெங்களூர் அணியின் பந்து வீச்சை வெளுத்து வாங்கியது. சிக்சர் மழையாக பொழிந்தது.

SA-i-KAT75445.jpg

நிதிஷ் ரானா சிறப்பாக ஆடி அரை சதமடித்தார். ஆண்ட்ரு ரசல் அதிரடியாக ஆடி அரை சதமடித்தார். அவர் 25 பந்தில் 65 ஓட்டங்களை குவித்து ஆட்டமிழந்தார். நிதிஷ் ரானா 46 பந்தில் 85 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார்.

RON_8208.jpg

இறுதியில் கொல்கொத்தா அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 203  ஓட்டங்களைப் பெற்று 10 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

A70I9133.jpg

இப் போட்டியின் ஆட்ட நாயகனாக பெங்களூர் அணியின் விராட் கோலி தெரிவுசெய்யப்பட்டார்.

 

 

http://www.virakesari.lk/article/54241

  • கருத்துக்கள உறவுகள்

சூப்பர் மாட்ச்.....!

ஹோலி,  ஹோலி பண்டிகையே கொண்டாடி விட்டார். அதுவும் அந்த காட்ச்  இருக்கே அதுதான் ஹைலைட்....மற்றும்படி பொங்களூர் அணியின் பீல்டிங்  ஒரு சதத்துக்கு உதவாது.எக்ஸ்ரா மட்டும் 15 க்கு மேல். கொல்கத்தாவின் விளையாட்டும் அருமை..... ஏண்டா உங்களுக்கெல்லாம் 15 வது ஓவருக்கு பின்பு வருகிற உத்வேகம் 10 வது  ஓவரில் இருந்தே வரக்கூடாதா......! யார் ஜெயித்தால் என்ன பார்வையாளருக்கு செம விருந்து.....!  👍

பகிர்வுக்கு நன்றி கிருபன்....!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஸ்மித் அணித்தலைவராக பொறுப்பேற்ற முதல் போட்டியிலேயே ராஜஸ்தானுக்கு வெற்றி!

நடைபெற்றுவரும் 12ஆவது ஐ.பி.எல். தொடரின் 36ஆவது போட்டியில் ராஜஸ்தான் அணி 5 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது. தடைக்குப் பின்னர் ஸ்டீவ் ஸ்மித் அணித்தலைவராக பொறுப்பேற்ற முதல் போட்டியிலேயே ராஜஸ்தானுக்கு இந்த வெற்றி கிடைத்துள்ளது.

ஜெய்பூரில் நடைபெற்ற இப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் றோயல்ஸ் அணிகள் மோதின.

இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற ராஜஸ்தான் அணி முதலில் களத்தடுப்பைத் தெரிவுசெய்தது.

அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து 161 ஓட்டங்களைப் பெற்றது.

அணி சார்பாக, டி ஹொக் 47 பந்துகளில் 65 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்ததோடு, யாதவ் 34 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தார்.

பநதுவீச்சில் ராஜஸ்தான் அணி சார்பாக. ஸ்ரேயஸ் கோபால் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதோடு, ஸ்ருவர்ட் பின்னி, ஜொப்ரா ஆர்சர் மற்றும் உனத்கட் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.

இந்நிலையில், 132 என்ற இலங்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் அணி ஸ்டீவன் ஸ்மித் மற்றும் ரியான் பரக் ஆகியோரின் இணைப்பாட்டத்தின் உதவியுடன் வெற்றியை சுவீவரித்தது.

அந்தவகையில், ராஜஸ்தான் அணி 19.1 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.

அணி சார்பாக ஸ்டீவன் ஸ்மித் ஆட்டமிழக்காமல் 59 ஓட்டங்களையும், ரியான் பரக் 43 ஓட்டங்களையும் பெற்றதோடு, ஷம்சன் 35 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

பந்துவீச்சில், ராகுல் சாகர் 3 விக்கெட்டுகளையும், பும்ரா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் அணி 9 போட்டிகளில் விளையாடி 3 போட்டிகளில் வெற்றிபெற்று 6 புள்ளிகளுடன் 7 ஆவது இடத்தில் உள்ள அதேவேளை, மும்பை அணி, 10 போட்டிகளில் விளையாடி, 6 போட்டிகளில் வெற்றிபெற்று 12 புள்ளிகளுடன் 2ஆவது இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Mumbai-vs-Rajasthan-36th-match-ipl-2019-

Mumbai-vs-Rajasthan-36th-match-ipl-2019-

Mumbai-vs-Rajasthan-36th-match-ipl-2019-

 

 

http://athavannews.com/ஸ்மித்-அணித்தலைவராக-பொறு/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சத்தமின்றி சாதிக்கும் இளம் வீரர்களைக் கொண்ட டெல்லி அணி!

SA-i-KAT76506.jpg

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை 5 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி வெற்றி பெற்றது.

ஐ.பி.எல். தொடரின் 37 ஆவது போட்டி நேற்று டில்லியில் நடைபெற்றது. இந்த போட்டியில் டெல்லி கெப்பிடல்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதிக்கொண்டன.

இதில், நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற டெல்லி கெப்பிட்டல்ஸ் அணியானது, முதலில் களத்தடுப்பைத் தெரிவு செய்தது.

இதையடுத்து முதலில் களமிறங்கிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியானது, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட் இழப்பிற்கு 163 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

இந்த அணி சார்பில் அதிகபட்சமாக கிறிஸ் கெயில் 69 ஓட்டங்களையும், மன்தீப் சிங் 30 ஓட்டங்களையும் எடுத்தனர்.

டெல்லி அணியின் பந்து வீச்சாளர்கள் தரப்பில், சந்தீப் 3 விக்கெட்டுக்களையும்;, அக்ஷர் பட்டேல் மற்றும் ரபடா ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

இதைத்தொடர்ந்து, 164 என்ற வெற்றி இலக்கை நோக்கி டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி களமிறங்கியது. இதில், பிரித்வி ஷா, ஷிகர் தவான் ஆகியோர் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாகக் களமிறங்கினர்.

அணியின் எண்ணிக்கை 24 ஆக இருக்கும்போது பிரித்வி ஷா 11 ஓட்டங்களில் வெளியேறினார். இவரை அடுத்து தவானுடன் ஸ்ரேயாஸ் அய்யர் ஜோடி சேர்ந்து, நிதானமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தினார்.

தவான் அரை சதமடித்து 56 ஓட்டங்களில் ஆட்டமிழந்து வெளியேற, இவரையடுத்து களமிறங்கிய ரிஷப் பண்ட் 6 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

எனினும், இறுதிவரை நிதானமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய ஸ்ரேயஸ் அய்யர், 58 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்திருந்தார்.

இறுதியில் டெல்லி அணி 19.4. ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து, 166 ஓட்டங்களை பெற்று வெற்றியடைந்தது. இந்த வெற்றியின் மூலம் டெல்லி அணி புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

 

http://athavannews.com/சத்தமின்றி-சாதிக்கும்-இள/

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

15 ஓவரிலேயே ஆட்டத்தை முடித்த ஐதராபாத்

கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி 9 விக்கெட்டுக்களினால் வெற்றிபெற்றுள்ளது.

GAZI_1434.jpg

12 ஆவது ஐ.பி.எல். தொடரின் 38 ஆவது லீக் போட்டி இன்று மாலை 4.00 மணிக்கு ஐதராபாத் ராஜிவ் காந்தி மைதானத்தில் கொல்கத்தா கினைட் ரைடர்ஸ் மற்றும் சன் ரைஸர்ஸ் ஐதராபாத் அணிகளுக்கிடையே ஆரம்பமானது.

0U5A0928.jpg

இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஐதராபாத் அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்ய, முதலாவதாக துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 159 ஓட்டங்களை குவித்தது.

GAZI_1117.jpg

இதையடுத்து 160 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட வெற்றியிலக்கினை 15 ஓவர்களிலேயே ஒரு விக்கெட்டினை இழந்து கடந்தது.

ஐதராபாத் அணி சார்பில் டேவிட் வோர்னர் 38 பந்துகளில் 5 ஆறு ஓட்டம் 3 நான்கு ஒட்டம் அடங்களாக 67 ஓட்டங்களை குவித்தது ஆட்டமிழந்ததுடன், ஜோனி பெயர்ஸ்டோ 43 பந்துகளை எதிர்கொண்டு 7நான்கு ஓட்டம், 4 ஆறு ஓட்டம் அடங்களாக 83 ஓட்டத்துடனும், அணித் தலைவர் கேன் வில்லியம்சன் 8 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

GAZI_1637.jpg

0U5A1275.jpg

பந்து வீச்சில் கொல்கத்தா அணி சார்பில் யர்ரா ப்ரித்விராஜ் ஒரு விக்கெட்டினை வீழ்த்தினார்.

GAZI_1561.jpg

நன்றி ; ஐ.பி.எல். இணையத்தளம்

http://www.virakesari.lk/article/54367

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பெங்களூருவிடம் ஒரு ஓட்டத்தில் வீழ்ந்தது சென்னை

பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி ஒரு ஓட்டத்தினால் தோல்வியை சந்தித்துள்ளது.

SA-i-KAT77578.jpg

ஐ.பி.எல்.தொடரின் 39 ஆவது லீக் ஆட்டம் இன்றிரவு 8.00 மணிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கிடையே பெங்களூரு சின்னசுவாமி மைதானத்தில் ஆரம்பமானது.

A70I9861.jpg

இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சென்னை அணியின் தலைவர் தோனி முதலில் களத்தடுப்பை தேர்வுசெய்ய பெங்களூரு அணி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கியது.

அதன்படி பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 161 ஓட்டங்களை குவித்தது.

RON_9553.jpg

162 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 160 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

SA-i-KAT77541.jpg

சென்னை அணி சார்பில் வோட்சன் மற்றும் டூப்பிளஸ்ஸி தலா 5 ஓட்டத்துடனும், ரய்னா டக்கவுட் முறையிலும், ராயுடு 29 ஓட்டத்துடனும், கேதர் யாதவ் 9 ஓட்டத்துடனும், ஜடேஜா 11 ஓட்டத்துடனும், பிராவோ 5 ஓட்டத்துடனும், தாகூர் ஒரு ஓட்டத்துடனும் ஆட்டமிழந்ததுடன், தோனி 84 ஓட்டத்துடன் ஆட்டமிழக்காதிருந்தார்.

SA-i-KAT77620.jpg

இதேவேளை இப் போட்டியில் சென்னை அணிக்கு இறுதி ஓவருக்கு 26 ஓட்டங்கள் என்ற நிலையிருக்க அந்த ஓவரை எதிர்கொண்ட தோனி ஒரு நான்கு நான்கு ஓட்டம் 3 ஆறு ஓட்டங்களை விளாசி பெங்களூரு அணிக்கு அச்சுறுத்தல் விடுத்தமையும் குறிப்பிடத்தக்கது.

பந்து வீச்சில் பெங்களூரு அணி சார்பில் ஸ்டெய்ன் மற்றும் உமேஷ் யாதவ் தலா 2 விக்கெட்டுக்களையும், சாஹல் ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

நன்றி ; ஐ.பி.எல்.இணையத்தளம்

 

http://www.virakesari.lk/article/54379

  • கருத்துக்கள உறவுகள்

வெற்றி தோல்விக்கு அப்பால் நம்ப முடியாத விரட்டல்.அபாரம்.அருமையான போட்டி.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, சுவைப்பிரியன் said:

வெற்றி தோல்விக்கு அப்பால் நம்ப முடியாத விரட்டல்.அபாரம்.அருமையான போட்டி.

தோனியால் முடிந்தது, மற்றவர்களால் 10% கூட முடியவில்லை 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, MEERA said:

தோனியால் முடிந்தது, மற்றவர்களால் 10% கூட முடியவில்லை 

உண்மைதான்.ஆனால் இன்று பான்ட் அதை முயற்சித்து பாத்திருக்கிறார்.இந்த நேரத்தில் நீங்கள் ஒரு இடத்தில் தோனி பான்டுக்கு இடம் விட்டு விலகவேண்டும் என்று பதிந்த பதிவும் ஞாபகத்திற்க்கு வந்து போனது.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, சுவைப்பிரியன் said:

உண்மைதான்.ஆனால் இன்று பான்ட் அதை முயற்சித்து பாத்திருக்கிறார்.இந்த நேரத்தில் நீங்கள் ஒரு இடத்தில் தோனி பான்டுக்கு இடம் விட்டு விலகவேண்டும் என்று பதிந்த பதிவும் ஞாபகத்திற்க்கு வந்து போனது.

நிச்சயமாக, இந்திய கிரிக்கெட்டை பொறுத்தவரை தோனி பான்டிற்கு வழிவிட வேண்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ரிஷாத் பந்தின் அதிரடியால் ராஜஸ்தானுக்கு பதிலடி

 

ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி 6 விக்கெட்டுக்களினால் வெற்றிபெற்றுள்ளது.

DMIPL3619.jpg

12 ஆவது ஐ.பி.எல். தொடரின் 40 ஆவது லீக் ஆட்டம் இன்றிரவு 8.00 மணிக்கு ராஜஸ்தான் ரோயல்ஸ் மற்றும் டெல்லி கெப்பிட்டல்ஸ் அணிகளுக்கிடையே ஜெய்ப்பூரில் ஆரம்பமானது.

DMIPL2767.jpg

இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற டெல்லி அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்ய ராஜஸ்தான் அணி துடுப்பெடுத்தாட களமிறங்கியது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 191 ஓட்டங்களை குவித்தது.

9S6A3892.jpg

192 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த டெல்லி அணி 19.2 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து ராஜஸ்தான் நிர்ணயித்த வெற்றியிலக்கை கடந்தது.

டெல்லி அணி சார்பில் தவான் 54 ஓட்டத்துடனும், ஸ்ரேயஸ் அய்யர் 4 ஓட்டத்துடனும், பிரித்வி ஷா 42 ஓட்டத்துடனும், ஷெர்பேன் ரதர்ஃபோர்ட் 11 ஓட்டத்துடனும் ஆட்டமிழந்ததுடன், அணியின் வெற்றிக்கு அதிரடியா துடுப்பெடுத்தாடி ரிஷாத் பந்த் மொத்தமாக 36 பந்துகளை எதிர்கொண்டு 4 ஆறு ஓட்டம், 6 நான்கு ஓட்டம் அடங்களாக 78 ஓட்டத்துடனும், கொலின் இங்ரம் 3 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

9S6A4428.jpg

பந்து வீச்சில் ராஜஸ்தான் அணி சார்பில் ஸ்ரேயஸ் கோபால் 2 விக்கெட்டுக்களையும், குல்கரனி, ரியான் பாரக் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினை வீழ்த்தினர்.

9S6A4363.jpg

நன்றி ; ஐ.பி.எல். இணையத்தளம்

 

 

http://www.virakesari.lk/article/54451

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வேட்சனின் அதிரடியுடன் பிளேஒப் சுற்றுக்குள் நுழைந்த சென்னை

 

வேட்சனின் அசத்தலான ஆட்டத்துடன் ஐதராபாத் அணியை வீழ்த்தி சென்னை அணி பிளேஒப் சுற்றுக்குள் நுழைந்துள்ளது.

RON_1593.jpg

12 ஆவது ஐ.பி.எல். தொடரின் 41 ஆவது லீக் போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும சன் ரைஸர்ஸ் ஐதராபாத் அணிகளுக்கிடையே இன்றிரவு 8.00 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஆரம்பமானது.

இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற சென்னை அணி முதலில் துடுப்பெடுத்தாடுமாறு ஐதராபாத் அணியை பணிக்க, அதன்படி ஐதராபாத் அணி முதலாவதாக துடுப்பெடுத்தாட களமிறங்கி 2 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் 175 ஓட்டங்களை குவித்தது.

RON_1044.jpg

176 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த சென்னை அணியின் முதல் விக்கெட் 3 ஓட்டங்களுக்குள் வீழ்த்தப்பட்டது. அதன்படி டூப்பிளஸ்ஸி ஒரு ஓட்டத்துடன் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார்.

அதன் பின் 2 ஆவது விக்கெட்டுக்காக களமிறங்கிய சுரேஷ் ரய்னா வோட்சனுடன் இணைந்து அதிரடியாக துடுப்பெடுத்தாடினார். குறிப்பாக 6 ஆறவாது ஓவருக்காக சண்டீப் சர்மா பந்துப் பரிமாற்றம் மேற்கொள்ள அந்த ஓவரை எதிர்கொண்ட ரய்னா நான்கு 4 ஓட்டம், ஒரு ஆறு ஓட்டத்தை அந்த ஓவரில் விளாசித் தள்ளினார் (4 0 4 4 4 6). 

A70I1103.jpg

தொடர்ந்து சென்னை அணி 9 ஓவர்களின் நிறைவில் ஒரு விக்கெட்டை இழந்த நிலையில் 73 ஓட்டங்களை குவித்தது. ஆடுகளத்தில் வோட்சன் 37 ஓட்டத்துடனும், ரய்னா 37 ஓட்டத்துடன் துடுப்பெடுத்தாடி வந்தனர். எனினும் 9 ஆவது ஓவரின்  இறுதிப் பந்தில் ரய்னா 38 ஓட்டத்துடன் ரஷித் கானின் சுழலில் சிக்கி ஆட்டமிந்தார்.

SA-i-KAT78983.jpg

மூன்றாவது ஆவது விக்கெட்டுக்காக களமிறங்கிய அம்பத்தி ராயுடுவுடன் வோட்சன் கைகோர்த்து அதிரடி காட்ட 11.4 ஆவது ஓவரில் அவர் ஒரு ஆறு ஓட்டத்தை விளாசி மொத்தமாக 35 பந்துகளில் 3 ஆறு ஓட்டம், 5 நான்கு ஓட்டம் அடங்களாக அரைசதம் கடந்தார்.

A70I1152.jpg

அது மாத்திரமின்றி ஐதராபாத் அணியின் பந்துகள‍ை எதிர்கொண்டு வோட்சன் தொடர்ந்தும் வான வேடிக்கை காட்ட சென்னை அணி 16 ஓவர்களின் நிறைவில் 2 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் 150 ஓட்டங்களை குவித்தது.

இந் நிலையில் மைதானத்தை தொடர்ந்தும் அதிர வைத்த வேட்சன் 17.1 ஓவரில் மொத்தமாக 53 பந்துகளில் 96 ஓட்டத்துடன் ஆட்டமிழந்து சதம் அடிக்கும் வாய்ப்பை நழுவ விட்டார்(160-3). 

DQ0Q3162.jpg

வேட்சனின் வெளியேற்றத்தையடுத்து கேதர் யாதவ் களமிறங்கி துடுப்பெடுத்தாட சென்னை அணி 19.5 ஆவது ஓவரில் 4 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் ஐதராபாத் அணி நிர்ணயித்த வெற்றியிலக்கை கடந்தது. ஆடுகளத்தில் கேதர் யாதவ் 11 ஓட்டத்துடனும், பிராவோ எதுவித ஓட்டமின்றியும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

பந்து வீச்சில் ஐதராபாத் அணி சார்பில் ரஷித் கான் மற்றும் புவனேஸ்வர் குமார் மற்றும் சண்டீப் சர்மா ஒரு விக்கெட்டினை வீழ்த்தினார்.

A70I1078.jpg

இந்த வெற்றி மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் இத் தொடரில் முதல் அணியாக பிளேஒப் சுற்றுக்கு முன்னேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

SA-i-KAT78699.jpg

நன்றி ; ஐ.பி.எல். இணையத்தளம்

 

http://www.virakesari.lk/article/54539

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

17 ஓட்டங்களினால் வீழ்ந்தது பஞ்சாப்

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி 17 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது.

A70I0391.jpg

12 ஆவது ஐ.பி.எல். தொடரின் 42 ஆவது லீக் போட்டி ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கிடையே இன்றிரவு 8.00 மணிக்கு பெங்களூரு சின்னசுவாமி மைதானத்தில் ஆரம்பமானது.

அதன்படி இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பஞ்சாப் அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்ய பெங்களூரு அணி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 202 ஓட்டங்களை குவித்தது.

D47hP2kU0AAhZVP.jpg

203 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 185 ஓட்டங்களை மாத்திரம் பெற்று, 17 ஓட்த்தினால் தோல்வியை தழுவியது.

SA-i-KAT78043.jpg

பஞ்சாப் அணி சார்பில் ராகுல் 42 ஓட்டத்துடனும், கிறிஸ் கெய்ல் 23 ஓட்டத்துடனும், அகர்வால் 35 ஓட்டத்துடனும், மில்லிர் 24 ஓட்டத்துடனும், அதிரடி காட்டிய நிகோலஷ் பூரன் 28 பந்துகளில் 5 ஆறு ஓட்டம், ஒரு நான்கு ஓட்டம் அடங்களாக 46 ஓட்டத்துடனும், அஷ்வின் 6 ஓட்டத்துடனும், வில்ஜென் டக்கவுட் முறையிலும் ஆட்டமிழக்க, ஆடுகளத்தில் முருகன் அஷ்வின் ஒரு ஓட்டத்துடனும், மண்டீப் சிங் 4 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

SA-i-KAT75871__1_.jpg

பந்து வீச்சில் பெங்களூரு அணி சார்பில் உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுக்களையும், நவ்டிப் சைனி 2 விக்கெட்டுக்களையும், ஸ்டோனிஸ் மற்றும் மொய்ன் அலி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டி‍னை வீழ்த்தினர்.

RON_0732.jpg

 

http://www.virakesari.lk/article/54616

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.