Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திக்கு தெரியாத காட்டில் ....

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சுமார் 1000 நாட்களுக்கு முன்பு ஜூலை 2016 ஆண்டு ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவதை 52% மக்கள் ஆமோதித்தார்கள். கூடுதலான பென்ஷன் காரர் வெளியேறுவதை ஆதரித்தார்கள், அவர்களில் ஒரு தொகையினர் இவுலகை விட்டு வெளியேறி இருப்பார்கள். ஆனால் அவர்கள் விதைத்த பிரெக்ஸிட் என்ற  விதை விருச்சமாக வளர்ந்து பூக்காமலும் காய்க்காமலும் நிக்கிறது. அரசியல் அமைப்புகளுக்கு எல்லாம் எடுத்துக்காட்டாக திகழ்ந்த வெஸ்ட்மினிஸ்டர் பாராளுமன்றம் இன்று திக்கு முக்காடுகிறது. 90% ஆமா என்று போட்டிருந்தால் பிரச்சனை சுலபமாக தீர்க்கப் பட்டிருக்கும். ஆம் என்று போட்டவர்கள் பெரும்பாலான பழமைவாதிகளும், பென்ஷனக்காரர்களும். இல்லை என்று போட்டவர்கள் பெரும்பாலான இளைஞர்களும் வெளிநாட்டு காரர்களும். வோட்டு போட்ட பலருக்கு தெரியாது பிரித்தானியாவுக்கு ஐரோப்பிய ஒன்றியத்துடன்  தரை வழி தொடர்பு உண்டு என்று,  பிரச்சினைக்குரிய வடக்கு ஐயர்லாந்து இன்று பாரிய சிக்கலாக உள்ளது. ஐயர்லாந்து எல்லையில் சோதனை சாவடி போடுவதை அவர்கள் விரும்பவில்லை, மீண்டும் கலவரங்கள் வர சாத்தியங்கள் உண்டு என்று ஐயப்படுகிறார்கள்.

இன்று மக்கள் மத்தியில் உள்ள கேள்வி. பிரதமர் பதவி நீடிப்பாரா? தேர்தல் வரவும் வாய்ப்பு  உள்ளது. அதனால்தான் பல ஆளும் கட்சி உறுப்பினர்கள் பிரதமரை குற்றம் சாட்டுகிறார்கள். உண்மையில் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் ஒருமித்த கருத்து இல்லை. இவர்கள் மீண்டும் எப்படி மக்களை போய் சந்திப்பார்கள். அதனால்தான் இப்பவே பிரதமரை குற்றம் சாட்ட ஆரம்பித்து விட்டார்கள்.

இப்போது கால அவகாசம் கேட்க போகிறார்கள். அப்படி நீடித்தாலும் பிரதமரால் தனது வரைவை நிறைவேற்ற முடியுமா என்ற கேள்வி உள்ளது. பிரெக்ஸிட்டை (article 50) ரத்து செய்யக்கோரி ஒரு மில்லியனுக்கும் மேட்பட்டவர்கள் கையெழுத்து போட்டிருக்கிறார்கள்.  இன்னும் ஏழு நாட்கள் தான் உள்ளது. நாடு அரசியல் வியாபாரிகளினால் திக்கு தெரியாத காட்டில் விடப் பட்டிருக்கிறது.

அகஸ்தியன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்லதொரு அரசியல் ஆய்வு அகஸ்தியன்.......தகவல்களுக்கு நன்றி.

தலையங்கம் பிரமாதம். 👍

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, Ahasthiyan said:

பாவம் பார்த்து.....ஐரோப்பிய ஒன்றியம்.....இரண்டே ....இரண்டு மாதம் மட்டும்.....கால அவகாசம் கொடுத்து இருக்காம்!

என்னைப் பொறுத்த வரையில்....பிரித்தானியா.. தனது பழைய பெருமைகளை...மூட்டை கட்டி வைத்துவிட்டு...காலத்தைப் பின்னோக்கி....நகர்த்த முயற்சிக்காமல்....ஐரோப்பிய யூனியனில்...சேர்ந்திருப்பதே....நாட்டுக்கு நல்லது என்று நினைக்கிறேன்!

  • கருத்துக்கள உறவுகள்

ஐரோப்பிய யூனியனில் சேர்ந்திருப்பதால் வரும் நன்மைகளை எல்லாம் பிரித்தானியர் என்று பெருமைகொள்ளும் ஒரு பகுதியினரால் புரிந்துகொள்ளமுடியவில்லை. பிரதமர் தெரசா மே அவர்களைத் தாண்டி முடிவெடுக்கக்கூடிய நிலையிலும் இல்லை. திக்குத் தெரியாத காட்டில்தான் சுற்றிக்கொண்டிருப்பதால் எங்கு போய் முடியுமோ என்று தெரியாத நிலைதான்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, குமாரசாமி said:

நல்லதொரு அரசியல் ஆய்வு அகஸ்தியன்.......தகவல்களுக்கு நன்றி.

தலையங்கம் பிரமாதம். 👍

20 hours ago, புங்கையூரன் said:

பாவம் பார்த்து.....ஐரோப்பிய ஒன்றியம்.....இரண்டே ....இரண்டு மாதம் மட்டும்.....கால அவகாசம் கொடுத்து இருக்காம்!

என்னைப் பொறுத்த வரையில்....பிரித்தானியா.. தனது பழைய பெருமைகளை...மூட்டை கட்டி வைத்துவிட்டு...காலத்தைப் பின்னோக்கி....நகர்த்த முயற்சிக்காமல்....ஐரோப்பிய யூனியனில்...சேர்ந்திருப்பதே....நாட்டுக்கு நல்லது என்று நினைக்கிறேன்!

13 hours ago, கிருபன் said:

ஐரோப்பிய யூனியனில் சேர்ந்திருப்பதால் வரும் நன்மைகளை எல்லாம் பிரித்தானியர் என்று பெருமைகொள்ளும் ஒரு பகுதியினரால் புரிந்துகொள்ளமுடியவில்லை. பிரதமர் தெரசா மே அவர்களைத் தாண்டி முடிவெடுக்கக்கூடிய நிலையிலும் இல்லை. திக்குத் தெரியாத காட்டில்தான் சுற்றிக்கொண்டிருப்பதால் எங்கு போய் முடியுமோ என்று தெரியாத நிலைதான்.

சேர்ந்து இருப்பதுதான் பிரித்தானியாவுக்கு பாதுகாப்பு. கருத்துக்களுக்கு நன்றி 

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் அகஸ்தியன்,கட்டுரைக்கு நன்றி...சேர்ந்திருப்பதால் அப்படி என்ன நன்மை என்று எழுதினால் நன்றாயிருக்கும் 
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 3/23/2019 at 8:27 PM, ரதி said:

வணக்கம் அகஸ்தியன்,கட்டுரைக்கு நன்றி...சேர்ந்திருப்பதால் அப்படி என்ன நன்மை என்று எழுதினால் நன்றாயிருக்கும் 
 
வணக்கம் ரதி 
எனது அறிவுக்கு எட்டியவரை, பிரித்தானியா எதிரி நாட்டு(ரஷ்யா) தாக்குதலுக்கு சமாளிக்க கூடிய நிலையில்  இப்ப பலம்  இல்லை. நேட்டோ படைகள் (அமெரிக்கா உட்பட ) அல்லது ஐரோப்பிய ஒன்றியம் தான் உதவிக்கு வர வேண்டும். அமெரிக்கா சும்மா வர மாட்டார்கள் பெரிய தொகையில் பேரம் பேசுவார்கள். 2ம் உலகப்போரில் அமெரிக்கா உதவியத்துக்கு  பிரித்தானியா பெரும் செல்வத்தை அமெரிக்காவுக்கு கொடுத்தது. அதன் விளைவு, தன் ஆட்சியின் கீழ் இருந்த பல நாடுகளை கை  விட வேண்டி வந்தது (நிர்வாக செலவு காரணமாக). ஐரோப்பாவுடன் சேர்ந்து இருப்பது எவ்வளவோ மேல். 
ஒரு தோப்பை அழிப்பது கடினம் ஆனால் தனி மரத்தை இலகுவாக சரித்து விடலாம். இது பொருளாதாரத்துக்கும் பொருந்தும். இதை பற்றி பல பெரிய நிறுவனங்கள் ஏற்கனவே அபாய சங்கை ஊதி விட்டன. கூட்டு விண் வெளி ஆராய்ச்சி, போக்கு வரத்து, சுற்றுலா, காப்புறுதி, மருத்துவம், மருத்துவ விஞ்ஞான ஆராய்ச்சிகள்  - இவை எல்லாம் மறு சீரமைத்தால், ஒரு வேளை சில ஆண்டுகள் பின்னோக்கியும் போகலாம். இவை எல்லா வற்றையும் விட  தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்படும். 

தூர நோக்கு இல்லாத சுய நல அரசியல் வாதிகளால் இப்ப பிரிந்தாலும், இளம் தலைமுறையினர் சேர்ந்து இருப்பதையே விரும்புகிறார்கள். எனவே ஒரு 20 வருடத்தில் திரும்ப சேர விண்ணப்பிக்கலாம். யார் கண்டது.

என்னை பாதிப்பது, நான் அடிக்கடி எனது வாகனத்தில் ஐரோப்பாவுக்கு போவேன். விசா, வாகன - மருத்துவ காப்புறுதிகள், கைபேசி பாவனைகள்  போன்றவை மாறுவதை விரும்பவில்லை. எனதும் மனைவியின் சகோதரங்கள் ஐரோப்பிய நாடுகளில் வசிக்கிறார்கள் . இப்பதான் பிள்ளைகள் பழக ஆரம்பித்து இருக்கிறார்கள். சும்மாவா சொன்னார்கள் வனம் மேய போனாலும் இனம் சேர வேண்டும் என்று.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி அகத்தியன்,

உண்மையில் பிரச்சனை டேவிட் காமரோன் உடன் தான்  ஆரம்பித்தது.

அவரது தந்தை ஒரு பங்குச்சந்தை சூதாடி. ஆகவே மகனும் இரு ஆபத்தான அரசியல் சூதாட்டங்களில் இறங்கினார்.

ஒன்று: ஸ்காட்லாந்து பிரிந்து  போகும் குடியொப்பம். அதில் வென்றதும் அடுத்தது இந்த ஐரோப்பிய யூனியன் குடியொப்பம்.

அதில் தோற்று, துண்டைக் காணம், துணியை காணம் என்று ஓடி விட்டார்.

அவரது அமைச்சரவையில், உள் நாட்டு அமைச்சராக இருந்த அம்மையார் பிரதமரானார்.

நன்றாக, நட்பாக பழகக் கூடிய கேமரோனுக்கு, ஐரோப்பிய ஒன்றியத்தில பல நண்பர்கள் இருந்தார்கள். எதையும் வெட்டி ஆடக் கூடிய மனிதராக இருந்தார்.

அம்மையார், மார்கிரெட் தாட்சர் போல, பிரித்தானிய பெண் பிரதமர்களுக்கு உரிய, சிறிய தலைக்கனம் உள்ளவர். ஆகவே அவருக்கு ஐரோப்பிய ஒன்றியத்தில் நண்பர்கள் இருக்கவில்லை. எனவே பேச்சுவார்த்தை சுமுகமாக இருக்கவில்லை.

வெள்ளையர்கள், பீர், கூலிங் பீயரில், தீராத பிரச்சனைக்கு எல்லாம் தீர்வைக் காண முடியும் என்பார்கள்.

ஆனால் அது, ஆணும், ஆணும் தான்.... ஆணும் பெண்ணும் இல்லை. ஆகவே அம்மையாரால் சாதிக்க முடியவில்லை.

உண்மையில் அவர், டேவிட் கேமரோன், டோனி பிளேயர் போன்ற பழைய பெருச்சாளிகளை அழைத்து, ஐரோப்பிய ஒன்றியத்துடன் பேசும் பொறுப்புகளை  கொடுத்து பின்னால் இருந்திருக்க வேண்டும்.

ஆனால், தான் இந்த ஆட்டத்துக்கு புதியவர் என்பதை மறந்து, தானே பேச  வேண்டும் என்று ஓடித் திரிந்து, இன்று கவுட்டுக் கொட்டிப் போட்டு உள்ளார்.

ஏறச் சொன்னா எருதுக்கு கோபம், இறங்கச் சொன்னா நொண்டிக்கு கோபம் நிலையில் உள்ளது பிரித்தானியா.

அம்மையார் இதை தவறாக கையாண்டு விட்டார். மறுபுறம், எதிர்க் கட்சி தலைவரோ, ஒரு பனியர். அணுகுண்டு எல்லாம் தேவையில்லை, எல்லாம் கழட்டி எறியவேண்டும் என்று சொல்லும் ரகம்.

பரீட்சை மூலமே, மாணவரை தெரிவு செய்யும் பாடசாலை ஒன்றில் தான் படித்தாலும், அவ்வாறு தனது மகனுக்கு கிடைத்தபோது, வேண்டாம் சாதாரண பாடசாலைக்கு அனுப்பு என்று, சொல்ல, மனைவி மறுக்க, மணமுறிவு செய்த ஆள்.

ஆகவே தான், அம்மையார் தேர்தலுக்கு போனாலும் பிரச்சனை, குடியொப்பத்துக்கு போனாலும் பிரச்சனை. உலகத்தை கட்டி ஆண்ட நாட்டுக்கு, தலை முட்டப் பிரச்சனை.

ஐரோப்பிய ஒன்றியத்துடன் இருப்பது பாதுகாப்பது ரீதியில் அல்ல, பொருளாதார ரீதியில், பலமானது.

காரணம், ஐரோப்பிய ஒன்றியம், ஒன்றாக சேர்ந்தது, பேரசுரன் அமெரிக்காவின் பொருளாதார பலத்துக்கு ஈடு கொடுக்க.

பிரித்தானியா பிரிவது, டிரம்ப்பருக்கு மகிழ்வானது. சேர்ந்து இருக்கும், எருமைகளை, தனித்தனியே பிரித்தால், சிங்கம் பிரித்து மேயலாம் என்பதே காரணம்.

ஒரு விசயத்தில் அம்மையார் திறமான வேலை செய்து விட்டார்.

ஸ்காட்லாந்து இரண்டாவது குடியொப்பம் வேண்டும் என்று அதன் முதலமைச்சர் நாண்டு பிடித்தார். அதெல்லாம் வேலைக்கு ஆகாது அம்மையார் cut அண்ட் right ஆக சொல்லி விட்டார்.

Edited by Nathamuni

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.