Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முல்லைத்தீவில் சிறிலங்கா வான்படையின் வேவு வானூர்தி வீழ்ந்தது

Featured Replies

முல்லைத்தீவில் சிறிலங்கா வான்படையின் வேவு வானூர்தி வீழ்ந்தது

[வெள்ளிக்கிழமை, 20 ஏப்ரல் 2007, 15:13 ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்]

முல்லைத்தீவு கொக்கிளாய் களப்புப் பகுதியில் சிறிலங்கா வான் படைக்குச் சொந்தமான தானியங்கி வேவு வானூர்தி ஒன்று வீழ்ந்து சேதமாகியுள்ளது.

சிறிலங்கா வான்படைக்கு வீடியோப் படங்கள் மூலம் வேவுப்பணி செய்யும் ஆட்கள் அற்ற தானியங்கி வேவு வானூர்தி இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் 11.30 மணியளவில் திருகோணமலை - முல்லைத்தீவு கடற்பரப்புக்கு மேலாக வேவுப் பறப்பை மேற்கொண்டு படம் பிடித்துக் கொண்டிருந்த போது, அந்த வேவு வானூர்தி கொக்கிளாய் களப்புக்கு மேலாக பறந்த போது களப்புக்குள் வீழ்ந்து சேதமாகியுள்ளது.

முதலில் வீழ்ந்ததாக சிறிலங்கா படைத்தரப்பு தகவல் வெளியிட்டது. ஆனால் இன்று பிற்பகல் கோளாறுக்கு உள்ளான வேவு வானூர்தி தமது கட்டுப்பாட்டு நிலையம் மூலம் தரையிறக்கப்பட்டதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது.

ஆனால் வானூர்தி வீழ்ந்து சேதமாகி உடைந்துள்ளதாக கொழும்புத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறிலங்கா வான்படை வானூர்திகள் தாக்குதல்களை நடத்துவதற்காக வேவுப்பறப்பை மேற்கொண்டு வீடியோ படம் எடுத்துக்கொடுக்கும் பணியைப் புரியும் இந்த ஆளற்ற வேவு வானூர்திகள் சிறிலங்கா வான்படைத் தளத்திலிருந்து இயக்கப்படுகின்றன.

தமிழ் மக்களால் வண்டு என்று இந்த வேவு வானூர்திகள் அழைக்கப்பட்டுகின்றது. இதற்கு முன்னர் வன்னி கனகராஜன்குளம் விஞ்ஞானகுளத்தில் இத்தகைய வேவு வானூர்தி வீழ்ந்து நொருங்கியது.

சிறிலங்கா வான்படைத் தாக்குதலுக்கு முக்கிய ஆதாரமாக இந்த ஆளற்ற வானூர்திகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி: புதினம்

SLAF UAV reported missing in Kokkilai

[TamilNet, Friday, 20 April 2007, 09:01 GMT]

A Sri Lanka Air Force Unmanned Aerial Vehicle (UAV) was reported missing when it was on a reconnaissance mission over Kokkilai Friday noon, according to the SLAF sources in Colombo.

The UAV made a forced landing between Pulmoaddai and Kokkilai, but the Air Force failed to identify the location.

Kokkilai is located 33 km south of Mullaitheevu.

அடடடா வழமையா ஆயுதம் தான் கொடுப்பார்கள் இந்த முறை விமானமா

தற்கொலை செய்துகொண்டிருக்கும்.

Sri Lanka loses spy plane.

Sri Lanka's air force said Friday it had lost an unmanned spy plane flying over the country's embattled northeast close to Tamil Tiger territory. The Israeli-built Unmanned Aerial Vehicle (UAV) was lost somewhere over the northern edge of Trincomalee district, close to the Tamil rebel stronghold of Mullaitivu, Group Captain Ajantha Silva said. "There was a malfunction and the (ground-based) pilots landed it somewhere between Pulmoddai and Kokkilai," Silva said. "We are sending helicopters to the area to look for it."

The Sri Lankan air force has lost at least three Israeli-built Drones, or spy planes, since 1997. The latest loss came as the air force stepped up air attacks against suspected Tamil Tiger positions in the northeast of the island.

-Virakesari-

Edited by யாழ்வினோ

கடந்த முறை (2005) ஆளில்லாத வேவு விமானம் காணாமல் போன போது அதனை புலிகள் விமானத்தில் வந்து சுட்டிருக்கலாம் என்று கொழும்பு ஆங்கில பத்திரிகை ஒன்று எழுதியது குறிப்பிடத்தக்கது. இது கட்டுநாயக்கா தாக்குதலுக்கு முன்பு நடந்தது. பின்பு தற்போதைய கட்டுநாயக்கா தாக்குதல் நடந்து புலிகள் உரிமை கோரியதும் அந்த சம்பவத்தை மீள குறிப்பிட்டு எழுதியிருந்தார்கள். இப்போது மீளவும் வேவு விமானம் விழுந்துள்ளது என்றால் இது நிச்சயம் புலிகள் விமானத்தில் வந்து தான் சுட்டு விழுத்தினார்கள் என்று எழுதுவார்கள் என்று நினைக்கின்றேன். எதற்கும் இந்த ஞாயிறு சண்டே டைம்ஸ் Situation Report பார்த்தால் தான் தெரியும்.

2005 இல் ஆளில்லாத உளவு விமானம் விழுந்த போது எழுதப்பட்ட சண்டே டைம்ஸ் Situation Report

http://sundaytimes.lk/051023/index.html

புலிகளின் கட்டுநாயக்கா விமான தாக்குதலுக்கு பின்பு எழுதப்பட்ட சண்டே டைம்ஸ் Situation Report

http://www.yarl.com/forum3/index.php?showtopic=21937

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளி 20-04-2007 16:20 மணி தமிழீழம் [மயூரன்]

கொக்கலையில் ஆளில்லா வேவுவிமானத்தை காணாமல் போகடிக்கப்பட்டுள்ளது

இன்று வெள்ளிக்கிழமை மதியமளவில் சிறீலங்கா வான்படைக்கு சொந்தமான ஆளில்லா வேவு விமானம் ஒன்று காணாமல் போகடிக்கப்பட்டுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில் இவ்விமானத்தை புல்மோட்டை மற்றும் கொக்கலை பகுதிகளில் வலுக்கட்டாயமாக தரையிறக்கப்பட்டதாக தெரிவிக்கின்ற போதும் இது எங்கு தரையிறக்கப்பட்டது என்று சிறீலங்கா வான்படையால் இனம் காணப்படவில்லை எனவும் தெரியவருகிறது.

pathivu

அதேதான் மதன் அண்ணா இது வீழ்ந்ததா இல்லை வீழ்த்தப் பட்டதா..................? அனேகமாக வீழ்த்தப் பட்டதாகத்தானிருக்கும். இனிமேல் இப்படி பல இழப்புக்களை விமானப் படை எதிர் கொள்ளவேண்டி வரும்

இது மட்டுமல்ல இரவில் வெளிச்சமுட்டை போட்டு குண்டுமுட்டை போடும் வான்பறவைகளின்

நிலைமை எப்போது ஒரு வழிக்கு வருமோ தெரியாது. தங்கின கூடுகளில் இருந்து தப்பினதுகளின் அட்டகாசம் தாங்கமுடியாதப்பா....

வான் கோழி இறைச்சி சாப்பிட்டு கன நாளாகிவிட்டது :D :P :lol:

இது மட்டுமல்ல இரவில் வெளிச்சமுட்டை போட்டு குண்டுமுட்டை போடும் வான்பறவைகளின்

நிலைமை எப்போது ஒரு வழிக்கு வருமோ தெரியாது. தங்கின கூடுகளில் இருந்து தப்பினதுகளின் அட்டகாசம் தாங்கமுடியாதப்பா....

வான் கோழி இறைச்சி சாப்பிட்டு கன நாளாகிவிட்டது :D :P :lol:

இவங்கள் பொட்ட கண்ண வச்சிட்டு பகலிலையே தப்பு தப்ப குண்டு போடுவாங்கள், இரவில எங்கையும் காட்டிலையும் கடலிலையும்தான் போடுவாங்கள் லூசு பசங்க

இவங்கள் பொட்ட கண்ண வச்சிட்டு பகலிலையே தப்பு தப்ப குண்டு போடுவாங்கள், இரவில எங்கையும் காட்டிலையும் கடலிலையும்தான் போடுவாங்கள் லூசு பசங்க

:D :P :lol::lol:

இது மட்டுமல்ல இரவில் வெளிச்சமுட்டை போட்டு குண்டுமுட்டை போடும் வான்பறவைகளின்

நிலைமை எப்போது ஒரு வழிக்கு வருமோ தெரியாது. தங்கின கூடுகளில் இருந்து தப்பினதுகளின் அட்டகாசம் தாங்கமுடியாதப்பா....

வான் கோழி இறைச்சி சாப்பிட்டு கன நாளாகிவிட்டது :D :P :lol:

வான் கோழி இரவில் வன்னியில முட்டை போட்டுவிடடு போக அடுத்தநாள் தான் றம்புக்கல வந்து கொக்கரிச்சு சொல்லுவார் சர்வதேசத்துக்கு தாங்கள் வன்னியில் புலிகளின் முகாம் மீது முட்டை போட்டுவிட்டோம் என்று...... ஆனல் அந்த முட்டை எல்லாம் பொதுமக்கள் வீடுகளின் மேல் தான் விழுகிறது என்பது தமிழர்கள் அறிந்த விடயம் .

இது போன்ற ஆளில்லாத வேவு விமானம் வானில் இருந்தாலும் ஆபத்து அது தரையில் இருந்தாலும் ஆபத்து தான். இது சிறிலங்கா விமானப்படையின் கட்டுப்பாட்டு நிலையத்தினால் விடுதலைப்புலிகளின் பிரதேசத்தில் வேண்டுமென்றே பத்திரமாக தரையிறக்கம் செய்யப்பட்டிருப்பின் இந்த விமானத்தில் பொருத்தப்பட்டிருக்கும் தொலைக்காட்சிக் கமரா மூலம் அவ்விமானத்தின் அண்மித்த நிலப்பிரதேசங்களையும் சூழ்ந்து நின்று வேடிக்கைபார்க்கும் மக்களையும் படையினரால் உடனுக்குடன் வேவு பார்க்க முடியும். விமானம் எதிரியின் கைகளில் சிக்கும் சந்தர்ப்பங்களில் அல்லது கட்டுக்கடங்காமல் செல்லும் வேளையில் தொலை இயக்கியால் வெடிக்கச் செய்து விமானத்தை அழிப்பதற்கென்று(self destruction device) இவ்வித வேவு விமானங்களில் வெடிக்குண்டு பொருத்தப்பட்டிருப்பது வழமை. எனவே இவ் விமானம் பற்றி மிகவும் கவனத்துடன் செயல்பட வேண்டும்

இது போன்ற ஆளில்லாத வேவு விமானம் வானில் இருந்தாலும் ஆபத்து அது தரையில் இருந்தாலும் ஆபத்து தான். இது சிறிலங்கா விமானப்படையின் கட்டுப்பாட்டு நிலையத்தினால் விடுதலைப்புலிகளின் பிரதேசத்தில் வேண்டுமென்றே பத்திரமாக தரையிறக்கம் செய்யப்பட்டிருப்பின் இந்த விமானத்தில் பொருத்தப்பட்டிருக்கும் தொலைக்காட்சிக் கமரா மூலம் அவ்விமானத்தின் அண்மித்த நிலப்பிரதேசங்களையும் சூழ்ந்து நின்று வேடிக்கைபார்க்கும் மக்களையும் படையினரால் உடனுக்குடன் வேவு பார்க்க முடியும். விமானம் எதிரியின் கைகளில் சிக்கும் சந்தர்ப்பங்களில் அல்லது கட்டுக்கடங்காமல் செல்லும் வேளையில் தொலை இயக்கியால் வெடிக்கச் செய்து விமானத்தை அழிப்பதற்கென்று(self destruction device) இவ்வித வேவு விமானங்களில் வெடிக்குண்டு பொருத்தப்பட்டிருப்பது வழமை. எனவே இவ் விமானம் பற்றி மிகவும் கவனத்துடன் செயல்பட வேண்டும்

நிச்சயமாக..ஆனால் வன்னியில உள்ளவங்க அவ்வளவு Non Technicl ஆனவங்க அல்ல :angry:

  • கருத்துக்கள உறவுகள்

நம்ம ஆட்கள் குறுனல் போட்டு இறக்கியிருப்பாங்கள்.

வீழ்ந்தது கோளாறு தரையிறக்கப்பட்டது. இனிச் சிங்களம் வேவுப்பறப்புக்களுக்கு;திரமல

  • கருத்துக்கள உறவுகள்

விமானப்படையின் உளவு விமானமொன்று காணாமல் போயுள்ளது

ஸ்ரீலங்கா விமானப்படையினருக்கு சொந்தமான ஆளில்லா உளவு விமானம் இன்று வெள்ளிக்கிழமை காணாமல் போயுய்ள்ளது.

திருகோனமலைக்கும் முல்லைத்தீவுக்கும் இடைப்பட்ட பகுதியில் பறந்து கொண்டிருந்த பொழுது இவ் ஆளில்லா விமானம் காணாமற் போயுள்ளதாக விமானப்ப்டையில் தரப்பில் பேசவல்ல அதிகாரி குறூப் கப்டின் அஜந்த சில்வா தெரிவித்துள்ளார்.

தரையிலிருந்து விமானம் இயக்கிய விமானி புல்மோட்டை கொக்கிலாய் அண்டிய பகுதியில் இவ் விமானத்தினை தரையிறக்கியுள்ளதாகவும் இது தொடர்பாக ஆராய்வதற்கு ஹெலி கொப்டர் குறித்த இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

- வீரகேசரி

ஆளில்லா வேவு விமானம்

கொக்கிளாயில் வீழ்ந்தது!

இயந்திரக் கோளாறு என்கிறது விமானப்படை

கொழும்பு, ஏப்.21

திருகோணமலை மாவட்டத்தின் வடக்கு எல்லைப் பகுதியில் கொக்கிளாய் பிர தேசத்தின் மீது வேவு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த ஆளில்லாத வேவு விமானம் ஒன்று திடீரெனக் கட்டுப்பாட்டு நிலையத் தின் தொடர்பை இழந்து காணாமற்போய் பின்னர் தரையில் கண்டுபிடிக்கப்பட்டி ருக்கின்றது.

வேவுப் பணியில் ஈடுபட்டிருந்த அந்த விமானத்தில் திடீரெனக் கோளாறு ஏற்பட்டதை அடுத்து தரைக்கட்டுப்பாட்டு நிலையத்தில் உள்ள விமானிகள் அதனை புல்மோட்டைக்கும் கொக்கிளாய்க்கும் இடைப்பட்ட பிரதேசத்தில் தரையிறக்கினர் என்று விமானப்படைப் பேச்சாளர் கு×ப் கப்டன் அஜந் டி சில்வா தெரிவித்தார்.

நேற்று முற்பகல் 11.00 மணியளவில் கொக்கிளாய் புல்மோட்டை கடற்பரப்பின் மீது பறந்து வேவு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இந்தத் தானியங்கி விமானம் திடீரெனக் காணாமற் போனது.

விமானத்தைக் கண்டுபிடித்து மீட்பதற் காக ஹெலிக்கொப்டர்கள் அந்தப் பகுதிக்கு அனுப்பப்பட்டன என்று விமானப்படைப் பேச்சாளர் தகவல் வெளியிட்டார்.

விமானம் காணாமற் போனதை அடுத்து கொக்கிளாய் புல்மோட்டைக் குடாக் கடல் பகுதியில் விமானத்தைத் தேடும்படி கடற்படையினருக்கும் உத்தரவு பறந்ததா கக் கூறப்படுகின்றது.

ஆனாலும் சற்றுநேரம் கழித்து, அந்த விமானத்தை தரைப்பகுதியில் இராணுவத்தினர் கண்டுபிடித்திருப்பதால் கடல் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலை நிறுத்துமாறு கடற்படைக்கு அறிவுறுத்தப் பட்டதாக அறியவருகின்றது.

தரையில் வீழ்ந்த விமானத்தை மீண்டும் இயக்கிச் செயற்பட வைப்பதற்கு தரைக்கட்டுப்பாட்டு நிலைய விமானிகள் தீவிர முயற்சி எடுத்தனர் என்றும் தெரிவிக் கப்பட்டது. எனினும் மீட்கப்பட்டதாகக் கூறப்படும் விமானத்தின் செயலாற்றும் திறன் குறித்து இச் செய்தி அச்சுக்குப் போகும் வரை உறுதிப்படுத்த முடியவில்லை. (சி)

உதயன்

பலரை காவு கொள்ள காட்டி கொடுத்த வண்டு செத்தது நல்லதே அது தானாக விழுந்தால் என்ன சுட்ட்டு விழுத்தப்பட்டால் என்ன

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.