Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெனிவா பரிந்துரைகளை முழுமையாக நடைமுறைப்படுத்தமாட்டேன் – சிறிலங்கா அதிபர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜெனிவா பரிந்துரைகளை முழுமையாக நடைமுறைப்படுத்தமாட்டேன் – சிறிலங்கா அதிபர்

 

maithri-300x200.jpgஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பரிந்துரைகளை முழுமையாக நடைமுறைப்படுத்த முடியாது என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

”நாட்டின் அரசியலமைப்புக்கு எதிரான எந்தவொரு யோசனையையும், நிச்சயமாக நடைமுறைப்படுத்தமாட்டேன்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின்  பல அறிக்கைகள் தவறானவை.  சரியானதை மாத்திரம் அரசாங்கம் ஏற்றுக் கொள்ளும் தவறானவற்றை நிராகரிக்கும்.

வடக்கில் சிறிலங்கா இராணுவத்தின் வசமுள்ள காணிகள் தொடர்பாக, ஐ.நா மனித உரிமை ஆணையாளர், சில குழுக்களால் தவறாக வழிநடத்தப்படுகிறார்.

அவரது அறிக்கையில் காணிகள் விடுவிப்பு தொடர்பாக கூறப்பட்டுள்ள பரிந்துரையை நான் ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட சிறிலங்கா தொடர்பான தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்க அரசாங்கம் எடுத்து முடிவு பற்றி எனக்குத் தெரியாது.

எனக்கு அறிவிக்காமலேயெ, பெப்ரவரி 25ஆம் நாள், ஜெனிவாவில் உள்ள சிறிலங்கா தூதுவர் தீர்மானத்தில் கையெழுத்திட்டுள்ளார். அதனை நான் ஏற்றுக் கொள்ளமாட்டேன்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா சார்பில் முன்வைக்கப்பட்ட அறிக்கை எனது தலையீட்டுடன் தான் வரையப்பட்டது.

மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்கான கலப்பு விசாரணைக்கு உறுதியான எதிர்ப்பு தெரிவிப்பதே அதன் நோக்கம்.

சிறிலங்காவுக்கு வெளிநாடுகளுடனான உறவுகள் முக்கியம். ஆனால், வெளிநாட்டு சக்திகளை இங்கு அதிகாரம் செலுத்த அனுமதிக்க முடியாது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

http://www.puthinappalakai.net/2019/03/28/news/37096

 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, nunavilan said:

சிறிலங்காவுக்கு வெளிநாடுகளுடனான உறவுகள் முக்கியம். ஆனால், வெளிநாட்டு சக்திகளை இங்கு அதிகாரம் செலுத்த அனுமதிக்க முடியாது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இங்க பார்டா சீனாக்காரன் தனித் தீவு அமைத்து சிறிலங்கா வரைபடத்தையே மாற்றுகிறான்,,,,,இவர் என்னடா என்றால் வெளிநாட்டவ‌ர் தலையிட விடமாட்டாராம்....சீனாகாரன் வாலைவிட்டவனோ

  • கருத்துக்கள உறவுகள்

காணிகளை விடுவிக்க, ஆணைக்குழு அமைக்கவோ, ஜெனீவாத் தீரமானங்களை ஏற்கவோ முடியாது…

March 28, 2019

mahi-maithri.png?resize=680%2C470சர்வதேசமோ வேறு எவருமோ தெரிவிக்கும் வகையில் நாட்டின் அரசியலமைப்பிற்கு முரணாகவோ நாட்டின் சுயாதீன தன்மைக்கு பாதிப்பு ஏற்படும் வகையிலோ எதனையும் செய்வதற்கு தான் தயாராக இல்லையென ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.

குறிப்பாக வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் பாதுகாப்பு தரப்பினரால் பயன்படுத்தப்பட்ட காணிகள் அவற்றின் உரிமையாளர்களுக்கு மீண்டும் விடுவிக்கப்படவில்லை என்றும், அது தொடர்பில் ஆணைக்குழுவொன்று அமைக்கப்பட வேண்டுமென்றும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் முன்வைத்துள்ள முன்மொழிவு அரச சார்பற்ற நிறுவனங்களினால் வழங்கப்பட்டுள்ள பிழையான தகவல்களை அடிப்படையாகக்கொண்டு மேற்கொள்ளப்பட்டதாகும் என்றும் தெரிவித்த ஜனாதிபதி, அத்தகையதொரு ஆணைக்குழுவை அமைப்பதற்கு எத்தகைய தேவையும் இல்லை என்றும் குறிப்பிட்டார்.

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கையில் உள்ள சரியான விடயங்களை ஏற்றுக்கொள்வதைப்போன்று அதில் உள்ள பிழையான விடயங்களை ஏற்றுக்கொள்வதற்கு அரசாங்கம் ஒருபோதும் தயாராக இல்லை என்றும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.

இதேநேரம் மனித உரிமைகள் ஆணைக்குழு இலங்கை தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் இணை அனுசரணை வழங்கி அடுத்த இரண்டு வருடங்களின் பின்னர் அதனை கவனத்திற்கொள்ளவும் கடந்த பெப்ரவரி 25ஆம் திகதி ஜெனீவாவில் உள்ள இலங்கைத் தூதுவர் மனித உரிமைகள் ஆணைக்குழுவுடன் கைச்சாத்திட்டுள்ளதனை தான் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்றும் அதனை தான் நிராகரிப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

அது தனக்கு அறிவிக்கப்படாமல் அல்லது வெளிநாட்டலுவல்கள் அமைச்சு அல்லது அதன் செயலாளருக்கு தெரியாமலேயே அவ்வாறு கைச்சாத்திடப்பட்டிருப்பதாகவும் இலங்கைத் தரப்பினரின் பிழையான தீர்மானங்களின் காரணமாக இடம்பெற்ற அந்த நிகழ்வு குறித்து தனது முழுமையான எதிர்ப்பை தெரிவிப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

மேலும் இந்த நிகழ்வு இந்த நாட்டின் முப்படையினர், அரசாங்கம் மற்றும் மக்களை காட்டிக்கொடுத்த செயலாகும் என்றும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.
நாட்டின் வெளிநாட்டுக் கொள்கை, சர்வதேச தொடர்புகள் மற்றும் சர்வதேச செயற்பாடுகள் தொடர்பான பொறுப்பு ஜனாதிபதிக்கு உரியதே அன்றி அதற்கு கீழான பதவிகளை வகிப்பவர்களுக்கு உரியதல்ல என ஜனாதிபதி வலியுறுத்தினார்.

ஜெனீவா ஆணைக்குழுவிற்கு அனுப்பப்படவிருந்த பிரதிநிதிகள் குழுவானது தமது ஆலோசனைகளின்றியே நியமிக்கப்பட்டிருந்தது என தெரிவித்த ஜனாதிபதி, பெப்ரவரி 25 ஆம் திகதி இடம்பெற்ற நிகழ்வின் பின்னர் தான் அந்த பிரதிநிதிகள் குழுவில் மாற்றங்களை செய்ய நடவடிக்கை எடுத்ததாகவும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அண்மையில் அவ் ஆணைக்குழுவில் முன்வைத்த உரையை நாட்டிற்கு பொருத்தமான முறையில் ஆற்றுவதற்கான ஆலோசனைகளை வழங்கியதாகவும் தெரிவித்தார்.

அன்று நாட்டுக்கு எதிராக இடம்பெற்ற ஏகாதிபத்திய சூழ்ச்சிகள் இன்றும் வேறொரு வடிவத்தில் மேலெழத் தொடங்கியுள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, நாட்டிற்கு சிறந்தவொரு வெளிநாட்டுக் கொள்கை காணப்பட வேண்டும். எனினும் நாட்டின் அரசியலிலும் அரசாங்க ஆட்சியிலும் அவை தலையீடு செய்யக்கூடாது என்பதோடு இன்று போலவே எதிர்காலத்தில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வெளிநாட்டு சக்திகளுக்கு ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என குறிப்பிட்டார்.

 

http://globaltamilnews.net/2019/117085/

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

எதிர்காலத்தில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வெளிநாட்டு சக்திகளுக்கு ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என குறிப்பிட்டார்.

வெளிநாட்டுச் சக்திகள் கறிவேப்பிலை போன்றது. தமிழர் படைகளை அழிக்கப் பாவித்தார்கள், பாவனை முடிந்தால் எது நடக்குமோ! அது நடக்கிறது!! 

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் காணிகளை விடுவிக்க ஆணைக்குழு அமைக்கப்படாது - மைத்ரிபால சிறிசேன

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

ஜெனிவாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகருக்கும், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கும் இடையில் கையெழுத்திடப்பட்டுள்ள விடயங்களை தான் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

களுத்துறை - மீகஹதென்ன பகுதியில் புதன்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றியபோதே, ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களில் பாதுகாப்பு படையினரால் பயன்படுத்தப்பட்ட காணிகள் (நிலங்கள்), அதன் உரிமையாளர்களுக்கு இதுவரை வழங்கப்படவில்லை எனவும், அவற்றை விடுவிக்க ஆணைக்குழுவொன்று நிறுவப்பட வேண்டும் எனவும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் கூறியுள்ளதாக ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.

இவ்வாறு வெளியிடப்பட்ட கருத்தானது, அரச சார்பற்ற நிறுவனங்களினால் வழங்கப்பட்ட பிழையான தகவல்கள் அடிப்படையிலானது என்று கூறிய ஜனாதிபதி, அவ்வாறானதொரு ஆணைக்குழு அமைக்கப்படாது எனவும் கூறியுள்ளார்.

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கையிலுள்ள சரியான விடயங்களை ஏற்றுக் கொள்வதை போன்றே, அந்த அறிக்கையிலுள்ள பிழையான விடயங்களை ஏற்றுக்கொள்ள போவதில்லை என ஜனாதிபதி கூறினார்.

அத்துடன், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழு, இலங்கை தொடர்பில் கொண்டு வந்த பிரேரணைக்கு இணை அனுசரணை வழங்கி, அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குப் பின் அதனை கவனத்தில் கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.

மைத்திரிபால சிறிசேன

ஜெனிவாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகரினால் கடந்த பிப்ரவரி மாதம் 25ஆம் தேதி, மனித உரிமைகள் ஆணைக்குழுவோடு கையெழுத்திடப்பட்ட விடயங்களைத் தான் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

தனக்கோ, வெளிவிவகார அமைச்சுக்கோ அறிவிக்கப்படாமல், இந்த விடயங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இலங்கை தரப்பினரின் பிழையான தீர்மானங்களின் காரணமாக இடம்பெற்ற இந்த விடயத்தை தான் வன்மையாக கண்டிப்பதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

இந்த செயற்பாடானது, இலங்கை முப்படையினர், அரசாங்கம் மற்றும் நாட்டு மக்களை காட்டிக் கொடுக்கும் செயல் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டின் வெளிநாட்டுக் கொள்கைகள், சர்வதேச தொடர்புகள் மற்றும் சர்வதேச செயற்பாடுகள் தொடர்பான பொறுப்பு ஜனாதிபதிக்கே உரியதே அன்றி, அதற்கு கீழான பதவிகளை வகிப்பவர்களுக்கு உரித்தானதல்ல எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நாட்டிற்கு எதிராக முன்னதாக ஏகாதிபத்திய சூழ்ச்சிகள் இடம்பெற்றதாக கூறிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இப்போது வேறு வடிவத்தில் அந்த சூழ்ச்சிகள் முன்னோக்கி கொண்டு செல்லப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், எதிர்காலத்தில் நாட்டை காட்டிக் கொடுக்க வெளிநாட்டு சக்திகளுக்கு தான் இடமளிக்க போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

https://www.bbc.com/tamil/sri-lanka-47721081

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.