Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வணக்கம் என் அருமை தமிழீழ நண்பர்களே.

Featured Replies

  • தொடங்கியவர்

ஆண்டபரம்பரை ஆளநினைப்பதில் தவறில்லை மீண்டுமென்று,

யாழ் கூட்டுக்குடும்பங்களில் (சித்தனண்ணா,

வானவில்லண்ணா,குமாரசாமியண்ணை,

  • Replies 70
  • Views 6.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஜயா சொல்லி அடிப்பேன் நான் பொதுவாகத்தான் கருத்தை கூறினேன்

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் சொல்லிஅடிப்பான்.

  • தொடங்கியவர்

தமிழன் மைந்தன் நீ என்பதினால் என் தலை குணிந்தயென் வந்தனங்கள்,

வந்தனம் என்று தந்தேனே உன் செந்தமிழ் மொழிப்பெயருக்கே,

அகத்தை தூய்மையாக்கு, ஆனவம் போன்று வரவேற்பதை அகற்று,

இனியவை பேசு, இல்லாவிடில் அமைதியை தேடி இருக்கவிரும்பு,

உண்மையாய் இரு, ஊருடன் நட்பாய் இரு,எண்ணும் தமிழெழுத்தும் கற்றிடு,

தமிழ் ஆக்கங்கள் பலதை எமக்குத்தா!!

ஏழைகளுக்கு உதவு,ஒற்றுமையாய் வாழ்,நல்லன ஓதப்பழகு,ஔவை சொல் படித்திடு,வைத்தபெயரினை காப்பாற்ற கருமத்தில் சொலெடுத்து சிலம்பாடு,கிணற்றுத்தவளையாய் தமிழ் உலகில் வாழதே,

வம்பளக்கும் களபேச்சு வாழ்க்கைக்கு உதவா அலட்டல்கள், நமக்கெதற்கு இப்போது,

செயலிலே வல்வை மைந்தனாய் நீ வரவேன்டும், என்று நானும் எதிர்பார்த்தேன்,பஞ்சு மெத்தையில் படுத்து இனிதுறங்கி,

கொஞ்சும் மொழிபேசிக் கள குடும்ப சுகத்துடனே,

அஞ்சுதல் இல்லாது இருந்து ஆர்பரிக்கும் நிலைநீங்கி,

தமிழ்தொண்டு பலசெய்ய வேன்டும், பல குண்டு கொண்டு செய்து வீசவேண்டும்!!. :rolleyes:

  • தொடங்கியவர்

மாவீரர் மலர்ந்துவிட்ட காலமதில் நின்று கொண்டு,

தாயகம் என்ற கனவிலும், போராட்டம் என்ற நனவிலும்,

ஊறி வேட்கை கொண்டு விட்டாய் நீ,

என்று நான் தெரிந்திருந்தும்,

நீறுபூத்த நெருப்பாக தமிழினூடு கொழுந்தெளுவாய் வல்வை என்ற மைந்தனுமே!!,

தமிழன்னை பட்ட காயமதை ஆற்றிவிட,

உனைத்தவைர எமக்கிங்கே யாருண்டு களத்தினிலே,

ஊறுகளின் துன்மதை ஒழித்திடபுறப்படுவீர்.

மைந்தனின் பெயர் சொல்லும் யாழ் கள உறுப்பினரே!! :rolleyes:

வணக்கம் சொல்லி அடிப்பேன்,

நலமா? உங்கள் எழுத்துக்கள் (இதுவரை எழுதிய கருத்துக்கள்) மிகவும் சுவாரசியமாக இருக்கு. வரவேறுபோடு நிற்காமல், தொடர்ந்து எங்களோடு ஒருவராக நீங்கள் யாழில் இருக்க வேண்டும். பல நல்ல ஆக்கங்களை தர வேண்டும். நம்பிக்கையுன் இருக்கின்றோம்.

வருக வருக

  • தொடங்கியவர்

கண்டு பிடி கண்டு பிடி கள்வனைக்கன்டு பிடி

1. விண்ணில் பறந்திடும் ஆனால் விமானமும் அல்ல!

நீண்ட வாலுண்டு ஆனாலும் அது ஆதியுமில்லை!

கணிதம் சம்பந்தமான சில உருவங்களினையும் கொண்டிருக்கும் ஆனாலும் அது கணிதப்பொறியுமில்லை!

ஆமா அது என்ன?

2. எனக்கு நிறமுமில்லை, சுவையில்லை, வடிவம் கூட இல்லை,

ஆனாலும்

நான் தங்குமிடத்தில் சுவை பெறுவேன், நிறம் பெருவேன் இருக்கும் இடத்திற்கேற்ப கூட மாறுவேன்,

திரவவவுமாயும் இருப்பேன், வேணுமென்றால் திண்மமுமாயும் இருப்பேன்!

நான் இல்லாது உங்களால் வாழமுடியாது!

ஆமா நான் யார்?

  • தொடங்கியவர்

ஆணவம் கொண்டு எதற்கும் அடங்காட ராஜா உண்டு இந்த காட்டிலே, ஆனால்

அவர்களை அடக்கவும் சில நல்ல உள்ளங்களும் உண்டு இந்த களத்திலே!

ஆட்டி அடக்க நச்சுப்பாம்பிற்கு ஆன மகுடி போல ஊதி தான்,

என்னை வசப்படுத்தும் உன் மகிமைதான் உன் அழகு தூயா,

அரவணைக்கும் தாய் நீ தானோ நீ இக்களத்தில்,

அன்பைச்சொரிவதும் உம் சேய் போன்ற குணத்தால் தானோ!

மருந்து தருவதும் நீ அதனால் எம் நோய் தீர்ப்பதும் நீ,

என்றும் நன்றி உள்ளது இந்த நாய் அதை நினைவில்,

என்றும் இருந்திவிடு.

ஆடத்தெரிந்தவன் ஆடலாம் எங்கு நின்றாலும் என்று,

ஒரு ஆட்டம் ஆடப்போகின்றேன் ஒரு கணம் தான் பொருத்துக்கொள்

உங்களுக்கு களத்தின் மற்றைய பகுதிகளில் பதிலளிக்க முடிகின்றதா??

  • தொடங்கியவர்

மகள் தூயா,

கதவு தட்டி போகும் பழக்கம் என்க்கில்லை, அதனால்

நான் தட்டுவேன் என்று நீங்கள் எதிர்பார்ப்பது தப்பு!!. :rolleyes:

நீங்கள் சொன்னது புரியவில்லை.

சுவாரசியமாக எழுதுகின்றீர்கள். மற்றைய பகுதிகளில் உங்கள் கருத்துக்களை பார்க்கும் ஆவலில் கேட்டேன். :rolleyes:

வணக்கம் சொல்லி அடிப்பேன். ரொம்ப நல்லாக எழுதுறீங்க சொல்லி அடிப்பேன். இப்படியே தொடரட்டும்

  • தொடங்கியவர்

கள உறவின் தாகம்

சந்து பொந்துக ளிடையே புகுந்த,

மன மந்தி யொன்று மரத்தின் மீதேறி,

குந்தி யிருந்து யாழ் கள வான் வெளியை,

சந்தோசம் மேலிட நிமிர்ந்து பார்க்கையிலே,

சில குள்ளநரிக்கூட்டம்கள் கோலா கலமாய்,

மந்த காசப் புன்னகை யுதிர்த்து,

சந்த முடனே களதோழியர், தோழருடன்,

போலியாக சொந்தம் கொண்டாடி மகிழ்தல் கண்டு,

மந்தி மன உறவின் தாகம் மேலிட,

உந்தும் தமிழ் வேகத்துடன் கீழே குதித்து,

நொந்து போன மந்தினை பூட்டுப்போட்டு மூடிவைத்து,

சொந்த மந்திக்கூட்டத்துடன் சேர்ந்திட ஓடிவந்தேன்,

வெண்ணிலா...ஈழபிரியன்

உங்கள் களபாசம் பெரும்வலை போன்று பிணைக்கக் கூடியது,

பாச வலையை அறுப்பது கடினம்,

உண்மையான பாசம் நடிப்பாகாது,

அதை செயலில் காண் பதுதான் இன்று உண்மை என்று,

பலர் கூறுகிறார்கள்.

அந்த உண்மையில் நானும் ஒருவன்!!!. :rolleyes:

வணக்கம் வாங்கோ உங்களுடைய வரவு நல்வரவாகட்டும்.

  • தொடங்கியவர்

உயர்வுடைய பெண்மையின் இலக்கணம் ஜுமுனா நீயே,

கள உலகம் அறியும் வண்ணம் கருத்தாடியும் வந்தாய் நீயே,

அலகிலாத்திறன் படைத்த அம்மையே வாழ்க நீயே,

உன் அன்பு மழையில் நனைகின்றேன் தாயே வாழி, வாழி நீயே!!

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் சகோதரன் சொல்லி அடிப்பான் அவர்களே நீங்கள் இந்த தளத்தினில் பிரவேசித்ததையிட்டு நாங்கள் எல்லோருமே மகிழ்ச்சியடைகிறோம். ஆனால் ஒன்று மட்டும் புரிகின்றது அதாவது நீங்கள் ஒரு சாதாரன நபரில்லையென்பது. என்னைப்போன்றோருக்கு தமிழ்த்தேசிய உணர்வு இருந்தாலும் உங்களைப்போன்று அடுக்குமொழியில் எழுதும் அறிவு குறைவென்பதையும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். எனது அவா சீரழியும் தமிழ்த்தேசியம் பாதுகாக்கப்படவேண்டும், அதாவது தமிழ், தமிழர், தமிழீழம் ....நீங்களும் இதே கொள்கையுடையவர் என்பதை அறியும்போது மகிழ்ச்சியாகவுள்ளது. தொடர்ந்து வாருங்கள் நல்ல ஆக்கங்களுடனும், ஆய்வுகளுடனும் மோதுவோம் நல்ல கருத்துக்களினால் இந்த தளத்தில், இணைந்திருப்போம் சகோதரர்களாக...

வணக்கம் சொல்லிஅடிப்பான்! :lol:

நமக்கு அடித்து போடாதிங்கோ! :o

  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பி என்ற என் பூங்குயில் கூவும் என் யாழ்கவிதைப் பூங்காவினுள்,

ஓங்கு புகழ்க் கவி நூறு புஸ்பங்கள் தீங்கறு தெய்வீக கான மலர்கள் போல,

மாங்கிளிகள் போல் பேசும் எம் களௌறுப்பினர்களின நடுவே,

வண்ணச் சோலையில் தான், நீ சித்தன்

வீரம் மிக்க வேங்கையின் சாயலில் வந்து வார்த்தைகளால் அல்லாது நிஜவீரம் கூறும் நீ வாழ்க, உன் யாழ் களமும் வாழ்க!! :lol:

வணக்கம்!வருக. ஆனால் இலகு தமிழில் பதிவிடலாமே? பாமரர்கள் நாங்கள்! :o

  • தொடங்கியவர்

இலக்கிய நாயகா கொஞ்சம் பொறுங்கள் மகனே!

நினைத்த அந்த கலைஞன் அடியேன் இருக்கும் இடம் தேடி கொஞ்சம் சுணங்கி வந்துவிட்டார், அதனால் அவரை வணங்கி ஒரு கவி எடுத்துவிட்டு அப்புறமா உங்களிடம் வருகிறேன்.

இலக்கிய நகைச்சுவை நாயகன், கம்புஇயூட்டர் மேதை ,முன்னால் மாப்பி என் பாசத்துக்குறிய தம்பி வருக வருக...ரொம்ப நாளா உங்களை நோக்கி நான் பாடனும் என்று காத்திருந்தேன் வந்தீர்கள், ரசித்துவிட்டு போங்கள். இது நம்ப தமிழர் தமிழ் விருந்தோம்பல்!!.

உன் புத்திக்கூர்முனைக்கு முன்னே, இங்கே களத்திலே எவருமேயில்லை,

என்றும் எந்தன் யாழ் களத்திலே உன் கருத்துகளுக்கும், நகைச்சுவைக்கும் பஞ்சமே இல்லை. ஆ ஆ ஆ ஆ.....

உன் புத்திக்கூர்முனைக்கு முன்னே, இங்கே களத்திலே எவருமேயில்லை,

என்றும் எந்தன் யாழ் களத்திலே உன் கருத்துகளுக்கும், நகைச்சுவைக்கும் பஞ்சமே இல்லை.

பூமியிலே வாழ்வதெல்லாம் இந்த சூரியனாலே, இங்கே களத்தில்,

நாம பூப்பதுவும், காய்ப்பதுவும், இந்த கலைஞன் போன்ற நல்லவர்களாலே!!

கள உறுப்பினர்கள் சேமமுற நாள் முழுதும் நீ இங்கே உழைப்பதனாலே,

இந்த யாழ் கள தேசமெல்லாம் செழித்திடுது உங்கள் தமிழ் எழுத்தின் சிறப்பாலே!!

நேற்று நெற்றி வேர்வை சிந்தினாயே தமிழ் முத்து முத்தாக,

அது இன்று என்னூடு நெல்மணியாய் விளந்திடுது தமிழ் வாழ்த்து கொத்துக் கொத்தாக.....

பக்குவமாய் எல்லாரையும் அணைத்து எடுத்து கட்டுப்பாடாக,

நீ கொண்டிளித்தாய் உந்தன் நெஞ்சம் தன்னாலே!!

வளர்ந்து விட்ட பருவ பெண் போல் உனக்கு வெட்கமா?

பின்னே தலை வளைஞ்சு சும்மா பாக்கிறீயீயே கதவின் ஓரமா?

உன்னை புகழ்ந்து தள்ளும் உன் கள உறுப்பினருக்கு நீ தரும் பிந்திய முத்தமா?

என் இடத்தினிலே வந்த நீயும் எனக்கு சொந்தம் தானே வா!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ்த்தளத்தினுள் மின்னல், இடி, மழைபோல் அட்டகாசத்துடன் புகுந்திருக்கும் அறிவுப்பெட்டகமே வருக வருக உங்கள் வரவு நல்வரவாகட்டும்.இங்குள்ளோரை கவிதை என்னும் கற்களினால் வீசிக்கொண்டிருக்கும் கவிஞரே என்னை விட்டுவிடுங்கள் நான் ஒரு அப்பாவி..தொடருங்கள் உங்கள் சேவையை...

  • தொடங்கியவர்

எழில் நிலா அதையேன் கேட்கிறீங்க....

நாய் போல ஒரு கூண்டுக்குள்ளே இருந்து கொண்டு,

நாய்ப்பாடு படுகிறேன் நான். ஊஉ ஊஉ ஊஉ ஊஉ ஊஉ,

கள்ளம் இல்லா இல்லம் என் மனதில்,

உள்ளம் உறையும் வண்ணம் பலவும்,

பள்ளம் மேடு போல மாறி மாறி,

படிப்படி யாய்வந்து துன்பம் மிகையாயகி,

தவிக்கின்றேன்....

நீங்கள் வேற இடியும் மின்னலும் மழையும்.....ஊஉ ஊஉ ஊஉ ஊஉ ஊஉ,ஊஉ ஊஉ ஊஉ ஊஉ ஊஉ,ஊஉ ஊஉ ஊஉ ஊஉ ஊஉ,ஊஉ ஊஉ ஊஉ ஊஉ ஊஉ, :lol:

சொல்லி அடிப்பான் வணக்கம்,

நீங்கள் எழுதிய கீழுள்ள கவிதை வரிகள் எனக்கு மிகவும் பிடித்துள்ளது.. :o

வானவில்லில் தெரிவதோ ஏழு அரை நிறவட்டம்,

சக்கரத்தின் வடிவமோ வட்டம்,

காற்றில் பறப்பதோ பட்டம்,

எனது செயலுக்கு தேவையானதோ ஒரு திட்டம்,

மதிக்கப்படவேண்டியது களசட்டம்,

வியாபாரிக்கு வந்ததோ பெரு நட்டம்,

நான் கொண்டுவந்த அளவுகோலுக்கோ ஒரு அடி "மட்டம்",

இதனால் கயவர் வாய் அடக்கவேண்டியது என் கொட்டம்,

அதனால் நடிப்பில் பல பல கட்டம்...............

மேலும்...

நீங்கள் உங்களை வரவேற்பவர்களை ஒவ்வொருவராக விமர்சித்து பாடல்களாக எழுதிக்கொண்டு இருந்தீர்கள், எனவேதான் உடனடியாக உங்களை நான் வரவேற்கவில்லை. மன்னிக்கவும்.

நம்மைப்பற்றியும் புகழ்ந்து எழுதி இருக்கின்றீர்கள். :lol: உங்கள் அன்பிற்கு மிக்க நன்றி! ஆனால், நீங்கள் அதில் பாராட்டி எழுதி இருக்கும் அளவிற்கு எனக்கு தகுதிகள் இருப்பதாக நான் நினைக்கவில்லை. :lol:

நன்றி! :(

நட்புடன்,

கலைஞன்

  • தொடங்கியவர்

அது மாப்ஸ் சாறி கலைஞன், எவ்வளவு காலம் தான் இந்த அறிமுக சிறையில் இருந்து தவ்வல் அடிப்பது!!.

ஒரு விடுதலை இயக்கம் ஆரம்பிக்க ஒரு யோசினை. புதிய உறுப்பினர்களினை ஒன்று சேர்த்து சயனைட் குப்பியுடன் மில்லர் மாதிரி தற்கொலை போராளிகளுடன் களத்தில் இன்றிரவு இறங்க ஒரு உத்ததேசம்.

வேற என்ன எங்களுக்கு மற்றவர் மாதிரி எல்லா இடத்திலேயும் எழுத , கிறுக்க உரிமை வேண்டும். ஆகவே முதலில் அகிம்சை வழி அதன் வழியா சில அகிம்ஸ்சை பாடல்கள்....அதுவும் சரிவரல இன்னா வேற வழி விடுதலை கீதங்கள் தான் இங்க வரப்போகுது.

எல்லாரும் சுதந்திரமனிதர்கள் மாதிரி தெரியுது எமக்கு மாத்திரம் சுதந்திரம் வேணாம்!!!. :lol:

இன்னும் முடியலயா.

சரி நான் அப்பரம் வர்ரேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.