Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை படைகள் வசம் இருந்த 71,178 ஏக்கர் காணிகள் விடுவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை படைகள் வசம் இருந்த 71,178 ஏக்கர் காணிகள் விடுவிப்பு

இலங்கை

இலங்கையில் பாதுகாப்பு படைகள் வசம் இருந்த காணிகளில் 71,178 ஏக்கர் காணிகள் கடந்த மார்ச் மாதம் 31ஆம் தேதி வரை விடுவிக்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.

படையினரிடமிருந்த 84,675 ஏக்கர் காணிகளிலேயே, மேற்படி காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை அரசாங்கம் கூறியுள்ளது.

விடுவிக்கப்பட்ட காணிகளுள் 81 சதவீதமானவை அரசுக்குச் சொந்தமானவை என்றும், 90 சதவீதமான தனியாருக்குரியவை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாண அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியின் 6வது அமர்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றபோதே, இந்தத் தகவல்கள் வெளியிடப்பட்டன.

2009ம் ஆண்டு வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சுமார் 84,675 ஏக்கர் காணிகள் பாதுகாப்பு தரப்பின் கட்டுப்பாட்டில் இருந்தன.

இந்த நிலையில், 2015ம் ஆண்டு ஜனவரி மாதம் மைத்ரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர், படையினரிடமிருந்த காணிகள் துரிதமாக விடுவிக்கப்பட்டதாகவும், அந்த வகையில், 2019 மார்ச் மாதம் 31ம் தேதி வரையில், பாதுகாப்பு படைகள் வசம் இருந்து வந்த 84,675 ஏக்கரில் 71,178 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், மேற்படி அமர்வின்போது தெரிவிக்கப்பட்டது.

அத்தோடு வடக்கு, கிழக்கு மாகாண அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணி அமைக்கப்பட்டதிலிருந்து இதுவரை 6,951 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டிருப்பதுடன், இன்னும் 475 ஏக்கர் விரைவில் விடுவிக்கப்பட உள்ளதாகவும் அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

அந்த வகையில் தற்போது படைகள் வசம் 13,497 ஏக்கர் காணிகளே உள்ளதாகவும், அவற்றுள் 11,039 ஏக்கர் அரச காணிகள் எனவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாண அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியின் முதலாவது அமர்வு கடந்த வருடம் ஜுலை மாதம் 31ம் திகதி நடைபெற்றது.

https://www.bbc.com/tamil/sri-lanka-47840712

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஏராளன் said:

விடுவிக்கப்பட்ட காணிகளுள் 81 சதவீதமானவை அரசுக்குச் சொந்தமானவை என்றும், 90 சதவீதமான தனியாருக்குரியவை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

புரியல்ல.... எனக்கு கணக்கு அவ்வளவாக வராது ....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, putthan said:

புரியல்ல.... எனக்கு கணக்கு அவ்வளவாக வராது ....

எனக்கும் புரியல தான்! ஆனால் அதிமேதகு சனாதிபதி சொன்னால் சரியாதான் இருக்கும்!!

  • கருத்துக்கள உறவுகள்

 

23 hours ago, putthan said:

புரியல்ல.... எனக்கு கணக்கு அவ்வளவாக வராது ....

மொழிபெயர்ப்பில் தவறுள்ளது என நினைக்கிறேன்

 "90 சதவீதமான தனியாருக்குரிய காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளதெனவும் விடுவிக்கப்படாத காணிகளுள் 81 சதவீதமானவை அரசுக்குச் சொந்தமானவை எனவும் தெரிவிக்கப்படுகிறது"

https://www.latestly.com/world/sri-lankan-government-says-90-per-cent-of-military-acquired-land-of-tamils-released-741718.html

 

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப இவ்வளவு இலட்சம் சிங்களப் படைகளும் இப்போ எங்கே குந்தி இருக்கின்றன... வடக்குக் கிழக்கில்..?????!

கேட்கிறவன் கேணயன என்றால்.. எருமை மாடு ஏரோபிளேன் ஓட்டுமாம். 

எதுஎப்படியோ சிங்களவன் பிரச்சார ரீதிலும் எங்களை தோற்கடித்தே வருகிறான். அதுக்கு அடிவருடிகளான சம் சும் கும்பல் மற்றும் ஒட்டுக்குழுக்கள் இன்றும் ஒத்தூதிய படி. 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nedukkalapoovan said:

அப்ப இவ்வளவு இலட்சம் சிங்களப் படைகளும் இப்போ எங்கே குந்தி இருக்கின்றன... வடக்குக் கிழக்கில்..?????!

கேட்கிறவன் கேணயன என்றால்.. எருமை மாடு ஏரோபிளேன் ஓட்டுமாம். 

எதுஎப்படியோ சிங்களவன் பிரச்சார ரீதிலும் எங்களை தோற்கடித்தே வருகிறான். அதுக்கு அடிவருடிகளான சம் சும் கும்பல் மற்றும் ஒட்டுக்குழுக்கள் இன்றும் ஒத்தூதிய படி. 

அதான் பொட்டி வழங்கப்படுகிறது தானே அவர்களுக்கு 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வடக்கின் ஐந்து பா.உ கள் தங்கள் தொகுதிகளிற்கு 200 கோடி அபிவிருத்தி நிதி பெறுவது வழக்கமானதா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.