Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிரிய நகரை இழந்ததற்கான பதிலடியே சிறிலங்கா தாக்குதல் – ஐஎஸ் தலைவர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிரிய நகரை இழந்ததற்கான பதிலடியே சிறிலங்கா தாக்குதல் – ஐஎஸ் தலைவர்

Abu-Bakr-al-Baghdadi-300x200.jpgஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர் புதிய காணொளி ஒன்றின் மூலம் தோன்றியுள்ள இஸ்லாமிய தேசம் எனப்படும் ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் தலைவர் அபு பக்கர் அல்- பக்டாடி, சிரியாவின் கடைசிக் கோட்டையை இழந்ததற்குப் பதிலடி கொடுக்கும் வகையிலேயே சிறிலங்காவில் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறியுள்ளார்.

நேற்று ஐஎஸ் அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள அந்தக் காணொளியில், ஐஎஸ் அமைப்பின் தலைவர் அபு பக்கர் அல்- பக்டாடி, தனது மூன்று  முக்கிய தலைவர்களுடன் பேசுகின்ற காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.

சிரியாவின் ஐஎஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் இருந்த கடைசி நகரமான பக்கூஸ் கடந்த மாதம், சிரியப் படைகளிடம் வீழ்ச்சியடைந்திருந்தது.

இதுகுறித்து இந்தக் காணொளியில் பேசியுள்ள, ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் தலைவர் அபு பக்கர் அல்- பக்டாடி,

”பக்கூஸ்  நகரத்துக்கான சமர் முடிந்து விட்டது, ஜிகாத் செய்யும்படி கடவுள் கட்டளையிட்டுள்ளார். வெற்றி பெறுமாறு அவர் கட்டளையிடவில்லை.

பக்கூஸ் நகரத்திலுள்ள எமது சகோதரர்களுக்கு பழிவாங்கும் வகையிலேயே சிறிலங்காவில் தாக்குதல் நடத்தப்பட்டது.

இஸ்லாமிய அரசின் பதிலடியின் சிறிய பகுதி தான் இது” என்றும் அவர் கூறியுள்ளார்.

ஐஎஸ் அமைப்பின் தலைவர் அபு பக்கர் அல்- பக்டாடி, கடைசியாக ஈராக்கின் மொசூல் நகரில் 2014ஆம் ஆண்டு பொதுவெளியில் காணப்பட்டிருந்தார்.

அதற்குப் பின்னர், 47 வயதான அவர் பல்வேறு சந்தர்ப்பங்களில் கொல்லப்பட்டிருக்கலாம் அல்லது காயமடைந்திருக்கலாம் என்று அறிவிக்கப்பட்டார்.

5 ஆண்டுகளுக்குப் பின்னர் அவர் காணொளி மூலம் மீண்டும் தோன்றி சிறிலங்கா தாக்குதல்களுக்கு உரிமை கோரியிருப்பது குறிப்பிடத்தக்கது.

http://www.puthinappalakai.net/2019/04/30/news/37705

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, nunavilan said:

சிரிய நகரை இழந்ததற்கான பதிலடியே சிறிலங்கா தாக்குதல் – ஐஎஸ் தலைவர்

”பக்கூஸ்  நகரத்துக்கான சமர் முடிந்து விட்டது, ஜிகாத் செய்யும்படி கடவுள் கட்டளையிட்டுள்ளார். வெற்றி பெறுமாறு அவர் கட்டளையிடவில்லை.

பக்கூஸ் நகரத்திலுள்ள எமது சகோதரர்களுக்கு பழிவாங்கும் வகையிலேயே சிறிலங்காவில் தாக்குதல் நடத்தப்பட்டது.

சிரியாவில்... ஸ்ரீலங்காவா, தாக்குதல் நடத்தியது?
தாக்குதல் நடத்திய, அமெரிக்கன் மேல் கைவைக்க திராணி இல்லை.
தேவாலயத்துக்குள் போய்.. தாக்குதல் நடத்த வெட்கமாயில்லை?

  • கருத்துக்கள உறவுகள்

அதையும் அல்லா தான் சொன்னார் என்று சொல்லுவாங்கள் 

  • கருத்துக்கள உறவுகள்

கு**டியில தட்டப் பல்லு விழுகிறதெண்டு.....இதைத் தான் சொல்லிறது ....போல கிடக்குது....!

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான காட்டுமிராண்டிகளும் இந்த உலகத்தில் வாழுகின்றன.

  • கருத்துக்கள உறவுகள்

அல்லா வெல்லவேண்டும் என்று கேட்கவில்லையாம், கொன்றால்ப் போதுமென்று சொன்னாராம். 

என்னவொரு மதம் !! என்னவொரு கடவுள் !!!!!

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கப் புலநாய்வுத்துறையின் மத்தியகிழக்குப் பொறுப்பாளர் அண்மையில் சிரியா மற்றும் ஈராக்கிற்கான தனதுதகவல்திரட்டும் பணியை நிறைவு செய்து மீண்டிருக்கிறார். அவரின் கணிப்பீட்டின்படி இன்னமும் ஈராக் மற்றும் சிரியாவில்20,000 இலிருந்து 30,000 ஐஸிஸ் பயங்கரவாதிகள் இருப்பதாகத் தெரிகிறது. மேற்குநாடுகள் தலைமையிலான ராணுவ நவடிக்கைகளில் முற்றான தோல்வியைத் தழுவியிருக்கும் பயங்கரவாதிகள் இப்போது உறங்கு நிலையில் இருப்பதாகவும், இவர்கள்மீதான தொடர்ச்சியான அழுத்தம் குறைவடைந்தால், மீளவும் பயங்கரவாதம் தலைதூக்கும் ஆபத்திருப்பதாகவும் சுட்டிக்காட்டியிள்ளார். 

ஆகவே இவர்களுக்கான நிதிவழங்கல்கள், தொடர்பாடல்களைத் தாம் தொடர்ச்சியாகக் கவனித்துவருவதாகவும் கூறியிருக்கிறார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.