Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முன்னாள் போராளிகள் சிலர் இராணுவ புலனாய்வுப் பிரிவோடு தொடர்பு – சுமந்திரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

M.A.Sumanthiran.jpg

முன்னாள் போராளிகள் சிலர் இராணுவ புலனாய்வுப் பிரிவோடு தொடர்பு – சுமந்திரன்

முன்னாள் போராளிகள் சிலருக்கு இராணுவப் புலனாய்வுப் பிரிவோடு தொடர்பு இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார். அவர்கள் புலனாய்வுப் பிரிவோடு சேர்ந்து வேலை செய்கிறார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், தமிழீழ விடுதலைப் புலிகள் மீள் எழுச்சி பெறுகிறார்கள் என்றதொரு பதற்றத்தை நாட்டிலே பரப்புவதற்காகவே புலனாய்வுப் பிரிவின் ஒரு பகுதி கொலைகளை செய்வதற்கும் துணிந்துவிட்டதாக சுமந்திரன் கூறினார்.

யாழ்ப்பாணத்திலுள்ள அவரது அலுவலகத்தில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே அவர் இதைனைத் தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில், “இராணுவ புலனாய்வுப் பிரிவில் ஒரு பிரிவு மீண்டும் தமிழீழ விடுதலைப் புலிகள் மீள் எழுச்சி பெறுகிறார்கள் என்றொரு பதற்றத்தை நாட்டிலே பரப்புவதற்கு முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அதனை வெறும் வதந்தியாக மட்டும் அவர்கள் பரப்பவில்லை. அந்த வதந்தியை மக்கள் நம்பப் செய்வதற்காக கொலைகளைக் கூட செய்வதற்கு தயாராக இருந்திருக்கிறார்கள் என்பதற்கு வவுணதீவு சம்பவம்  எடுத்துக்காட்டாக உள்ளது.

அது ஒரு சம்பவம். அதனைப் போலவே என்னைக் கொல்வதற்கு தீட்டப்பட்ட சதித்திட்டமும் அப்படியானதாக இருந்திருக்கலாம். ஏனெனில் உயிர் அவர்களுக்கு முக்கியமல்ல. விடுதலைப் புலிகள் மீள் எழுச்சி பெற்றுவிட்டார்கள் என்ற செய்தியை அனைவரும் நம்பவேண்டும் என்பதுதான் அவர்களுக்கு முக்கியமானதாக இருக்கிறது.

அதற்காக அவர்கள் பலரை உபயோகிக்கிறார்கள். முன்னாள் போராளிகளாக இருந்தாலும் கூட எங்கள் எல்லாருக்கும் தெரிந்தவகையிலே அவர்களில் சிலர் புலனாய்வோடு வேலை செய்பவர்களாக இருக்கிறார்கள். இது எல்லோருக்கும் தெரிந்த ஒரு இரகசியம். அது போலத்தான் இந்த தேசிய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பும் புலனாய்வுப் பிரிவோடு சேர்ந்து வேலை செய்திருக்கிறார்கள்” என்று அவர் குறிப்பிட்டார்.

http://athavannews.com/முன்னாள்-போராளிகள்-சிலர்/

  • கருத்துக்கள உறவுகள்

இவருக்கு சொறிலங்கா அரசுக்கு  தன்னைவிட ஆலவட்டம் பிடிக்கிற ஆட்கள் இருக்ககூடாது எனும்  தொழில் போட்டியில் உளறுகிறார் . 

  • கருத்துக்கள உறவுகள்

இருந்தால் என்ன தப்புங்கோ?இருக்கட்டும் சம்பள்த்திற்கு உழைக்கட்டும்....நீங்கள் ஐ.நா க்கு போய் சிறிலங்காவுக்கு நல்ல செர்டிவிகெட்  வாங்கி கொடுக்கும் பொழுது அவர்கள்  அரச்சுடன் சேர்ந்து இயங்கினால் என்ன தப்பு...

  • கருத்துக்கள உறவுகள்

இவருக்கு ஐ எஸ் ஹிஸ்புல்லாவோடு ரகசியத் தொடர்பு இருக்கும் போது... இதில் என்ன தவறு. இவற்றை குட்டு வெளிச்சிடும் என்று பயப்பிடுகிறார் போலும். இவருக்கும்.. பல தொடர்புகள் உண்டு என்பதால் தான் சொறீலங்கா சுதந்திர தினத்தில் போய் குந்தி இருந்து தலீவருடன் சேர்ந்து கொட்டாவி விட முடிந்தது. 

ஆதவன் போட்ட தலைப்பு அவர் சொல்ல வருவதை சரியாக காட்டவில்லை.

முஸ்லிம் அமைப்புகளுக்கு இலங்கை புலனாய்வுப் பிரிவு நிதி வழங்கியதில் இருந்து அவர்களின் ஒரு பிரிவாகவே இருந்த வரைக்குமான விடயங்கள் வெளிவரும் இந்த காலப்பகுதியில் சுமந்திரன் சொல்கின்ற இந்த விடயம் கவனமாக கவனிக்க வேண்டிய ஒன்று.

தமிழ் இளைஞர்களை / முன்னால் போராளிகளைக் கொண்டு குண்டு வெடிப்புகள் தற்கொலைத் தாக்குதல்களை நிகழ்த்தி விட்டு புலிகளின் மீள் எழுச்சி என்று காட்டக் கூடிய சந்தர்ப்பங்கள் நிறைய உள்ளன.


ஏற்கனவே ஈஸ்டர் குண்டு வெடிப்புகளை அறிந்தும் சிங்களம் வேண்டும் என்றே மெத்தனமாக இருந்தது ஏன் இருந்தது என்பதற்கு அதற்கு பின்னர் நிகழும் விடயங்கள் ஓரளவுக்கு தெளிவாக காட்டுகின்றன.

முக்கியமாக கோத்தா சனாதிபதி தேர்தலிக் நிற்க தீர்மானித்த பின் இது நிகழ்வதற்கான வாய்புகளும் அதிகம். அவ்வாறு நடந்தால் அதன் விளைவுகள் தமிழ் மக்களுக்கும் முன்னால் போராளிகளுக்கும் மிக மோசமாக அமைந்து விடும். இது தொடர்பாக தமிழ் அமைப்புகளும், ஊடகங்களும் கவனம் செலுத்துவது அவசியம்.

என்ன சொல்கின்றார் என்பதை விட எவர் சொல்கின்றார் என்பதை பார்த்து தானே கருத்துகள் வைத்து பழகிவிட்டோம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.