Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் வாழைக்குலை திருட்டுகள் அதிகரிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
 
banana.jpg?zoom=1.1024999499320984&resiz
யாழில்.  வாழைப்பழத்தின் விலை வீழ்ச்சி அடைந்துள்ள போதிலும் , வாழைக்குலை திருட்டுகள் அதிகரித்துள்ளதாக வாழைக்குலை செய்கையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
 
கோப்பாய் , நீர்வேலி பகுதிகளில் உள்ள வாழை தோட்டங்களுக்குள் இரவில் ஊடுருவும் திருடர்கள் அங்குள்ள வாழைக்குலைகளை வெட்டி செல்கின்றனர்.
 
நாட்டில் தற்போது காணப்படும் அசாதாரண சூழல் காரணமாக மாலை வேளைகளுடன் ஊர் அடங்குவதனால் இரவு வேளைகளில் வாழைக்குலை திருடர்கள் தமது கைவரிசையை காட்டி வருகின்றனர்.
 
யாழில் தற்போது காற்று காலம் ஆரம்பித்துள்ளதால் வாழைப்பழத்தின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. அதனால் சந்தைப்படுத்த முடியாத நிலையில் நாம்  கவலையில் உள்ள நேரம் , எமது தோட்டங்களில் புகுந்து வாழைக்குலைகளை திருடர்கள் வெட்டி செல்வதனால் நாம் மிகவும் பாதிப்படைந்துள்ளோம் என செய்கையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
#banana #steal #kopay #neerveli
  • கருத்துக்கள உறவுகள்

நல்ல சிவளையன் நாய்கள்விசுவாசமானவை இதற்க்கு பரிகாரம் .

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, பெருமாள் said:

நல்ல சிவளையன் நாய்கள் விசுவாசமானவை இதற்க்கு பரிகாரம் .

என்னடா, நம்ம பெருமாள், கறுவல் கடியலை பத்தி கதைக்கவில்லை எண்டு பார்த்தால், profile படமாகவே சிவளையன் நாய் வைத்திருக்கிறார். :grin:

  • கருத்துக்கள உறவுகள்

வாழைப்பழம் மலிஞ்சு போய் இருக்குதென்டால் பிறகேன் களவெடுக்கினம் 
 
  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ரதி said:

வாழைப்பழம் மலிஞ்சு போய் இருக்குதென்டால் பிறகேன் களவெடுக்கினம் 
 
அட.... அக்காவின் அருமையான லாஜிக்...  👍

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

வாழைப்பழம் மலிஞ்சு போய் இருக்குதென்டால் பிறகேன் களவெடுக்கினம் 
 
அங்கு களவு என்பது புல்டைம் தொழில் ஆகிவிட்டுது  மாட்டுபடுறது எது என்றாலும் திரில் ஆக தூக்கணும் எனும் போதை பிடிபட்டால் பிரிச்சு மேய்ந்துவிடுவான்கள் எனும் பயம் இல்லாமல் போய்விட்டுது களவெடுக்க வரும் ரெண்டு பேரை தலைகீழா கட்டி வாழைத்தோட்டத்துக்குள் இரண்டு நாளைக்கு குழற விட சரியாபோடும் .

தம்புள்ளைக்கு போகும் போக்குவரத்து இடற தொடங்கி விட்டுது அதன் காரணமாகவும் விலை சரிவு .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
28 minutes ago, பெருமாள் said:

அங்கு களவு என்பது புல்டைம் தொழில் ஆகிவிட்டுது  மாட்டுபடுறது எது என்றாலும் திரில் ஆக தூக்கணும் எனும் போதை பிடிபட்டால் பிரிச்சு மேய்ந்துவிடுவான்கள் எனும் பயம் இல்லாமல் போய்விட்டுது களவெடுக்க வரும் ரெண்டு பேரை தலைகீழா கட்டி வாழைத்தோட்டத்துக்குள் இரண்டு நாளைக்கு குழற விட சரியாபோடும் .

தம்புள்ளைக்கு போகும் போக்குவரத்து இடற தொடங்கி விட்டுது அதன் காரணமாகவும் விலை சரிவு .

நாங்கள் வேறை மருந்து வைச்சிருந்தனாங்கள்......ஒன்லி இருட்டடி:cool:

 அதுக்குப்பிறகு சிங்கன் வாழ்க்கையிலை வாழைப்பழத்தை  நினைச்சும் பாக்கமாட்டான்.

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, குமாரசாமி said:

நாங்கள் வேறை மருந்து வைச்சிருந்தனாங்கள்......ஒன்லி இருட்டடி:cool:

 அதுக்குப்பிறகு சிங்கன் வாழ்க்கையிலை வாழைப்பழத்தை  நினைச்சும் பாக்கமாட்டான்.

எனக்கு தெரிஞ்ச மாந்தோப்பு ஆள் ஊரில் மாங்காய் களவெடுக்க போறவையை எப்படியோ பிடிச்சு மரத்துடன் கட்டி வைச்சு விடுவார் அடிகிடி ஒன்றும் கிடையாது சாப்பாடும் நேரத்துக்கும்  போகும் ஆள் இரவில் போடும் சத்தம் பேய்களை கலைத்து விடும் .😀 (பெரிய எறும்பு வேறை தன்ரை வேலையை காட்டும் என்று நினைக்கிறன் )

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.