Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சாதனை படைத்த தமிழர்கள்

Featured Replies

#1:  கந்தசாமி திருக்குமார்

புலம்பெயர் தமிழனின் சாதனை வாழ்க்கை. தனது மண்ணையும் மக்களையும் கூறும் பெருந்தன்மை. … 18 வருடங்களாக நியூயோர்க்கில் தோசை- சிறு வண்டியில்
பணமாக வென்மோவா(Venmo) என கேட்பது இவரின் மாற்றங்களுக்கு மாறும் வெற்றியை காட்டுகின்றது. 

மனைவியுடனும் மக்களுடனும் புலம்பெயர்ந்தவர். இன்று மகள் ஒரு மிக செல்வாக்கான கொலம்பியா பல்கலைக்கழகத்தில், பொருளாதாரத்தில் இரண்டு பட்டங்கள் பெற்றுள்ளார்.

 

 

  • கருத்துக்கள உறவுகள்

ம்.....ம்ம்ம்ம்

இது ஒரு வித கடின உழைப்பு.

சாதனை அல்ல... 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரோட்டில் தோசைக்கடை வைத்திருப்பது சாதனையா???????
நாதமுனி சொன்னமாதிரி கடின உழைப்பாளி.....அதுக்கு பெரிய பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் சொல்லலாம்.

கந்தசாமி திருக்குமார் அவர்களுக்கு என் பாராட்டுக்கள். தொழில் எந்தவகையானாலும் உழைப்பு முக்கியம்.

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, குமாரசாமி said:

ரோட்டில் தோசைக்கடை வைத்திருப்பது சாதனையா???????
நாதமுனி சொன்னமாதிரி கடின உழைப்பாளி.....அதுக்கு பெரிய பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் சொல்லலாம்.

கந்தசாமி திருக்குமார் அவர்களுக்கு என் பாராட்டுக்கள். தொழில் எந்தவகையானாலும் உழைப்பு முக்கியம்.

தோசைக்கடை வைத்திருந்தவர் இன்று இப்படி ஒரு நிறுவனத்தினை நிறுவி நடாத்தி வருகிறார் என்று சொன்னால், அது சாதனை. தொடர்ந்து 18 வருடம் அதே நிலை என்றால்?
 

  • தொடங்கியவர்

#2: விசாகன் 
இந்தோனேசியா தொடக்கம் தென் கிழக்காசியாவில் எவ்வாறு தமிழர்களின் வணிகத்தை ஊக்குவிற் கலாம். 

 

 

 

 

 

 

  • தொடங்கியவர்

'வலண்டைன் நாளுக்கு முன்னராக ரோசாப்பூவின் விலை அதிகரிக்கின்றது. ஆனால், 'பியரின் விலை அமெரிக்காவின் 'சூப்பர் போல்'  ( அமெரிக்க உதை பந்தாடடம் ) விளையாட்டுக்கு முன்னர் ஏன் அதிகரிப்பதில்லை? "

பியர் விநியோகம் சீராக இருப்பதால் தேவை அதிகரித்த பொழுதும் விலை ஏறவில்லை. 
ஆனால், ரோசாப்பூவின் விநியோகம் சீரற்றது, அதனால், தேவை அதிகரிக்கும் பொழுது விலையும் அதிகரிக்கின்றது. 

  • தொடங்கியவர்

#3: ஆல்பிரெட் பெர்க்மானஸ்

ஒரு சிறு கிராமத்தில் பிறந்து ஒரு வெளிநாடு ஒன்றில் ஆளுமை மிக்க தலைமைத்துவத்துடன் சிறந்து விளங்கவும் ஆல்பிரெட் பெர்க்மானஸ் !
 

 

  • தொடங்கியவர்

#4:  மகேஸ்வரநாதன் கிரிசன், அல்லைப்பிட்டி

நாளாந்தம் உணவுப் பொருட்களில் கலப்படம் குறித்து வரும் செய்திகள் அச்சமூட்டுவனவாக இருக்கின்றன. ஆனால் தமிழர்களாகி நமது உணவுப் பழக்கவழக்கம் இயல்பாகவே இயற்கையான நஞ்சற்ற உணவுப்பொருட்களை விளைவிப்பதும், அதனை குறைந்தளவான இலாபத்திற்கு விற்பனை செய்வது, அயலாருடன் பகிர்ந்து உண்பதாக இருந்திருக்கிறது. 2000 ஆம் வருடங்களின் பின்னர் இந்தப் பண்பாடு முற்றிலும் மாறிவிட்டது. வாழைக்காய் பிஞ்சைக்கூட மஞ்சள் நிறமாக்கி பழமென விற்கும் அளவிற்கு உணவில் இரசாயனங்களை சேர்க்கின்றனர் வியாபாரிகள். இவ்வாறு உணவில் கூட நஞ்சைக் கலந்து விற்பனை செய்யும் மிலேச்சத்தனமான சூழலில், தீவகம், அல்லைப்பிட்டி மண்ணிலிருந்து தமிழ் இளைஞரான மதிப்புக்குரிய ம. கிரிசன் என்னும் விவசாயி நஞ்சற்ற உணவுப்பொருட்களை விளைவிப்பதிலும், அதனை விற்பனை செய்வதிலும் தொடர்ந்தும் போராடி வருகிறார். தமிழ் சமூகத்தைப் புதியவிடயமொன்றுக்குள் கொண்டு செல்வது எவ்வளவு கடினமானதென்பது நம் அனைவருக்குமே தெரியும். அவருக்கு உதவிடவும், தமிழ் சமூகத்தை ஆரோக்கியமான சுயபொருளாதார முயற்சிகளில் சாதனைசெய்ய வைக்கவும் கிரிசன் போன்றவர்களுக்கு ஆதரவாய் இருப்போம். 

http://www.tamiltradepost.com/blog/யாழ்-மண்ணில்-விவசாயத்து-2/

எமது நாட்டுக்கு 1948 ஆம் ஆண்டில் சுதந்திரம் கிடைத்தது. ஆனாலும் நாம் இன்னும் அடிமைத்தனத்தில் தான் வாழுகின்றோம். எமக்குத் தேவையான உணவுகளை நமே உற்பத்தி செய்து கொள்ளமுடியாத ஒரு நிலைமையில் தான் நம் இருக்கின்றோம். எமது விவசாயத்துக்கு பயன்படுத்தும் இரசாயனங்கள் , கிருமிநாசினிகள் போன்றவற்றை வெளிநாடுகளில் இருந்துதான் இறக்குமதி செய்கின்றோம். இதனைப் பயன்படுத்துவதன் மூலம் வருகின்ற நோய்களுக்கான மருந்துகளையும் வெளிநாடுகளில் இருந்துதான் இறக்குமதி செய்கின்றோம். இப்படியான செய்கைகள் மூலமாகவே எமது நாடுகளை அடிமைப்படுத்துகின்றனர்.

http://www.nimirvu.org/2018/12/blog-post_68.html

https://www.facebook.com/Oorukai/videos/2339413286081675/?t=2

 

  • தொடங்கியவர்

#5 : டிராபிக் ராமசாமி  (Traffic Ramaswamy, பிறப்பு: ஏப்ரல் 1, 1934) (கே. ஆர். ராமசாமி)   

ஒரு புகழ்பெற்ற இந்தியப் பொதுநலச் சேவகர் ஆவார். சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால் உடனே களம் புகுந்து போக்குவரத்தைச் சீர்படுத்துவது இவரது வழக்கம். இதனால்தான் இவருக்கு டிராபிக் ராமசாமி என்ற பெயர் வந்தது. பொதுமக்கள் நலன் கருதி, பல்வேறு பொதுநல வழக்குகளைத் தொடர்ந்து பல நல்ல செயல்களுக்கு வித்திட்டவர். அவ்வழக்குகளில் வழக்கறிஞர் துணையின்றி தானே வாதாடுவது என்கிற நடைமுறையைக் கடைப்பிடிக்கிறார்.

 

 

 

  • தொடங்கியவர்

#6 : மருத்துவர் இரவி பெருமாள்பிள்ளை 

தாயகத்தில் பிறந்த இந்த முன்னாள் இதய சத்திர சிகிச்சை நிபுணர் (ஆக்ஸ்போர்ட் , இங்கிலாந்து ), தான் பிறந்த நாட்டில் ஒரு விவசாய முயற்சியையும் முன்னெடுத்து வந்தார், இந்த முயற்சி மூலம் ஒரு கிருமி நாசினிகள் அற்ற, புதுமையான மற்றும் வித்தியாசமான வருமானம் ஈட்டக்கூடிய முயற்சிகளை முன்னெடுத்தார். 

2020ல் தடை செய்யப்படவுள்ள புகையிலை உற்பத்திக்கு மாற்றீடாக காத்தாளை வளர்ப்பது பற்றி ஒரு முயற்சியை முன்னெடுத்தார். 

ஒரு வருடத்திற்கும் சற்று கூடிய கால அளவில் ஒரு பத்து ஏக்கர் நிலத்தில் இதை வடிவமைத்தார். 

ஆனால், சிறிது காலமாக நோய்வாய்ப்பட்டு இருந்தவர் கடந்த மார்கழி மாதம் இறைவனடி சேர்த்தார். 

அல்லைப்பிட்டி, வேலணையில் வைத்தியர் வடிவமைத்த கத்தாளை (Aloe Vera) பண்ணை 

Land.jpg

இவரின் முயற்சிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றது என எண்ணுகின்றேன். 

 

  • கருத்துக்கள உறவுகள்
On 5/20/2019 at 11:11 PM, Nathamuni said:

தோசைக்கடை வைத்திருந்தவர் இன்று இப்படி ஒரு நிறுவனத்தினை நிறுவி நடாத்தி வருகிறார் என்று சொன்னால், அது சாதனை. தொடர்ந்து 18 வருடம் அதே நிலை என்றால்?
 

இவர் அடுத்த கட்டத்துக்கு போய் வெகு நாளாகி விட்டது.இவர் பல விருதுகளையும் பெற்றுள்ளார்.இவரிடம் மிகப்பிரமான்டமான தொழில் முறை சமையலறை உள்ளது.இப்பவும் சாலையோர வண்டில் கடை இவரது அடையாளம்.ம்ம்
சுய தம்பட்டமும் விளம்பரமும் இல்லாவிட்டால் இப்படித்தான்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, சுவைப்பிரியன் said:

இவர் அடுத்த கட்டத்துக்கு போய் வெகு நாளாகி விட்டது.இவர் பல விருதுகளையும் பெற்றுள்ளார்.இவரிடம் மிகப்பிரமான்டமான தொழில் முறை சமையலறை உள்ளது.இப்பவும் சாலையோர வண்டில் கடை இவரது அடையாளம்.ம்ம்
சுய தம்பட்டமும் விளம்பரமும் இல்லாவிட்டால் இப்படித்தான்.

விபரத்தை தாருங்கள்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

விபரத்தை தாருங்கள்

சில வருடங்களுக்கு முன் இவர் பற்றிய கானொழி பார்த்தேன்.அதைத் தேடத்தான் இவளவு நாழும் சென்றது கருத்திட.அம்பிட்டால் இங்கு இணைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, சுவைப்பிரியன் said:

சில வருடங்களுக்கு முன் இவர் பற்றிய கானொழி பார்த்தேன்.அதைத் தேடத்தான் இவளவு நாழும் சென்றது கருத்திட.அம்பிட்டால் இங்கு இணைக்கிறேன்.

தெரு முணையில், பார்க்கில் தோசை வித்தவர், பார்க்கில் கடை வைக்க தந்த, லைசென்ஸ் விரைவில் முடியப் போகுது என்று சொல்கிறார். 

அவர் வேறு யாவாரம் செய்ந்தால், ஏன் லைசன்ஸ் குறித்து கவலைபடவேணும்?

  • கருத்துக்கள உறவுகள்

அய்யா எனக்கு அவரை தனிப்பட தெரியாது.நான் கேள்விப்பட்டதை எழுதினேன்.மற்றும் படி உங்கள் பொருளாதரம் சம்பந்தமான கருத்துக்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்.அப்படியான நீங்கள் பிளையாக விளக்கம் கொள்ளக் குடாது என்பதற்றகாக எழுதப்பட்டது தான் எனது கருத்து.நானும் ஏதாவது செய்யாலும் என்ற்ற தேடலில் வந்ததுதான் இவரின் பதிவு.மற்றும்படி உங்கள் கருத்தை எதிர்க்க வேண்டும் என்று இல்லை.நன்றி.

  • தொடங்கியவர்

#6 : சரவணமுத்து 

படுத்தப்படுக்கையாய் எழும்புவதற்கு சிரமப்படும் நோயாளிகள் தாங்களே இயற்கை கடமைகளை நிறைவேற்றி கொள்ள வசதியையும் வழங்கியுள்ளது மூன்றாம் வகுப்பு மட்டுமே படித்த சரவணமுத்து கண்டுபிடித்துள்ள "டாய்லெட் படுக்கை". தென்காசியில் பிறந்து, பின்னர் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலுக்கு வந்து தற்போது தளவாய்புரத்தில் இவர் வசித்து வருகிறார்.

இவர் கண்டுபிடித்துள்ள படுக்கையில் நோயாளிகள் சிறுநீர் கழிக்க வேண்டும் அல்லது டாய்லெட் செல்ல வேண்டும் என்றால், அவர்களின் கையில் ரிமோட் இருக்கும்

இந்தியாவின் எல்லா மாநிலங்களில் இருந்தும் சுமார் 167 கண்டுபிடிப்புகள் இந்த கண்காட்சியில் இடம்பெற்றிருந்தன.

இந்த கண்காட்சியில், தனது கண்டுபிடிப்பான "டாய்லெட் படுக்கை" முதலில் வைக்கப்பட்டதை பார்த்து மிகவும் பெருமிதம் அடைந்ததாகக் கூறுகிறார் சரவணமுத்து.

அந்த அரங்கில் தனது கண்டுபிடிப்பு தேசிய அளவில் இரண்டாவது இடம்பெற்று விருது பெறுவதாக அறிவிக்கப்பட்டபோது மகிழ்ச்சியின் உச்சிக்கே சென்றதாக சரவணமுத்து குறிப்பிட்டார்.

  • தொடங்கியவர்

#7  ஷிவ் நாடார்

இந்திய தகவல் தொழில்நுட்பத் துறையில், மாபெரும் சாதனைப் படைத்துவரும் ‘ஷிவ் நாடார்’, ஒரு மிகப்பெரிய தொழிலதிபர் ஆவார். இந்தியாவின் மிகப் பெரிய நிறுவனமான’ இந்துஸ்தான் பொறியியல் லிமிடெட்’ (HCL)-இன்  தலைமை செயல் அதிகாரி மற்றும் ‘ஷிவ் நாடார் அறக்கட்டளையின்’ தலைவரும் ஆவார். சாதாரணமாக தன்னுடைய வாழ்க்கையை தொடங்கி, இந்தியாவில் விரல் விட்டு எண்ணக்கூடிய மிகப்பெரிய பணக்காரர்களுள் ஒருவராக வளர்ச்சியடைந்த ஷிவ் நாடார் அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளைக் காண்போம்.

பிறப்பு: ஜூலை 14,  1945

இடம்: மூலைபொழி (தூத்துக்குடி மாவட்டம்), தமிழ்நாடு, இந்தியா

பணி: தொழிலதிபர், தொழில்முனைவர்                                                                                                                         

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி

கும்பகோணத்திலுள்ள டவுன் மேல்நிலைப்பள்ளியில், தன்னுடைய பள்ளிப்படிப்பை தொடங்கிய ஷிவ் நாடார், மதுரையில் உள்ள அமெரிக்கன் கல்லூரியில் தனது உயர்நிலைப் பள்ளிப்படிப்பை முடித்தார். பிறகு கோயமுத்தூரிலுள்ள பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரியில், மின் மற்றும் மின்னணு பொறியியல் துறையில் பட்டம் பெற்றார். பிறகு,1968  ஆம் ஆண்டு தில்லி சென்றார்.

எச்.சி.எல் நிறுவனத்தை உருவாக்குதல்

தன்னுடைய கல்லூரிப் படிப்பிற்குப் பிறகு, தில்லிக்கு சென்ற அவர், அங்கு டி.சி.எம் (DCM) லிமிடெட் என்ற நிறுவனத்தில் ஒரு பொறியாளராக வேலைக்குச் சேர்ந்தார். ஆனால், ஷிவ் நாடார் சுயமாகத் தொழில் தொடங்குவதில் மிகுந்த ஆர்வம் காட்டினார். எனவே, தன்னுடன் பணிபுரியும் ஆறு சகப் பணியாளர்களுடன் சேர்ந்து ஒரு நிறுவனத்தைத் தொடங்கினார்.

விருதுகளும் பிற பணிகளும்

  • 1996 ல் தனது தந்தையின் பெயரில் ‘எஸ்.எஸ்.என் பொறியியல் கல்லூரியை’ சென்னையில் (தமிழ்நாடு) நிறுவினார்.
  • 2007 ல் சென்னை பல்கலைக்கழகம், மென்பொருள் தொழில்நுட்பத்தில் இவரின் வளர்ச்சிக்காக இவருக்கு ‘டாக்டர் பட்டம்’ கொடுத்து கெளரவித்தது.

 

  • தொடங்கியவர்
On 5/20/2019 at 5:11 PM, Nathamuni said:

தோசைக்கடை வைத்திருந்தவர் இன்று இப்படி ஒரு நிறுவனத்தினை நிறுவி நடாத்தி வருகிறார் என்று சொன்னால், அது சாதனை. தொடர்ந்து 18 வருடம் அதே நிலை என்றால்?
 

மாதகலை சேர்ந்த இவர் அமெரிக்கா வந்த ஆரம்பத்தில் கட்டிட நிர்மாணத்துறையில் வேலைசெய்துள்ளார். 
பின்னர் ஒரு உணவகத்தையும் நடாத்தியுள்ளார். ஆனால், மக்களுடன் தானே நேரடியாக கதைத்து சேவைசெய்யவும், உணவகம் நடத்துவதால் வரும் பல வேறு சிக்கல்களை தவிர்க்கவும் இதை செய்வதாக கூறுகின்றார், இன்று, பலவேறு இடங்களிலும் இவருக்கு ' நண்பர்கள் குழுமங்கள்' உள்ளன. பல நாடுகளிலும் இருந்து தம்மை தேடி வருவதாக கூறுகின்றார். 


ஆரம்பத்தில் பல வேறு சவால்களுக்கும் மத்தியில் இந்த முயற்சியை தொடர்ந்ததாக கூறுகின்றார். ஒரு சுய தொழில் செய்பவர் என்பதே ஒரு சாதனை. தெரியாத நாடு மற்றும் புரியாத மொழி - இதை எல்லாம் எதிர்கொண்டவர். பலருக்கு கீழே கை கட்டி தொழில் செய்யும் அதிகமான எம்மவர்களிடம் சுயதொழில் புரியும் அனைவருமே ஒரு சாதனையாளர்கள்.   

தனது மக்களை உலகின் ஒரு பிரசித்தி பெற்ற கொலம்பியா பல்கலைக்கழத்தில் இரண்டு பொருளாதார பட்டங்களை  இவ்வாறு வேலை செய்து உயர்த்தியவர்.

கடும் உழைப்பால் பல வெற்றிகளை சாதித்த ஒரு புலம்பெயர் தமிழர். 

 

 

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

உழைப்பை விட சிறந்த கல்வி கிடையாது

 

  • 4 months later...
  • தொடங்கியவர்
On 5/20/2019 at 3:21 PM, ampanai said:

#1:  கந்தசாமி திருக்குமார்

புலம்பெயர் தமிழனின் சாதனை வாழ்க்கை. தனது மண்ணையும் மக்களையும் கூறும் பெருந்தன்மை. … 18 வருடங்களாக நியூயோர்க்கில் தோசை- சிறு வண்டியில்
பணமாக வென்மோவா(Venmo) என கேட்பது இவரின் மாற்றங்களுக்கு மாறும் வெற்றியை காட்டுகின்றது. 

மனைவியுடனும் மக்களுடனும் புலம்பெயர்ந்தவர். இன்று மகள் ஒரு மிக செல்வாக்கான கொலம்பியா பல்கலைக்கழகத்தில், பொருளாதாரத்தில் இரண்டு பட்டங்கள் பெற்றுள்ளார்.

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.