Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்துகுடி மக்களே இலங்கையின் பூர்வீக குடிகள் -முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் சுட்டிக்காட்டு

Featured Replies

இலங்கையின் பூர்வீகக் குடிமக்கள் இந்துத் தமிழ் மக்களே என்றும் அவர்கள் புத்தபிரான் பிறக்கமுதலே இலங்கையில் வாழ்ந்து வந்துள்ளார்கள் என்றும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர், முன்னாள் முதலமைசசர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வாராந்த ஊடகவியலாளர்களின் கேள்விக்கு வழங்கியுள்ள பதிலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

பௌத்த மதமானது இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டபோது, அந்த மதத்தை தமிழர்கள் தான் முதன்முதலில் தழுவினர்.

தேவநம்பியதீசன் ஒரு தமிழ் மன்னன்.

சில நூற்றாண்டு காலங்கள் இலங்கையின் வடகிழக்கைச் சேர்ந்த இந்துத் தமிழர்கள் பௌத்தர்களாக மாறி தமிழ் பௌத்தர்களாகவே வாழ்ந்தார்கள்.

அந்த காலத்தில் வழக்கில் இருந்த தொல்லியல் பௌத்த எச்சங்களே இன்று வடமாகாணத்தில் அடையாளப்படுத்தப்படும் பௌத்த எச்சங்களாகும்.

அவை தமிழ் பௌத்தர் காலத்து பௌத்த எச்சங்களாகும் என விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

சில வருடங்களுக்கு முன்னர் பேராசிரியர் சுனில் ஆரியரத்தின 'தெமளபௌத்தயோ' அதாவது தமிழ் பௌத்தர்கள் என்ற நூலை சிங்கள மொழியில் வெளியிட்டிருந்தார்.

தமிழர்கள் பௌத்தர்களாக ஒருகாலத்தில் வாழ்ந்து வந்தமை பற்றி அந்த நூலில் அவர் ஆராய்ந்துள்ளார்.

'தெமளபௌத்தயோ' காலக்கிரமத்தில் பௌத்ததைக் கைவிட்டு இந்து சமயத்தை மீண்டும் தழுவினர்.

சிங்கள மொழியானது கிறிஸ்துவுக்கு பின் 6ஆம் அல்லது 7ஆம் நூற்றாண்டிலேயே நடைமுறைக்கு வந்தது.

அதற்கு முன்னர் எழுதப்பட்ட மகாவம்சம் என்ற நூல் பாளிமொழியிலேயே எழுதப்பட்டது.

அப்போது சிங்கள மொழி பிறக்கவில்லை.

இந்த நாட்டில் பேசப்பட்ட தமிழ் மொழியை அத்திவாரமாக வைத்து அதன் மேல் பாளிமொழியினால் அமைக்கப்பட்டு நடைமுறைக்கு வந்த மொழியே சிங்கள மொழியாகும்.

பாளிமொழியில் சிகல என்றால் சிங்கம்.

முதன் முதலில் சிகல என்ற சொல் கிறிஸ்துவுக்கு பின் 4ஆம் 5ஆம் நூற்றாண்டுகளின் படைப்பான பாளி மொழியில் வெளிவந்த தீபவம்சத்தில் குறிப்பிடப்படுகிறது

சிங்கள மொழியோ அல்லது சிங்கள இனமோ இந்த இரண்டு பாளிமொழி நூல்களிலும் குறிப்பிடப்படவில்லை என விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இதேநேரம், துட்டகைமுனுவை சிங்கள அரசன் என்று குறிப்பிடுவது தவறானது.

எல்லாளன் இந்துத் தமிழன் துட்டகைமுனு பௌத்த தமிழன் என்பதே உண்மையாகும்.

எனவே, சரித்திர ரீதியாகப் பார்த்தால் மொழி ரீதியாகவும் மத ரீதியாகவும் இலங்கையில் ஆதியில் குடிகொண்டிருந்தவர்கள் தமிழ் மொழி பேசிய இந்துக்கள் என்பதையும் விட சைவ சமயிகளே என்று கூறினால் அதுவே பொருத்தமானது.

இதனால்தான் வடகிழக்கை இணைத்து தமிழ் மக்களின் தாயகப் பகுதியை அடையாளப்படுத்தி, அதற்கென ஒரு அரசியல் கட்டமைப்பை உருவாக்கி அவர்களின் சுயாட்சிக்கு வழிவகுக்க வேண்டும் என்று கேட்டுவருவதாக வட மாகாண முன்னாள் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அந்தக் கட்டமைப்பினுள் தமிழ் பேசும் முஸ்லிம்களுக்கு ஒரு தனி அலகை ஒதுக்கவேண்டும் என்றும் கேட்டு வருகின்றோம்.

அவ்வாறான ஒரு அரசியல் தனித்துவம் வழங்கப்பட்டால், தமிழர்களின் அலகு சமயச் சார்பற்ற ஆனால் எல்லா சமயங்களையும் சமமாகக் கருதும் ஒரு அலகாகச் செயற்படும் என்று எதிர்பார்க்கலாம் என்றும் விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.

https://www.ibctamil.com/srilanka/80/120509

நீதியரசர் உஷாராத்தான் இருக்கிறார்!
சிங்களவன்டை பொய்களை பிரிச்சு மேய்கிறார்!

ஸ்ரீலங்கா பௌத்தநாடே அல்ல! - மீளவும் உறுதிப்படுத்தினார் அமைச்சர் மங்கள!

ஸ்ரீலங்காவில் பெரும்பான்மையினமாக பௌத்த மக்கள் இருந்தாலும் இதனை பௌத்த நாடு என்று அழைக்க முடியாது என்று தற்போதைய ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தின் நிதியமைச்சர் மங்கள சமரவீர மீண்டும் அடித்துக் கூறியுள்ளார்.

மீண்டுமொரு கறுப்புஜுலை இனக் கலவரத்தையும், மோதல்களையும் ஏற்படுத்தும் முயற்சியில் வங்குரோத்து அடைந்த அரசியல்வாதிகள் முயற்சி செய்து வருவதாகவும் பாரதூரமான குற்றச்சாட்டுக்களை சுமத்திய நிதி அமைச்சர் மங்கள, இந்த முயற்சிகளை முறியடித்துக்காட்டுவதாகவும் சிறிலங்கா நாடாளுமன்றில் இன்றைய தினம் சூளுரைத்துள்ளார்.

ஸ்ரீலங்கா நாடாளுமன்றம் இன்று முற்பகல் 10.30 அளவில் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடி யது. இதற்கமைய நாடாளுமன்றில் விசேட உரையொன்றை ஆற்றிய நிதி அமைச்சர் மங்கள சமரவீர ஸ்ரீலங்கா என்பது பௌத்த நாடே அல்ல என்று அறிவித்தார்.

ஏற்கனவே மாத்தறையில் இரண்டு வாரங்களுக்கு முன்னர் நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டிருந்த நிதி அமைச்சர் மங்கள சமரவீர ஸ்ரீலங்கா நாடானது ஒரு பௌத்த நாடே கிடையாது என்றும்,ஸ்ரீலங்காவில் வாழும் அனைத்து பிரஜைகளினுடையது நாடே இது எனவும் தெரிவித்திருந்தார்.

நிதியமைச்சரின் இந்தக் கூற்றுகளுக்கு எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த – கோட்டா விசுவாசிகளான கூட்டு எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்களும்,சிங்கள பௌத்த தலைமை பீடங்கள் உட்பட தலைமை பௌத்த பிக்குகளும், தென்னிலங்கையிலுள்ள சிங்கள பௌத்த கடும்போக்குவாத அமைப்புக்களும் கடும் எதிர்ப்புக்களை வெளிப்படுத்தியிருந்தன.

இந்த நிலையில் இந்த எதிர்ப்புக்களை மீறி இன்றைய தினம் சிறிலங்கா நாடாளுமன்றில் தனது நிலைப்பாட்டை அமைச்சர் மங்கள் சமரவீர மீண்டும் முன்வைத்தார்.

“சர்வதேச தீவிரவாதத்தை நாம் தற்போது கட்டுப்படுத்தியுள்ள போதிலும் இந்த நாட்டிலுள்ள வங்குரோத்து நிலை யை அடைந்திருக்கும் கட்சிகளும், அரசியல்வாதிகளும் மீண்டுமொரு கறுப்பு ஜுலையை ஏற்படுத்த முயற்சிக்கி ன்றனர். இம்முறை சிங்கள – முஸ்லிம் மக்களிடையே மோதலை ஏற்படுத்தவும், முஸ்லிம் மக்கள் அனைவரையும் தீவிரவாதிகள் என்று முத்திரையை குத்துவதற்கும் முயற்சி செய்து வருகின்றனர். முஸ்லிம் மக்களில் 90 வீதமானவர்கள் எம்முடன் இருக்கின்றனர். அவர்கள் வழங்கிய தகவ லின் அடிப்படையிலேயே தீவிரவாதிகளை முடக்கினோம். எனினும் மஹாசோன் படையணி போன்றன இந்த நாட்டில் பொருளாதார வீழ்ச்சியை ஏற்படுத்த முயற்சிக்கின்றன. மினுவாங்கொடையில் இனவாதிகளால் தீயிட்டு கொளுத்தப்பட்ட தொழிற்சாலையில் பணிபுரிந்த பலரும் சிங்களவர்கள்.

முஸ்லிம் மக்களின் வர்த்தகங்களினால் 3 பில்லியன் டொலர்களுக்கும் அதிகமான வருவாய் வருடாந்தம் கிடைக்கிறது. சிலோன் டீ ஏற்றுமதி செய்யும் நிறுவனம்கூட முஸ்லிம்களுடையது. அதேபோல ஸ்ரீலங்கா கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர்களான குமார் சங்கக்கார,மஹேல ஜயவர்தன உள்ளிட்டோர் முஸ்லிம் வர்த்தக முயற்சிகளுக்கான விளம்பரங்களில் தோன்றுகின்றனர். இந்த நாடு சிங்கள பௌத்த நாடல்ல.

ஒட்டுமொத்த ஸ்ரீலங்கா பிரஜைகளினதும் நாடாகும் என்று நான் கூறுகையில் தூஷண வார்த்தைகளால் என்னைத் திட்டித் தீர்க்கின்றனர். எனினும் இந்த நாட்டில் பௌத்த மக்கள் பெரும்பான்மையாக உள்ளமை உண்மைதான். ஆனாலும் இந்த நாடு ஸ்ரீலங்கா பிரஜைகளுக்குரியது.

புத்த பெருமானால் போதிக்கப்பட்ட பௌத்தம் என்பது ஒரு மார்க்கமே தவிர அது மதமாகாது என்றும் சுட்டிக்காட்டிய அமைச்சர் மங்கள சமரவீர,அமைச்சர் ரிசாட் பதியூதீனுக்கு எதிராக எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான எதிர்க்கட்சி முன்வைத்த நம்பிக்கையில்லாப் பிரேரணை முஸ்லீம் மக்களுக்கு எதிரானது என்றும் குற்றம்சாட்டினார்.

பௌத்த மதம் என்று கூறினால் அது தவறாகும். பௌத்த மார்க்கம் என்று சொல்வதே சரியானதாகும். பௌத்த தர்மம் என்பது மதமல்ல. புத்த பெருமான் வழங்கிய இந்த தர்மமானது இனத்துக்கு, மதத்துக்கு வரையறுக்கப்பட்டதல்ல. அதனால் பௌத்தர்கள் என்று கூறுவதற்கு நாம் வெட்கமடைய வேண்டும். ஏனென்றால் சில பௌத்த பிக்குமார்கள் இந்த புனிதமான பௌத்த தர்மத்தை விற்பனை செய்கின்றனர். முஸ்லிம்களின் புனித நூலான குர்ஆனிலும் எமது பௌத்த தர்மத்திலுள்ள விடயங்கள்தான் உள்ளன.

எனவே நீங்கள் கொண்டுவருகின்ற இந்தப் பிரேரணையானது ரிஸாட் பதியுதீனுக்கு விரோதமானதல்ல மாறாக முஸ்லிம் மக்களுக்கு விரோதமானதாகும். முஸ்லிம் மக்களை இந்த அரசாங்கத்திலிருந்து பிரிக்கவே பார்க்கின்றனர்.யார் எவ்வகையான கனவுகளைக் கண்டாலும் இந்த அரசாங்கத்தை வீழ்த்த முடியாது என்று சவால் விடுக்கின்றேன்.

அமைச்சர் மங்கள சமரவீரவின் இந்த உரைக்கு மஹிந்தவாதி நாடாளுமன்ற உறுப்பினரான விமல் வீரவன்ச பலதடவை குறுக்கீடு செய்தார்.இருப்பினும் நாடாளுமன்றத்தின் மீது குண்டுத் தாக்குதலை நடத்திய கீர்த்தி அபேவிக்ரமவின் மைத்துனரான விமல் வீரவன்ச, அவருடைய மரபணு உறவுமுறையின் உந்துதலே இந்தக் குறுக்கீடுகளுக்கு காரணம் என கூறிய அமைச்சர் மங்கள சமரவீர, விமல் வீரவன்சவின் குறுக்கீடுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

https://www.ibctamil.com/srilanka/80/120574

இவ்வாறு உண்மையை - வரலாற்றுச் சான்றைத் துணிந்து கூறுவதற்கு ஒரு தலைவன் வேண்டும்.


அதுதான் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களைத் தமிழ் மக்களில் பலரும் தங்கள் தலைவராக ஏற்றுக்கொள்வதற்குக் காரணமாகிறது.

 
பெளத்தத்துக்கே முன்னுரிமை என்று அவர்கள் கூறட்டும். அதுபற்றி நமக்குக் கவலை யில்லை. 
 
ஆனால் இலங்கையின் பூர்வீகம் இந்துத் தமிழ் என்பதை எப்போதும் நாம் கூற வேண்டும். அதுவே உண்மை. அதுவே தமிழனைத் தமிழனாக வாழ வைக்கும். 
  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ampanai said:

ஆனால் இலங்கையின் பூர்வீகம் இந்துத் தமிழ் என்பதை எப்போதும் நாம் கூற வேண்டும். அதுவே உண்மை. அதுவே தமிழனைத் தமிழனாக வாழ வைக்கும். 

தமிழனை இந்துத் தமிழன் என்று கூறுவதே தவறு. தமிழன் தமிழன்தான்.  அதுதான் அவன் பூர்வீகம் என அறியக்கிடக்கிறது. ஏனெனில் அவன் இயற்கையோடு இணைந்து அது வழங்கும் இன்ப துன்பங்களையும் அனுபவித்து வாழ முற்பட்டவன். இடையே மதங்கள் புகுந்து அவனையும் இன்று மதம்பிடித்து வாழ வைத்துள்ளது. இருப்பினும் அதனை உணர்த்தி தமிழனைத் தமிழனாக வாழவைக்கும் முயற்சிகளும் அங்காங்கே எழத்தான் செய்கிறது. இந்நூற்றாண்டில் அதனை ஈழத்திலும் காண முடிந்தது.

  • தொடங்கியவர்
3 hours ago, Paanch said:

தமிழனை இந்துத் தமிழன் என்று கூறுவதே தவறு. தமிழன் தமிழன்தான்.  அதுதான் அவன் பூர்வீகம் என அறியக்கிடக்கிறது. ஏனெனில் அவன் இயற்கையோடு இணைந்து அது வழங்கும் இன்ப துன்பங்களையும் அனுபவித்து வாழ முற்பட்டவன். இடையே மதங்கள் புகுந்து அவனையும் இன்று மதம்பிடித்து வாழ வைத்துள்ளது. இருப்பினும் அதனை உணர்த்தி தமிழனைத் தமிழனாக வாழவைக்கும் முயற்சிகளும் அங்காங்கே எழத்தான் செய்கிறது. இந்நூற்றாண்டில் அதனை ஈழத்திலும் காண முடிந்தது.

மனிதர்களால் உருவாக்கப்பட்டதே அனைத்து சமயங்களும் மதங்களும். காலப் போக்கில் தங்களால் அறியமுடியாத ஒரு இயற்கைச் சக்தியை கடவுள் என அழைக்கத் தலைப்பட்டனர்! இவ்வாறான ஒரு நம்பிக்கையினூடாக சில ஒழுக்கநெறிகளை மக்கள் பின்பற்றும் சூழலும் உருவாக்கப்பட்டது.

உலகில் மிகமிகத் தொன்மையான இனம், மொழியாக தமிழும் தமிழினமும் கருதப்படும் நிலையில் ஆதிகாலத்து தமிழன் இந்த சமயம் அல்லது மதம் என்பதற்கு அப்பாற்பட்டவனாக இருக்க வேண்டும்!

மனிதனால் உருவாக்கப்பட்ட பல்வேறு சமயங்கள் அல்லது மதங்களைக் கருதும் போது, சைவ சமயம் (இந்து சமயம்) ஆனது பௌத்தம், கிறிஸ்தவம், இஸ்லாம் போன்ற மதங்களைவிட மிகவும் தொன்மையானதாக இருக்கவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக்கள் இருக்கமுடியாது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.