Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யுத்த வெற்றியின் வீரச் சரித்திரத்தை நூலாக தொகுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் ; ஜனாதிபதி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யுத்த வெற்றியின் வீரச் சரித்திரத்தை நூலாக தொகுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் ; ஜனாதிபதி

இராணுவ வீரர்களின் போர்த்திறமை தேசப்பற்று மற்றும்  உன்னத மனித நேயம் தொடர்பில் எதிர்கால சந்ததியினர் வாசித்து தெரிந்துகொள்ளக்கூடிய வகையில் 30 ஆண்டு கால யுத்த வெற்றியின் வீரச் சரித்திரத்தை நூலாக தொகுக்க வேண்டியது காலத்தின் கட்டாய தேவையாக உள்ளதென ஜனாதிபதி  தெரிவித்தார்.

maithiri.jpg

அதனை வாசிப்பதனூடாக நாட்டை நேசிக்கும் தேசப்பற்றுடைய எதிர்கால தலைமுறையொன்று உருவாக்கப்படுவதுடன், 30 வருட கால யுத்தத்தின் உண்மைக் தன்மை, பின்னணி மற்றும் அதற்கான காரணங்களைப் போன்ற உண்மையான விபரங்களை உலகத்தினருக்கு தெரியப்படுத்த முடியும் என்றும் இன்று (22) பிற்பகல், கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற “உத்தமாச்சாரய” (வணக்கம்) நூல் வெளியீட்டு விழாவின்போது ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.

மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி  போர்க் களத்தில் போராடிய இராணுவ வீரன் முதல் கட்டளை அதிகாரி, கட்டளைத் தளபதி வரையிலான அனைவரினதும் அனுபவங்கள், வாழ்க்கை முறை மற்றும் போர்த்திறமை ஆகியன பாராட்டுக்குரியவை என்றும் இன்றும் கடமையில் ஈடுபட்டுள்ள இராணுவ வீரர்கள் அவர்களது கடந்தகால அனுபவங்களை கௌரவத்தோடு நினைவுகூர்ந்து வருவதுடன். தாய் நாட்டிற்கு பெருமை சேர்க்கும் அவர்களது வாழ்க்கை வரலாறு பற்றிய விபரங்களை அவர்களோடு அழிவதற்கு உரிய தரப்பினர் இடமளிக்கக்கூடாது என்றும் குறிப்பிட்டார்.

அத்தகைய நூலொன்றினை வெளியிடுவதன் ஊடாக 30 ஆண்டு கால யுத்தத்தில் உயிர்தியாகம் செய்த சகல இராணுவ வீரர்களுக்கும் செலுத்தப்படும் மரியாதையாகும் எனத் தெரிவித்தார்.

பரமவீர விபூஷண பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்ட இராணுவ வீரர்களின் வாழ்க்கை வரலாறாக “உத்தமாச்சாரய” எனும் நூல் எழுதப்பட்டுள்ளது. தனது உயிரை துச்சமாக மதித்து தனது சக வீரர்களின் உயிரைக் காப்பாற்றுவதற்காகவும் படையணியின் குறிக்கோளினை வெற்றிகொள்வதற்காகவும் தன்னிச்சையாக முன்வந்து, எதிரிகளுடன் போராடி வீர தீர செயல்களைப் புரிந்த இராணுவ வீரர்கள் பரமவீர விபூஷண பதக்கம் வழங்கி கௌரவிக்கப்படுகின்றனர்.

ஆயுதம் தாங்கிய படையினருக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த கௌரவமிக்க பதக்கம்  இதுவாகும் என்பதுடன்இ இதுவரையில் இலங்கையின் 11 இராணுவ அதிகாரிகளுக்கும் ஏனைய பதவி நிலைகளிலுள்ள 19 பேருக்கும் இந்த பதக்கம் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வருடம் நினைவுகூரப்படும் சமாதானத்தின் பத்தாண்டு பூர்த்தியுடன் இணைந்ததாக இலங்கை இராணுவத்தினரின் பரமவீர விபூஷண பதக்கம் பெற்றோரின் வீர தீர செயல்களை எதிர்கால தலைமுறையினரும் அறிந்துகொள்ளும் வகையில் “உத்தமாச்சாரய” (வணக்கம்) என்ற நூல் தொகுக்கப்பட்டுள்ளது. 

பரமவீர விபூஷண பதக்கம் பெற்றோரின் நெருங்கிய உறவினர்களுக்கு ஜனாதிபதி நூல்களை வழங்கி வைத்தார். 

சமாதானத்தின் பத்தாண்டு பூர்த்தியை முன்னிட்டு வெளியிடப்பட்ட நினைவு முத்திரையும் முதல் நாள் அஞ்சல் உறையும் ஜனாதிபதி அவர்களிடம் இதன்போது கையளிக்கப்பட்டது.

இலங்கை இராணுவத்தினரால் மஹரகம அபேட்சா மருத்துவமனைக்கு வழங்கப்படும் 70 மில்லியன் ரூபாவுக்கான காசோலையினை இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க ஜனாதிபதி அவர்களிடம் உத்தியோகபூர்வமாக கையளித்தார்.

பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் சாந்த கோட்டேகொடஇ பாதுகாப்பு பதவிநிலை பிரதானி உள்ளிட்ட முப்படைத் தளபதிகள்இ முப்படையின் சிரேஷ்ட அதிகாரிகள்இ ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகள்இ இராணுவத்தினரின் குடும்ப உறவினர்கள் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இதனிடையே சமாதானத்தின் பத்தாண்டு பூர்த்தியுடன் இணைந்தாக தாய்நாட்டுக்கு சிறப்பான சேவை ஆற்றிய பிரிகேடியர் பதவிகளை வகித்த 10 அதிகாரிகளை மேஜர் ஜெனரலாக பதவி உயர்த்துவதற்கும் முப்படைகளின் தலைவரான ஜனாதிபதி  மைத்ரிபால சிறிசேன நடவடிக்கை எடுத்துள்ளார்.

 

 

http://www.virakesari.lk/article/56530

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா இடையில நடந்த பின்னடைவுகளையும் வல்லரசுகளின் பங்களிப்பையும் குறிப்பிடுவீங்களோ?!

  • கருத்துக்கள உறவுகள்

காலத்தின் கட்டளை படியும் சில விடயங்கள் நடந்தன

 

  • கருத்துக்கள உறவுகள்

நிச்சயமாக...!

வருங்கால போர்க்குற்ற விசாரணைகளுக்கு உதவும்!

மகா வம்சம் மாதிரிப் பொய் எழுதக் கூடாது!

நடந்ததை நடந்த படியே எழுதவும்!

2 hours ago, புங்கையூரன் said:

நிச்சயமாக...!

வருங்கால போர்க்குற்ற விசாரணைகளுக்கு உதவும்!

மகா வம்சம் மாதிரிப் பொய் எழுதக் கூடாது!

நடந்ததை நடந்த படியே எழுதவும்!

அவர்கள் எப்படியும் தம்மை நியாயப்படுத்தி பொய் புரட்டுடன் தான் எழுதுவார்கள். இப்பொழுது மக்கள் முன் ஆற்றும் உரைகளிலேயே அவர்கள் இலட்சணம் தெரிகிறது. 

Edited by Lara

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, Lara said:

அவர்கள் எப்படியும் தம்மை நியாயப்படுத்தி பொய் புரட்டுடன் தான் எழுதுவார்கள். இப்பொழுது மக்கள் முன் ஆற்றும் உரைகளிலேயே அவர்கள் இலட்சணம் தெரிகிறது. 

அவர்களைக் குறை கூற முடியாது, லாரா!

மனித இயல்பு அது! ஆயுதங்கள் மௌனிக்கப் பட்டதின் மூலம் புலிகள் ஒரு பிரம்மாஸ்திரத்தையும் எமக்காக  விட்டுச் சென்றார்கள்! அதன் பெயர் தான் போர்க்குற்றம்! ஒரு போர்க்குற்ற தேசம்... இன்னொரு போர்க்குற்ற தேசத்தைப் பாதுகாத்தது! இதை அறிந்தும் எமது அரசியல் வாதிகள் திறந்த கண்களுடனேயே எங்களுக்கு நிலா காட்டினார்கள்! அவர்களை அண்ணார்ந்து பார்த்தது தான் எமது தவறு! இன்னும் காலம் கடந்து விடவில்லை!

Edited by புங்கையூரன்

4 hours ago, புங்கையூரன் said:

நிச்சயமாக...!

வருங்கால போர்க்குற்ற விசாரணைகளுக்கு உதவும்!

மகா வம்சம் மாதிரிப் பொய் எழுதக் கூடாது!

நடந்ததை நடந்த படியே எழுதவும்!

மகாவம்ச மனோநிலைல இருக்கிறவங்களிட்ட எப்பிடி உண்மையை எதிர் பாக்கலாம்!

7 hours ago, புங்கையூரன் said:

அவர்களைக் குறை கூற முடியாது, லாரா!

மனித இயல்பு அது! ஆயுதங்கள் மௌனிக்கப் பட்டதின் மூலம் புலிகள் ஒரு பிரம்மாஸ்திரத்தையும் எமக்காக  விட்டுச் சென்றார்கள்! அதன் பெயர் தான் போர்க்குற்றம்! ஒரு போர்க்குற்ற தேசம்... இன்னொரு போர்க்குற்ற தேசத்தைப் பாதுகாத்தது! இதை அறிந்தும் எமது அரசியல் வாதிகள் திறந்த கண்களுடனேயே எங்களுக்கு நிலா காட்டினார்கள்! அவர்களை அண்ணார்ந்து பார்த்தது தான் எமது தவறு! இன்னும் காலம் கடந்து விடவில்லை!

அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு இலங்கை அரசின் மேல் அழுத்தம் பிரயோகிக்கும் தேவை ஏற்பட்டால் தான் ஐ.நா போர்க்குற்ற விசாரணையை கையிலெடுப்பார்கள். இல்லாவிட்டால் அது கிடப்பில் இருக்கும்.

ஆனாலும் முயற்சியை கைவிடாமல் தொடரலாம்.

தம்மை நியாயப்படுத்தி எழுதும் வரலாறுகளிலும் சில விடயங்களை நாம் பெற்றுக்கொள்வது போல் இதிலும் ஏதும் பெற முடியுமென்றால் நல்லதே. அதே நேரம் தவறான வரலாறு எழுதப்படும் போது அது சிங்களவர்களை இன்னும் தவறான பாதையை நோக்கியே கொண்டு செல்லும்.

Edited by Lara

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Rajesh said:

மகாவம்ச மனோநிலைல இருக்கிறவங்களிட்ட எப்பிடி உண்மையை எதிர் பாக்கலாம்!

உண்மை தான்...!

இருப்பினும் சிலவற்றைத் தெரிந்து பொறுக்கியெடுக்கலாம்!!

வடக்கிலும்....கிழக்கிலும்....தன் மானமுள்ள தமிழர்கள் ஒரு காலத்தில் வாழ்ந்தார்கள்!
அவர்களை வஞ்சகமாகவே.......எம்மால் தோற்க்கடிக்க முடிந்தது....!

ஏதோ ஒரு வகையில்.....எல்லாளன் பெயர்....துட்டகைமுனுவின் வரலாறு வாழும் வரையும்...வாழும் என்பது போல....பிரபாகரனின் பெயரும்....மகாவம்சம் இருக்கும் வரை வாழ்ந்து கொண்டு தான் இருக்கப் போகின்றது!

மாணிக்கவாசகர் நரியைப் பரியாக்கிய கதையை...நம்புவர்களை...நாம் தடுக்கத் தேவையில்லை!

எனினும்....மாணிக்கவாசகர் என்ற ஒரு அமைச்சர்....அரேபியாவில் குதிரைகள் வாங்கினார் என்பதை மட்டுமே...எடுத்துக் கொள்வோமே....!

நானும், நீங்களும் நினைப்பது  போல.....நாளைய சிங்களத் தலை முறை.....எழுதப் படும் புனை கதைகளை அப்படியே நம்புகின்ற தலை முறையாக இருக்கப் போவதில்லை!

23 hours ago, Lara said:

அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு இலங்கை அரசின் மேல் அழுத்தம் பிரயோகிக்கும் தேவை ஏற்பட்டால் தான் ஐ.நா போர்க்குற்ற விசாரணையை கையிலெடுப்பார்கள். இல்லாவிட்டால் அது கிடப்பில் இருக்கும்.

ஆனாலும் முயற்சியை கைவிடாமல் தொடரலாம்.

தம்மை நியாயப்படுத்தி எழுதும் வரலாறுகளிலும் சில விடயங்களை நாம் பெற்றுக்கொள்வது போல் இதிலும் ஏதும் பெற முடியுமென்றால் நல்லதே. அதே நேரம் தவறான வரலாறு எழுதப்படும் போது அது சிங்களவர்களை இன்னும் தவறான பாதையை நோக்கியே கொண்டு செல்லும்.

டொனால்ட் ட்ரம்ப் ஜனாதிபதியாக உள்ள வரை அவர் ஐநா வின் ஒவ்வொரு பிரிவிலிருந்தும் அமெரிக்காவை விலக்கி கொண்டு செல்வார். (UNHRC இலிருந்து விலக்கியது போல்)

ஆனாலும் நான் அமெரிக்கா என குறிப்பிட்டது அமெரிக்கா உட்பட பல நாடுகளை சேர்ந்த உலகளாவிய ஒரு கூட்டம் தான் ஐநா இன் அனைத்து பிரிவுகளையும் கையாள்கிறது என்ற அர்த்தத்தில்.

Edited by Lara

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.