Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐ.எஸ் அமைப்புக்கு எதிராக யாழில் போராட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ISIS-6-720x450.jpg

ஐ.எஸ் அமைப்புக்கு எதிராக யாழில் போராட்டம்.

ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் பாரிய போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

யாழ்.நகரில் அமைந்துள்ள பள்ளிவாசல்களின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் எதிர்வரும்  வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.

மானிப்பாய் வீதியில் அமைந்துள்ள பள்ளிவாசலில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை நண்பகல் தொழுகைக்காக கூடும் இஸ்லாமியர்கள், ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புக்கு எதிரான பதாதைகளை ஏந்தியவாறு பேரணியாக ஐந்து சந்திக்குச் சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக கூறப்படுகின்றது.

ஐ.எஸ் அமைப்புக்கு எதிராக  நாட்டின் சில பகுதிகளில் முஸ்லிம் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்ற நிலையில் யாழ்ப்பாணத்திலும் போராட்டம் நடத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட தொடர் குண்டுத் தாக்குதல்களில் 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/ஐ-எஸ்-அமைப்புக்கு-எதிராக/

இலங்கையிலுள்ள அடிப்படைவாத அமைப்புகளுக்கெதிராக ஆர்ப்பாட்டம் நடத்தலாம். ISIS க்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்வதில் பலனில்லை. அவர்கள் பின்னணியில் பெரும் கைகள் உள்ளன.

தாக்குதல்களை ஒழுங்குபடுத்துவோரின் விருப்ப இலக்கம் 666. 😎

வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் பேசும் மக்களை யார் நினைத்தாலும் இனி பிரிக்க முடி யாது என யாழ்ப்பாண முஸ்லிம் சிவில் அமைப்புத் தெரிவித்துள்ளது.

இந்த கருத்தைக் கேட்கும்போது, அழுவதா அல்லது சிரிப்பதா என்று புரிய வில்லை. இதை கூறும்போது முஸ்லிம் மக்களுக்கு எதிரான கருத்து இது என்று சிலர் கருதலாம். ஆனால் எந்த வகையிலும் இது முஸ்லிம் மக்களுக்கு எதிரான இல்லை. 

கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி நடந்த தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்தியது ஒரு குழுமம் அல்லது ஒரு கூட்டமாகவே இருக்க முடியும். இதைவிடுத்து ஒட்டுமொத்த முஸ்லிம் மக்களையும் தீவிரவாதத்துடன் தொடர்புபடுத்துவதும் அவர்களுக்கு தீமை செய்வதுமான செயலை ஒருவரும் ஆதரிக்க முடியாது. 

வன்னியில் ஈழ விடுதலை  யுத்தம் நடந்தபோது, தமிழ் மக்கள் கொல்லப்பட்டமை கண்டு துடித்த இஸ்லாமிய சோதரர்கள் நிறைய உளர். அதற்காக முஸ்லிம் அரசியல்வாதிகள் தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்தனர். முஸ் லிம் சிவில் அமைப்புகள் வன்னி யுத்தத்தைக் கண்டித்தன என்று கூறுவது அடிப்படை நியாயமற்றது. உண்மையில் வன்னி யுத்தம் நடந்தபோது, தமிழர்கள் கொல்லப்பட வேண்டும் என நினை த்த முஸ்லிம் அரசியல்வாதிகளே அதிகம்.

புலனாய்வுத் துறையில் சேர்ந்து தமிழ் இளைஞர்களைக் காட்டிக் கொடுத்து, விசாரணை என்ற பெயரில் தமிழ் இளைஞர்களைக் கொடுமைப்படுத்தியவர்களில் கணிசமானவர்கள் முஸ்லிம் புலனாய்வாளர்கள். இந்த உண்மைகளை ஒருபோதும் மறக்க முடியாது மறக்கவும் கூடாது. தவிர, கிழக்கு மாகாணத்தில் இன்றுவரை தமிழினத்தை அழிப்பதில் முஸ்லிம் இனத்தின் ஒரு தரப்பினர் கடுமையாகப் பாடுபடுகின்றனர்.

குறிப்பாக கிழக்கின் முக்கிய முஸ்லிம் அரசியல்வாதி ஒருவர் தமிழினத்துக்கு எதிராகச் செய்த கொடுமைகள் கொஞ்சமல்ல. இதுவே உண்மை. இந்த உண்மைகள் சிலருக்குக் கசக்கலாம்.

யாருக்கெல்லாம் இந்த உண்மைகள் கசக் கின்றனவோ அவர்கள் இப்போது சந்தர்ப்ப சூழ்நிலைகளால் பலயீனப்பட்டவர்கள் என்பதை தமிழ் மக்களும் தமிழினம் வாழ வேண்டும் என நினைக்கின்ற அருமந்த முஸ்லிம் சகோதரர்களும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

ஆக, தமிழ் மக்கள் கொத்துக் கொத்தாகக் கொன்றொழிக்கப்பட்டபோது ஆட்சியாளர்க ளுடன் நின்று கரகோசம் செய்த முஸ்லிம் அரசியல்வாதிகளை தமிழ் மக்கள்ஒருபோதும் மறக்கவும் மாட்டர்கள் மன்னிக்கவும் மாட்டார்கள்.

இந்த உண்மையை சந்தர்ப்பவாத முஸ்லிம் அரசியல்வாதிகளும் சில முஸ்லிம் அமைப்புகளும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

குறிப்பு : இது மின் மடலில் வந்தது 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Lara said:

தாக்குதல்களை ஒழுங்குபடுத்துவோரின் விருப்ப இலக்கம் 666. 😎

666 என்பது,   ரோங்..  நம்பர்  லாரா....
786 என்பதை... அழுத்திப் பாருங்கள்.
நீங்கள்... தொடர்பு கொண்டவர், உலகத்தில்....
எந்த மூலையில்,  மொட்டாக்குடன்  இருந்தாலும்,  கண்டு பிடிக்கலாம்.   🤠

1 hour ago, தமிழ் சிறி said:

666 என்பது,   ரோங்..  நம்பர்  லாரா....
786 என்பதை... அழுத்திப் பாருங்கள்.
நீங்கள்... தொடர்பு கொண்டவர், உலகத்தில்....
எந்த மூலையில்,  மொட்டாக்குடன்  இருந்தாலும்,  கண்டு பிடிக்கலாம்.   🤠

நீங்கள் மொட்டாக்கை மட்டும் தேடுவதால் தான் உங்களுக்கு அந்த எண் கண்ணில் படுது. 😀

ஈஸ்டர் தாக்குதல் நேரம் ஏன் இவ்வாறு எழுதப்பட்ட மோட்டார் வண்டியை உலாவ விட்டார்கள்? 666 பற்றி உங்களுக்கு தெரிந்தால் இலகுவில் விளங்கும். 😀

image_91f30b826c.jpg

image_6b655919d1.jpg

யாழ்ப்பாண முஸ்லிம்களின் ஏற்பாட்டில், ISIS பயங்கரவாதிகளுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்

W+%25289%2529.jpeg

யாழ் முஸ்லீம் சமூகத்தின் ஏற்பாட்டில் பயங்கரவாதத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று (31) மதியம் 1.00 மணியளவில் முஸ்லிம் கல்லூரி வீதியும் - நாவலர் வீதியும் இணையும் புதுப்பள்ளிச் சந்தியில்  முன்னெடுக்கப்பட்டது.

குறித்த ஆர்ப்பாட்டமானது  ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பிற்கு எதிர்ப்புத்தெரிவிக்கும் வகையிலும் அவ் அமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட ஏப்ரல் 21 தாக்குதலுக்கும் கண்டனம் வெளியிட்டு குறித்த தாக்குதலில் உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தும்  வகையில் அந்நடவடிக்கைகளில் ஈடுபட்ட அனைவர் மீதும் அரசை சட்டத்தின் மூலம் தண்டனையை வழங்கக் கோரியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன் போது பல்வேறு கோஷங்களையும், பதாதைகளையும் எழுப்பி போராட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Wha+%25281%2529.jpeg

Wha+%25286%2529.jpeg

Wha+%25283%2529.jpeg

W+%252817%2529.jpeg

W+%252816%2529.jpeg

http://www.jaffnamuslim.com/2019/05/blog-post_936.html?m=1

Edited by Lara

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, Lara said:

யாழ்ப்பாண முஸ்லிம்களின் ஏற்பாட்டில், ISIS பயங்கரவாதிகளுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்

இதை முதலே செய்திருந்தால் பாராட்டலாம்.

இப்ப செய்தால் தொப்பி பிரட்டி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Lara said:

 

W+%25289%2529.jpeg

Wha+%25281%2529.jpeg

Wha+%25286%2529.jpeg

Wha+%25283%2529.jpeg

W+%252817%2529.jpeg

W+%252816%2529.jpeg

ஐ. எஸ். அமைப்புக்கு எதிராக.. ஆர்ப்பாட்டம் செய்வதென்றால்...
பதாகைகளை... சிங்களத்திலும், தமிழிலும் எழுதினால்... அவர்களுக்கு விளங்குமா?
அரபு மொழியில், அல்லது ஆங்கில மொழியில் எழுதுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

இதை முதலே செய்திருந்தால் பாராட்டலாம்.

இப்ப செய்தால் தொப்பி பிரட்டி.

அவங்கள் தேர்ந்த வியாபாரிகள் அதுதான் முதல்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, சுவைப்பிரியன் said:

அவங்கள் தேர்ந்த வியாபாரிகள் அதுதான் முதல்.

இவர்களது இனம் இலங்கையில் மட்டுமல்ல உலகம் முழுவதுமே வியாபாரியாகத் தான் இயங்குவார்கள்.

சிறிய பெட்டிக்கடை போடுவார்கள் கொஞ்சகாலம் போக அந்த கட்டடத்தையே வாங்கிவிடுவார்கள்.

13 hours ago, தமிழ் சிறி said:

ஐ. எஸ். அமைப்புக்கு எதிராக.. ஆர்ப்பாட்டம் செய்வதென்றால்...
பதாகைகளை... சிங்களத்திலும், தமிழிலும் எழுதினால்... அவர்களுக்கு விளங்குமா?
அரபு மொழியில், அல்லது ஆங்கில மொழியில் எழுதுங்கள்.

நான் நினைக்கிறேன் இவர்கள் இந்த ஆர்ப்பாட்டம் செய்தது தாம் பயங்கரவாதிகளுக்கு எதிரானவர்கள் என்று சிங்களவர்களுக்கு காட்டுவதற்காக. 😀

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.