Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெய்சங்கர்: மோதி அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள இந்த புதுமுகம் யார்? சுவாரஸ்ய தகவல்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 
சுப்பிரமணியம் ஜெய்சங்கர்படத்தின் காப்புரிமை Hindustan Times Image caption சுப்பிரமணியம் ஜெய்சங்கர்

பிரதமர் நரேந்திர மோதியின் புதிய அமைச்சரவையில் சுப்பிரமணியம் ஜெய்சங்கர் என்ற பெயர் இடம் பெற்றிருந்தது பலருக்கும் ஆச்சரியம் தரும் விஷயமாக அமைந்தது.

 

பெரும்பாலும், கடந்த அமைச்சரவையில் இடம் பெற்றவர்களே இந்த முறையும் இடம் பெற்றிருக்கிறார்கள். பதவியேற்று கொண்ட 25 கேபினட் அமைச்சர்களில் மூன்று பேர் மட்டுமே புதுமுகங்கள். அதில் ஒருவர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர். இவர் இந்தியாவின் முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளராக இருந்தவர்.

கடந்த முறை வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த சுஷ்மா ஸ்வராஜ், உடல்நிலை காரணங்களால், இந்த முறை மக்களவைத் தேர்தலில் போட்டியிடவில்லை. தேர்தலில் போட்டியிடாமல், அமைச்சரவையில் இடம் பெற்றிருக்கும் ஜெய்சங்கர், வெளியுறவுத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

2013ஆம் ஆண்டு அமெரிக்காவுக்கான இந்திய தூதராக ஜெய்சங்கர் நியமிக்கப்பட்டார். அவர் அந்த பொறுப்பேற்றுக் கொண்டவுடன் சர்ச்சைக்குரிய தெய்வானி கோப்ரகடே வழக்கை இவர் கையாள வேண்டியிருந்தது. இந்திய வெளியுறவு அதிகாரியாக அமெரிக்காவில் பணியாற்றி வந்த தெய்வானி, விசா மோசடி குற்றச்சாட்டுகளுக்காக கைது செய்யப்பட்டார். அவரை விடுவித்து இந்தியாவுக்கு திருப்பி அனுப்பியதில் ஜெய்சங்கருக்கு முக்கிய பங்குள்ளது.

அதே போல குஜராத் கலவர வழக்கையடுத்து அமெரிக்காவுக்குள் நுழைய நரேந்திர மோதிக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. 2014ஆம் ஆண்டு பிரதமரானவுடன் அத்தடை நீக்கப்பட்டு, முதல் முறையாக அமெரிக்கா சென்றார் மோதி. செப்டம்பர் 2014ஆம் ஆண்டு மோதியின் அமெரிக்க பயணித்திற்கு திட்டமிட்டதோடு, அங்கு அவரை வரவேற்று, இந்திய அமெரிக்க மக்களோடு விருந்து ஏற்பாடு செய்திருந்தார் ஜெய்சங்கர்.

சுப்பிரமணியம் ஜெயசங்கர்படத்தின் காப்புரிமை Getty Images

ஜெய்சங்கர் குறித்த சில சுவாரஸ்ய தகவகல்கள்

  • தமிழகத்தை சேர்ந்த ஜெய்சங்கர், 1955ஆம் ஆண்டு டெல்லியில் பிறந்தார். இவரது தந்தை கே. சுப்பிரமணியம் சர்வதேச மூலோபாய விவகாரங்களின் ஆய்வாளராக இருந்தார்.
  • ஜெய்சங்கரின் மனைவி க்யோக்கோ ஜெய்சங்கர், ஜப்பான் நாட்டை சேர்ந்தவர்.
  • 1977ஆம் ஆண்டு இந்திய வெளியுறவுப் பணியில் சேர்ந்த இவர், முதலில் ரஷ்யாவில் உள்ள இந்திய தூதரகத்தில் பணியாற்றினார்.
  • 1985ல் அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகத்தில் செயலாளராக நியமிக்கப்பட்டார்.
  • 1988ஆம் ஆண்டு இலங்கை ராணுவத்திற்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடந்த போரின்போது, இந்தியாவின் அமைதி காக்கும் படையின் செயலாளரகவும், அரசியல் ஆலோசகராகவும் ஜெய்சங்கர் செயல்பட்டார்.
  • 2000ல் செக் குடியரசின் இந்திய தூதராக நியமிக்கப்படும் முன்பு, ஹங்கேரி மற்றும் ஜப்பான் நாட்டில் உள்ள இந்திய தூதரங்களில் முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார்.
  • இந்திய அமெரிக்க அணுஆயுத ஒப்பந்த பேச்சுவார்த்தைகளில் ஜெய்சங்கர் முக்கிய பங்காற்றியுள்ளார்.
சுப்பிரமணியம் ஜெயசங்கர்படத்தின் காப்புரிமை TWITTER
  • 2009ஆம் ஆண்டு சீனாவுக்கான இந்திய தூதராக இவர் நியமிக்கப்பட்டார்.
  • மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது, வெளியுறவுத்துறை அமைச்சர் பொறுப்புக்காக ஜெய்சங்கரின் பெயர் பரிந்துரைக்கப்பட்டது.
  • 2015ஆம் ஆண்டு, இந்தியாவின் வெளியுறவு செயலாளராக நியமிக்கப்பட்டார் ஜெய்சங்கர்.
  • கடந்தாண்டு டாடா குழுமத்தின் உலகளாவிய கார்ப்பரேட் விவகாரங்களின் தலைவராக பணியாற்றினார்.
  • மோதியின் அமைச்சரவையில் உள்ள அரசியல் சாராத ஒரே நபர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர்.
  • ஜெய்சங்கருக்கு தமிழ், ஆங்கிலம், இந்தி, ரஷ்யன், மேண்டரின் ஆகிய மொழிகள் தெரியும்.

https://www.bbc.com/tamil/india-48470838

Edited by பிழம்பு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

இந்த ஜெய்சங்கரைப்பற்றி நிறைய விடயங்கள் சொல்லப்படுகின்றன. இணைப்பை அழுத்தி மேலும் வாசிக்கவும்.

செய்தி: 1988ஆம் ஆண்டு இலங்கை ராணுவத்திற்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடந்த போரின்போது, இந்தியாவின் அமைதி காக்கும் படையின் செயலாளரகவும், அரசியல் ஆலோசகராகவும் ஜெய்சங்கர் செயல்பட்டார்.

கருத்து: முன்னைய இந்திய அமைதி காக்கும் படையின் செயலாளர் இன்றைய இந்திய வெளிவிவகார அமைச்சர். இவர் காங்கிரஸ் கட்சியின் கீழ் இந்த பதவியை பெறாதது நன்மையாக இருக்கலாம். 

அதேவேளை இவர் இலங்கை பற்றியும் சீனாவின் ஆதிக்கம் தென் கிழக்கு ஆசியாவில் தெரிந்தவராக இருப்பது எமக்கு பயனுள்ளதாக இருக்கும் என நம்பலாம்.  

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் இந்திய ராணுவத்தினருக்கு பொறுப்பாளராக இருந்த ஒரு தமிழனாம். ஹிந்தியாவிற்கு செய்த   சேவையினை மதித்து மோடி அவர்களினால் அவருக்கு அளிக்கப்பட்ட  பரிசு 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழீழ பிரச்சனையை சிக்கலாக்கியவர்; மோடியின் வெளியுறவுத்துறை அமைச்சரானார்.

http://www.eelamview.com/2019/05/31/ipkf-jaysankar/

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழர்கள்  இன்றுவரை எதிர்கொண்டுவரும் இனவழிப்பிற்கும், அவலமான அடிமை வாழ்விற்கும் பிள்ளையார்ச் சுழி போட்டுத் தொடக்கிவைத்தது 1987 ஆம் ஆண்டின் அமைதி ஒப்பந்தமும், அதன் தொடர்ச்சியான இந்திய ராணுவத்தின் ஆக்கிரமிப்பும்தான். 

இவை இரண்டும் நடைபெற்றிருக்காவிட்டால், 2009 முள்ளிவாய்க்கால் இனவழிப்பு நடைபெற்றிருக்காது, எமது விடுதலைப் போராட்டம் இந்திய சகுனிகளால் திட்டமிட்டு அழிக்கப்பட்டிருக்காது.

ஆனால், அதுதான் நடந்தது. அன்றே எமது தலைவிதியை மாற்றி எழுதிய இந்த பிராமணன் இப்போது இந்திய அரசியலில் அதிகாரத்திலிருப்பது நல்ல விடயமல்ல.

உண்மையான தமிழனை வட இந்திய பிராமணர்களோ அல்லது ஹிந்துத்துவா வெறியர்களோ விரும்பப்போவதில்லை என்றாகும்போதே, இவன் உண்மையான தமிழன் அல்லவென்பது வெளிப்பட்டு விடுகிறது.

ஜெய்சங்கர் அவர்களின் கன்னிப்பேச்சு. இந்த கேள்விகள் - பதில்கள் இவரின் சர்வதேச, அயலக கொள்கைகளை அறியலாம். 

முதலாவதாக உலகம் மாறி வரும் ஒன்றாக இருந்தாலும் மாற்றம் துரிதமாகவும் சடுதியாகவும் இருப்பதாக கூறுகின்றார். இந்த வளர்ச்சி வீதம் சற்று குறையலாம் என எதிர்வு கூறுகின்றார். 

அடுத்து, வளர்ந்து வரும் 'தேசியவாதம்' பற்று கூறுகின்றார். காரணங்கள் மாறுபட்டாலும் அவற்றுள் ஒரு செய்தி இருப்பதாக கூறுகின்றார். 

இறுதியாக, வளர்ந்து வரும் சீனாவையும் இந்தியாவையும் கூறுகின்றார்.,

இந்த மூன்றும் ஒன்றுடன் ஒன்று பிணைந்து உள்ளதாகவும் கூறுகின்றார்.  

 

  • கருத்துக்கள உறவுகள்

இவர் ஒரு தமிழ் தெரிந்த பிராமணர், அவ்வளவே. வேரொன்றும் தமிழர்களுக்கு சொல்லிக்கொள்ளும்படி இல்லை!

தற்பொழுது எம்.பி தகுதி இல்லாமல் வெளியுறவுத் துறை அமைச்சரான இவர், இன்னும் 6 மாதத்திற்குள் எம்.பி யாக தெரிவு செய்யப்பட வேண்டும். இவருக்கு  ராஜ்ய சபா எம்.பி பதவிக்கு தமிழகத்திலிருந்து  தேர்வாக, அ.தி.மு.கவிடம் பி.ஜே.பி இடம் கேட்டுள்ளது.

இவரும், இவருடைய கூட்டு அஜித் தோவாலும், ஒருங்கிணைந்து மலையாளி எம்.கே. நாராயணனிடம் வேலை செய்தவர்கள்.

s_jaishankar_ajit_doval_modi.jpg?rect=12

  • 5 months later...
On 6/8/2019 at 11:54 PM, ராசவன்னியன் said:

இவர் ஒரு தமிழ் தெரிந்த பிராமணர், அவ்வளவே. வேரொன்றும் தமிழர்களுக்கு சொல்லிக்கொள்ளும்படி இல்லை!

தற்பொழுது எம்.பி தகுதி இல்லாமல் வெளியுறவுத் துறை அமைச்சரான இவர், இன்னும் 6 மாதத்திற்குள் எம்.பி யாக தெரிவு செய்யப்பட வேண்டும். இவருக்கு  ராஜ்ய சபா எம்.பி பதவிக்கு தமிழகத்திலிருந்து  தேர்வாக, அ.தி.மு.கவிடம் பி.ஜே.பி இடம் கேட்டுள்ளது.

இவரும், இவருடைய கூட்டு அஜித் தோவாலும், ஒருங்கிணைந்து மலையாளி எம்.கே. நாராயணனிடம் வேலை செய்தவர்கள்.

செய்சங்கர் எம்பியாகவில்லை, ஆனால் இலங்கை வந்துள்ளார். பல ஆசிய நாடுகள் மற்றும் அமெரிக்காவில் பணிபுரிந்த இவரின் ஆலோசனலைகளில் இந்தியாவின் வெளியுறவு கொள்கை வரையப்பட்டு கொண்டிருக்கின்றது. 

காஸ்மீரிலும் அது சார்ந்து பாகிஸ்தானையும் வெற்றிகரமாக கையாண்டு மோடி மற்றும் அமித்தாலும் நம்பிக்கை உரியவராகி உள்ளார் எனப்படுகின்றது.   

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.