Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சதிக் கோட்பாடுகள் மீதான எமது தீராத ஆசை !

Featured Replies

இதை மற்ற திரியில் ஏற்கனவே இணைத்திருந்தேன்.

1.40 இலிருந்து பாருங்கள் கட்டடம் வெடித்து தகர்ந்து விழுவதை.

அமெரிக்க அரசு CGI ஐ புகுத்தி பல காணொளிகளை வெளியிட்டது. உண்மையான காணொளிகளை கண்டறிவது மக்கள் கடமை.

Edited by Lara

Pentagon ஐ மக்களுடன் வந்த விமானம் எதுவும் தாக்கவில்லை என இவர் உறுதிப்படுத்துகிறார். குண்டை வெடிக்க வைத்து தாக்குதல் நடத்தினார்கள்.

உண்மையை வெளியிட்டதற்காக இவரை போட்டுத்தள்ளி விட்டார்கள் என்றும் கேள்விப்பட்டேன். இவரை மட்டுமல்ல உண்மை தெரிந்த பலரை கொன்று விட்டார்கள் என்றும் கேள்விப்பட்டேன்.

விமானம் வந்து தாக்கியது போல் காட்டப்பட்டது set up.

Edited by Lara

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சதிக் கோட்பாடுகள் மீதான பலரின் விருப்புப் பற்றி நான் அறியவேண்டுமென்று விரும்பியது தற்செயலானது அல்ல. ரெட்டைக் கோபுரத் தாக்குதல் பற்றிய டி.வி.டி ஒன்றை நண்பன் ஒருவனிடமிருந்து 2003 இல் நான் பெற்றுக்கொண்டதுமுதல், இச்சதிக் கோட்பாடுகள் பற்றி அறியும் ஆர்வம் ஏற்படத் தொடங்கியது. மிக அண்மைக் காலம்வரை சதிக்கோட்பாடுகள் பற்றி, குறிப்பாக ரெட்டைக் கோபுரத் தாக்குதல் பற்றி என்னால் தெளிவான ஒரு முடிவிற்கு வர முடிந்திருக்கவில்லை. இது உண்மைதான் என்று நான் சில காலம் எண்ணியிருந்தேன். ஏனென்றால், இத்தாக்குதல் தொடர்பாகப் பலராலும் எழுப்பப்பட்ட கேள்விகளுக்குச் சரியான பதிலைப் பெற முடியாமையும், நான் தொடர்ச்சியாக இச்சதிக் கோட்பாடு உண்மையென்று நம்பி, அதற்கு வலுச் சேர்க்கும் தகவல்களைத் தேடியதனாலும், இச்சதிக் கோட்பாடுகள் ஏன் செயற்கையாக சித்தரிக்கப்பட்டிருக்கக் கூடாது என்று என்னை நானே கேட்க மறந்துவிட்டேன்.

இப்போது ஒரு தெளிவு இருக்கிறது. சதிக்கோட்பாடுகளுக்கு ஆதரவாக முன்வைக்கப்படும் காரணங்கள் தவறானவை, சோடிக்கப்பட்டவை என்பது பலராலும் ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டிருக்கின்றன.

இதுபற்றித் தொடர்ந்தும் எழுதப்போகிறேன்.

அதன் முதற்படியாக பி பி ஸி யில் சில மாதங்களுக்கு முதல் வெளிவந்த சதிக் கோட்பாடுகளை மக்கள் ஏன் விரும்புகிறார்கள் என்பதற்கான ஆய்வுக் கட்டுரையுடன் இதை ஆரம்பிக்கிறேன்.

அத்துடன், இச்சதிக் கோட்பாடுகள் தவறானவை என்பதை ஆதார பூர்வமாக நிரூபிக்கும் இணையத்தளமான "ஸ்நோப்ஸ்" இனது இணைப்பையும் இங்கே இணைக்கிறேன்.

நான் எழுதுவது எவரையும் தவறானவர்கள் என்று நிரூபிப்பதற்கல்ல, மாறாக அவர்கள் ஏன் இப்படிச் சிந்திக்கிறார்கள் என்று விளக்குவதற்கே. 

http://www.bbc.com/future/story/20180124-the-enduring-appeal-of-conspiracy-theories

https://www.snopes.com/

  • கருத்துக்கள உறவுகள்

இறுதிப்போரில் 40 ஆயிரம் வரையான அப்பாவி மக்கள் இறந்தது 
சதிக்கோட்டு பிரச்சாரம் என்றுதான் பல சிங்களவர்களும் சொல்கிறார்கள்.

யுடூப்  பேஸ்புக் போன்றவை எமது சார்பான ஆதாரங்களை 
அழித்து  வருகிறார்கள்.

சென்ற கிழமை எனது  இரண்டு  கணக்குகளை யூடுப் முடக்கி உள்ளது 
ஒன்று தீவிரவாதம் சார்பு நிலை  அண்ட் பரோபகாண்டா என்று சொல்லி உள்ளார்கள். 
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Maruthankerny said:

இறுதிப்போரில் இறுதி இரு மாதங்களில் மட்டுமே கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 40,000 என்று ஐ. நா வின் அமைப்புகள் உற்பட, இன்னும் சில அரச சார்பற்ற மனிதவுரிமை அமைப்புகள் கணக்கிட்டிருக்கின்றன. ஆகவே, இது சதிக்கோட்பாடு என்கிற சிங்களவரின் கூப்பாடு அடிபட்டுப் போய்விடுகிறது. 

சிங்களவர்மேல் வீண்பழி போட, ஐ. நா அடங்கலான அமைப்புகள் முற்படுகின்றன என்று அவர்கள் கருதினால், இலங்கை இனக்கொலையைத் தங்கு தடையின்றி நடத்துவதற்கு அவர்களின் உதவ வேண்டிய தேவை என்ன? 

ஒரு உண்மைச் சம்பவத்தை, சதிக்கோட்பாடு என்று கூறுவதன்மூலம், சதிக்கோட்பாட்டாளர்கள் செய்ய முற்படுவதெல்லாம், மக்கள் மனதில் சந்தேகங்களை விதைப்பதுதான். சந்தேககங்களை விதைத்துவிட்டால், அவர்களின் நம்பிக்கை தகர்ந்துவிடும், ஒரு கட்டத்தில் அப்படியொரு சம்பவம் நடைபெற்றதே அவர்களுக்கு மறந்துவிடும்.

மருது, எங்களை விடுங்கள். ஜேர்மனியர்களால் இரண்டாம் உலகப் போரில் கொல்லப்பட்ட ஆறு மில்லியன் யூதர்கள் பற்றி சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட வகையில் சாட்சியங்களும், தடயங்களும், புதைகுழிகளும் இருக்கின்றன. ஆனால், அப்படி ஒரு இனவழிப்பு நடைபெறவில்லை என்று சதிக் கோட்பாட்டாளர்கள் கூறுகிறார்கள். ஆனால், இதை யாருமே நம்பப் போவதில்லை, அவர்களைத்தவிர.

1 hour ago, ரஞ்சித் said:

நான் இன்னொரு திரியில் கூறியது போல் சதிக்கோட்பாடு பற்றி கூறப்படும் அனைத்தையும் நான் நம்பும் ஒருவர் கிடையாது. ஆனால் ஆராய்ந்து சிலவற்றை ஏற்றுக்கொள்ளும் தன்மை என்னிடம் உள்ளது, ஆனால் உங்கள் போன்றவர்களிடம் அது இல்லை.

ஹிட்லருக்கெதிராக யூதர்களால் ஒன்று திரட்டப்பட்ட நாடுகள் தான் பின் UN என உருவானது என்பது ஒரு காரணம் 6 மில்லியன் யூதர்கள் கொல்லப்பட்டார்கள் என்ற தீர்ப்பை பலர் ஏற்காததற்கு. இதே UN ஐ வைத்து தான் யூதர்களின் பலகால திட்டமான இஸ்ரேல் என்ற நாட்டை யூதர்கள் உருவாக்கினார்கள்.

ஹிட்லர் யூதர்களை கொல்ல முடிவெடுக்க முன்னர் முடிந்தவரை அவர்களை தமது பகுதிகளிலிருந்து வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார். 1933 இல் Haavara உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டு அவர்களை சிறிது சிறிதாக பலஸ்தீனத்திற்கு அனுப்பி வந்தார். அதே போல் யூதர்களை மடகஸ்காருக்கும் அனுப்பி வைக்க பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டார். இப்படி ஏற்கனவே யூதர்கள் பலர் வெளியேறி சென்றதாலும் எஞ்சியுள்ள யூதர்களின் கணக்கீட்டை போருக்கு முன்னரும் போருக்கு பின்னரும் நடத்திய போது அதில் 6 மில்லியன் குறைவு இருந்திருக்கவில்லை என்பதும் இன்னொரு காரணம். பலர் நம்புவது அதை விட குறைந்த தொகையிலேயே யூதர்கள் கொல்லப்பட்டார்கள் என்பது.

இறுதிப்போரில் ஒன்றரை இலட்சத்துக்கு மேல் தமிழ் மக்கள் கொல்லப்பட்டும் 40000 பேர் கொல்லப்பட்டதாக கூறும் ஐநாவையும் பலர் இங்கு நம்பத்தான் இருக்கிறார்கள்.

Edited by Lara

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Lara said:

இறுதிப்போரில் ஒன்றரை இலட்சத்துக்கு மேல் தமிழ் மக்கள் கொல்லப்பட்டும் 40000 பேர் கொல்லப்பட்டதாக கூறும் ஐநாவையும் பலர் இங்கு நம்பத்தான் இருக்கிறார்கள்.

அவசரப்பட்டு பதிலளிக்கு முன்னர் ஒருமுறை சரிபார்த்துக்கொள்ளுங்கள்.

40,000 என்பது முழு யுத்தத்திலும் கொல்லப்பட்டவர்கள் என்று சொல்லப்படவில்லை, இறுதி இரு மாதங்கள் என்று மட்டுமே சொல்லப்பட்டிருக்கிறது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கேர்மனியர்களால் ஆறு மில்லியன்கள் யூதர்கள் கொல்லப்படவில்லையென்பதோ அல்லது ஒரு யூதனுமே கொல்லப்படவில்லையென்பதோ ஏன் தவறானது என்பதுபற்றி கீழ்வரும் ஆய்வுக்குறிப்புக் குறிப்பிடுகிறது. முடிந்தவர்கள் படித்துப் பார்க்கலாம்.

https://www.snopes.com/news/2017/04/17/how-holocaust-denial-works/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ரெட்டைக் கோபுரத் தாக்குதல் பற்றி முன்னமே இஸ்ரேல் உளவுப்பிரிவினருக்குத் தகவல் தெரிந்திருந்ததினால்த்தான் அங்கே பணிபுரிந்துவந்த சுமார் 4,000 யூதர்கள் அன்று "சுகயீனம் காரணமாக" வேலைக்குச் செல்லவில்லையென்றும், இதை மிகவும் மறைவாக வைத்திருந்து, அமெரிக்காவை அரபு நாடுகளுடன் வலிந்த போர் ஒன்றிற்குள் இழுத்துவிடவே இதைச் செய்தனர் என்னும் சதிக்கோட்பாட்டினைப் பொய்யென்று நிரூபிக்கும் சான்று,

https://www.snopes.com/fact-check/absent-without-leave-2/

14 minutes ago, ரஞ்சித் said:

அவசரப்பட்டு பதிலளிக்கு முன்னர் ஒருமுறை சரிபார்த்துக்கொள்ளுங்கள்.

40,000 என்பது முழு யுத்தத்திலும் கொல்லப்பட்டவர்கள் என்று சொல்லப்படவில்லை, இறுதி இரு மாதங்கள் என்று மட்டுமே சொல்லப்பட்டிருக்கிறது.

நானும் முழு யுத்தத்திலும் என கூறவில்லை. இறுதிப்போரில் என்றே கூறியிருந்தேன். அது பொதுவாக பயன்படுத்திய பிரயோகம்.

ஐநாவும் இறுதி இரு மாதங்கள் என கூறவில்லை, இறுதி மாதங்களில் எனவே கூறியிருந்தது. 

இலங்கை அரசு போர் முடிந்த பின்னர் எஞ்சியிருந்த தடயங்களை முடிந்தவரை அழித்து விட்டு தான் ஐநாவை உள்ளே விட்டது. அதன் பின்னர் எடுத்த ஐநா கணக்கெடுப்பு தான் இந்த இறுதி மாதங்களில் 40000. அந்த இறுதி மாதங்களில் கொல்லப்பட்டவர்கள் தொகை 40000 ஐ விட அதிகம் என்பது பலருக்கும் தெரியும். அந்த இறுதி மாதங்களில் கொல்லப்பட்டார்கள் என கூறப்பட்ட தொகையை தான் இறுதிப்போரில் கொல்லப்பட்ட மக்கள் தொகை என பல நாடுகளும் கணக்கில் கொள்கிறது என்பதை அடிப்படையாக வைத்தே என் பதிலை எழுதியிருந்தேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க பாதுகாப்புத் தலைமையகமான பென்டகனைத் தாக்கியது தீவிரவாதிகள் கடத்திச்சென்ற விமானம் - 77 கிடையாது, அது ஏவுகணைதான் என்னும் சதிக் கோட்பாட்டை அக்கு வேறு ஆணிவேறாகப் பிரித்து மேயும் ஆய்வறிக்கை கீழே,
https://www.snopes.com/fact-check/911-pentagon-attack/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Lara said:

நானும் முழு யுத்தத்திலும் என கூறவில்லை. இறுதிப்போரில் என்றே கூறியிருந்தேன். அது பொதுவாக பயன்படுத்திய பிரயோகம்.

ஐநாவும் இறுதி இரு மாதங்கள் என கூறவில்லை, இறுதி மாதங்களில் எனவே கூறியிருந்தது. 

இலங்கை அரசு போர் முடிந்த பின்னர் எஞ்சியிருந்த தடயங்களை முடிந்தவரை அழித்து விட்டு தான் ஐநாவை உள்ளே விட்டது. அதன் பின்னர் எடுத்த ஐநா கணக்கெடுப்பு தான் இந்த இறுதி மாதங்களில் 40000. அந்த இறுதி மாதங்களில் கொல்லப்பட்டவர்கள் தொகை 40000 ஐ விட அதிகம் என்பது பலருக்கும் தெரியும். அந்த இறுதி மாதங்களில் கொல்லப்பட்டார்கள் என கூறப்பட்ட தொகையை தான் இறுதிப்போரில் கொல்லப்பட்ட மக்கள் தொகை என பல நாடுகளும் கணக்கில் கொள்கிறது என்பதை அடிப்படையாக வைத்தே என் பதிலை எழுதியிருந்தேன்.

கொல்லப்பட்ட மக்கள் தொகை 40,000 என்பதை நம்புபவர்கள் இருக்கிறார்கள் என்று சொல்லிவிட்டு, அதே ஐநாவை மேற்கோள் காட்டியிருக்கிறீர்கள். 

கிளிநொச்சி முல்லைத்தீவு அரச அதிபர்களின் கணக்குப்படி போர் ஆரம்பிக்குமுன்னர் வன்னி நிலப்பரப்பில் இருந்த மக்கள் தொகை சுமார் 420,000. போர் முடிந்த பின்னர் ராணுவத்தால் சுற்றி வளைக்கப்பட்டு தடுப்பு முகாம்களுக்குள் அடைக்கப்பட்டவர்கள் 280,000. ஆக சுமார் 140,000 பொதுமக்கள் காணாமல்ப் போயிருக்கிறார்கள். இந்திய கடற்படை வட கிழக்குக் கடல்களில் முற்றான முற்றுகை ஒன்றினை இட்டிருக்க, தமிழகத்திற்கு தப்பிச் செல்லும் வழிகளும் அடைபட்டிருக்க, மக்கள் வேறிடம் ஒன்றிற்கு செல்வது முற்றாகத் தடுக்கப்பட்டிருந்தது.

ஆகவே, இந்த 140,000 பொதுமக்களும் யுத்தத்தில் கொல்லப்பட்டதாகவே கருதப்படுகிறது. இதையே முன்னாள் மன்னார் ஆயர் ராயப்பு யோசேப் அவர்களும் தனது அறிக்கையில் மிகத் தெளிவாகக் கூறியிருந்தார். 

ஆக, நான் எந்தவிடத்திலும் யுத்தத்தில் கொல்லப்பட்ட மக்கள் தொகை 40,000 மட்டும்தான் என்று கூறவில்லை. இறுதிப்பகுதி என்று தெளிவாகத்தான் குறிப்பிட்டிருக்கிறேன். 

4 minutes ago, ரஞ்சித் said:

ரெட்டைக் கோபுரத் தாக்குதல் பற்றி முன்னமே இஸ்ரேல் உளவுப்பிரிவினருக்குத் தகவல் தெரிந்திருந்ததினால்த்தான் அங்கே பணிபுரிந்துவந்த சுமார் 4,000 யூதர்கள் அன்று "சுகயீனம் காரணமாக" வேலைக்குச் செல்லவில்லையென்றும், இதை மிகவும் மறைவாக வைத்திருந்து, அமெரிக்காவை அரபு நாடுகளுடன் வலிந்த போர் ஒன்றிற்குள் இழுத்துவிடவே இதைச் செய்தனர் என்னும் சதிக்கோட்பாட்டினைப் பொய்யென்று நிரூபிக்கும் சான்று,

https://www.snopes.com/fact-check/absent-without-leave-2/

FEBA5489-183A-4BF8-B784-5BBFA6E4D25F.jpg

E496C43E-51BE-4046-BFEC-79C11127B7F2.jpg

3 minutes ago, ரஞ்சித் said:

கொல்லப்பட்ட மக்கள் தொகை 40,000 என்பதை நம்புபவர்கள் இருக்கிறார்கள் என்று சொல்லிவிட்டு, அதே ஐநாவை மேற்கோள் காட்டியிருக்கிறீர்கள். 

கிளிநொச்சி முல்லைத்தீவு அரச அதிபர்களின் கணக்குப்படி போர் ஆரம்பிக்குமுன்னர் வன்னி நிலப்பரப்பில் இருந்த மக்கள் தொகை சுமார் 420,000. போர் முடிந்த பின்னர் ராணுவத்தால் சுற்றி வளைக்கப்பட்டு தடுப்பு முகாம்களுக்குள் அடைக்கப்பட்டவர்கள் 280,000. ஆக சுமார் 140,000 பொதுமக்கள் காணாமல்ப் போயிருக்கிறார்கள். இந்திய கடற்படை வட கிழக்குக் கடல்களில் முற்றான முற்றுகை ஒன்றினை இட்டிருக்க, தமிழகத்திற்கு தப்பிச் செல்லும் வழிகளும் அடைபட்டிருக்க, மக்கள் வேறிடம் ஒன்றிற்கு செல்வது முற்றாகத் தடுக்கப்பட்டிருந்தது.

ஆகவே, இந்த 140,000 பொதுமக்களும் யுத்தத்தில் கொல்லப்பட்டதாகவே கருதப்படுகிறது. இதையே முன்னாள் மன்னார் ஆயர் ராயப்பு யோசேப் அவர்களும் தனது அறிக்கையில் மிகத் தெளிவாகக் கூறியிருந்தார். 

ஆக, நான் எந்தவிடத்திலும் யுத்தத்தில் கொல்லப்பட்ட மக்கள் தொகை 40,000 மட்டும்தான் என்று கூறவில்லை. இறுதிப்பகுதி என்று தெளிவாகத்தான் குறிப்பிட்டிருக்கிறேன். 

உங்களுக்கு நான் எழுதிய தமிழ் விளங்காவிட்டால் மீண்டும் வாசியுங்கள். நான் ஐநாவை மேற்கோள் காட்டவில்லை. நீங்கள் இறுதி இரு மாதங்களில் கொல்லப்பட்டவர்கள் தொகை என ஐநா கூறியது என்பதற்கு தான் நான் இறுதி இரு மாதங்களில் என அவர்கள் கூறவில்லை, இறுதி மாதங்களில் என கூறினார்கள் என எழுதினேன்.

நீங்கள் கருதுவதற்கும் ஐநா கூறுவதற்கும் வித்தியாசம் உள்ளது. ஐநா இறுதி மாதங்களில் 40000 பேர் என கூறியது இறுதிப்போரில் கிட்டத்தட்ட அவ்வளவு பேர் தான் இறந்தார்கள் என கூறுவது போன்றது. (அதை விட ஒரு சிறு தொகையில் மட்டும் அதிகரிப்பு இருக்கலாம் என்பது போன்றது).

காரணம் இறுதிப்போரின் போது இறுதி மாதங்களில் கொல்லப்பட்ட மக்கள் தொகை தான் மிக அதிகம். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, Lara said:

FEBA5489-183A-4BF8-B784-5BBFA6E4D25F.jpg

E496C43E-51BE-4046-BFEC-79C11127B7F2.jpg

இதுகூட கட்டப்பட்ட பொய்தான், ஆதாரம் கீழே, 

Is PM staffer Benjamin Chertoff a cousin of Michael Chertoff, Secretary of the Department of Homeland Security?

As we explain in our book, it appears that they could be distant relatives. The connection, if any exists, dates back to the 19th century, before either family immigrated to the U.S. They have never met, and never spoken to one another. Michael Chertoff has never spoken with any member of the Popular Mechanics staff, nor with any member of Benjamin Chertoff's family.

The speculation concerning the supposed Chertoff connection is a good example of how conspiracy theorists often latch on to shreds of information, but get the details wrong. Ben Chertoff ran PM's research and fact-checking department at the time of the original magazine article, and conducted some reporting for the story. He was not the "senior editor," "head writer," or any of the other incorrect titles lofted by theorists. (Ben was later promoted to online editor, and recently left the magazine to pursue work as a freelance writer and producer.)

Moreover, Michael Chertoff was not secretary of Homeland Security at the time PM researched the original story. He was sworn in on Feb. 15, 2005, more than a month after the piece went to the printers.

Conspiracy theorists often present the supposed connection between Benjamin and Michael Chertoff as ipso facto proof of some sort of collaboration. But why would that be? There are nearly 30 people on the editorial staff of PM. Virtually none of them knew each other--or Ben--before coming to work here. So far, no one has explained to us how they believe a relatively junior magazine staffer could convince dozens of his colleagues to become complicit in a cover-up of one of the worst attacks in U.S. history.

40 minutes ago, ரஞ்சித் said:

உங்களுக்கு Michael Chertoff அந்நேரம் Criminal division of the department of justice இல் இருந்தார் என்பதற்கும் இச்செய்திக்கும் வித்தியாசம் தெரியாத அளவுக்கு வக்காலத்து கூடிப்போச்சு. உங்களுடன் எனது நேரம் தான் வீணாகிறது. 😭

 68C3DB62-254D-4373-8352-A19FB9464AB4.jpg

A100A127-C591-4462-AD58-86EA1638EEA7.jpg

Edited by Lara

  • கருத்துக்கள உறவுகள்

லாராவே தன் நேரத்தைப் பற்றிக் கவலை கொள்ளும் அளவுக்கு வந்து விட்டது இந்தத் திரி! இது இலுமினாற்றி, ப்றீமேசன், அமேசான் ஆகியோரின் கூட்டுச் சதியாகத் தான் இருக்க வேணும்!  😎

9 minutes ago, Justin said:

லாராவே தன் நேரத்தைப் பற்றிக் கவலை கொள்ளும் அளவுக்கு வந்து விட்டது இந்தத் திரி! இது இலுமினாற்றி, ப்றீமேசன், அமேசான் ஆகியோரின் கூட்டுச் சதியாகத் தான் இருக்க வேணும்!  😎

அப்படியல்ல, ரஞ்சித் அவருக்கு மட்டுமே அந்த பதில். 😎

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, Justin said:

லாராவே தன் நேரத்தைப் பற்றிக் கவலை கொள்ளும் அளவுக்கு வந்து விட்டது இந்தத் திரி! இது இலுமினாற்றி, ப்றீமேசன், அமேசான் ஆகியோரின் கூட்டுச் சதியாகத் தான் இருக்க வேணும்!  😎

ஜஸ்டீன் அண்ணா,

இந்த ரண களத்திலும் உங்களுக்கு கிளு கிளுப்பு கேட்குதோ😜

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

ஜஸ்டீன் அண்ணா,

இந்த ரண களத்திலும் உங்களுக்கு கிளு கிளுப்பு கேட்குதோ😜

அதில்லை, அவருக்கு நேரத்தின் அருமை தெரிந்து விட்டதாக நினைத்துக் குதூகலம் தான்! உடனே மறைந்து விட்டது! 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.