Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நீராவியடி பிள்ளையார் ஆலய விவகாரம் ;முல்லைதீவில் மனோ சில அதிரடி தீர்மானங்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நீராவியடி பிள்ளையார் ஆலய விவகாரம் ;முல்லைதீவில் மனோ சில அதிரடி தீர்மானங்கள்

முல்லைதீவு பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய விவகாரம் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இன்றைய தினம் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

20190610034754_IMG_7168.JPG

இந்து சமய அலுவல்கள் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தலைமையில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சாள்ஸ் நிர்மலநாதன் , சிவசக்தி ஆனந்தன்,யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் நீராவியடிப் பிள்ளையார் ஆலய நிர்வாகத்தினர் நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் விகாரை அமைத்துள்ள பௌத்த பிக்கு மற்றும் முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டிருந்தனர்.

சில மணிநேரம் இடம்பெற்ற கலந்துரையாடலில் சில தீர்மானங்கள் அமைச்சரால் எடுக்கப்பட்டுள்ளன. 

அதாவது நீதிமன்றத்தால் ஏற்கனவே வழங்கப்பட்டிருக்கின்ற அந்த தீர்ப்பை இரண்டு தரப்பும் மதித்து செயற்படுமாறும் அங்கே நீதிமன்ற தீர்ப்புக்கு அமைவாக வேலை செய்பவர்களை பொலிஸார் இடையூறு செய்யக்கூடாது எனவும், அதே போன்று நீதிமன்ற தீர்ப்பை மதிக்காது அனுமதிகள் எதுவும் பெற்றுக்கொள்ளாது அபிருத்தி வேலை செய்கின்ற பிக்கு தரப்பினரோ அல்லது பிள்ளையார் ஆலய தரப்பினரோ இருந்தால்  அவர்கள் மீது பொலிஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும், எனவும் பொலிஸார் பக்கச்சார்பாக இந்த விடயத்திலே செயற்படாது நீதியை நிலை நாட்ட வேண்டும் என அமைச்சரால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.

20190610041016_IMG_7177.JPG

 அதைவிட மாவட்ட செயலாளர் மற்றும் பொலிஸார் மற்றும் பிரதேச சபை பிரதேச செயலகம் இணைந்து தற்போது வரை அந்த குறித்த சர்ச்சைக்குரிய நீராவியடிப் பிள்ளையார் ஆலய பகுதியில் நடைபெற்று வருகின்ற வேலைகள் தொடர்பாகவும் தற்போது வரை எவ்வாறான கட்டடங்கள் எவ்வாறாண நிர்மாணங்கள் இடம்பெற்றிருக்கின்றன என்பது தொடர்பாக  காணொளி பதிவு ஒன்றை பதிந்து ஆவணமாக வைத்துக்கொள்ளுமாறும் அறிக்கை ஒன்றை தயார் படுத்தி வைத்துக்கொள்ளுமாறும் பணிக்கப்பட்டது .

மேலும் தற்போது இந்த ஆலய விவகாரம் தொடர்பாக மாவட்ட நீதிமன்றால் வழங்கப்பட்டுள்ள தீர்ப்புக்கு எதிராக  மேல் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க பட்டால் அங்கே இந்த பிள்ளையார் ஆலய விவகாரம் தொடர்பாக  தமது அமைச்சால் பிள்ளையார் ஆலயம் தொடர்பான ஆவணங்கள் ஆராயப்பட்டு அதில் உள்ள உண்மை நிலைமைகளின் படி பிள்ளையார் ஆலயம் சார்பாக தமது அமைச்சு நீதிமன்றத்தில் தமது நியாயத்தையும் தெரிவிக்கும் எனவும் தெரிவித்தார்.

மேலும் பிள்ளையார் ஆலய தரப்பினர் உரிய திணைக்களங்களின் அனுமதி களோடு இந்த பிள்ளையார் ஆலய பகுதியில் கட்டுமானங்களை மேற்கொள்ளும் போது தமது அமைச்சும் அதற்கான நிதி உதவிகளை வழங்கும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

20190610035051_IMG_7170.JPG

மேலும் பௌத்தபிக்குவிடமும் பொலிஸாரிடமும் வேண்டுகோள் விடுத்த அமைச்சர் முல்லைத்தீவு மாவட்ட மக்கள் யுத்தத்தால் பல துயரங்களை சந்தித்த மக்கள் இந்த மக்களை மீண்டும் மீண்டும் துன்பப்படுத்தும் செயற்பாடுகளில் ஈடுபட வேண்டாம் எனவும் அந்த மக்கள் தாமும் இலங்கை மக்கள் என ஏற்றுக் கொள்ளும் வகையில் நடந்து கொள்ளுமாறும் அதற்கேற்ற வகையில் பொலிஸாரை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் மீண்டும் மீண்டும் இந்த மக்களிடத்தில் பிரிவினையை தூண்டும் விதமாக செயற்பட வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டார்.

இந்த சந்திப்புக்கு முன்னதாக நீராவியடிப் பிள்ளையார் ஆலய பகுதிக்கு சென்ற அமைச்சர் மனோ கணேசன் தலைமையிலான குழுவினர் பௌத்த பிக்குவுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டதோடு அங்கே இருக்கின்ற பௌத்த ஆலயம் மற்றும் பிள்ளையார் ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொண்டிருந்தனர்.

http://www.virakesari.lk/article/57954

மனோ கணேசன் தலைமையின் கீழ் இலங்கை வாழ் தமிழ் கட்சிகள், முஸ்லீம் கட்சிகள் இணைந்தால் மக்களுக்கு சில உரிமைகள் மீளக்கிடைக்கும் , மேலும் உரிமைகள் இழக்காமல் இருக்கும் என நம்பத்தோன்றுகிறது. 

இந்த நிகழ்வு மட்டுமல்ல பல இவரின் செயல்கள், அரசில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் இவரிடம் ஆளுமை, சாமர்த்தியம், சிங்கள இனவாதிகளை புரிந்து காய்நடத்தும் திறமை உள்ளது. 

2 hours ago, ampanai said:

மனோகணேசன் இங்கு ஒன்றையும் வெட்டிப்புடுங்கவில்லை!
என்ன நடக்கபோறது என்டு பொறுத்திருந்து பாருங்கோ!

கின்னியாவில் (வெந்நீரூற்றுக்கு) மாபெரும் பௌத்த விகாரை சட்டவிரோதமா கட்டி முடிச்சிருக்காங்க. அது அகற்றப்பட வேண்டியது. ஆனா மனோகணேசன் அதுக்கு அங்கீகாரம் வழங்கிருக்கார்.

கின்னியாவில் (வெந்நீரூற்றுக்கு) அருகில் பிள்ளையார் கோவில் இருந்தது. அதை சிங்கள பிக்கு வெறியர்கள் உடைத்துவிட்டார்கள். அது மீள கட்டப்பட வேண்டும். ஆனா மனோகணேசன் அதை அந்த இடத்துல கட்டாம வேறொங்கோ கட்டலாம் என்டு சிங்கள பிக்கு வெறியர்களுக்கு சார்பா கதைச்சிருக்கார்.

கின்னியாவில் (வெந்நீரூற்றுக்கு) ஒருபக்கமா கொஞ்சம் தள்ளி ஒரு சிவன் கோவிலும் சிறு மண்டபமும் உள்ளது. அதுக்கு பெயிண்ட் அடிக்க மனோகணேசன் அமைச்சால் காசு தாறன் என்று சொல்லிருக்கார்.

இதெல்லாம் ஒரு நியாயமான தீர்வுகள் இல்லை. இப்படியா அநியாயமான தீர்வுகளுக்கு தான் மனோகணேஷனால் வேலை செய்ய முடியும்.

அதனால, மனோகணேசன் இங்கு ஒன்றையும் வெட்டிப்புடுங்கவில்லை! அதற்கான முயற்சியையும் எடுக்கல.

முல்லைத்தீவுல அந்த பௌத்த விகாரை முழுமையா அகற்றபடோணும். அதை பற்றி மனோகணேசன் கதைக்கல. அங்கும் பிள்ளையார் கோவில் நிலத்தை ஆக்கிரமித்துள்ள அந்த சட்டவிரோத விகாரைக்கு அங்கீகாரம் கொடுக்கும் விதத்துல தான் மனோகணேஷான்ட முயற்சிகள் இருக்கு,

இப்பிடியா தமிழின ஆக்கிரமிப்புக்களுக்கு துணையாக மனோகணேசன் செய்யும் செப்படி வித்தைகளை பாராட்டவும் சிலர் இருக்கத்தான் செய்யினம்.

6 hours ago, ampanai said:

சிங்களவர்கள் இலங்கையில் வாழும் ஒரு இனம். அவர்கள் வாழும் நாட்டில் அவர்கள் பெரும்பான்மை இனமாக இருந்தாலும், அவர்களுக்குள் வாழும் சிறுபான்மை இனமாக தமிழர்களும், தமிழ் பேசும் இஸ்லாமியர்களும் வாழுகின்றனர்.

சிங்களவர்களுக்கு அருகாமையில் அண்ணளவாக ஆறு கோடி தமிழர்கள் வாழுகின்றார்கள். நாளைக்கு தமிழகம் பிரியலாம் என்ற பயம், பிரிந்தால் தமக்கு ஆபத்து என்ற பயம் சிங்கவர்களுக்கு உண்டு. மதத்தால் ஒன்றுபட்ட இஸ்லாமியர்கள் உலகளவில் அதிக மக்களை கொண்ட இனம். ஒப்பீட்டளவில், மதத்தால் ஒன்றுபட்ட இனம். 

இன்றுள்ள தமிழர் அரசியல்  நிலைமையுள், எமக்குள் சிங்கள மக்களுக்கு எங்கள் தேவையே புரிய வைக்க கூடிய தலைமையும் சிங்களவர்கள் நம்பக்கூடிய தலைமையும்  தேவை. எமது மண் அபகரிப்பை தடுக்க கூடிய தலைமை தேவை. எமது மக்களின் வாழ்வாதாரத்தை மீள் சீரமைக்க கூடிய தலைமை தேவை. அப்பொழுதான் நாம் அடுத்த கட்டத்திற்கு நகர முடியும்.  
 
  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Rajesh said:

மனோகணேசன் இங்கு ஒன்றையும் வெட்டிப்புடுங்கவில்லை!
என்ன நடக்கபோறது என்டு பொறுத்திருந்து பாருங்கோ!

கின்னியாவில் (வெந்நீரூற்றுக்கு) மாபெரும் பௌத்த விகாரை சட்டவிரோதமா கட்டி முடிச்சிருக்காங்க. அது அகற்றப்பட வேண்டியது. ஆனா மனோகணேசன் அதுக்கு அங்கீகாரம் வழங்கிருக்கார்.

கின்னியாவில் (வெந்நீரூற்றுக்கு) அருகில் பிள்ளையார் கோவில் இருந்தது. அதை சிங்கள பிக்கு வெறியர்கள் உடைத்துவிட்டார்கள். அது மீள கட்டப்பட வேண்டும். ஆனா மனோகணேசன் அதை அந்த இடத்துல கட்டாம வேறொங்கோ கட்டலாம் என்டு சிங்கள பிக்கு வெறியர்களுக்கு சார்பா கதைச்சிருக்கார்.

கின்னியாவில் (வெந்நீரூற்றுக்கு) ஒருபக்கமா கொஞ்சம் தள்ளி ஒரு சிவன் கோவிலும் சிறு மண்டபமும் உள்ளது. அதுக்கு பெயிண்ட் அடிக்க மனோகணேசன் அமைச்சால் காசு தாறன் என்று சொல்லிருக்கார்.

இதெல்லாம் ஒரு நியாயமான தீர்வுகள் இல்லை. இப்படியா அநியாயமான தீர்வுகளுக்கு தான் மனோகணேஷனால் வேலை செய்ய முடியும்.

அதனால, மனோகணேசன் இங்கு ஒன்றையும் வெட்டிப்புடுங்கவில்லை! அதற்கான முயற்சியையும் எடுக்கல.

முல்லைத்தீவுல அந்த பௌத்த விகாரை முழுமையா அகற்றபடோணும். அதை பற்றி மனோகணேசன் கதைக்கல. அங்கும் பிள்ளையார் கோவில் நிலத்தை ஆக்கிரமித்துள்ள அந்த சட்டவிரோத விகாரைக்கு அங்கீகாரம் கொடுக்கும் விதத்துல தான் மனோகணேஷான்ட முயற்சிகள் இருக்கு,

இப்பிடியா தமிழின ஆக்கிரமிப்புக்களுக்கு துணையாக மனோகணேசன் செய்யும் செப்படி வித்தைகளை பாராட்டவும் சிலர் இருக்கத்தான் செய்யினம்.

சரியாக சொன்னீர்கள் சகோ,

சட்டவிரோதமாக கட்டப்பட்ட 2 விகாரைகளுக்கும் அங்கீகாரம் வழங்கப்படுகிறது.

On 6/11/2019 at 5:01 AM, Rajesh said:

100க்கு 100 உண்மை!

On 6/11/2019 at 5:01 AM, Rajesh said:

அதனால, மனோகணேசன் இங்கு ஒன்றையும் வெட்டிப்புடுங்கவில்லை! அதற்கான முயற்சியையும் எடுக்கல.

அமைச்சு நாற்காலிக்கு திட்டமிட்டு இரவுபகலா மனோ செயற்பட்டது போல ஏனைய விடயங்களில் செயற்படுவதில்லை.

மிகமிகச் சிறுபிள்ளைத்தனமான வேலைகளையே இதுவரை மனோ கணேஷனால் ஒரு அமைச்சராக சாதிக்கக் கூடியதாக இருந்துள்ளது.

அண்மைய திருகோணமலை முல்லைத்தீவு பிரச்சினைகளில் தலையிட்ட மனோ தமிழர் நலன்களுக்கு எதிரான "அதிரடி" நடவடிக்கைகளையே செய்துள்ளார். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.