Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டைகர் வானொலியின் வெள்ளி மாலை பேட்டி பக்கம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜமுனா பேட்டி அருமை வாழத்துக்கள் இதை உறுப்பினர் மட்டும் பகுதியில் இட்டதானால் குறிப்பிட்ட சிலர் மட்டும் பார்பார்கள் ஆகவே பொது பகுதி ஒன்றில் இதை அட்டால் நன்றாக இருக்கும் உதசூரியன் பத்திரிகை ஆசிரியர் யாழ்ழிற்க்கு அழித்த சிறப்பு பேட்டி என்று போட்டு போடவும்...

நன்றிகள்...

  • 3 weeks later...
  • Replies 160
  • Views 16.6k
  • Created
  • Last Reply

காய்ச்சல் காரணமாக யாழ் வரமுடியாத ஜம்மு பேட்டி எடுக்கும் பொறுப்பை என்னிடம் தந்துள்ளமையால் ,

இன்றைய பேட்டிக்காக நாம் அழைத்து வந்திருப்பவர் யாழில் கவிமழை பொழிந்து எல்லோரையும் நனைய வைக்கும் நம்ம விகடகவி.

vikadakaviuu3.jpg

சிறிது நேரத்தின் பின் பேட்டி ஆரம்பமாகும்.

வணக்கம் விகடகவி பல சிரமங்களுக்கு மத்தியிலும் எமது அழைப்பை ஏற்று வந்ததிற்கு டைகர் வானொலி மற்றும் டைகர் குடும்பம் சார்பாக நன்றி கலந்த வணக்கத்தை தெறிவித்து கொண்டு பேட்டிக்குள் நுழைகின்றோம்

வணக்கம் விகடகவி அவர்களே

உங்களை பற்றிய சிறிய அறிமுகத்தை எங்கள் நேயர்களுக்கு கூறமுடியுமா??

1)யாழில் நீங்கள் எவ்வாறு இணைந்தீர்கள்? "விகடகவி" என பெயர் இட்டமைக்கான சிறப்புக்காரணங்கள் ஏதாவது உள்ளனவா?

2)அடுத்து யாழில் உறுப்பினர்கள் சுயகட்டுப்பாடு போடுகின்றனர். அவை பற்றி உங்கள் நினைப்பு என்ன?யாழில் சுய ஆக்கங்கள் பிறர் ஆக்கங்கள் இவற்றை தனித்தனியாக பிரிப்பது அவசியம் தானா? யாழில் புது உறுப்பினர்களுக்கு பரிந்துரை செய்தல் பற்றி என்ன நினைக்கிறீங்கள்?

3)அடுத்த முக்கிய விடயம் யாழில் அரட்டை பற்றி பல்வேறு குற்றசாட்டுகளை சிலர் சுமத்தி அரட்டையை தடை செய்ய வேண்டும் என்று அரட்டை அடிக்கிறார்கள் இவர்களுக்கு உங்கள் பதில்?அதை பற்றிய உங்கள் கருத்து என்ன?அத்துடன் டைகர்பமிலியை பற்றி பல விமர்சனங்கள் இந்த பமிலியை பற்றிய உங்கள் கருத்து என்ன?

4)யாழில் நீங்கள் இதுவரை எத்தனை பேரை சந்தித்து இருக்கிறீங்க?இனி யாரை சந்திக்க ஆசைப்படுகிறீர்கள்?யாழில் நெருங்கிய உறவு என்று சொல்ல கூடிய வகையில் யாராவது இருக்கின்றார்களா? உங்களுடன் முதன்முதலிம் உரையாடிவர் யார் என்று உங்களுக்கு ஞாபகம் இருந்தா அவரை பற்றிய சில வரிகள்?

5)யாழில் தேசத்துக்கு அவதூரு விளைவிக்கும் வகையில் சிலரின் கருத்துகளும்,செயற்பாடுகளும் இருகின்றன இவர்கள் யாழின் வளர்ச்சிக்கு தேவைதானா இதை பற்றிய உங்கள் கருத்து என்ன?

6)காதலை பற்றி எல்லாரும் என்னவோ கதைக்கீனம்(ஜம்மு பேபியை தவிர)காதலை பற்றிய உங்கள் கண்ணோட்டம் என்ன?யாரையாவது காதலித்த அநுபவம் இருந்தா எங்களுடன் பகிர்ந்து கொள்ளமுடியுமா?யார் அந்த புண்ணியவதி யார் என்று எங்களுக்கு சொல்லலாமே? நீங்கள் திருமணமானவரா? உங்கள் திருமணம் காதல் திருமணமா அல்லது நிச்சயிக்கப்பட்ட திருமணமா?இது வரை உங்களுக்கு எத்தனை பேர் காதல் கடிதம் தந்தவை என்பதையும் எங்கள் நேயர்களுடன் பகிர்ந்து கொள்ளமுடியுமா? உங்கள் காலாவதியான காதலைப்பற்றிய அனுபவம் என்ன?

7)வாழ்கையை நீங்கள் எவ்வாறு எடுத்து கொள்வீர்கள்?வாழ்கையில் மறக்கமுடியாத நாள் என்று ஏதாவது இருந்தால் எங்களுடன் பகிர்ந்து கொள்ளமுடியுமா?வாழ்கையில் இதுவரை சாதித்தது என்ன? இனியும் சாதிக்க போவது என்ன?

8)உங்கள் பள்ளி நாட்கள் அதில் நீங்கள் நண்பர்களுடன் சேர்ந்து செய்த குழப்படிகள் வாங்கிய அடிகள் என்பவற்றை எங்கள் நேயர்களுடன் பகிர்ந்து கொள்ளமுடியுமா?

சிறிய இடைவேளைக்கு பின் பேட்டி தொடரும்.

Edited by வெண்ணிலா

பேட்டிக்கு பிரதான அநுசரணையாளர் -

1)யாழ்கவி ஓடியோ அன்ட் வீடியோ

2)சோனா பியூட்டி பாலர்

3)குட்டிதம்பி நகைகடை

4)யாழ்ரவி சைபர் கவே

5) சகி தங்கமாளிகை

6)மாப்பிள்ளை புத்தககடை

7)தூயா துணிகடை

8)ஜனனி சுரித்தாகடை

9)குமாரசுவாமி வயின்சொப்

10)பொன்னி ஸ்பைஸ்

பேட்டிக்கு இணை அணுசரணை

1)யானைவில் குளிர்பானம்

2)சித்து பூகடை

3)இவர்களுடன் ஆத்மீக ஒளிகிடைக்க நாடவேண்டிய ஒரெ இடம் சத்திஞானந்த குருஜிபுத்து

மக்கள் தொடர்பாடல்

1)விசால்

2)லீசன்

ஊடக அநுசரனை

1)நெடுக்ஸ்

வானொலிப்பேட்டி எடுத்தவருக்கு மேக்கப்

1)சோனாபியூட்டிபாலர்

பேட்டிக்கு பிரதான ஊடக அனுசரனை வழங்குவோர்

டைகர் வானொலியின் உத்தியோக பூர்வ இணையத்தளம்

http://www.yarltigerfm.tk

இடைவேளையின் பின் பேட்டி மீண்டும் தொடர்கிறது

Edited by வெண்ணிலா

9)நீங்கள் தமீழிழத்தில் பிறந்ததனீங்க என்று நினைக்கிறேன் தமீழிழத்தில் உங்களைம் மிகவும் கவர்ந்தது என்ன?கொடிய யுத்தம் காரணமாக உங்களை மிகவும் பாதித்த சந்தர்ப்பம் என்று சொல்லுமளவிற்கு ஏதாவது இருக்குதா?தற்போது நீங்கள் தமீழத்தில் தான் இருகிறீங்களா அல்லது வேறோரு நாட்டில் இருகின்றீர்களா?

10)மனிதனாக பிறந்தவர்களுக்கு கோபம் அதிகமாக வரும் என்று சொல்கிறார்கள் உங்களுக்கு கோபம் அடிக்கடி வருமா ? அவ்வாறான நேரங்களில் உங்கள் மனநிலை எவ்வாறிருக்கும்?

11)தமீழிழ தேசிய போராட்டம் ஒரு வலுவான நிலைக்கு வந்துள்ளது இந்த சந்தர்பத்தில் புல தமிழர்கள் என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் எதிபார்கிறீர்கள்?தேச விரோத செயல்களை செய்யும் கும்பல்களை பற்றிய உங்கள் கருத்து என்ன?இவர்களால் எமது தேசிய போராட்டத்தில் தடை ஏற்படும் என்று நினைக்கிறீங்களா? யாழ்கள உறவுகளின் நேசக்கர அமைப்பு பற்றி என்ன நினைக்கிறீங்க?

12)பல சிரமங்களின் மத்தியில் யாழ் காலக்கண்ணாடியை தொகுத்து வழங்கிய போதும் பலரது எதிர்பார்ப்பு நீங்கள் கவி வடிவில் தொகுத்தளிப்பீர்களென. ஆனால் அவர்களது எதிர்பார்ப்பு ஏமாற்றமாகியது. உறவுகள் அவ்வாறு ஏமாறியதனால் நீங்கள் என்ன நினைத்தீர்கள்?

13)மாப்பி என அழைக்கப்பட்டு தற்போது கலகலப்பாக உலா வந்துகொண்டிருக்கும் கலைஞன் சமீபகாலமாக பற்பல தலைப்பின் கீழ் வாக்கெடுப்புக்களை நடாத்தி இருக்கின்றார். அது பற்றி உங்கள் எண்ணக்கரு என்ன? அவர் போதிமர நிழலின் கீழ் போதிப்பது பற்றி என்ன நினைக்கிறீங்கள்?

14)பல காதல் கவிதைகளை எழுதுவதோடு கவிதை அந்தாதிக்குள்ளும் பல கவிகளை வடிக்கும் நீங்கள் ஒரேயொரு கதை எழுதி அதன் பின் கதையே எழுதாமல் இருக்கிறீங்க? ஏன்? உங்கள் கதைக்கருவை பிடிக்கவில்லை என யாராவது எதிர்த்தார்களா? அல்லது வேறு ஏதும் காரணங்களா?

15)உங்கள் கவிகளுக்கு நீங்களே மெட்டமைத்து குரல் வடிவில் நமக்கு அளிக்கின்றீர்களே. நீங்கள் ஒரு பாடகனா? மேடைகளில் பாடிய அனுபவங்கள் ஏதும் உண்டா?

16)Twenty20 உலக கோப்பை விளையாட்டு தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற

விகடகவி இன்னும் கொஞ்ச நேரத்தில் கலையகத்துக்கு வந்து பேட்டி அளிப்பார் காணதவறாதீர்கள்

1)யாழில் நீங்கள் எவ்வாறு இணைந்தீர்கள்? "விகடகவி" என பெயர் இட்டமைக்கான சிறப்புக்காரணங்கள் ஏதாவது உள்ளனவா?

எல்லாம் "தல"யோட வழியிலே வந்ததுதான்..

விகடகவி சிறப்பான பெயர் சிறந்த மனிதனுக்கு சூட்டப்படுவது பெயருக்குச் சிறப்புத்தானே..

2)அடுத்து யாழில் உறுப்பினர்கள் சுயகட்டுப்பாடு போடுகின்றனர். அவை பற்றி உங்கள் நினைப்பு என்ன?யாழில் சுய ஆக்கங்கள் பிறர் ஆக்கங்கள் இவற்றை தனித்தனியாக பிரிப்பது அவசியம் தானா? யாழில் புது உறுப்பினர்களுக்கு பரிந்துரை செய்தல் பற்றி என்ன நினைக்கிறீங்கள்?

சுயகட்டுப்பாடு கலாச்சாரத்திற்கு தேவை..கற்பனைக்குத் தேவையல்ல.. பல பெயர் அக்கங்களை நோக்குவதை மனதில் நிலைநிறுத்தி எல்லோரும் சிறப்பாகவும் நன்றாகவும் எழுத வேண்டும்..

சுயஆக்கம் என்ற பெயரில் அலுப்பைத்தரவல்ல அரட்டைகளைத் தவிர்த்தால் யாழ் மென்மேலும் மிளிரும்..

நல்ல உறவுகளை பரிந்துரை செய்வதில் தவறில்லை..பரிந்துரை செய்யும் நபரைப் பொறுத்து மற்றவரை நிர்வாகம் இலகுவாக எடை போடலாம்..

3)அடுத்த முக்கிய விடயம் யாழில் அரட்டை பற்றி பல்வேறு குற்றசாட்டுகளை சிலர் சுமத்தி அரட்டையை தடை செய்ய வேண்டும் என்று அரட்டை அடிக்கிறார்கள் இவர்களுக்கு உங்கள் பதில்?அதை பற்றிய உங்கள் கருத்து என்ன?அத்துடன் டைகர்பமிலியை பற்றி பல விமர்சனங்கள் இந்த பமிலியை பற்றிய உங்கள் கருத்து என்ன?

அரட்டை வேலையில்லாதவர்களின் வேலை அதைப்பற்றி ஏன் அதிகம் பேசுவான்.

அரட்டையை நான் கண்டு கொள்வதில்லை.. உதாரணமாக.. டைகர் குடும்பத்தையே அவ்வளவு பரிச்சயமில்லை எனக்கு..

4)யாழில் நீங்கள் இதுவரை எத்தனை பேரை சந்தித்து இருக்கிறீங்க?இனி யாரை சந்திக்க ஆசைப்படுகிறீர்கள்?யாழில் நெருங்கிய உறவு என்று சொல்ல கூடிய வகையில் யாராவது இருக்கின்றார்களா? உங்களுடன் முதன்முதலிம் உரையாடிவர் யார் என்று உங்களுக்கு ஞாபகம் இருந்தா அவரை பற்றிய சில வரிகள்?

நிறைய உறவுகளை சந்தித்துள்ளேன்.. மோகன் அண்ணா..மதன்..ரசிகை..மணி..ஆகியோர் குறிப்பிடத்தக்கோர்.

வன்னிமைந்தனை சந்திக்க ஆசை.. நல்ல உணர்வாளன்.. யாழில் நெருங்கிய உறவு தயா

முதன்முதலில்..உரையாடியது நினைவில்லை ..

5)யாழில் தேசத்துக்கு அவதூரு விளைவிக்கும் வகையில் சிலரின் கருத்துகளும்இசெயற்பாடுகளும

9)நீங்கள் தமீழிழத்தில் பிறந்ததனீங்க என்று நினைக்கிறேன் தமீழிழத்தில் உங்களைம் மிகவும் கவர்ந்தது என்ன?கொடிய யுத்தம் காரணமாக உங்களை மிகவும் பாதித்த சந்தர்ப்பம் என்று சொல்லுமளவிற்கு ஏதாவது இருக்குதா?தற்போது நீங்கள் தமீழத்தில் தான் இருகிறீங்களா அல்லது வேறோரு நாட்டில் இருகின்றீர்களா?

தாய்மண்வாசம்..கலந்த இயற்கையான காற்றும்.. என் அழகான கிராமமும்..

95 இடப்பெயர்வின்போது.. எல்லோரும் கிளாலிக்கு செல்ல நானும் அம்மாவும் (அம்மாவுக்கு சரியான காய்ச்சல்) அப்பா வீட்டைவிட்டு வரமாட்டன் என்று சொல்லிவிட்டார்.. நாங்கள் போகவேண்டிய சூழ்நிலை.. மிகுந்த சிரமப்பட்டு கிளாலி வந்தபோது ஒரே காற்றும் மழையும் எங்களுக்கு உரு படகும் கிடைக்கவில்லை அம்மாவின் காய்ச்சல் அதிகமாக.. சேற்றில் அம்மாவை தவிச்சக்கரவண்டியில் வைத்து பள்ளத்திலும் புட்டியிலும்.. உருட்டிக்கொண்டு திரும்ப வீடு வந்த அந்நாள் மிகக்கொடுமை.... நாங்கள் பயந்தாப்போல் இராணுவத்திடம் பிடிபட்டு .... எல்லாமே வலிகள்தான் அந்தக்காலகட்டங்கள்..

10)மனிதனாக பிறந்தவர்களுக்கு கோபம் அதிகமாக வரும் என்று சொல்கிறார்கள் உங்களுக்கு கோபம் அடிக்கடி வருமா ? அவ்வாறான நேரங்களில் உங்கள் மனநிலை எவ்வாறிருக்கும்?

கோபம் அதிகமாக வரும்.. அந்த நிலமைகளில் என் புத்தி மங்கிவிடும்.. இப்போது கோபத்தோடு சண்டையிட்டு அமைதியாக மாறக்கற்றுக்கொண்டேன்..

11)தமீழிழ தேசிய போராட்டம் ஒரு வலுவான நிலைக்கு வந்துள்ளது இந்த சந்தர்பத்தில் புல தமிழர்கள் என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் எதிபார்கிறீர்கள்?தேச விரோத செயல்களை செய்யும் கும்பல்களை பற்றிய உங்கள் கருத்து என்ன?இவர்களால் எமது தேசிய போராட்டத்தில் தடை ஏற்படும் என்று நினைக்கிறீங்களா? யாழ்கள உறவுகளின் நேசக்கர அமைப்பு பற்றி என்ன நினைக்கிறீங்க?

புலவர்கள் தம் புலமையால் போராளிகளுக்கும் போராட வேண்டிய தேவைப்பாட்டை ஏனையவர்களுக்கும் பாட்டால் இயம்பக்கூடிய உணர்வுபூர'வமான ஆக்கங்களை பிரசவிக்க வேண்டும்.

தேசவிரோதிகள் திருத்தப்படவேண்டும்..அதுதான் அவர்களுக்கு பெரிய தண்டனை..

தடை அதிகமாக ஏற்பட்டுள்ளது..அவர்கள் தம்பிழைகளை உணரவேண்டும்.. அவர்கள் எம் தாய் வயிற்றில் பிறந்து ஏன் இப்படி வெறி நாய்களாக அலைகிறார்கள் என்பது..

அவர்கள் மனநிலை சாதரணநிலைக்கு வந்தால் மட்டுமே அவர்களுக்கு புரியும்.. பாதிபேர் பயம் காரணமாகவே நிறைய குற்றங்களை புரிந்து கொண்டு போகிறார்கள்..

12)பல சிரமங்களின் மத்தியில் யாழ் காலக்கண்ணாடியை தொகுத்து வழங்கிய போதும் பலரது எதிர்பார்ப்பு நீங்கள் கவி வடிவில் தொகுத்தளிப்பீர்களென. ஆனால் அவர்களது எதிர்பார்ப்பு ஏமாற்றமாகியது. உறவுகள் அவ்வாறு ஏமாறியதனால் நீங்கள் என்ன நினைத்தீர்கள்?

பாவம் உறவுகளென்று.. கவலை வேண்டாம் இன்னொருதடவை பொறுப்பை ஏற்று சிறப்பாக செய்வேன்..

13)மாப்பி என அழைக்கப்பட்டு தற்போது கலகலப்பாக உலா வந்துகொண்டிருக்கும் கலைஞன் சமீபகாலமாக பற்பல தலைப்பின் கீழ் வாக்கெடுப்புக்களை நடாத்தி இருக்கின்றார். அது பற்றி உங்கள் எண்ணக்கரு என்ன? அவர் போதிமர நிழலின் கீழ் போதிப்பது பற்றி என்ன நினைக்கிறீங்கள்?

கலைஞன் பேருக்கேற்ற திறமைசாலி..

நான் வாக்கெடுப்புகளில் கலந்து கொள்வதில்லை.. சொல்லப்போனால் என்ன நடக்கிதென்றே தெரியாது.. எங்கள் நேரத்தை தேவையின்றித் தேயவிடக்கூடாது..கலைஞனுக்கு சீக்கிரம் திருமணம் நடக்க வேண்டும் புத்தர் அரசமரமேறிவிட்டால்..பொறுப்பு வந்துவிடும்.

14)பல காதல் கவிதைகளை எழுதுவதோடு கவிதை அந்தாதிக்குள்ளும் பல கவிகளை வடிக்கும் நீங்கள் ஒரேயொரு கதை எழுதி அதன் பின் கதையே எழுதாமல் இருக்கிறீங்க? ஏன்? உங்கள் கதைக்கருவை பிடிக்கவில்லை என யாராவது எதிர்த்தார்களா? அல்லது வேறு ஏதும் காரணங்களா?

என்ன கேள்வி கேட்டுவிட்டீர்கள்.. என்னிடம் 40-50 கதை அற்றும் பல நாவல்கள் நானே எழுதியது உள்ளது..

தட்டச்சில் செலவு செய்ய நேரத்தட்டுப்பாடு எல்லாம் கொஞ்சம் நீளமான கதை.. ஜம்மு உதவி செய்தால் போடுவோம்..

உங்கள் கவிகளுக்கு நீங்களே மெட்டமைத்து குரல் வடிவில் நமக்கு அளிக்கின்றீர்களே. நீங்கள் ஒரு பாடகனா? மேடைகளில் பாடிய அனுபவங்கள் ஏதும் உண்டா?

பாடி இருக்கிறேன்..இப்போது ஆர்வம் குறைவு..சும்மா குளியலறையில் கத்துவதை உசுப்பேத்தி.. மற்றவர்களை வெறுப்பேற்றாதீர்கள்

16)வுறநவெல20 உலக கோப்பை விளையாட்டு தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற

இந்தப் பேட்டிப்பக்கம் தொடர்பான கருத்துக்களை யாழ் நாற்சந்தி பிரிவில் உள்ள டைகர் வானொலியின் வெள்ளி மாலை போட்டி பக்கம் - கருத்துக்கள் என்னும் தலைப்பின் கீழ் இணைக்கவும்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=21921

எங்களுக்காக நேரத்தை ஒதுக்கி தந்த விகடகவிக்கு டைகர்வானொலி மற்றும் டைகர் குடும்பம் சார்பாக நன்றிகளும் வாழ்துகளும்.

நேயர்கள் இதுவரை நடந்த பேட்டியை கண்டு இரசித்து இருப்பீர்கள் என்று நினைக்கிறேன் இத்துடன் உங்களிடம் இருந்து விடைபெற்று மீண்டும் மற்றுமொரு இனிய வெள்ளி பொழுதில் உங்கள் அனைவரையும் சந்திபோம்

நன்றி நேயர்களே

டைகர்பமிலி

டைகர்வானொலி :P

Edited by வெண்ணிலா

முதன்முதலாக தனது கன்னி பேட்டியை கண்ட டைகர் குடும்பத்தின் உறுப்பினரான நிலா அக்காவிற்கும் தனது பொன்னான நேரத்தை எமக்காக ஒதுக்கு மிகவும் சுவாரசியமாக பேட்டியை தந்த விகடகவி மாமாவிற்கு நன்றிகளை கூறி..........டைகர்குடும்பத்தில் இருப்பவர்கள் ஒவொருவரும் சிறந்த முறையில் தமது திறமைகளை கொண்டு வரவேண்டும் அந்த வகையில் வெண்ணிலா அக்கா இந்த முறை பேட்டியை மிகவும் சிறந்த முறையில் தொகுத்து வழங்கினா அவாவிற்கு பாராட்டுகள்.....மற்றும் ஏனைய டைகர் பமிலி உறுப்பினர்களும் தங்கள் திறமைகளை வெளிகொண்டு வரவேண்டும் என்பது தான் எம் அவா.........மீண்டும் அடுத்த முறை வித்தியாசமான பேட்டியுடன் உங்களை சந்திக்கும்வரை எல்லாருக்கும் நன்றிகளை கூறி விடைபெறுகிறேன்....... :)

டைகர் பமிலி

&

டைகர்வானொலி

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பேட்டிப்பக்கம் தொடர்பான கருத்துக்களை யாழ் நாற்சந்தி பிரிவில் உள்ள டைகர் வானொலியின் வெள்ளி மாலை போட்டி பக்கம் - கருத்துக்கள் என்னும் தலைப்பின் கீழ் இணைக்கவும்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=21921

அது போட்டி இல்லை வலைஞனே பேட்டி

  • 3 weeks later...

வணக்கம் இனிய நேயர்களே மீண்டும் உங்கள் எல்லாரையும் சந்திபதில் மிக்க மகிழ்ச்சி :D .........புது பொலிவுடன் உங்கள் இல்லம் தேடி வருவாள் டைகர் என்று கூறி இருந்தோம் அந்த வகையில் நாளை உங்கள் இல்லம் தேடி வர இருகிறாள் டைகர் வானொலியின் வெள்ளி மாலை பேட்டி!!காணத்தவாறாதீர்கள்!! :)

நாளை பேட்டி காணபோகும் நபர் யார்???உங்கள் எல்லோருக்கும் அறிமகமானவர் பல ஆற்றலகளையும் தன்னகத்கே கொண்ட ஒரு கலைஞர் அவரை தான் நாளை வெள்ளிமாலை பேட்டி காண இருக்கிறோம் பேட்டி காண போகும் நபர் யார்???அதுவும் நாளை தெரியும் :rolleyes: !!ஆகவே நாளை பேட்டியை கண்டு இரசிக்கும் படியும் இனி வரும்காலங்களில் பல மாற்றங்களுடன் இந்த வெள்ளி மாலை பக்கம் உங்கள் முன் பவனி வருவாள்!!

மீண்டும் நாளை சந்திபோம்!!

அப்ப நான் வரட்டா!!

Singapore1_web.jpg

பகுதி 01

பகுதி 02

வணக்கம் யாழ் வாசகர்களே, கள உறவுகளே!

சிப்பிக்குள் முத்தாய் சிறைப்பட்டுக் கிடப்பதை விட, சுதந்திரமாக, உப்பாகி, நீரோடு கரைவதே மேல்..

இன்று நாங்கள் பலரும் அறிந்த ஓர் சிறந்த கலைஞன் மதிப்புக்குரிய திரு.அஜீவன் அவர்களுடன் யாழ் இணையம் சார்பாக உரையாடுகின்றோம்.

வணக்கம் திரு.அஜீவன் அவர்களே!

வணக்கம் கலைஞன்

உங்களைப்பற்றி எமது வாசகர்களிற்கு சிறிது அறிமுகம் செய்துகொள்ளுங்கள்..

யாழ் களத்தில் பொதுவாகவே அனைவரும் என் நண்பர்கள் என்பதால் பெரிதாக அறிமுகம் தேவையில்லை. இலங்கையின் கொழும்பை பிறப்பிடமாகக் கொண்டவன். தந்தை இலங்கையையும் தாயார் இந்தியாவையும் பிறப்பிடமாகக் கொண்டவர்கள். இளம் வயதிலேயே சிங்கப்பூருக்கு போய் விட்டதால் எனக்கு தெரிந்த வளர்ச்சி என்றால் அங்கு ஆரம்பித்தது. இந்தியாவில் சில காலம் இருந்தேன். தற்போது சுவிஸில் வாழ்கிறேன்

சுவிஸ்லாந்து நாட்டில் தமிழ், சிங்கள வானொலிச் சேவையை ஆரம்பிக்கும் எண்ணம் உங்களுக்கு எப்படி தோன்றியது? இதற்கான வளங்களை, ஆதரவை எவ்வாறு பெற்றுக்கொண்டீர்கள்? இந்த வானொலிச் சேவைக்கு எவ்வாறான வரவேற்பு கிடைத்துள்ளது?

நான் ஒரு சுவிஸ் தொலைக்காட்சி மற்றும் திரைப்படத் துறை இயக்குனருடன் ஒருவருடன் இணைந்து பணியாற்றுவதால் அவர்களுக்கு என் விபரங்கள் தெரியும். எனவே நான் நிகழ்ச்சிகளை தரும் வானோலியில் எமது நாட்டு மொழியில் ஒலிபரப்பொன்றை செய்ய சொன்னார்கள். இந்த வானோலி சுவிஸ் கலாச்சார அமைப்பினால் 10 வருடங்களாக நடாத்தப்படுகிறது.

எனவே எனக்கு எந்த செலவும் இல்லை. அது குறித்து சிந்திக்கவும் தேவையில்லை. எத்தனை பேர் பண்பலை வழி நேரடியாக கேட்கிறார்கள் என்பது வானோலி கணிப்பு கருவி மூலம் தெரியும். பண்பலை மற்றும் இணையத்தினூடாக நேரடி ஒலிபரப்பாகவும் ஐரோப்பிய தமிழ் வானோலி ஊடாகவும் இணையத்திலும் பலர் கேட்கிறார்கள். வரவேற்பை பற்றி பெரிது படுத்துவதில்லை.

அஜீவன் வானொலி சேவையின் இலக்கு அல்லது நோக்கம் என்ன?

இப்போது நான் நிகழ்ச்சிகளை ஆரம்பித்து ஒரு வருடம் கூட இல்லை. உலகத்தில் உள்ள அனைத்து தமிழர்களும் தரும் நல்ல ஆக்கங்களை வர வேற்போம். தேவை என்று கருதினால் அது இடம் பெறும். நான் இலங்கை சிங்கள வானோலியில் பணியாற்றி இருக்கிறேன். தெரிந்ததை மறக்கக் கூடாது என்பதும் ஒரு காரணம். வேறு எதுவும் இல்லை.

DSCN1530.JPG

குறும்பட துறையில் உங்களிற்கு ஆர்வம்வந்ததற்கான காரணங்கள் எவை?

நான் 1980களிலேயே எனது திரைப்பட பயிற்சியின் போதே சிங்கள மொழியில் குறும்படங்கள் செய்திருக்கிறேன். எனவே இது எனக்கு புதிது அல்ல.

குறும்படம் மூலம் எதனை சாதிக்கலாம் என்று நீங்கள் நினைக்கின்றீர்கள்? உங்கள் குறும்படங்கள் மூலம் நீங்கள் என்ன செய்தியை கூற விரும்புகின்றீர்கள்?

புலம் பெயர் நாடுகளிலாவது நல்ல தமிழ் குறும்படங்கள் வர வேண்டும் என்ற எண்ணங்கள் எனக்குள் இருந்தது. அதை புலம் பெயர்ந்த தமிழர்கள் புரிந்து கொள்ளவில்லையா அல்லது நான் தவறான ஒரு எண்ணத்தையுடையவனாக இருந்தேனோ என்றே நினைக்கிறேன். எனவே அந்த எண்ணம் எனக்கு வெற்றி தரவில்லை. இருந்தாலும் சுவிஸ் திரைத்துறைக்குள் என்னை அடையாளம் காட்ட என் குறும்படங்கள் உதவின. யதார்த்தமான வாழ்வை வெளிப்படுத்தும் தன்மையுடன் உருவான குறும்படங்கள் பலருக்கு சினிமா தனம் இல்லாமல் எமது புலம் பெயர் வாழ்வின் ஒரு சில துளிகளை விளக்கியது எனலாம். குறிப்பிட்ட சில புலம் பெயர் தமிழர்கள் கூட அவற்றை விரும்பினார்கள். இப்போது அதற்கும் நேரமில்லை. எப்படி இருந்தாலும் விருதுகளை மட்டுமல்ல அவை பலராலும் பேசப்பட்டது மகிழ்ச்சி.

எமக்காக.. நீங்கள் முன்பு நடித்த உங்கள் மனதுக்குபிடித்த குறும்படத்தில் வரும் ஓர் பாத்திரத்தின் கதைவசனத்தை பேச முடியுமா?

"என்னை மாதிரி மற்றவங்களும் இருப்பாங்க என்று நினைச்சது என்னுடைய பெரிய தப்பு"

Singap_web.jpg

நீங்கள் பல்வேறு நாடுகளில் பணியாற்றியபோது பெற்ற தொழில் அனுபவங்களை பற்றி எம்முடன் சிறிது பகிர்ந்துகொள்ளமுடியுமா?

நம்மில் பெரும்பாலானோர் ஆர்வம் காரணமாக மட்டுமே சினிமா எடுப்பவர்கள். மற்றவர்கள் சினிமா தெரிந்து சினிமா எடுக்க வருபவர்கள். நம்மவர்கள் நம்மை பாவிக்க நினைப்பவர்கள். புகழுக்காக வருபவர்கள். மற்றவர்கள் தொழிலாக மட்டுமல்ல கலையாக நினைப்பவர்கள். உண்மை கலைஞர்கள் நிலைக்கிறார்கள்.

உண்மையான நமது நல்ல கலைஞர்கள் பலர் உதிர்ந்து போய் கொண்டிருக்கிறார்கள். இன்றைய இளைஞர்கள் ஏதாவது செய்தால்தான்.. உண்டு. நம்மவரோடு அனுபவம் என்று சொன்னால் அவை வேதனைகள்தான்.

உதாரணமாக ஜேர்மனியில் நான் ஒளிப்பதிவு செய்து ஒரு தமிழ் குறும்படத்துத்தின் உருவாக்கத்துக்கே காரணமானேன். ஒளிப்பதிவை மட்டுமல்ல அதற்கு மேலும் செய்தேன். போனது வந்தது கூட என் சொந்த பணத்தில்.. அதை அந்த கலைஞர்கள் அனைவரும் அறிவார்கள். இதுவரை அதை இயக்கியவரோ அல்லது அதில் சம்பந்தப்பட்ட எவருமோ அந்த குறும்பட டீவீடீ ஒன்றைக் கூட தரவில்லை. நான் ஒளிப்பதிவு செய்ய ஒளிப்பதிவுக்கு கொடுக்கும் கெளரவத்தை என் உதவி ஒளிப்பதிவாளருக்கு தயாரிப்பாளர் விழா நடத்திக் கொடுக்கிறார் என்றால் பாருங்களேன்?

அது மட்டுமல்ல அது தொடர்பானவர்களும் அதை பேசாமல் ஏற்றுக் கொண்டு மெளனமாக இருக்கிறார்கள். முன்னர் இவற்றுக்காக கோபப்பட்டதுண்டு. இப்போது எனக்கு சிரிப்பு வரும் விடயங்கள் இவை.... எனவே இப்படியான விடயங்களில் இப்போது இணைவதில்லை. இங்கு சுவிஸில் ஒரு பல்கலைக் கழகத்துக்காக ஒரு குறும்படம் செய்தேன். அது அங்கே பாடத்திட்டத்துக்காக சேர்த்துக் கொள்ளப்பட்டிருக்கிறது. அது குறித்து தினமும் ஏதாவது ஒரு மெயில் அல்லது மடல் வருகிறது. இதிலிருந்தே இந்த வித்தியாசம் புரியும்!

எமது சமுகத்தினர் தாயாரிக்கும் கலைப் படைப்புகளிற்கும் ஏனைய சமூகத்தினர் தயாரிக்கும் கலைப் படைப்புகளிற்கும் இடையே உள்ள வித்தியாசங்களாக நீங்கள் எவற்றை கருதுகின்றீர்கள்?

நம் கலை படைப்புகளில் தேவையற்ற அனைத்தும் இருக்கும். யாரையோ திருப்பதிப்படுத்த முற்படுவது குறிப்பாகத் தெரியும். அநேகமான அடுத்தவர் கலை படைப்புகளில் ஒரு செய்தியை அல்லது ஒரு பிரச்சனையை அலசும் கலை நயம் இருக்கும்.

telugumovie_web.jpg

எம்மவர்களின் கலைப்படைப்புக்களில் காணப்படும் குறைபாடுகளை எவ்வாறு தவிர்த்துக்கொள்ள முடியும்?

அந்த துறை தெரிந்தவர்கள் அந்த வேதனை தெரிந்தவர்கள் இந்த துறைக்கு வர வேண்டும். பணம் இருக்கிறதென்று புகழ் தேடுவோர் அதிகாரமிருக்கிறதென்ற நிலை கொண்டோர் இதுக்குள் வரக் கூடாது. இந்த அடிப்படை பிரச்சனையால்தான் குறைபாடுகள் மட்டுமல்ல குறைப் பிரசவ படைப்புகளும் உருவாகின்றன.

தென்னிந்திய கலைஞர்களிற்கு எம்மவர் கொடுக்கும் ஆதரவை எமக்கு தருவதில்லை என்று எமது கலைஞர்கள் விசனம் தெரிவிக்கின்றார்கள். இதை பற்றிய உங்கள் கருத்து என்ன?

நாம் செய்தால்தானே அவர்கள் ஆதரவு தருவதற்கு? சந்தையில் நின்று கொண்டு கோசம் போட்டு கூப்பிட்டால் மட்டும் போதுமா? நம்மிடம் சரக்கு எதுவும் இல்லாமல்....?

Music_com_web.jpg

தமீழீழ பிரச்சனைகளை கருப்பொருளாக கொண்டு நீங்கள் ஏதாவது குறும்படங்களை தயாரித்து உள்ளீர்களா? இனி வரும் காலங்களில் அத்தகைய முயற்சியில் ஈடுபடும் எண்ணம் இருக்கின்றதா?

இங்கு சாத்தியமில்லை. அது அங்குதான் சாத்தியம். அதுவே யதார்த்தம். புலம் பெயர்ந்த தமிழ் மக்களின் பிரச்சனைகளாக எனது பல குறும்படங்கள் வந்திருக்கின்றன. நான் இங்கே வாழ்கிறேன். இங்குள்ள பிரச்சனைகளை வைத்துத்தான் என்னால் படைப்புகள் தர முடியும். எனது படைப்புகள் யதார்த்த வாழ்வை பேசுபவை. கனவுலக வாழ்வை அல்ல. எனவே புரிந்து கொள்வீர்களென நினைக்கிறேன்.

சினிமாதுறையில் எதிர்காலத்தில் ஏதாவது செய்யவேண்டும் என்ற எண்ணம் உங்களிடம் இருக்கின்றதா? கடந்தகாலத்தில் சினிமாத்துறையில் காலடிவைக்க நீங்கள் முயற்சிக்கவில்லையா?

நான் இலங்கை சிங்கள சினிமாவிலும் இந்திய சினிமாவிலும் இருந்து இருக்கிறேன். ஏதோ ஒரு வகையில் பங்களிப்பு செய்கிறேன். சுவிஸ் நாட்டு நிலை எம்மை வேறெங்கும் தொடர்ந்து வாழ வழி செய்யாது. இங்கு இவர்களோடு பல பணிகளை செய்கிறேன். அது திருப்தியாக இருக்கிறது

With_Murali_web.jpg

மீண்டும் எமக்காக.. உங்களுக்கு பிடித்தமான ஓர் தமிழ் மற்றும் சிங்கள பாடல்களின் சில வரிகளை பாடிக்காட்ட முடியுமா?

- ஒலியில் வந்திருக்கிறது -

நீங்கள் ஓர் கலைஞன் என்ற வகையில் ஒரு கலைஞனிற்கு இருக்க வேண்டிய பண்புகளாக எவற்றை கருதுகின்றீர்கள்?

நல்லதொரு மனிதனாக உண்மையாக நடந்தால் போதும்.

நீங்கள் உங்களை நோக்கிவரும் விமர்சனங்களை எவ்வாறு எதிர்கொள்வீர்கள்?

நிச்சயம்! அவைதான் நம் தவறுகளை சுட்டிக் காட்டும். உண்மையான விமர்சனங்களை மகிழ்வோடு ஏற்று என்னை திருத்திக் கொள்ள முற்படுவேன். காழ்ப்புணர்வோடு வரும் விமர்சனங்களை கருத்தில் கொள்வதில்லை.

வளர்ந்து வரும் இளம் குறும்பட கலைஞர்களிற்கு நீங்கள் கூறிக்கொள்ள விரும்புபவை எவை?

நிறைய வேற்று நாட்டு குறும்படங்களை பாருங்கள். கற்றுக் கொள்ளுங்கள். விசயம் தெரிந்தவர்களோடு சற்று பணியாற்றுங்கள்.

Workshop_web.jpg

புதிதாக தோன்றும் இணயங்கள், இணைய வானொலிகள், இதர தமிழ் ஊடகங்கள் சேவை நோக்கில் ஆரம்பிக்கப்படும் அதேசமயம் போதிய அளவு வருமானத்தையும் அவை பெற்றுக்கொள்ள நீங்கள் கூறக்கூடிய ஆலோசனைகள் எவை?

சேவை நோக்கில் என்றால் பணத்தை எதிர்பார்க்காதீர்கள். வியாபார நோக்கில் என்றால் முறையான திட்டமிடல்

வழி காட்டலோடு ஆரம்பியுங்கள்.

சிறீலங்கா நீயானா LTTE நானான ஐயையோ வாயைக் கொஞ்சம் மூடு..மூடு..

DMK நீயானா ADMK நானானா கோட்டையில நம்ம வீட்டைப் போடு..போடு..

அரசியலில் உங்கள் ஈடுபாடுகளை பற்றி எம்முடன் பகிர்ந்துகொள்ள முடியுமா? சுவிஸ்லாந்து நாட்டில் நீங்கள் ஏதாவது அரசியல் கட்சியில் அங்கத்தவராக இருக்கின்றீர்களா?

அரசியல் சார்ந்த விடயங்களை படிப்பேன். அரசியல் கலைஞனுக்கு தெரிய வேண்டும். தெரிந்து இருக்க வேண்டும். ஆனால் செய்யக் கூடாது என்பது என் அனுபவத்தில் உருவான கருத்து. இங்குள்ள அரசியல்வாதிகள் பலர் என் நண்பர்கள். அத்தோடு சரி! யார் காலையும் பிடித்து ஏதாவது ஒரு தேவையை நிறைவேற்ற வேண்டிய தேவை இங்கு இல்லை. என் தேவைகளுக்கு ஒன்றும் தேவையில்லை. தேவைப்பட்டால் அவர்களாகவே உதவுவார்கள்.

புலம் பெயர்ந்து சுவிஸ்லாந்து நாட்டிற்கு வரும் எமது சமூகத்தினருக்கு நீங்கள் கூறிக்கொள்ள விரும்புபவை எவை?

விபரம் தெரிந்தவர்கள்தான் இப்போது இங்கு வருகிறார்கள். அழகான - அமைதியான நாடுதான் பணத்தால் மட்டும் முன்னேற முடிந்ததே தவிர கல்வியால் நாங்கள் முன்னேற முடியாமல் போனோம். அது பெரும் குறை இன்றைய தலை முறையினர் இந்த அவலத்திலிருந்து தப்பியிருப்பது மகிழ்ச்சியான விடயம்.

swisscrew_web.jpg

நான் உட்பட யாழ் இணையத்தில் நூற்றுக்கு தொன்னூற்று ஒன்பது வீதமானோர் முகமுடிகளுடன் உலா வருபவர்கள். இவர்களுடன் முகமூடி அணியாது உங்கள் உண்மையான முகத்துடன் நீங்கள் கருத்தாடல் செய்யும்போது ஏற்படுகின்ற அனுபவங்களை பகிர்ந்துகொள்ள முடியுமா?

என்னதான் வந்தாலும் எனது கருத்தை என் முகத்தோடு சொல்லி விட்டு இருக்க முடிகிறது. மகிழ்வாக இருக்கும்

யாழ் இணையம் பற்றிய உங்கள் பார்வை என்ன?

இது குறித்து சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரியும். அது நடத்துவோரது எண்ணம் தொடர்பானது

நீங்கள் முன்பு மத்திய கிழக்கு நாடு ஒன்றில் அநீதி இழைக்கப்பட்ட "ரிசானா" என்ற முஸ்லீம் பெண் ஒருத்தியை காப்பாற்ற முயன்று பலதரப்பட்ட விமர்சனங்களிற்கு உள்ளானீர்கள். அந்த விமர்சனங்களை எவ்வாறு முகம் கொடுத்தீர்கள்? நீங்கள் அந்த பெண்ணை காப்பாற்ற வேண்டும் என உங்களை தூண்டிய காரணிகள் எவை?

எதிரே ஒரு விபத்து நடந்தால் போகும் வாகனங்களில் உள்ளவர்கள் நிறுத்தி உடனே போலீஸுக்கோ அல்லது அம்பியூலன்சுக்கோ தகவல் தெரிவிக்கிறார்கள். உதவுகிறார்கள். விபத்தில் சிக்கியவர் யார் என்று கூட பார்க்க மாட்டார்கள். அப்படி உதவ நானும் எழுதினேன். இங்கு தகவல் கொடுத்தால் நன்றி என்பார்கள். நம் நாட்டில் தகவல் கொடுத்தால் நம்மை உள்ளே போட்டு தாக்குவார்கள். பல வேளைகளில் அவரை குற்றவாளியாகவும் ஆக்கி விடுவார்கள்? இது மாதிரி வகைப்படுத்தி பார்த்து ஆறுதல்பட வேண்டியதுதானே?

இருபது, முப்பது வருடங்களிற்கு முன்பு இருந்த அஜீவனுக்கும், தற்போது உள்ள அஜீவனுக்கும் இடையில் என்ன ஒற்றுமை,வேற்றுமைகளை நீங்கள் காண்கின்றீர்கள்? அப்போது இருந்த அஜீவனின் எத்தகைய விடயங்கள் உங்களுக்கு பிடித்து உள்ளன? எவை பிடிக்கவில்லை? இப்போது உள்ள அஜீவனின் எத்தகைய விடயங்கள் உங்களுக்கு பிடித்து உள்ளன? எவை பிடிக்கவில்லை?

வயசாயிடுச்சு அடுத்து தேவையற்றதை செய்து அனுபவம் கொஞ்சம். இன்னும் கிடைக்கும்.

நெருநல் உளனொருவன் இன்று இல்லை என்னும் பெருமை உடைத்திவுலகு! அதாவது நேற்று இருந்தவன் இன்று இல்லை. இன்று இருப்பவன் நாளை இருக்கப்போவதில்லை. நீர்க்குமிழி போல நிலையற்றது இந்தவாழ்வு! உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இருக்கின்றதா? ஆன்மீகம் பற்றிய உங்கள் பார்வை என்ன?

கடவுள் நம்பிக்கை உண்டு. மூட நம்பிக்கை இல்லை.

chinese_web.jpg

உங்கள் வாழ்வின் உயர்ச்சிக்கு காரணமாக இருந்த, இருக்கின்ற உங்களிற்கு பக்கபலமாக இருந்த, இருக்கின்ற யார் யாரை எல்லாம் நீங்கள் இப்போது நன்றியுடன் நினைவு கூற ஆசைப்படுகின்றீர்கள்?

அன்று முதல் இன்று வரை உதவும் - எதிர்க்கும் அனைவரையும் நன்றியோடு நினைப்பேன். இரண்டுமே எனது பயணத்தின் போக்கை உணர்த்தும்.

உங்கள் வாழ்வின் வழிகாட்டிகளாக நீங்கள் யார் யாரை பின்பற்றுகின்றீர்கள்? ஏன் பின்பற்றுகின்றீர்கள்?

யாரையும் பின் பற்றுவதில்லை. அனைவரதும் நல்லவைகளை மட்டும் எடுத்துக் கொள்வேன்.

இறுதியாக.. நீங்கள் எமக்கு, யாழ் வாசகர்களிற்கு ஏதாவது கூறிக்கொள்ள விரும்பினால், மற்றும் நான் இந்த உரையாடலில் தவறவிட்ட ஏதாவது விடயங்கள் இருந்தால் அவற்றை கூறுங்கள்..

அனைவருடன் பேசக் கிடைத்ததில் மகிழ்ச்சி

தனது பொன்னான நேரத்தை எமக்காக ஒதுக்கி, சுவாரசியமான இந்த சிறிய உரையாடலில் பங்குபற்றிய மதிப்புக்குரிய திரு.அஜீவன் அவர்களிற்கு யாழ் இணையம் சார்பாகவும், கள உறவுகள், வாசகர்கள் சார்பாகவும் நன்றிகள் கூறி மீண்டும் இன்னொரு உரையாடலில் சந்திக்கும்வரை உங்களிடம் இருந்து விடைபெற்றுக்கொள்வது கலைஞன். நன்றி! வணக்கம்!

என்னிடம் கேள்வி கேட்க நினைத்த உங்களுக்கும் இனிய யாழ் உறவுகளுக்கும் நன்றி! வணக்கம் கலைஞன்.

Best_Director_web.jpg

Edited by கலைஞன்

வணக்கம்,

கீழ் உள்ள இணைப்பை சொடுக்கியும் உரையாடலின் ஒலிவடிவத்தை கேட்கமுடியும்.

1. http://www.esnips.com/doc/f3e1af1e-008e-4d...Kalaignan.Final (சிறந்த குவாலிட்டி ஓடியோ..)

2. http://www.esnips.com/doc/f21429e4-703e-41...lainjan+ajeevan (குவாலிட்டி குறைந்த ஓடியோ)

3. http://media.putfile.com/kalainjanajeevan (குவாலிட்டி குறைந்த ஓடியோ)

ஒலிவடிவத்தை கேட்க முடியாது இருந்தால் அறியத்தரவும்..

நன்றி!

Edited by கலைஞன்

  • 5 months later...

annaiqa1.jpg

கவிஞர் பண்டிதர் ச.வே.பஞ்சாட்சரம் அவர்கள் இருபதுக்கும் மேற்பட்ட அழகிய தமிழீழ விடுதலை கானங்களை எழுதி உள்ளார். இதுவரை 52 நூல்களை வெளியிட்டு உள்ளார். இவரது எழிலி காவியம் சாகித்திய மண்டல பரிசை பெற்றது. இதுதவிர, மாணவர்களிற்கு பயன்படும் தமிழ் இலக்கண நூல்களையும் இவர் எழுதி உள்ளார்.

கவிஞர் ச.வே.பஞ்சாட்சரம் அவர்கள் எழுதிய சில விடுதலை கானங்கள்:

  • சாகத்துணிந்தவர் கூட்டம்..
  • ஆழக்கடலோடிகளே ஈழக்கடலோடிகளே..
  • சாதனைக் கடற்கரும்புலிகள்..
  • பிரபாகரன் எங்கள் தலைவன்..
  • சாவுக்குள் வாழ்வெனும் தத்துவம்..

நன்றி! வணக்கம்!

  • 1 month later...

வரும் திங்கட்கிழமை டைகர் வானொலியின் வெள்ளிமாலைப் பேட்டியில் நாம சந்திக்க இருக்கும் உறுப்பினர் 1032228490441833ac5b764.gifதமிழ்சிறி

காணத்தவறாதீர்கள்.

பேட்டி பற்றிய விமர்சனங்களை எழுதுவதாயின் இங்கே செல்லவும்

http://www.yarl.com/forum3/index.php?showt...0&start=560

வணக்கம் தமிழ் சிறி. பல சிரமங்களுக்கு மத்தியிலும் எமது அழைப்பை ஏற்று வந்ததிற்கு டைகர் வானொலி மற்றும் டைகர் குடும்பம் சார்பாக நன்றி கலந்த வணக்கத்தை தெறிவித்து கொண்டு பேடிக்கு சொல்வோமா...................

உங்களை பற்றிய சிறிய அறிமுகத்தை எங்கள் நேயர்களுடன் பகிர்ந்து கொள்ளமுடியுமா??

1)யாழில் நீங்கள் எவ்வாறு இணைந்தீர்கள்? தமிழ்சிறி என்பது உங்கள் சொந்த பெயரா? புனைபெயர் எனில் அதை விரும்பி வைக்க ஏதாவது காரணங்கள் இருகின்றனவா?

2)யாழில் நீங்கள் ஒரு புது உறுப்பினர் என்ற வகையில் பழைய உறுப்பினர்களின் கருத்தாடல்களை நீங்கள் எவ்வாறு ஏற்று கொள்கீறீர்கள்?

3)தற்போது மட்டுநுறுத்தினர்கள் பற்றி பல விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளார்கள் அது பற்றிய உங்கள் கருத்து என்ன?

4)யாழில் இணைந்த போது உங்களுக்கு தமிழ் எழுதுவதற்கு சிரமமாக இருந்ததில்லையா?

5)யாழில் நீங்கள் இதுவரை எத்தனை பேரை சந்தித்து இருக்கிறீங்க?எனியும் யாரை சந்திக்க ஆவல்படுகிறீர்கள்?யாழில் நெருங்கிய உறவு என்று சொல்ல கூடிய வகையில் யார் இருக்கிறார்கள்?உங்களுடன் முதன்முதலிம் உரையாடிவர் யார் என்று உங்களுக்கு ஞாபகம் இருந்தா அவரை பற்றிய சில வரிகள்?

6)யாழில் வந்த புதிதில் எவ்வகையான மனநிலையில் இருந்தீங்கள்,? தற்போது ஆயிரம் கருத்துக்களை தாண்டி விடீர்கள் இப்போது எவ்வாறான மனநிலையில் இருக்கிறீங்கள்?

7)காதலை பற்றி எல்லாரும் என்னவோ கதைக்கீனம். காதலை பற்றிய உங்கள் கண்ணோட்டம் என்ன?யாரையாவது காதலித்த அநுபவம் இருந்தா எங்களுடன் பகிர்ந்து கொள்ளமுடியுமா?யார் அந்த லக்கி கேர்ள் என்று எங்களுக்கு சொல்லலாமே? நீங்கள் திருமணம் முடித்தவரா? இல்லலயெனில் உங்கள் திருமணம் காதல் திருமணமா அல்லது காதல் திருமணமா?இது வரை உங்களுக்கு எத்தனை பேர் காதல் கடிதம் தந்தவை என்பதையும் எங்கள் நேயர்களுடன் பகிர்ந்து கொள்ளமுடியுமா?

8)வாழ்கையை நீங்கள் எவ்வாறு எடுத்து கொள்வீர்கள்?வாழ்கையில் மறக்கமுடியாத நாள் என்று ஏதாவது என்றா எங்களுடன் பகிர்ந்து கொள்ளமுடியுமா?வாழ்கையில் இதுவரை சாதித்தது என்ன சாதிக்க போவது என்ன?

9)நீங்கள் ஈழத்தமிழ் குடிமகன்? சொந்த ஊரு என்ன? உங்க சொந்த ஊரில் பள்ளிக்கு சென்றுள்ளீர்களா? அல்லது பிறந்ததே புலத்தில்தானா? இருப்பினும் உங்கள் பள்ளி நாட்கள் அதில் நீங்கள் நண்பர்களுடன் சேர்ந்து செய்த குழப்படிகள் வாங்கிய அடிகள் என்பவற்றை எங்கள் நேயர்களுடன் பகிர்ந்து கொள்ளமுடியுமா?

10)அடுத்த முக்கிய விடயம் யாழில் கலகல என கருத்தாடி வந்த ஜம்மு பேபி காய்ச்சல் காரணமாக யாழ் வராமையையிட்டு இங்கு பலர் ஜம்முக்கு திருமணாமாகியது என நையாண்டி செய்கின்றனரே. இது பற்றி உங்கள் எண்ணம் என்ன?

வீ வில் பாக் ஆப்ரர் த சிமோல் கொமர்சியல் பிரேக். :D

பேட்டிக்கு பிரதான அநுசரணையாளர் -

1)யாழ்கவி ஓடியோ அன்ட் வீடியோ

2)கறுப்பி பியூட்டி பாலர்

3)குட்டிதம்பி நகைகடை

4)யாழ்ரவி சைபர் கவே

5) அனி தங்கமாளிகை

6)புத்தன் புத்தககடை

7)தூயா துணிகடை

8)ஜனனி சுரித்தாகடை

9)குமாரசுவாமி வயின்சொப்

10)பொன்னி ஸ்பைஸ்

பேட்டிக்கு இணை அணுசரணை

1)யானைவில் குளிர்பானம்

2)சித்து பூக்கடை

3)இவர்களுடன் ஆத்மீக ஒளிகிடைக்க நாடவேண்டிய ஒரெ இடம் சத்திஞானந்த குருஜி

முரளி

மக்கள் தொடர்பாடல்

1)விசால்

2)விகடகவி

ஊடக அநுசரனை

1)நெடுக்ஸ்வானொலி

பேட்டி எடுத்தவருக்கு மேக்கப்

1)கறுப்பி பியூட்டிபாலர்

பேட்டிக்கு பிரதான ஊடக அனுசரனை வழங்குவோர்

டைகர் வானொலியின் உத்தியோக பூர்வ இணையத்தளம்

http://www.yarltigerfm.tk

வெல்கம் பாக் ரூ த ஷோ(பேட்டி) :D

11)நீங்கள் தமீழிழத்தில் பிறந்ததனீங்க என்று நினைக்கிறேன் தமீழிழத்தில் உங்களை மிகவும் கவர்ந்தது என்ன? கொடிய யுத்தகாலத்தில் மாட்டிக்கொண்டதுண்டா. அவ்வாறாயின் அவ்வனுபவம் பற்றி சொல்ல முடியுமா?

12)பெண்களுக்கு ஏற்ற உடை எது என்ற வாக்களிப்பில் நீங்கள் எந்த உடைக்கு வாக்களித்தீர்கள். ஆண் பெண் நட்பைப் பற்றிய உங்கள் கருத்து என்ன? ஆண் நண்பர்களாலா இல்லை பெண் நண்பிகளாலா அதிகம் பாதிப்படைந்திருக்கிறீர்கள்?

13)நீங்கள் 1000 கருத்துக்களை எழுதவே மூச்சு வாங்குது என சொன்னீர்களே. அப்போ ஒரு நாளைக்கு நீங்கள் 10000 கருத்துக்களை தாண்டும் போது உங்கள் மனநிலை எபப்டி இருக்கும் என நினைக்கிறீங்க? :D

14)நீங்கள் மிகவும் விரும்பி பார்க்கும் தளம் என்ன? ஏன் இதுவரையில் யாழில் எந்த சொந்த படைப்புக்களையும் படைக்கவில்லை? உங்களிடம் நீங்கள் காணும் தனித்திறமை என எதை உணருகின்றீர்கள்?

15)நீங்கள் நண்பன் / நண்பி என பழகியவர்கள் யாராவது உங்களோடு பகைத்து சென்ற அனுபவம் ஏதும் உண்டா? எனினும் நீங்கள் ஒரு பகையாளியிடம் இருந்து என்னத்தைக் கற்றுக்கொண்டீர்கள்?

இவர்கள் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்பதை ஒரு வரியில் சொல்ல முடியுமா?

*கந்தப்பு-

*இன்னிசை-

*வசிசுதா-

*அனிதா-

*தூயா-

*வல்வைசாகரா-

*நுணாவிலான்-

*இனியவள்-

*கறுப்பி-

*சாத்ரி-

*ஜம்முபேபி-

*முரளி-

*மணிவாசகன்-

*வலைஞன்-

*நெடுக்காலபோவான்-

*ஆதிவாசி-

*புத்தன்-

ஒரு வரி பதில்கள்

1)யாழில் உங்களுக்கு பிடித்ததுது?

2)யாழில் உங்களுக்கு பிடிக்காதது?

3)யாழின் ஆண் உறுப்பினர்கள்?

4)யாழில் பெண் உறுப்பினர்கள்?

5)யாழில் கவிதை/ கதை?

6)யாழில் மறக்கமுடியாதவர்?

7)யாழின் பலம்?

8)யாழில் டைகர்பமிலி?

9)யாழில் ஜம்மு,நிலா?

10)ஆசைக்கு?

11)அறிவுக்கு?

:o:o

தமிழ் சிறி இன்னும் கொஞ்ச நேரத்தில் கலையகத்துக்கு வந்து பேட்டி அளிப்பார் காணதவறாதீர்கள்

1032228490441833ac5b764.gif

இங்கே இடம்பெறும் பேட்டிகளை டைகர்வானொலி மற்றும் டைகர்குடும்பத்தின் அனுமதி இன்றி பிரயோகிப்பது சட்டத்துக்கு எதிரானது,அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கபடும்.

டைகர் குடும்பத்தின் டைகர் வானொலியின் வெளியீடே இது.

  • கருத்துக்கள உறவுகள்

1)யாழில் நீங்கள் எவ்வாறு இணைந்தீர்கள் ? தமிழ்சிறி என்பது உங்கள் சொந்த பெயரா ? புனைபெயர் எனில் அதை விரும்பி வைக்க ஏதாவது காரணங்கள் இருகின்றனவா ?

வணக்கம் வெண்ணிலா,

நண்பர்கள் கூறியதனைக் கேட்டு யாழின் நீண்ட கால வாசகனாக உள்ளேன் . ஆனால் இந்த வருடம் தான் அங்கத்தவராக இணைந்து கொள்ள ஆர்வம் ஏற்பட்டு இணைந்து கொண்டேன் .

தமிழ் சிறி என்பது பாதி புனை பெயர் பாதி சொந்தப் பெயர் . களத்தில் ஏற்கனவே சிறி என்ற பெயரில் ஒருவர் இருப்பதாலும் தமிழ் மீது உள்ள பற்றின் காரணமாகவும் தமிழ் சிறி என்று பெயர் வைத்துக்கொண்டேன் .

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

2)யாழில் நீங்கள் ஒரு புது உறுப்பினர் என்ற வகையில் பழைய உறுப்பினர்களின் கருத்தாடல்களை நீங்கள் எவ்வாறு ஏற்று கொள்கீறீர்கள்?

மற்றைய தளங்களுடன் ஒப்பிடும் போது இங்கு தனிப்பட்ட முறையில் கள உறுப்பினர்களை தாக்கி எழுதுவது என்பது குறைவு . சிறந்த கருத்தாடல்கள் அடிக்கடி

இடம் பெறுவது மனதிற்கு சந்தோஷமளிக்கின்றது .

3)தற்போது மட்டுநுறுத்தினர்கள் பற்றி பல விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளார்கள் அது பற்றிய உங்கள் கருத்து என்ன ?

எனக்கு மட்டுறுத்தினர்களைப் பற்றி அவ்வளவாக தெரியாது .

4)யாழில் இணைந்த போது உங்களுக்கு தமிழ் எழுதுவதற்கு சிரமமாக இருந்ததில்லையா?

அதை ஏன் கேட்கின்றீர்கள் . தமிழ் எழுதுவதற்கு சிரமமாக இருக்கும் என்று தான் களத்தில் இணைவதற்கு யோசித்தனான் . இணைந்த ஒரு கிழமையில் எல்லாம் பழக்கப்பட்டு விட்டது .

  • கருத்துக்கள உறவுகள்

5) யாழில் நீங்கள் இதுவரை எத்தனை பேரை சந்தித்து இருக்கிறீங்க ? எனியும் யாரை சந்திக்க ஆவல்படுகிறீர்கள் ? யாழில் நெருங்கிய உறவு என்று சொல்ல கூடிய வகையில் யார் இருக்கிறார்கள் ? உங்களுடன் முதன் முதலிம் உரையாடிவர் யார் என்று உங்களுக்கு ஞாபகம் இருந்தா அவரை பற்றிய சில வரிகள் ?

யாழில் இதுவரை ஒருவரையும் நேரில் சந்திக்கவில்லை . சந்தர்ப்பம் கிடைத்தால் எல்லோரையும் சந்திக்க ஆவல் . சொல்லாடுதல் , தொடர்பு வார்த்தை விளையாட்டுகளில் கலந்து கொள்பவர்களை யாழில் எனக்கு நெருங்கியவர்களாக நான் நினைக்கின்றேன் .

6)யாழில் வந்த புதிதில் எவ்வகையான மனநிலையில் இருந்தீங்கள்,? தற்போது ஆயிரம் கருத்துக்களை தாண்டி விடீர்கள் இப்போது எவ்வாறான மனநிலையில் இருக்கிறீங்கள்?

யாழிற்கு வந்த புதிதில் தனியாளாய் இருந்தேன் . இப்போது பல நண்பர்களுடன் இருப்பது போன்ற உணர்வு ஏற்படுகின்றது .

7)காதலை பற்றி எல்லாரும் என்னவோ கதைக்கீனம் . காதலை பற்றிய உங்கள் கண்ணோட்டம் என்ன ? யாரையாவது காதலித்த அநுபவம் இருந்தா எங்களுடன் பகிர்ந்து கொள்ளமுடியுமா ? யார் அந்த லக்கி கேர்ள் என்று எங்களுக்கு சொல்லலாமே ? நீங்கள் திருமணம் முடித்தவரா ? இல்லலயெனில் உங்கள் திருமணம் காதல் திருமணமா அல்லது காதல் திருமணமா ? இது வரை உங்களுக்கு எத்தனை பேர் காதல் கடிதம் தந்தவை என்பதையும் எங்கள் நேயர்களுடன் பகிர்ந்து கொள்ளமுடியுமா ?

எனக்கு திருமணமாகிவிட்டது .மிகுதி கேள்விகளுக்கு பதில் சொன்னால் எனக்கு சோறு கிடைக்காமல் போய்விடும் என்று பயமாக உள்ளது .

  • கருத்துக்கள உறவுகள்

8)வாழ்கையை நீங்கள் எவ்வாறு எடுத்து கொள்வீர்கள் ? வாழ்கையில் மறக்கமுடியாத நாள் என்று ஏதாவது என்றா எங்களுடன் பகிர்ந்து கொள்ளமுடியுமா ? வாழ்கையில் இதுவரை சாதித்தது என்ன சாதிக்க போவது என்ன ?

வாழ்க்கையை அணு , அணுவாக இரசித்து வாழ்கின்றேன் நேற்றைய நாள் மீண்டும் வராது .

மறக்க முடியாத சம்பவம் என்றால் , அது ஒரு துக்க சம்பவம். தமிழ் நாட்டிலுள்ள கோயம்புத்தூரில் கல்வி பயின்று கொண்டிருந்த எனது இளைய சகோதரன் விடுமுறைக்காக யாழ்ப்பாணம் வந்து குடும்பத்தவர்களுடன் மகிழ்ச்சியாக இருந்துவிட்டு திரும்ப செல்வதற்கு ஆயத்தமாகிய நாளில் நல்லூர் சிவன் கோவில் வாசலில் வைத்து இலங்கை விமானப்படைவினரால் அவரும் அவரது நண்பரும் குண்டு வீசி கொல்லப்பட்டதை பல வருடங்கள் கடந்த போதும் என்னால் மறக்க முடியவில்லை .

இதுவரை மற்றவர்களிடம் கெட்ட பெயர் வாங்காமல் வாழ்வதே ஒரு சாதனை தானே . எனது பிள்ளைகளுக்கு தாய்நட்டிற்கு பிரயோசனப்படக்கூடிய நல்ல கல்வியை கொடுக்க வேண்டும் என்பதே என் விருப்பம் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.