Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலம் பெயர் நாடுகளில் கரும்புலிகள் தினம் அனுஷ்டிப்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புலம் பெயர் நாடுகளில் கரும்புலிகள் தினம் அனுஷ்டிப்பு!

black-iger-day.jpg

தமிழ் மக்கள் புலம் பெயர்ந்து வாழும் நாடுகளில் செயற்பட்டு வருகின்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் சார்பு அமைப்புக்களினால் கரும்புலிகள் தினம் இன்று (வெள்ளிக்கிழமை) அனுஷ்டிக்கப்படுகிறது.

விடுதலைப் புலிகளின் முதலாவது தற்கொலைக் தாக்குதல் இடம்பெற்ற ஜுலை 5 ஆம் திகதி கரும்புலிகள்  தினமாக பிரகடனப்படுத்தப்பட்டு விடுதலைப்புலிகளால் அனுஷ்டிக்கப்பட்டது.

இந்நிலையிலேயே புலம்பெயர் நாடுகளில் இன்றைய தினமும் அனுஷ்டிக்கப்படுகின்றது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து யாழ் குடா நாட்டை கைப்பற்றுவதற்காக இலங்கை இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட ஓப்ரேஷன் லிப்ரேஷன் இராணுவ நடவடிக்கை காரணமாக புலிகள் இராணுவ ரீதியான சவால்களை எதிர்கொண்ட வேளையில் அதனை  முறியடிப்பதற்காக விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனினால் தற்கொலை தந்திரோபாயம் திட்டமிடப்பட்டதாக கூறப்படுகிறது.

அதனடிப்படையில் தற்கொலைதாரிகளாக சென்று தங்கள் உயிர்களை மாய்த்துக் கொள்ள  திலீபன் உட்பட புலிகளின் மூத்த தளபதிகள் பலர் போட்டியிட்ட போதிலும் கப்டன் மில்லர் என்ற போராளிக்கு அந்த வாய்ப்பு கிட்டியது என்கிறது புலிகளின் பதிவொன்று!

1987 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 5ஆம் திகதி நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்தில் நிலைக்கொண்டு குடாநாட்டை முற்றுகையிடுவதற்கான அடுத்தக்கட்ட தயார்படுத்தல்களை மேற்கொண்டு வந்த இலங்கை இராணுவத்தினர்மீது வெடிகுண்டு நிரப்பிய வாகனத்தில் சென்று கப்டன்  மில்லரினால் தற்கொலை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதலின் மூலம் இலங்கை இராணுவத்தினருக்கு பாரிய இழப்பு ஏற்பட்டதாக புலிகள் அறிவித்தனர். இதனையடுத்து குடாநாட்டை கைப்பற்றும்  திட்டமும் இராணுவத்தினரால்  கைவிடப்பட்டது.

தொடர்ந்து வந்த காலங்களில் தற்கொலை தாக்குதல் என்பது தங்களைப்  பொறுத்தவரையில் அதியுச்ச போர் உபாயமாக கைக்கொள்ளப்படுவதாக புலிகள் தெரிவித்தனர்.

தற்கொலை போராளிகளின் உயிர் தியாகத்தை கௌரவிக்கும் முகமாக முதலாவது தற்கொலை போராளியான கப்டன் மில்லர் தாக்குதல் நடாத்திய ஜுலை 5ஆம் திகதி தேசிய கரும்புலிகள்  தினமாக பிரகடனப்படுத்துவதாக புலிகள் தெரிவித்தனர்.

குறித்த தினம் புலிகள் செயற்பட்ட காலத்தில் அவர்களுடைய கட்டுப்பாட்டு பிரதேசங்களில் வருடந்தோறும் அனுஷ்டிக்கப்பட்டு வந்த நிலையிலேயே தற்போது புலம் பெயர் நாடுகளில் அனுஷ்டிக்கப்படுகிறது.

குறைந்த இழப்புக்களுடன் எதிரிகளுக்கு பாரிய சேதங்களை ஏற்படுத்த வேண்டிய சந்தர்ப்பங்களிலும் படையணிகளால் நுழைய முடியாத கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இலக்குகளை தகர்ப்பதற்கும் தற்கொலை தாக்குதல் முறை பயன்படுத்தப்பட்டு வந்தது.

அந்தவகையில், 2009ஆம் ஆண்டு மே மாதம் 17ஆம் திகதி ஆயுதங்களை மௌனிப்பதாக புலிகள் அறிவிக்கும் வரை ஆயிரக்கணக்கான விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் தற்கொலை போராளிகளாக தங்கள் உயிர்களை மாய்திருக்க கூடும் என நம்பப்படுகின்றது.

எனினும் இறுதியாக 2007ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் வெளியிட்ட உத்தியோகப்பூர்வ தகவல்களின் அடிப்படையில் 322 உறுப்பினர்கள் தற்கொலை தாக்குதல்களை நடத்தி உயிர்களை மாய்த்துள்ளனர்.

எனினும் பல போராளிகள் புலிகளினால்  உரிமைகோர  முடியாத தாக்குதல்களை நடாத்தி உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள் நாள்

கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழ் தேசியக்கூட்டமைப்பின் அலுவலகமான அறிவகத்தில் இன்று பகல் கரும்புலிகள் நாள் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.

 

தமிழர்களின் வரலாறுகளை கடைப்பிடிக்க வேண்டிய அதனை அடுத்த சந்ததிக்கு கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பு எங்கள் எல்லோரிடத்திலும் உள்ளது  என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

 

IMG_0194.jpg

 

கிளிநொச்சியில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் அலுவலகமான அறிவகத்தில் கரும்புலிகள் நாள் இன்று (05-07-2019)உணர்வு பூர்வமாக கடைப்பிடிக்கப்பட்டுள்ளது.

 

IMG_0179.jpg

 

நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் தமிழர்களின் உடைய வரலாறு தற்போது அழிக்கப்பட்டு வருகின்றது இந்த வரலாறுகளை கடைப்பிடிக்கவேண்டிய அதனை அடுத்த கட்டத்துக்கு கடத்திச் செல்ல வேண்டிய பொறுப்பு எல்லோரிடத்திலும்  உள்ளது இதில் இருந்து நாங்கள் தவறிச் செல்கின்றோம் அல்லது விலகிச் செல்கிறோம் என்ற தோற்றப்பாடு காணப்படுகின்றது.

 

IMG_0186.jpg

 

 இந்த உயிராயுதமான  கரும்புலிகளின் வாழ்க்கை மறக்க முடியாத ஒன்றாகும் ஒவ்வொரு மாவீரர்களின் கனவுகளுக்கு பின்னாலும் பல்வேறுபட்ட தார்ப்பரியங்கள் உள்ளன அந்தப் பெரும் தியாகமும் இன்று இருக்கின்ற சமூகத்துக்கு கடத்தப்படவேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

IMG_0201.jpg

 

தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் தற்கொடையாக தம் உயிர் நீத்த கரும்புலிகளின் நினைவுநாள் இன்று தமிழர்தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் உணர்வு பூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.

 

கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழ் தேசியக்கூட்டமைப்பின் அலுவலகமான அறிவகத்தில் இன்று பகல் கரும்புலிகள் நாள் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.

 

IMG_0207.jpg

 

இதில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான த.குருகுலராஜா, சு.பசுபதிப்பிள்ளை, மற்றம் கரைச்சி, பச்சிலைப்பள்ளி பூநகரி பிரதேசசபைகளின் தவிசாளர்கள் உறுப்பினர்கள் கட்சியின் செயற்பாட்டாளர்கள், ஆதரவாளர்கள் எனப்பலர் கலந்து கொண்டு வணக்கம் செலுத்தியுள்ளனர்.

https://www.virakesari.lk/article/59799

  • கருத்துக்கள உறவுகள்

எமக்காக தங்கள் உயிர்களை கொடை தந்த உறவுகளுக்கு வீர வணக்கங்கள்.

Edited by ஈழப்பிரியன்

பல தசாபத்தங்களாக அடக்குமுறைகளுக்கும் திட்டமிட்ட இனவழிப்புக்கும் உள்ளாகி வந்த ஈழத் தமிழர்களுக்கு நீதி நியாயம் கிடைக்கவும் தமிழினப் படுகொலைகளை கட்டுப்படுத்தவும் போராட முன்வந்து தமது உயிரை அர்ப்பணித்த உறவுகளுக்கு வீர வணக்கங்கள்!

க‌ரும்புலிக‌ளுக்கு வீர‌ வ‌ண‌க்க‌ம்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.