Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

“போரில் தோற்றாலும் நாங்கள் எழுச்சிமிக்கவர்கள்!” நேர்காணல். - வ.ஐ.ச.ஜெயபாலன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

“போரில் தோற்றாலும் நாங்கள் எழுச்சிமிக்கவர்கள்!”

முக்கியமான ஈழத்தமிழ்க்கவிஞர். ஆனால் பெரும்பாலான தமிழகத் தமிழர்களுக்கு அவரை ‘ஆடுகளம்’ பேட்டைக் காரனாகத்தான் தெரியும். 

94.jpg?rect=0,14,889,500&w=700&auto=form

வ.ஐ.ச.ஜெயபாலன்

லையாளம், ஆங்கிலம் என்று மொழி எல்லைகளைத் தாண்டி நடித்துக்கொண்டிருக்கும் வ.ஐ.ச.ஜெயபாலனிடம் பேசினேன்.

“தமிழில் ‘ரீங்காரம்’ என்றொரு படமும் மலையாளத்தில் ஒரு படமும் ரிலீஸுக்குக் காத்திருக்கின்றன. ஆங்கிலத்தில் ஒரு நோர்வேஜியன் படமும் கைவசம் இருக்கிறது. நான் முழுநேர நடிகன் கிடையாது. பொதுவாகவே நான் படங்களைத் தேடிப் போவதில்லை. நல்ல வாய்ப்புகள் வரும்போது அதை ஏற்க மறுப்பதும் இல்லை. எந்த அரிசியில் என் பெயர் எழுதியிருக்கிறதோ, அந்த அரிசி எனக்குக் கிடைக்கும் என்பதில் நம்பிக்கை கொண்டவன் நான்.’’

“உங்கள் இலக்கிய வாழ்க்கை, அரசியல் வாழ்க்கையின் தொடக்கம் எப்படி நிகழ்ந்தது?”

“என் மூதாதையர் ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போராடியவர்கள். அதனாலோ என்னவோ எனக்கும் இயல்பாகவே எதிர்ப்புணர்வு இருந்தது. அதனால் குடும்பத்துக்கும் எனக்கும் முரண்பாடு ஏற்பட்டது. சமூக நீதிக்கான என் போராட்ட வாழ்வில் அப்பா முரண்பட்ட நேரத்தில் அம்மாதான் எனக்குத் துணையாக நின்றார். 1976-ஆம் ஆண்டு இலங்கையில் உள்ள கல்லூரியில் பி.ஏ எக்கனாமிக்ஸில் சேர்ந்தேன். கல்லூரியில் சேர்ந்த பத்தாவது நாளே கவுன்சிலர் தேர்தல் நடந்தது. மாணவர்கள் தலைவரானேன். படிப்பு முடித்த பிறகு, ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டேன். பிறகு, ராணுவப் புவியியல் தொடர்பாகப் பல விடுதலை அமைப்புகளின் விவாதங்களில் பங்குபற்றினேன்.

இந்தியப் பிரதமராக இந்திரா காந்தி இருந்தபோது அவர் தன்னைச் சுற்றி தமிழ் ஆலோசகர்களை வைத்திருந்தால் தொடர்பாடல் சிக்கல் இருக்கவில்லை. அதனால் ஈழப்போராட்டத்தின் நிலைமை சுமுகமாக இருந்தது. ராஜீவ் காந்தி பிரதமராக வந்தபோது அவ்வளவு இலகுவாக இல்லை. அவர் தன் நண்பர்களைத்தான் பக்கத்தில் வைத்திருந்தார். இருபக்கத்திலும் ஆலோசகர்கள் தொடர்பாடல் வெற்றிடம் இருந்தது. அதனால் ஏற்பட்ட தொடர்புச் சிக்கல்கள் பாதகமான கெடுதல்களை ஏற்படுத்திவிட்டன. ராஜீவ் ஆட்சிக்காலத்துக்குப் பிறகு ஈழப்போராட்டத்தில் பல பின்னடைவுகள். 2009-ல் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதுடன் போராட்டம் முடிவுக்கு வந்தது. 

ஈழப்போராட்டம் நடந்துகொண்டிருந்த காலத்தில் துரதிர்ஷ்டவசமாகப் போராளிகளுக்கும் முஸ்லிம் மக்களுக்கும் இடையில் முரண்பாடுகள் அதிகரித்தன. குறிப்பாக, கிழக்கு மாகாணத்தில் தமிழர்களும் முஸ்லிம்களும் இருப்பதால் நட்பும் பகையுமான சூழல் இருந்தது. விடுதலைப்புலிகள் யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம்களை வெளியேற்றினார்கள். என்னால் அதைத் தாங்க முடியவில்லை. அந்தச் சூழலில் முஸ்லிம் அகதிகளுடைய மாநாட்டில் அழுதுகொண்டே ஒரு கவிதை வாசித்தேன். ‘அழியட்டும் எனது இனம், அழியட்டும் எனது மொழி, அழியட்டும் எனது தமிழ், அழியட்டும் அழியட்டும்’ என்று கவிதை வாசித்து என் ஆற்றாமையைப் பதிவு செய்தேன். என் இலக்கியத்தையும் ஈழப்போராட்ட நிகழ்வுகளையும் பிரிக்க முடியாது.”

‘`ஈழப்போர் முடிவுக்கு வந்து பத்து ஆண்டுகள் ஆகியிருக்கின்றன. ஈழத்தில் தற்போது என்னென்ன மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதாக நினைக்கிறீர்கள்?’’

“பாரி மன்னனுடைய கதைதான் எங்களுடைய வாழ்க்கையும். சேர சோழ பாண்டியர்களில் யாருடனாவது பாரி சமரசம் செய்துகொண்டிருந்திருந்தால், தமிழ்நாட்டின் வரலாறு மாறியிருக்கும். நிலப்பிரபுத்துவம், மன்னராட்சி வளர்ச்சி பெற்ற தருணத்தில் அவற்றுக்கு எதிராகப் போராடி அழிந்துகொண்டிருந்த, ஓர் ஆதிவாசி சமூகத்தினுடைய மனோபாவம் பணிந்து போவதில்லை, விட்டுக்கொடுப்பதில்லை. அதுதான் எங்களுடைய சிக்கலாகவும் இருந்தது. அதனால்தான், நாங்கள் போரில் தோற்றும் இன்னும் எழுச்சி மிக்கவர்களாகவே இருக்கிறோம். 

இப்போது தமிழர் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தர் தமிழர்களை ஒருங்கிணைத்து, இந்தியா, மேற்கு அமெரிக்கா போன்ற நாடுகளின் உதவியோடு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து மெதுவாகத் தமிழர் வாழ்க்கையைச் செம்மைப்படுத்திட முயற்சி செய்கிறார். அவரது முயற்சிகளை இந்தியா ஆதரிக்க வேண்டும். ஆனால், தலைமையில் இருக்கும்போது விமர்சனங்கள் என்பது வரத்தானே செய்யும்! அவர்மீதும் பலருக்கும் பல விமர்சனங்கள் இருக்கின்றன. ஒரு வீட்டில் மணப்பறை ஒலிக்க, இன்னொரு வீட்டில் பிணப்பறை ஒலிப்பதுதான் வாழ்க்கை. எல்லா வீட்டிலும் பிணப்பறை ஒலித்த போரின் பாதிப்பிலிருந்து மீண்டு வருவது அவ்வளவு இலகுவல்ல. மெல்ல மெல்ல மீண்டு வருகிறோம்.’’ 

“தமிழகத்தில் நீங்கள் இத்தனை வருடங்கள் தங்கியிருக்கக் காரணமாக இருந்த நிகழ்வுகள்?’’

“1984 - 1987 காலப் பகுதியில் சென்னையிலும் டெல்லியிலும் இருந்தேன். 1987-ஆம் ஆண்டு என் உயிருக்கு ஆபத்து இருந்த காலகட்டத்தில் தமிழக மற்றும் நார்வீஜிய பத்திரிகையாளர்களது உதவியுடன் நார்வேக்கு தப்பிச் சென்றேன். பின்பு இலங்கைக்குத் திரும்பி வந்தேன். மீண்டும் ராணுவம் என்னைக் கடத்த முயன்றதால் இலங்கையில் இருந்து வெளியேற நேர்ந்தது. அங்கிருந்து தப்பி மீண்டும் நார்வே சென்றேன். 1992 - 2005 வரை நார்வே, இந்தியா, இலங்கை என மாறி மாறிப் பயணம் செய்யவேண்டி இருந்தது.  பிறகு, தமிழகத்திலேயே தங்கிவிட்டேன்.”

“ஈழப்போராட்டத்தில் புலிகளும் தவறுகள் இழைத்ததாகப் பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டனவே?”

“அர்ப்பணிப்பும், போர்க்குணமும் உள்ளவர்களைத்தான் போராளிகள் என்கிறோம். அவர்கள் துரோகம் செய்வதில்லை; தவறுகள் செய்கிறார்கள். பாரி மன்னன் வீரனாக வாழ்ந்தான். ஆனால், பறம்பு மக்களைக் காப்பாற்றி அவர்களை வாழ வைக்கவேண்டியதுதான் அவனது கடமை. அந்தக் கடமையைச் செய்வதாக இருந்தால், சோழனுடனோ சேரனுடனோ பாண்டியனுடனோ சமரசத்திற்குச் சென்றிருக்க வேண்டும். அதை அவன் செய்யவில்லை.

பாரி மன்னன்மீதான எல்லாப் புகழுக்கும் உரியவர், பிரபாகரன். அதேமாதிரி, பாரி மன்னன்மீது எதிர்மறையாக வைக்கக்கூடிய எல்லா விமர்சனங்களுக்கும் பிரபாகரன் உரியவர்தான். ஏனென்றால், பணியாமை என்கிற பாரி மன்னனின் வாழ்வும் லட்சியமும் பிரபாகரனுக்கும் உரியது. ஆனால், அரசியல் ரீதியாக மக்களைப் பாதுகாக்க, பணியாமையை விட்டுக்கொடுத்து சமரசம் செய்திருக்க வேண்டும். அரசியல் ரீதியாக மக்களைப் பாதுகாக்க, எதிரியைத் தவிர்த்து ஏனையவர்களுடன், அதாவது இந்தியா மற்றும் மேற்கு நாடுகளிடம் சமரசம் செய்திருக்க வேண்டும் என்கிற விமர்சனங்கள் உள்ளன.”

“இந்தியாவில் ஈழத்தமிழர்க ளுக்கான வாழ்க்கையும் பாதுகாப்பும் எப்படி இருக்கின்றன என்று கருதுகிறீர்கள்?’’

“தமிழ்நாட்டின் அக்கறையால் இந்தியா ஈழத்தமிழர்கள்மீது அக்கறை செலுத்தும் சூழல் உருவாகியிருக்கிறது.மேற்கு நாடுகளில் பாராளுமன்ற உறுப்பினர்கள் மட்டத்தில் புலம் பெயர்ந்த தமிழர்கள் மேம்படுவதும் ஈழத்தமிழர்களுக்கு புதிய பலமாக உருவாகிறது.”

“தமிழக அரசிடமிருந்து ஈழ அகதிகள் எதிர்பார்க்கும் உதவிகள் என்னென்ன?’’ 

“அகதி முகாமில் இருப்பவர்களுக்கு உயர்கல்வி வரை இட ஒதுக்கீடு மற்றும் சலுகைகள் கிடைக்க வேண்டும். இந்த இட ஒதுக்கீடு தனியார் துறையிலும் வேண்டும். அவர்கள் கால்நூற்றாண்டுக் காலத்துக்கும் மேலாகத் தமிழகத்தில் இருந்திருக்கிறார்கள். அவர்கள் ஈழத்துக்குத் திரும்பிப்போக விரும்பினால்கூட, விசா இல்லாமல் இருந்ததற்காக, பெருந்தொகை அபராதம் விதிக்கப்படுகிறது. மத்திய அரசு கருணை கூர்ந்து, திரும்பிச் செல்ல விரும்புகிறவர்களுக்கான வழிகளை இலகுவாக்க வேண்டும். திரும்பிப்போக விரும்பாதவர்களுக்குக் குடியுரிமை கொடுப்பது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் ஆலோசிக்க வேண்டும்.’’ 

“தமிழ் எழுத்தாளர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியிருக்கிறார்களே... எழுத்தாளராக உங்களின் பார்வை?’’

“எல்லா எழுத்தாளர்களும் என் நண்பர்கள்தான். ரவிக்குமார் என் நெருங்கிய நண்பர். சாதியம் பற்றிய என்னுடைய கட்டுரைகள், எழுத்துகளைப் பிரசுரித்தவர். கனிமொழியும் தமிழச்சியும் என் இலக்கியத் தோழியர்கள். சந்திக்காவிட்டாலும் சு.வெங்கடேசனும் எனக்கு அப்படித்தான். ஜோதிமணியையும் சந்தித்ததில்லை. இவர்கள் தமிழர்களின் உண்மையான முகமாக நாடாளுமன்றத்தில் தோன்றும்போதெல்லாம் புகழோடு தோன்றுவார்கள் என்கிற நம்பிக்கை இருக்கிறது.

மீண்டும் சிதம்பர பூமியில் நந்தன் திரும்பத் தோன்றி, அவர் பாடிய இசை ஒலிக்கிற மாதிரியான வரலாற்று நிகழ்வாக திருமாவளவனுடைய வெற்றியைப் பார்க்கிறேன். கட்சி பேதம் இல்லாமல் தமிழ்நாடு இவர்களை வரவேற்க வேண்டும் என்று நினைக்கிறேன். எனக்குத் தெரிந்து தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் யாவும் ஈழத்தமிழர்களின் வாழ்வுரிமைக்கு, மேம்பாட்டுக்கு ஆதரவு தருகின்றன. இதற்குத் தமிழக, இந்திய எழுத்தாளர் மற்றும் பத்திரிகையாளர் பலரும் பங்களித்துள்ளார்கள். அவர்கள் நாடாளுமன்றம் போவதில் எங்களுக்கு மகிழ்ச்சியே’’

“ராஜராஜ சோழன் பற்றி பா.இரஞ்சித் பேசியதை எப்படிப் பார்க்கிறீர்கள்?’’

“ராஜராஜனின் மகிமைகளைக் கொச்சைப்படுத்தக் கூடாது. ஆனால் ஆதாரபூர்வமான வரலாற்று விமர்சனங்களுக்கு யாரும் விதிவிலக்கல்ல என்பதையும் நாம் உணர வேண்டும். இரஞ்சித், காலம் காலமாகத் தமிழ்நாட்டில் ஒடுக்கப்பட்ட சமூகத்துக்காகப் போராடுகிறவர். இத்தகைய பின்னணியில் அவர் தனது விமர்சனத்தில் அதீதமாகக் கோபப்பட்டால், அதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அதை, உணர்த்தும்போது இரஞ்சித் ஒரு நியாயமான சமரசத்திற்கு வரக்கூடியவர்தான். அதை யாரும் முன்னெடுத்ததாகத் தெரியவில்லை. ராஜராஜ சோழன் ஆட்சிக் காலத்தில் நடந்த நிறைகளும் குறைகளும் நமது வரலாற்று நாணயத்தின் இரண்டு பக்கங்களல்லவா? அறிவுபூர்வமாக விமர்சிக்காமல் கோபத்தில் விமர்சிப்பதும் தவறு. இரஞ்சித்துக்கு எடுத்துச் சொல்வதை விட்டுவிட்டு, யுத்த சன்னதம் கொள்வது, ஆதிக்க மனப்பான்மையெனப் புரிந்துகொள்ளப்படும். காவிரியைக் காப்பாற்றிய சோழனை யாரும் வரிந்து கட்டிக்கொண்டு காப்பாற்ற வேண்டி யதில்லை. ராஜராஜனைக் காப்பாற்றவும் வேண்டாம்; கொச்சைப்படுத்தவும் வேண்டாம்”

“ஈழ ஆதரவாளர்களான வைகோ, சீமான் - இருவருக்கும் இடையிலான முரண்பாடுகள் பற்றி..?’’

“ஈழத்தமிழருக்கும் நம் சகோதர முஸ்லிம்களுக்கும் அவர்கள் இரண்டு பேருமே நண்பர்கள்தான். அவர்களுடைய முரண்பாடுகளை, ஈழம்- தமிழகம்- இந்தியாவின் ஒருங்கிணைந்த நலன்களுக்காக அவர்கள் மீள்பரிசீலனை செய்ய வேண்டும். விட்டுக்கொடுப்புடன் பேசி பழைய நட்பை மீட்டெடுக்க வேண்டும்.’’

https://www.vikatan.com/news/general-news/v-i-s-jayapalan-exclusive-interview?fbclid=IwAR33V2VEQs2h39Em4SwH7OaCV_c53ueGS7DEM3FlrHj78B1vnNy4v88VnG4

  • கருத்துக்கள உறவுகள்

கவிஞர், முழு இணைப்பும் கொடுக்கப்பட வேண்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அன்புக்குரிய nunavilan. அனுப்பிய இணைப்பு போதியதில்லையா? லிங் கிளிக் பண்ணி வாசிக்க முடியவில்லையா? 

நான் சரியான இணைய தொழில்நுட்ப முட்டாள் நண்பா. லிங் மீண்டும் இணைக்க வேண்டுமா?

  • கருத்துக்கள உறவுகள்

Candid ஆன நேர்காணல் கவிஞர்! யாரும் மறுக்க முடியாத கருத்துகளை ராஜராஜசோழன் பற்றியும் பிரபாகரன் பற்றியும் சொல்லியிருக்கிறீர்கள்! 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் நன்றி  Justin, உங்களைபோன்ற அன்புள்ளங்களின் ஆதரவு வார்த்தைகள்தான் என்னுடைய ஆதாரமாக இருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, poet said:

கேள்வி உங்கள் தனிப்பட்ட அரசியல் இலக்கிய வாழ்க்கை பற்றியது.
இதுக்குள் நீங்கள் மொட்டையாக புலிகள் முஸ்லிம்களை யாழில் இருந்து வெளியேற்றினார்கள் 
என்றால் முஸ்லிம்கள் என்ன பணம்காய் பறித்துக்கொண்டா இருந்தார்கள்? 
ஒன்றில் நீங்கள் முழுமையாக நடந்ததை கூறியிருக்க வேண்டும் 
அல்லது உங்கள் கேள்விக்கு உகந்த தனிப்பட்ட வாழ்க்கை பற்றி கூறியிருக்கலாம். 

போராளிகள் துரோகம் செய்வதில்லை 
கருணா அம்மான் செய்வார் ...

நீங்கள் தேவையில்லாது இந்த இடத்தில் புலிகள் மீது சேறடித்து எமக்கு துரோகம் செய்ததாகவே 
எனக்கு படுகிறது. 

யாழில் இருந்து வெளிறப்பட்ட முஸ்லீம் வீட்டில் கம்பகாவில்
நான் கூட்டுப்படை குண்டு தாக்குதல்   ரஞ்சன் வியரட்ன குண்டுத்தாக்குதல் நடந்த போது 
சென்று ஒழித்து கொள்வது .... அவர்களுக்கு நடந்தது தெரியும் அதைப்பற்றி ஒருபோதும் 
தலை நிமிர்ந்து என்னுடன் பேசியதில்லை. தங்கள் பொருட்களை வாழ்வாதாரம் வேண்டி கொண்டுசெல்ல 
எம்மை விட்டிருக்கலாம் என்று மட்டுமே எனக்கு சொல்வார்கள் ... வெளியேற்றியது தவறு என்று ஒருபோதும் சொன்னதில்லை காரணம் அவர்களுக்கு நன்று தெரியும். 

நீங்கள்தான் வாய்ப்பன் மா மாதிரி வைச்சு இழுக்கிறீர்கள் 
விமர்சனம் நல்லது ..... ஒருபக்க நியாயத்தை இருட்டடித்து செய்வதுதான் புரியவில்லை 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி ஜஸ்ரின், நன்றி நுணாவிலான். நன்றி Maruthankerny. நான் இன்னும் அரசியலில் மாணவன்தான். ஆதலால் Maruthankerny சொல்லுவதை பற்றியும் சிந்திப்பேன். நான் வன்னியில் பேசாத எதையும் சொல்லவில்லை. என் பேச்சு சுதந்திரத்தை அவர்கள் எப்பவும் கொச்சைப்படுத்தியதில்லை. எல்லாம் வன்னியில் கலந்துரையாடியவைகள்தான். எனினும் உங்களுக்கும் புதிய கருத்துக்கள் இருக்கும் என்பதை மறுக்கவில்லை.   கருத்துக்கள் பல. உங்களிடமிருந்தும் கற்றுக்கொள்ள  முயற்சிக்கிறேன். அது என் இயல்பு.   உங்கள் கருத்துக்கும் நன்றி Maruthankerny.   

Edited by poet

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Maruthankerny said:

மருதர், அவரது தனிப்பட்ட வாழ்க்கையை அவர் முஸ்லிம் தமிழ் மக்களின் அரசியலோடு வைத்திருக்கிறார். அதனால் முஸ்லிம் வெளியேற்றம் பற்றியும் அவரது கருத்தை சொல்லலாம் தானே? ஒருவர் அபிப்பிராயம் சொல்வதாலேயே துரோகம் செய்து விட முடியுமா? துரோகம் என்பதற்கு இந்த வரைவிலக்கணத்தை வைத்துக் கொண்டு தானே புலிகளுக்கெதிராக ஆயுதமே தூக்காத அரசியலாளர்கள், புத்திஜீவிகள் கொல்லப்பட்டார்கள்? இந்த ஊசிப் போன துரோகி ஸ்ராண்டர்ட் இன்னும் உங்களுக்குத் தவறென்று தெரியவில்லையா?

 நீங்கள் தங்கியிருந்த ஒரு முஸ்லிம் வீட்டுக் காரன் மட்டும் தானா நீங்கள் சந்தித்த ஒரேயொரு முஸ்லிம் நபர்? புத்தளம் மாவட்டத்தில் இடம்பெயர்ந்து வாழ்ந்த வடக்கு முஸ்லிம்களிடம் போய் "நான் யாழ்ப்பாணத் தமிழன்" என்று அறிமுகம் வைத்துப் பேசிப்பார்த்திருக்கிறீர்களா? நீர்கொழும்பு பயங்கரவாதத் தடுப்புப் பிரிவில் பணிசெய்த இளைய விசாரணையாளர்கள் எஙகே பிறந்தவர்கள் என்று தேடிப் பார்த்திருக்கிறீர்களா? ரிஷாட் எப்படி உருவானார் என்றாவது தெரியுமா? பதில் தேவையில்லை! உங்கள் tunnel vision  ஐச் சுட்டிக் காட்ட மட்டுமே கேட்கிறேன். 

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, poet said:

நன்றி ஜஸ்ரின், நன்றி நுணாவிலான். நன்றி Maruthankerny. நான் இன்னும் அரசியலில் மாணவன்தான். ஆதலால் Maruthankerny சொல்லுவதை பற்றியும் சிந்திப்பேன். நான் வன்னியில் பேசாத எதையும் சொல்லவில்லை. என் பேச்சு சுதந்திரத்தை அவர்கள் எப்பவும் கொச்சைப்படுத்தியதில்லை. எல்லாம் வன்னியில் கலந்துரையாடியவைகள்தான். எனினும் உங்களுக்கும் புதிய கருத்துக்கள் இருக்கும் என்பதை மறுக்கவில்லை.   கருத்துக்கள் பல. உங்களிடமிருந்தும் கற்றுக்கொள்ள  முயற்சிக்கிறேன். அது என் இயல்பு.   உங்கள் கருத்துக்கும் நன்றி Maruthankerny.   

உங்களுடைய கருத்து சுதந்திரத்தில் யாரும் தலையிடவில்லை 
தலையிடவும் முடியாது......

கிழக்கை சேர்ந்தவர் என்று எழுதிக்கொண்டு ....
அத்திபட்டிபோல ஒரு தமிழ்  கிராமமே அழிக்க பட்டது 
இன்றும் வீரமுனை என்றால் மனிதனாக இருந்தால் அதிர்ந்துதான் போவான்.
இதனை கொடுமைகளைகளையும் லாபகமாக மறைத்துக்கொண்டு 

யாழில் இருந்து வெளியேற்றினார்கள் என்று சுருதி வைத்து வீணை வாசிப்பது 
ஒரு கருத்து இல்லை  வீண் அவதூறு.
கண்ணுக்கு கண் பழிக்கு பழி என்று கூட புலிகள் இருக்கவில்லை 
எந்த முஸ்லீம் மக்கள் மீதும் தாக்குதல் செய்யவில்லை 
காத்தான்குடி பள்ளிவாசல் குண்டு வெடிப்பில் எனக்கு இப்போதும் சந்தேகம் உண்டு 
காரணம் பிரிந்த பின்பும் கருணா இது பற்றி பேசியதில்லை.

எம்மோடு கூடியிருந்து கொண்டு செய்த துரோகத்தின் உச்சம் 
யாழில் இருந்து வெளியேறிய ஒவ்வரு ஆறாறிவு உள்ள முஸ்லிமுக்கும் தெரியும்.

  • கருத்துக்கள உறவுகள்
On 7/11/2019 at 5:57 AM, poet said:

“போரில் தோற்றாலும் நாங்கள் எழுச்சிமிக்கவர்கள்!”

முக்கியமான ஈழத்தமிழ்க்கவிஞர். ஆனால் பெரும்பாலான தமிழகத் தமிழர்களுக்கு அவரை ‘ஆடுகளம்’ பேட்டைக் காரனாகத்தான் தெரியும். 

94.jpg?rect=0,14,889,500&w=700&auto=form

வ.ஐ.ச.ஜெயபாலன்

லையாளம், ஆங்கிலம் என்று மொழி எல்லைகளைத் தாண்டி நடித்துக்கொண்டிருக்கும் வ.ஐ.ச.ஜெயபாலனிடம் பேசினேன்.

“தமிழில் ‘ரீங்காரம்’ என்றொரு படமும் மலையாளத்தில் ஒரு படமும் ரிலீஸுக்குக் காத்திருக்கின்றன. ஆங்கிலத்தில் ஒரு நோர்வேஜியன் படமும் கைவசம் இருக்கிறது. நான் முழுநேர நடிகன் கிடையாது. பொதுவாகவே நான் படங்களைத் தேடிப் போவதில்லை. நல்ல வாய்ப்புகள் வரும்போது அதை ஏற்க மறுப்பதும் இல்லை. எந்த அரிசியில் என் பெயர் எழுதியிருக்கிறதோ, அந்த அரிசி எனக்குக் கிடைக்கும் என்பதில் நம்பிக்கை கொண்டவன் நான்.’’

“உங்கள் இலக்கிய வாழ்க்கை, அரசியல் வாழ்க்கையின் தொடக்கம் எப்படி நிகழ்ந்தது?”

“என் மூதாதையர் ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போராடியவர்கள். அதனாலோ என்னவோ எனக்கும் இயல்பாகவே எதிர்ப்புணர்வு இருந்தது. அதனால் குடும்பத்துக்கும் எனக்கும் முரண்பாடு ஏற்பட்டது. சமூக நீதிக்கான என் போராட்ட வாழ்வில் அப்பா முரண்பட்ட நேரத்தில் அம்மாதான் எனக்குத் துணையாக நின்றார். 1976-ஆம் ஆண்டு இலங்கையில் உள்ள கல்லூரியில் பி.ஏ எக்கனாமிக்ஸில் சேர்ந்தேன். கல்லூரியில் சேர்ந்த பத்தாவது நாளே கவுன்சிலர் தேர்தல் நடந்தது. மாணவர்கள் தலைவரானேன். படிப்பு முடித்த பிறகு, ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டேன். பிறகு, ராணுவப் புவியியல் தொடர்பாகப் பல விடுதலை அமைப்புகளின் விவாதங்களில் பங்குபற்றினேன்.

இந்தியப் பிரதமராக இந்திரா காந்தி இருந்தபோது அவர் தன்னைச் சுற்றி தமிழ் ஆலோசகர்களை வைத்திருந்தால் தொடர்பாடல் சிக்கல் இருக்கவில்லை. அதனால் ஈழப்போராட்டத்தின் நிலைமை சுமுகமாக இருந்தது. ராஜீவ் காந்தி பிரதமராக வந்தபோது அவ்வளவு இலகுவாக இல்லை. அவர் தன் நண்பர்களைத்தான் பக்கத்தில் வைத்திருந்தார். இருபக்கத்திலும் ஆலோசகர்கள் தொடர்பாடல் வெற்றிடம் இருந்தது. அதனால் ஏற்பட்ட தொடர்புச் சிக்கல்கள் பாதகமான கெடுதல்களை ஏற்படுத்திவிட்டன. ராஜீவ் ஆட்சிக்காலத்துக்குப் பிறகு ஈழப்போராட்டத்தில் பல பின்னடைவுகள். 2009-ல் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதுடன் போராட்டம் முடிவுக்கு வந்தது. 

ஈழப்போராட்டம் நடந்துகொண்டிருந்த காலத்தில் துரதிர்ஷ்டவசமாகப் போராளிகளுக்கும் முஸ்லிம் மக்களுக்கும் இடையில் முரண்பாடுகள் அதிகரித்தன. குறிப்பாக, கிழக்கு மாகாணத்தில் தமிழர்களும் முஸ்லிம்களும் இருப்பதால் நட்பும் பகையுமான சூழல் இருந்தது. விடுதலைப்புலிகள் யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம்களை வெளியேற்றினார்கள். என்னால் அதைத் தாங்க முடியவில்லை. அந்தச் சூழலில் முஸ்லிம் அகதிகளுடைய மாநாட்டில் அழுதுகொண்டே ஒரு கவிதை வாசித்தேன். ‘அழியட்டும் எனது இனம், அழியட்டும் எனது மொழி, அழியட்டும் எனது தமிழ், அழியட்டும் அழியட்டும்’ என்று கவிதை வாசித்து என் ஆற்றாமையைப் பதிவு செய்தேன். என் இலக்கியத்தையும் ஈழப்போராட்ட நிகழ்வுகளையும் பிரிக்க முடியாது.”

‘`ஈழப்போர் முடிவுக்கு வந்து பத்து ஆண்டுகள் ஆகியிருக்கின்றன. ஈழத்தில் தற்போது என்னென்ன மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதாக நினைக்கிறீர்கள்?’’

“பாரி மன்னனுடைய கதைதான் எங்களுடைய வாழ்க்கையும். சேர சோழ பாண்டியர்களில் யாருடனாவது பாரி சமரசம் செய்துகொண்டிருந்திருந்தால், தமிழ்நாட்டின் வரலாறு மாறியிருக்கும். நிலப்பிரபுத்துவம், மன்னராட்சி வளர்ச்சி பெற்ற தருணத்தில் அவற்றுக்கு எதிராகப் போராடி அழிந்துகொண்டிருந்த, ஓர் ஆதிவாசி சமூகத்தினுடைய மனோபாவம் பணிந்து போவதில்லை, விட்டுக்கொடுப்பதில்லை. அதுதான் எங்களுடைய சிக்கலாகவும் இருந்தது. அதனால்தான், நாங்கள் போரில் தோற்றும் இன்னும் எழுச்சி மிக்கவர்களாகவே இருக்கிறோம். 

இப்போது தமிழர் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தர் தமிழர்களை ஒருங்கிணைத்து, இந்தியா, மேற்கு அமெரிக்கா போன்ற நாடுகளின் உதவியோடு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து மெதுவாகத் தமிழர் வாழ்க்கையைச் செம்மைப்படுத்திட முயற்சி செய்கிறார். அவரது முயற்சிகளை இந்தியா ஆதரிக்க வேண்டும். ஆனால், தலைமையில் இருக்கும்போது விமர்சனங்கள் என்பது வரத்தானே செய்யும்! அவர்மீதும் பலருக்கும் பல விமர்சனங்கள் இருக்கின்றன. ஒரு வீட்டில் மணப்பறை ஒலிக்க, இன்னொரு வீட்டில் பிணப்பறை ஒலிப்பதுதான் வாழ்க்கை. எல்லா வீட்டிலும் பிணப்பறை ஒலித்த போரின் பாதிப்பிலிருந்து மீண்டு வருவது அவ்வளவு இலகுவல்ல. மெல்ல மெல்ல மீண்டு வருகிறோம்.’’ 

“தமிழகத்தில் நீங்கள் இத்தனை வருடங்கள் தங்கியிருக்கக் காரணமாக இருந்த நிகழ்வுகள்?’’

“1984 - 1987 காலப் பகுதியில் சென்னையிலும் டெல்லியிலும் இருந்தேன். 1987-ஆம் ஆண்டு என் உயிருக்கு ஆபத்து இருந்த காலகட்டத்தில் தமிழக மற்றும் நார்வீஜிய பத்திரிகையாளர்களது உதவியுடன் நார்வேக்கு தப்பிச் சென்றேன். பின்பு இலங்கைக்குத் திரும்பி வந்தேன். மீண்டும் ராணுவம் என்னைக் கடத்த முயன்றதால் இலங்கையில் இருந்து வெளியேற நேர்ந்தது. அங்கிருந்து தப்பி மீண்டும் நார்வே சென்றேன். 1992 - 2005 வரை நார்வே, இந்தியா, இலங்கை என மாறி மாறிப் பயணம் செய்யவேண்டி இருந்தது.  பிறகு, தமிழகத்திலேயே தங்கிவிட்டேன்.”

“ஈழப்போராட்டத்தில் புலிகளும் தவறுகள் இழைத்ததாகப் பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டனவே?”

“அர்ப்பணிப்பும், போர்க்குணமும் உள்ளவர்களைத்தான் போராளிகள் என்கிறோம். அவர்கள் துரோகம் செய்வதில்லை; தவறுகள் செய்கிறார்கள். பாரி மன்னன் வீரனாக வாழ்ந்தான். ஆனால், பறம்பு மக்களைக் காப்பாற்றி அவர்களை வாழ வைக்கவேண்டியதுதான் அவனது கடமை. அந்தக் கடமையைச் செய்வதாக இருந்தால், சோழனுடனோ சேரனுடனோ பாண்டியனுடனோ சமரசத்திற்குச் சென்றிருக்க வேண்டும். அதை அவன் செய்யவில்லை.

பாரி மன்னன்மீதான எல்லாப் புகழுக்கும் உரியவர், பிரபாகரன். அதேமாதிரி, பாரி மன்னன்மீது எதிர்மறையாக வைக்கக்கூடிய எல்லா விமர்சனங்களுக்கும் பிரபாகரன் உரியவர்தான். ஏனென்றால், பணியாமை என்கிற பாரி மன்னனின் வாழ்வும் லட்சியமும் பிரபாகரனுக்கும் உரியது. ஆனால், அரசியல் ரீதியாக மக்களைப் பாதுகாக்க, பணியாமையை விட்டுக்கொடுத்து சமரசம் செய்திருக்க வேண்டும். அரசியல் ரீதியாக மக்களைப் பாதுகாக்க, எதிரியைத் தவிர்த்து ஏனையவர்களுடன், அதாவது இந்தியா மற்றும் மேற்கு நாடுகளிடம் சமரசம் செய்திருக்க வேண்டும் என்கிற விமர்சனங்கள் உள்ளன.”

“இந்தியாவில் ஈழத்தமிழர்க ளுக்கான வாழ்க்கையும் பாதுகாப்பும் எப்படி இருக்கின்றன என்று கருதுகிறீர்கள்?’’

“தமிழ்நாட்டின் அக்கறையால் இந்தியா ஈழத்தமிழர்கள்மீது அக்கறை செலுத்தும் சூழல் உருவாகியிருக்கிறது.மேற்கு நாடுகளில் பாராளுமன்ற உறுப்பினர்கள் மட்டத்தில் புலம் பெயர்ந்த தமிழர்கள் மேம்படுவதும் ஈழத்தமிழர்களுக்கு புதிய பலமாக உருவாகிறது.”

“தமிழக அரசிடமிருந்து ஈழ அகதிகள் எதிர்பார்க்கும் உதவிகள் என்னென்ன?’’ 

“அகதி முகாமில் இருப்பவர்களுக்கு உயர்கல்வி வரை இட ஒதுக்கீடு மற்றும் சலுகைகள் கிடைக்க வேண்டும். இந்த இட ஒதுக்கீடு தனியார் துறையிலும் வேண்டும். அவர்கள் கால்நூற்றாண்டுக் காலத்துக்கும் மேலாகத் தமிழகத்தில் இருந்திருக்கிறார்கள். அவர்கள் ஈழத்துக்குத் திரும்பிப்போக விரும்பினால்கூட, விசா இல்லாமல் இருந்ததற்காக, பெருந்தொகை அபராதம் விதிக்கப்படுகிறது. மத்திய அரசு கருணை கூர்ந்து, திரும்பிச் செல்ல விரும்புகிறவர்களுக்கான வழிகளை இலகுவாக்க வேண்டும். திரும்பிப்போக விரும்பாதவர்களுக்குக் குடியுரிமை கொடுப்பது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் ஆலோசிக்க வேண்டும்.’’ 

“தமிழ் எழுத்தாளர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியிருக்கிறார்களே... எழுத்தாளராக உங்களின் பார்வை?’’

“எல்லா எழுத்தாளர்களும் என் நண்பர்கள்தான். ரவிக்குமார் என் நெருங்கிய நண்பர். சாதியம் பற்றிய என்னுடைய கட்டுரைகள், எழுத்துகளைப் பிரசுரித்தவர். கனிமொழியும் தமிழச்சியும் என் இலக்கியத் தோழியர்கள். சந்திக்காவிட்டாலும் சு.வெங்கடேசனும் எனக்கு அப்படித்தான். ஜோதிமணியையும் சந்தித்ததில்லை. இவர்கள் தமிழர்களின் உண்மையான முகமாக நாடாளுமன்றத்தில் தோன்றும்போதெல்லாம் புகழோடு தோன்றுவார்கள் என்கிற நம்பிக்கை இருக்கிறது.

மீண்டும் சிதம்பர பூமியில் நந்தன் திரும்பத் தோன்றி, அவர் பாடிய இசை ஒலிக்கிற மாதிரியான வரலாற்று நிகழ்வாக திருமாவளவனுடைய வெற்றியைப் பார்க்கிறேன். கட்சி பேதம் இல்லாமல் தமிழ்நாடு இவர்களை வரவேற்க வேண்டும் என்று நினைக்கிறேன். எனக்குத் தெரிந்து தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் யாவும் ஈழத்தமிழர்களின் வாழ்வுரிமைக்கு, மேம்பாட்டுக்கு ஆதரவு தருகின்றன. இதற்குத் தமிழக, இந்திய எழுத்தாளர் மற்றும் பத்திரிகையாளர் பலரும் பங்களித்துள்ளார்கள். அவர்கள் நாடாளுமன்றம் போவதில் எங்களுக்கு மகிழ்ச்சியே’’

“ராஜராஜ சோழன் பற்றி பா.இரஞ்சித் பேசியதை எப்படிப் பார்க்கிறீர்கள்?’’

“ராஜராஜனின் மகிமைகளைக் கொச்சைப்படுத்தக் கூடாது. ஆனால் ஆதாரபூர்வமான வரலாற்று விமர்சனங்களுக்கு யாரும் விதிவிலக்கல்ல என்பதையும் நாம் உணர வேண்டும். இரஞ்சித், காலம் காலமாகத் தமிழ்நாட்டில் ஒடுக்கப்பட்ட சமூகத்துக்காகப் போராடுகிறவர். இத்தகைய பின்னணியில் அவர் தனது விமர்சனத்தில் அதீதமாகக் கோபப்பட்டால், அதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அதை, உணர்த்தும்போது இரஞ்சித் ஒரு நியாயமான சமரசத்திற்கு வரக்கூடியவர்தான். அதை யாரும் முன்னெடுத்ததாகத் தெரியவில்லை. ராஜராஜ சோழன் ஆட்சிக் காலத்தில் நடந்த நிறைகளும் குறைகளும் நமது வரலாற்று நாணயத்தின் இரண்டு பக்கங்களல்லவா? அறிவுபூர்வமாக விமர்சிக்காமல் கோபத்தில் விமர்சிப்பதும் தவறு. இரஞ்சித்துக்கு எடுத்துச் சொல்வதை விட்டுவிட்டு, யுத்த சன்னதம் கொள்வது, ஆதிக்க மனப்பான்மையெனப் புரிந்துகொள்ளப்படும். காவிரியைக் காப்பாற்றிய சோழனை யாரும் வரிந்து கட்டிக்கொண்டு காப்பாற்ற வேண்டி யதில்லை. ராஜராஜனைக் காப்பாற்றவும் வேண்டாம்; கொச்சைப்படுத்தவும் வேண்டாம்”

“ஈழ ஆதரவாளர்களான வைகோ, சீமான் - இருவருக்கும் இடையிலான முரண்பாடுகள் பற்றி..?’’

“ஈழத்தமிழருக்கும் நம் சகோதர முஸ்லிம்களுக்கும் அவர்கள் இரண்டு பேருமே நண்பர்கள்தான். அவர்களுடைய முரண்பாடுகளை, ஈழம்- தமிழகம்- இந்தியாவின் ஒருங்கிணைந்த நலன்களுக்காக அவர்கள் மீள்பரிசீலனை செய்ய வேண்டும். விட்டுக்கொடுப்புடன் பேசி பழைய நட்பை மீட்டெடுக்க வேண்டும்.’’

https://www.vikatan.com/news/general-news/v-i-s-jayapalan-exclusive-interview?fbclid=IwAR33V2VEQs2h39Em4SwH7OaCV_c53ueGS7DEM3FlrHj78B1vnNy4v88VnG4

வீரமுனைக்கு ஒருமுறை சென்று ...
அழியட்டும் முஸ்லீம்கள் .... அழியட்டும் அல்லாஹ்வின் அரக்கர்கள் 
என்று உங்களால் ஏன் கவிதை வாசிக்க முடியவில்லை?

தமிழனுக்கு என்றால் 
உங்களுக்கு தக்காளி சட்னியாகத்தான் தெரிகிறதா? 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திரு.Maruthankerny ,  ஏற்கனவே பதில் அழிக்கபட்ட விடயத்தையே திரும்ப திரும்ப பேசுவதை பதில் அளிப்பதை விட்டுவிடுவோம்.    தமிழர் யாரையும்  மாவீரர்களான  போராளிகளைவிட தீவிரமான இனப்பற்றாளர் என  நன் கருதவில்லை. உண்மையும் அதுதான்.  நான் போராளிகளோடு பேசாத எதையும் பேசவில்லை. ஒரு நேர்காணல் ஒரு புத்தகமில்லை. ஒருவேழை பேட்டியை யாழில் இணைத்ததுதான் பிரச்சினையாயின் யாழ் நிர்வாகத்துடன் தொடர்பு கொள்ளுங்கள். நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கும் எனக்கும் எந்த தனிப்பட முரண்பாடும் இல்லை 
முஸ்லிம்களுடனான உங்கள் சுமுகமான உறவு பற்றியும் 
எனக்கு ஆடசேபனை இல்லை .... தவிர்த்து அது காலத்தின் தேவை என்று கூட எண்ணுகிறேன்.

"பேசப்பட்ட விடயம்"  இதுதான் எனக்கு புரியாமல் இருக்கிறது 
ஏன் எப்போதும் எமது அழிவுகளோ துன்பங்களோ துயரங்களோ பேசவே படவில்லை?

ஏன் உங்களால் வீரமுனைக்கு சென்று முஸ்லீம்கள் அழியட்டும் என்று கவிதை 
பாட முடியவில்லை?

கேள்விக்கு தொடர்பே இல்லாத முஸ்லீம்கள் யாழ் வெளியேற்றம் 
ஏன் பதிலாகிறது? என்ற புரியாத கேள்விகளுக்கு பதில் தேடி வருகிறேன்
அவளவுதான். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 நண்பர் மருதங்கேணிக்கு, கல்முனை பிரச்சினை பற்றி கிழக்கு மாகாண தமிழர் நலன்கள் பற்றியும் தமிழ் முஸ்லிம் மோதல்களுக்கு எதிராகவும்  அவசியம் பற்றியும் ஆய்வுசெய்து அதிகம் எழுதியவர்களுள் நானும் ஒருவன் என்பதை அறிவீர்களா? 1985ம் ஆண்டு கலவரத்தில் இருந்தே வீரமுனை மக்களின் நீதிக்காகவும் குரல் கொடுத்திருக்கிறேன்.  எழுதியும் இருக்கிறேன்.  நான் எழுதிய கட்டுரைகள் வாசித்திருந்தால் இப்படி எழுதி இருக்க மாட்டீங்க? தமிழ் முஸ்லிம்களின் உறவை நாடிய அதே வேகத்துடன்                   தமிழரையும் முஸ்லிம்களையும் ஒற்றுமைப்படுத்துதலை இலக்காக்கி தவறுகளை  விமர்சித்தும்   சிங்கள பெளத்த இனவாதத்தை எதிர்த்தும் நான் சரிநிகர் மற்றும் சிறு சஞ்சிகைகளிலும் எழுதியதை  என் ஆய்வுக்கட்டுரைகளை இவற்றில் எதையுமே வாசித்ததில்லையா?  நண்பரே பேட்டியில் ஆயிரம் கேட்டு பதிவு செய்வார்கள். பின் ஒதுக்கும் பக்கத்துக்கு சுருக்கி வெளியிடுவார்கள். விடுதலை பிரச்சனைகள் தொடர்பான ஒரு சிறு பேட்டியில் ஒரு கேழ்விக்கு எது தொடர்பு எது தொடர்பில்லை என்பது பற்றி இடம் பொருள் ஏவல் பேட்டியின் நம்பகத்தன்மை  அரசியல் இராசதந்திர ரீதியில் நான் மட்டும்தான் தீர்மானிக்க முடியும். விமர்சிக்கிறவர்கள் பொதுவாக பேட்டியில்  இருக்கிறது பற்றித்தான் விமர்சிப்பார்கள்.  நீங்கள் விமர்சிக்க முடியும்.  அடுத்த விமர்சனம் எழுதமுன்னம் என் எழுத்துக்கள் சிலவற்றையாவது வாசியுங்கள். உங்கள் முன்னைநாள் போராளி நண்பர்களிடமாவது ஜெயபாலன் விமர்சிக்கிறானே அவன் “எதிரியா நண்பனா?” என விசாரியுங்கள்.  மற்றப்படி எனக்குத் தெரிந்த வழியில் உங்களுக்கும் சேர்த்துத்தான் உழைக்கிறேன் நண்பா.

  • கருத்துக்கள உறவுகள்
On 7/12/2019 at 4:34 AM, Maruthankerny said:

நாங்கள் போரில் தோற்றும் இன்னும் எழுச்சி மிக்கவர்களாகவே இருக்கிறோம். 

என்ன எழுச்சி தமிழர்களிடம் இருக்கின்றது?

வெறும் இயலாமையும் ஆற்றாமையும்தான் இருக்கின்றது.

இணக்க அரசியல் செய்யவெளிக்கிட்டு கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை முஸ்லிம்களுக்கு விட்டுக்கொடுத்து கிழக்கில் தமிழர்களின் காணிகளை இழப்பதுக்கு வழிகோலிய சம்பந்தர், எதிர்க்கட்சித் தலைவராக இருந்து ரணில் அரசுக்கு முட்டுக்கொடுத்தும் அரசியலமைப்பை மாற்ற முடியவில்லை.

இனி மகிந்த, கோத்தா கும்பல் சிங்கள பெரும்பான்மையினரின் ஆதரவை மட்டும் கொண்டு அரசுபீடம் ஏற சிங்களவர்கள் எம்மை ஏமாற்றிவிட்டார்கள் என்று பிலாக்கணம் பாடி தங்கள் பாராளுமன்ற உறுப்புரிமையை தக்கவைக்க வருவார்கள்! அதுக்கு மட்டும்தான் எழுச்சி தேவை!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எழுச்சியின் அடையாளம் வெற்றிக்கிண்ணங்கள் அல்ல தொடரும் ஆட்டம்தான்.  எழுச்சி இருப்பதால்தான் கிருபன்  ஓய்வை மறந்து யாழ் இணையத்தில் மகரந்தமும் தேனும் நிறைக்கும் ஓயாத தேனீயாக இயங்கிறார். வாழ்க கிருபன்

  • 2 weeks later...
On 7/13/2019 at 3:28 AM, Maruthankerny said:

வீரமுனைக்கு ஒருமுறை சென்று ...
அழியட்டும் முஸ்லீம்கள் .... அழியட்டும் அல்லாஹ்வின் அரக்கர்கள் 
என்று உங்களால் ஏன் கவிதை வாசிக்க முடியவில்லை?

தமிழனுக்கு என்றால் 
உங்களுக்கு தக்காளி சட்னியாகத்தான் தெரிகிறதா? 

அந்தமாதிரி உண்மைகளை தெரிஞ்சாலும் சிலர் தெரியாமாதிரி நடிப்பினம்.
அப்படியான சிலரை பாத்திருக்கன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.