Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரஷ்யாவிடமிருந்து ஆயுத கொள்வனவு – துருக்கி மீது அமெரிக்கா பொருளாதார தடை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

5ae070680f25441c083ff54f-720x438.jpg

ரஷ்யாவிடமிருந்து ஆயுத கொள்வனவு – துருக்கி மீது அமெரிக்கா பொருளாதார தடை!

துருக்கி மீது பொருளதார தடை விதிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தீர்மானித்துள்ளார். ரஷ்யாவிடம் இருந்து எஸ்-400 ஏவுகணை தடுப்பு கவன்களை துருக்கி கொள்வனவு செய்ததை அடுத்தே ட்ரம்ப் இந்த முடிவை எடுத்துள்ளார்.

துருக்கியின் வான் எல்லையை பாதுகாக்கும் வகையில் ரஷ்யாவிடம் இருந்து அதி நவீன எஸ்-400 ஏவுகணைகளை தடுப்பு கவன்களை கொள்வனவு செய்ய துருக்கி அரசு ஒப்பந்தம் செய்தது. இதற்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

இந்த ஒப்பந்தத்தை தொடர்ந்தால் எப்-35 ரக போர் விமான தயாரிப்பில் துருக்கிக்கு அளித்துவரும் முன்னுரிமையை ரத்து செய்வோம் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அச்சுறுத்தல் விடுத்திருந்தார். ரஷ்யாவுடனான ஒப்பந்தத்தை துருக்கி ரத்து செய்ய ஜூலை 31 ஆம் திகதி வரை ட்ரம்ப் காலக்கெடு விதித்திருந்தார்.

அவ்வாறு இல்லாவிட்டால், எப்-35 ரக போர் விமானம் தயாரிப்பு தொடர்பான தொழில்நுட்ப பயிற்சிக்காக அமெரிக்காவில் உள்ள துருக்கி நாட்டு விமானிகளை அங்கு தங்கவிட மாட்டோம் எனவும் அவர் எச்சரித்திருந்தார்.

மேலும், ரஷ்யாவிடம் இருந்து ஆயுதங்களை வாங்கும் நாடுகளின் மீது விதிக்கப்படும் பொருளாதார தடை, துருக்கி மீதும் திணிக்கப்படும் எனவும் அமெரிக்கா அறிவித்திருந்தது.

ரஷ்யாவுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி எஸ்-400 ஏவுகணைகளை தடுப்பு கவன்களில் முதல் கவனை நேற்று முன்தினம் துருக்கி பெற்றுக் கொண்டது.

இந்தநிலையில், துருக்கி மீது அடுத்த வாரத்துக்குள் பொருளாதார தடை விதிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தீர்மானித்துள்ளதாக வெள்ளை மாளிகை அதிகாரிகள் நேற்று தெரிவித்துள்ளனர்.

http://athavannews.com/ரஷ்யாவிடமிருந்து-ஆயுத-கொ/

துருக்கி ஒரு நேட்டொ நாடாக இருந்தும் அமெரிக்காவை மீறி உருசியாவுடன் இந்த ஒப்பந்தத்தை செய்தது அமெரிக்காவிற்கு ஒரு மிகப்பெரிய மரியாதை கேடு.

ஒரு காரணம், சிரியாவில் உருசியாவின் ஆதிக்கம் (அமெரிக்காவின் இயலாமை). துருக்கி சிரியா நாட்டுடன் எல்லையை கொண்டது.

2015இல் உருசிய விமானத்தை துருக்கி சுட்டதும், இரண்டு நாடுகளுக்கு இடையில் முறுகல் இருந்ததும் மறந்த செய்தியாகிவிட்டது.  

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னப்பா இது போனமாசம் தானே இரண்டு பேரும் சந்தோசமாய் கை குலுக்கினவையள்? 🤣

ErdoÄan to meet Trump at G20 summit in Japan

  • கருத்துக்கள உறவுகள்

துருக்கியும் ரஸ்யாவும் பரம் எதிரிகள். எப்படி ஆயுத கொள்வனவு ஒப்பந்தங்கள் நடைபெற்றன? ஆச்சரியமாக உள்ளது. துருக்கியின் குர்டிஸ் மீதான தாக்குதலும் அமெரிக்காவுக்கு  கோபத்தை  உண்டுபண்ணி இருக்கலாம்.
அமெரிக்காவின் உலக நாடுகள் மீதான பொருளாதார தடை  எது வரை செல்லும்??

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.