Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலகின் மிகப்பெரிய தீவை விலைக்கு வாங்க விரும்பிய டிரம்ப்

Featured Replies

à®à®²à®à®¿à®©à¯ மிà®à®ªà¯ பà¯à®°à®¿à®¯ தà¯à®µà¯ விலà¯à®à¯à®à¯ வாà®à¯à® விரà¯à®®à¯à®ªà®¿à®¯ à®à®¿à®°à®®à¯à®ªà¯

உலகின் மிகப்பெரிய தீவை வாங்குவதற்கு அமெரிக்கா விரும்புவதாக அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியதாக செய்தி வெளியானதை அடுத்து, தாங்கள் "விற்பனைக்கு இல்லை" என்று கிரீன்லாந்து கூறியுள்ளது.

ஆர்க்டிக் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல்களுக்கு இடையில் அமைந்துள்ள, டென்மார்க்கின் தன்னாட்சியுள்ள ஆட்சிப்பகுதியான கிரீன்லாந்தை விலைக்கு வாங்குவது தொடர்பான தனது ஆலோசகர்களுடனான கூட்டத்தின்போது டிரம்ப் விரும்பம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

ஆனால், கிரீன்லாந்தின் அரசாங்கம் இந்த யோசனைக்கு உடனடியாக மறுப்புத் தெரிவித்துள்ளது: "நாங்கள் வணிகத்திற்காக திறந்திருக்கிறோம், விற்பனைக்கு அல்ல."

அதே போன்று டிரம்பின் விருப்பம் தொடர்பாக பதிலளித்துள்ள கிரீன்லாந்தின் முன்னாள் பிரதர் லார்ஸ் லொக்கே ராஸ்முஸ்ஸென், "இது கண்டிப்பாக ஏப்ரல் மாதம் முதலாம் தேதி செய்யப்படும் நகைச்சுவையாக இருக்க வேண்டும். ஆனால், இது அதற்கான சரியான காலமல்ல," என்று அவர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை முதலில் வெளியிட்ட வோல் ஸ்ட்ரீட் ஜர்னல், டிரம்ப் இந்த திட்டம் குறித்து "மாறுபட்ட அளவிலான தீவிரத்தன்மையுடன்" பேசியதாக தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளது.

மற்ற ஊடகங்களில் மேற்கோள் காட்டப்பட்ட ஆதாரங்களின்படி, டிரம்ப் நகைச்சுவையாக கூறினாரா அல்லது அமெரிக்க நிலப்பரப்பை உண்மையிலேயே விரிவுபடுத்துவதில் தீவிரமாக இருக்கிறாரா என்பதில் வேறுபடுகின்றன.

https://www.bbc.com/tamil/global-49379250

  • தொடங்கியவர்

 

  • கருத்துக்கள உறவுகள்

டிரம்ப் என்ற கோமாளிக்கு வருடம் பூரா ஏப்ரில் முதலாம்திகதிதானே. இப்போது இது என்ன விதிவிலக்கா?  உலகின் வேறும் பல செல்வந்தர்களைப்போல தானும் பச்சையான ஒரு தீவை வாங்கவேண்டும் என்று சொல்லப்போக யாரோ ஒருவர் அதை கிரீன்லாந்து ஆக்கிவிட்டார் போல தெரிகிறது. இருப்பினும். நிலத்தை பணம்கொடுத்து வாங்கி தன் நாட்டுடன் இணைத்துக்கொள்வதில்  அமெரிக்காவுக்கு நீண்ட பாரம்பரியமே உள்ளது தெரிந்ததுதான். அதிலும்  1867 இல் அலாஸ்காவை ரஸ்யாவிடமிருந்து வாங்க அமெரிக்கர்கள் கொடுத்த விலை ஏக்கர் நிலத்துக்கு வெறும் 2 டொலர் சென்ட்டுகள் தான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யோவ்......ஜேர்மன் பாங்கிலை வாங்கின கடனுக்கு வட்டியும் குடுக்கேல்லையாம்...முதலும் குடுக்கேல்லையாம்....முதலல்லை அதை குடுக்கச்சொல்லுங்கையா 🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

யோவ்......ஜேர்மன் பாங்கிலை வாங்கின கடனுக்கு வட்டியும் குடுக்கேல்லையாம்...முதலும் குடுக்கேல்லையாம்....முதலல்லை அதை குடுக்கச்சொல்லுங்கையா 🤣

சாமியார் என்ரைபெயரையும் உங்கள் பின்னூட்டத்தில் இணைத்து விடுங்கோ.

ஒரு அமெரிக்க இராணுவநபர் என்னிடம் 10 யூரோ கடன் வாங்கினவர். இன்றுவரை அதற்கான வட்டியுமில்லை முதலும் இல்லை. 

  • தொடங்கியவர்

ட்ரம்ப் ஒரு முன்னாள் அசையா சொத்துக்களின் திஸ்ல் அதிபர். 

அவரின் மனத்தில் 'எல்லாவற்றையும் விலை கொடுத்து வாங்கலாம் ' என்ற நினைப்பு உள்ளது. 

பல இடங்களில் வெற்றியும் கண்டு உள்ளார். 

  • கருத்துக்கள உறவுகள்

டிரம்ப் இதை சொல்வது,  ஏவுகணை பாதுகாப்பு வலையமைப்பை இன்னும் பெரிதாக ஆக்குவதத்திற்கு, பென்டகன் மற்றும் அமெரிக்கா பாதுகாப்பின் தொழில் நுட்ப பிரிவுகளின் அறிவுறுத்தலின் படி.

ஏற்றனவே, 24 மணி நேர ஏவுகணை  கண்காணிப்பு ரேடார் மற்றும் செய்ம்மதி வலையமைப்புக்கு நிலையை கிரீன்லாந்து இல் அமெரிக்கா நிறுவி வைத்துள்ளது.

ஏனெனில், ஏவுகணைகளை கண்காணிப்பதற்கு தற்போதைய புவியியல் அமைப்பில் கிரீன்லாந்து மிகவும் வசதியானது, வட துருவத்திற்கு அண்மித்து இருப்பதால். ஏறத்தாழ, ஓர் மலையின் உச்சியில் இருந்து கண்காணிப்பது போல.

கண்காணிப்பு ஏற்ற  இடமாயின், அது  கண்காணிக்கப்படும் ஏவுகணைகளையம் நாடுகளையம் துவம்சம் செய்வதற்கான ஏவுகணைகளை ஏவுவதத்திற்கு  ஏற்ற இடம் தானே.

அமெரிக்கா தற்போது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை கட்டுப்பாடு ஒப்பந்தத்தில் இருந்து விலகி விட்டது. ரஷ்யா, சீன ஹைப்பர்சோனிக் ஏவுகணை தொழிநுட்பத்தில் அமெரிக்காவிற்கு ஈடுகட்டிவிட்டன.

எனவே, ஏவுகணை பாதுகாப்பிற்கு, கண்காணிப்பிற்க்கு அப்பால், ஏவுகணைகளை ஏவுவதன் மூலம் அமெரிக்கா முதல் அடிக்கான (first strike) இடத்தை பிடிக்க விரும்புகிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, Paanch said:

சாமியார் என்ரைபெயரையும் உங்கள் பின்னூட்டத்தில் இணைத்து விடுங்கோ.

ஒரு அமெரிக்க இராணுவநபர் என்னிடம் 10 யூரோ கடன் வாங்கினவர். இன்றுவரை அதற்கான வட்டியுமில்லை முதலும் இல்லை. 

உவங்களிட்டை குடுத்தால் திருப்பி வாங்கேலாதப்பா.....கொஞ்சம் உறுக்கி கேட்டால் படை பட்டாளத்தோடை அடிக்க வந்துடுவாங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

உவங்களிட்டை குடுத்தால் திருப்பி வாங்கேலாதப்பா.....கொஞ்சம் உறுக்கி கேட்டால் படை பட்டாளத்தோடை அடிக்க வந்துடுவாங்கள்.

உங்களாலை முடியாவிட்டால் விடுங்கோ சாமி, எனக்கு எங்கடை சம்பந்தர் இருக்கிறார், அவர் பெயரைக் கேட்டால் அமெரிக்காவே நடு நடுங்குமாம். சுமந்திரனே சொல்லியிருக்கிறார்.😄

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 8/17/2019 at 11:01 PM, Paanch said:

உங்களாலை முடியாவிட்டால் விடுங்கோ சாமி, எனக்கு எங்கடை சம்பந்தர் இருக்கிறார், அவர் பெயரைக் கேட்டால் அமெரிக்காவே நடு நடுங்குமாம். சுமந்திரனே சொல்லியிருக்கிறார்.😄

அவனவன் சொந்த நாட்டையே குடுத்துட்டு கம்மெண்டு திரியுறாங்கள். இந்த மனிசன் பத்து ரூபாயை குடுத்துட்டு சம்பந்தன் சுமந்திரன் எண்டு...........கடைசியிலை வாற காசும் வராமல் போகப்போகுது.
பத்து ரூபாக்கு அரோகரா.....😆

  • தொடங்கியவர்

டென்மார்க் அரசுடன் நிர்ணயிக்கப்பட்டு திட்டமிடப்பட்ட சந்திப்பை ட்ரம்ப் பின்போட்டுள்ளார். 

க்ரீன்லாந்து விற்பனை பற்றிய தனது கோரிக்கைக்கு அதிகம் ஆர்வத்தை காட்டததால், பிரதம மந்தி மெட் ப்ரெட்நிக்சனுடனான சந்திப்பை அதிபர் ட்ரம்ப் பின்போட்டுள்ளார்.   

U.S. President Donald Trump said he was postponing a scheduled meeting with Denmark’s Prime Minister Mette Frederiksen because of her lack of interest in discussing a possible purchase of Greenland. 

பி.கு.: இவர் வழமையாக இவ்வாறு முக்கிய பிரச்சனைகளை திசை திருப்ப வேறு திரிகளை திறந்து விடுவாராம். 

https://www.cnbc.com/2019/08/21/trump-delays-denmark-visit-as-pm-wont-talk-about-him-buying-greenland.html

  • கருத்துக்கள உறவுகள்
kUuht00m_bigger.jpg

Denmark is a very special country with incredible people, but based on Prime Minister Mette Frederiksen’s comments, that she would have no interest in discussing the purchase of Greenland, I will be postponing our meeting scheduled in two weeks for another time....

 

....The Prime Minister was able to save a great deal of expense and effort for both the United States and Denmark by being so direct. I thank her for that and look forward to rescheduling sometime in the future!

  • தொடங்கியவர்

டென்மார்க் மறுத்தால் கனடா பக்கம் உள்ள சில தீவுகளை வாங்கலாம் என்கிற யோசனையும் உள்ளதாம்  🙂 

கூட்டமைப்பினரும் தமிழீழத்தில் உள்ள தீவை எடுத்துக்கொண்டு .... என ஒரு 'டீலை' போட்டு பார்க்கலாம் 🙄

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.