Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்து மயானத்திலிருந்து பயங்கரவாதியின் உடற்பாகங்களை அகற்றும் நடவடிக்கை ஆரம்பம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Batticalao-Bomb-blast-Issue.jpg

இந்து மயானத்திலிருந்து பயங்கரவாதியின் உடற்பாகங்களை அகற்றும் நடவடிக்கை ஆரம்பம்!

மட்டக்களப்பு, கள்ளியங்காடு இந்து மயானத்தில் புதைக்கப்பட்டுள்ள ஈஸ்டர் குண்டுதாரி மொஹமட் ஆஷாத்தின் உடற்பாகங்களை அகற்றும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதவான் ரிஸ்வான் முன்னிலையில் இந்த உடற்பாகங்களை அகற்றும் பணிகள் நடைபெறுகின்றது.

கடந்த ஈஸ்டர் தினத்தன்று மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் தற்கொலைக் குண்டுத் தாக்குதலை மேற்கொண்ட பயங்கரவாதியின் உடற்பாகங்களை அரச செலவில் புதைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், மட்டக்களப்பில் தமது பகுதிகளில் பயங்கரவாதியின் உடற்பாகங்களை புதைப்பதற்கு மக்கள் எதிர்ப்பினை வெளிப்படுத்தியிருந்தனர்.

இதனால் குறித்த உடற்பாகங்கள் கள்ளியங்காடு இந்து மயானத்தில் கடந்த 26ஆம் திகதி இரவோடு இரவாக இரகசியமாக புதைக்கப்பட்டது.

இந்த விடயம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் குறித்த உடற்பாகங்களை அகற்றுமாறு கோரி மக்கள் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து மக்கள் எதிர்ப்புத் தெரிவிக்காத பகுதியில் பயங்கரவாதியின் உடற்பாகங்களை புதைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் கடந்த 30ஆம் திகதி உத்தரவிட்டார்.

இந்நிலையில் இந்து மயானத்தில் புதைக்கப்பட்ட உடற்பாகங்களை அகற்றும் பணி தற்போது முன்னெடுக்கப்படுகிறது.

EPDP-Meeting-In-Vavuniya-6.jpg

 

Batticalao-Bomb-blast-Issue-2.jpg

Batticalao-Bomb-blast-Issue-3.jpg

http://athavannews.com/இந்து-மயானத்திலிருந்து-ப/

  • கருத்துக்கள உறவுகள்

சிரிப்புத் தான் வருகுதய்யா , இறந்த பின்னே , உயிர் போன பின்னே எவருமே பயங்கரவாதியல்ல , செத்தால் சிவன் தான் அய்யனே ...

 

சிங்கள-பௌத்த போலீஸ் காடையர்கள் மற்றும் சிங்கள-பௌத்த நீதித்துறைக் காடையர்களின் காடைத்தனங்கள் மட்டக்களப்பு வாழ் இந்துக்களின் முயற்சியால் முறியடிக்கப்பட்டுள்ளது.

காத்தான்குடியைச் மொஹமட் நசாத் மொஹமட் அசார் எனும் முஸ்லீம் பயங்கரவாதியை முஸ்லீம் இல்லை என்று முஸ்லீம் சந்தர்ப்பவாதிகள் அறிவிக்கின்றனர். அதன் பின்னர் குறித்த முஸ்லீம் பயங்கரவாதியின் சொந்த ஊரான காத்தான்குடியில் முஸ்லீம் மயானங்களில் புதைக்க அனுமதி இல்லை என்றும் முஸ்லீம் மதவெறியர்கள் அறிவிக்கின்றனர்.

அதற்கு தலை வணங்கிய சிங்கள-பௌத்த நீதித்துறைக் காடையர்களின் மட்டக்களப்பு  முஸ்லீம் நீதிபதி அந்த முஸ்லீம் பயங்கரவாதியை முஸ்லீம்கள் இல்லாத பகுதியில் புதைக்க கட்டளையிடுகிறார். இந்துக்களை இளிச்சவாயர்களாக கருதிய இந்த கூட்டுச் சதியின் படி, சிங்கள-பௌத்த போலீஸ் காடையர்கள் இரவோடிரவாக அந்த முஸ்லீம் பயங்கரவாதியின் உடலை இந்து மயானத்தில் புதைக்கின்றனர்.

விசயம் உடனடியாக வெளியே வந்தாலும், மக்கள் ஆத்திரப்பட்டாலும் சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதிகளுக்கு முண்டு கொடுக்கும் சம்மந்தன் தலைமையிலான தமிழ் தேசிய கூட்டமைப்பு எடுபிடிக் கும்பல் மௌனமாக இருந்தனர்.  

3 மாதங்களுக்கு மேலாக மக்களின் அமைதியான எதிர்ப்புக்கள் பலனைத் தரவில்லை. பொறுமை காத்து நீதி கிடைக்கவில்லை என்ற நிலையில் இறுதியில் மட்டக்களப்பு இந்து மக்கள் தெருவில் இறங்கிப் போராடினர்.

சிங்கள-பௌத்த போலீஸ் காடையர்களும் சிங்கள-பௌத்த நீதித்துறைக் காடையர்களின் மட்டக்களப்பு  முஸ்லீம் நீதிபதியும் இந்துக்களை மிரட்டும் முயற்சியில் இறங்கினர். எனினும், எதற்கும் அச்சப்படாத இந்துக்களின் போராட்டத்தைக் கண்டு, இறுதியில் சிங்கள-பௌத்த போலீஸ் காடையர்களும் சிங்கள-பௌத்த நீதித்துறைக் காடையர்களின் மட்டக்களப்பு  முஸ்லீம் நீதிபதியும் அந்த முஸ்லீம் பயங்கரவாதியின் உடலை இந்து மயானத்தில் இருந்து தற்போது அகற்ற முனைகின்றனர்.  

எனவே, சிங்கள-பௌத்த போலீஸ் காடையர்கள் மற்றும் சிங்கள-பௌத்த நீதித்துறைக் காடையர்களின் காடைத்தனங்கள் மட்டக்களப்பு வாழ் இந்துக்களின் தளராத முயற்சியால் முறியடிக்கப்பட்டுள்ளது.

பல பின்னடைவுகளுக்கு மத்தியில் மட்டக்களப்புத் தமிழர் தெருவில் இறங்கிப் போராடிச் சாதித்த இந்த வெற்றியைக் கூட விளங்க முடியாத சிந்திக்கும் திறனற்ற ஜீவன்களும் இந்த உலகத்தில் உண்டு. தமிழினத்தின் சாபக்கேடுகளில் இதுவும் ஒன்று.

  • கருத்துக்கள உறவுகள்

எதிரி எப்பவுமே அடிப்படை விடயங்களை  ஆராய்ந்து தீர்வு நோக்கி செல்வதை தடுக்கு முகமாக , தொடர்ச்சியாக  வேறு உணர்வு   பூர்வமான  துண்டுகளை எறிவான், எம்மவர் அதை பொறுக்கி எடுத்து  பெருக்கி கூட்டி , வென்று விட்டோம் என பெருமிதம் அடைவர்

கன்னியா , புத்தர் சேலை , இன்று சக்ரனின் அழுகிய இறைச்சி …..  நிரல் தொடரும் ……

சமாதானப் பேச்சவார்த்தை நடந்த நேரம் ஈச்சிலம்பத்தையில் எனது அலுவலக வாகனத்தில் விடுதலைப் புலி போராளிகள் சில பேருக்கு ஒரு லிப்ட் கொடுத்த நேரம் , எப்படி பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் என கேட்டேன்

" அம்மான், உவங்கள் எவ்வளவு வாகனங்கள் வேணும் , பணக் கொடுப்பனவுகள் என்ன மாதிரி போன்ற விடயங்களை மட்டுமே கதைக்கிறார்கள் , தீர்வு விடயங்களை பற்றி கதைப்போம் என்று  கேட்டால்  நாலு கட்டைக்கு அங்கால தள்ளி நிக்கிறாங்கள்"  என்று    சொன்னார்கள்.

 

மயானத்தில் இருந்து எள்ளுப்பன் அழுகிய இறைச்சியை  தோண்டி எடுத்தது  உரிமைகளை வென்றதற்கு நிகரானது என்று எம்மை உணரவைப்பதில் எதிரி வென்றிருக்கிறான் என்பதே இங்கே நிதர்சனம்.

 தொடர்ந்து கெட்டித்தனமாக சிந்தித்து  சாபக்கேடுகளை  என்னவாவது செய்வோமாக  …….

 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, போல் said:

சிங்கள-பௌத்த போலீஸ் காடையர்கள் மற்றும் சிங்கள-பௌத்த நீதித்துறைக் காடையர்களின் காடைத்தனங்கள் மட்டக்களப்பு வாழ் இந்துக்களின் முயற்சியால் முறியடிக்கப்பட்டுள்ளது.

 

பல பின்னடைவுகளுக்கு மத்தியில் மட்டக்களப்புத் தமிழர் தெருவில் இறங்கிப் போராடிச் சாதித்த இந்த வெற்றியைக் கூட விளங்க முடியாத சிந்திக்கும் திறனற்ற ஜீவன்களும் இந்த உலகத்தில் உண்டு. தமிழினத்தின் சாபக்கேடுகளில் இதுவும் ஒன்று.

மட்டக்களப்பு வாழ் தமிழ் கத்தோலிக்க , கிறிஸ்தவ மற்றும் அங்கிலிகன் மதங்களை சேர்ந்தவர்களுக்கு இந்த வெற்றியில் பங்கு இல்லை போல் தெரிகின்றது
வெற்றி உண்மையில்  யாருக்கென்று புரிந்து கொள்வோமாக  ...

  • கருத்துக்கள உறவுகள்

இது எனது தனிப்பட்ட அபிப்பிராயம் । அவர்களால் நடத்தப்பட்ட நாடகம் எங்களின் ஒருமுனைப்பை சேதப்படுத்துவது.   செய்ய வேண்டியது , இதனை யார் அரங்கேற்றினார் என்று உய்த்துணர்ந்து அவர்கள் மீண்டும் ஒரு முறை இதனை செய்யாமல் இருப்பார்கள் நடவடிக்கைகளை எடுப்பது.  அது உரிமைகளை வென்றெடுப்பதற்கான பாதையில் காத்திரமான செயற்பாடாக அமையும்
காவலன் அதைத் தான் செய்தார்  , மற்றையோர் வேடிக்கை பார்த்து அவரை எல்லோருமாக சேர்ந்து அமத்திக் குத்தி  அநியாயமாக காவு குடுத்து விட்டு சாபக்கேடுகளைப் பற்றி அலட்டிக் கொண்டிருக்கிறோம்.

என்ன செய்ய யோசித்திருக்கிறாய் இந்த இனத்தை என்று யாரிடம் கேட்பது ??…….

  • கருத்துக்கள உறவுகள்

மன்னாரில் ஆலயத்தின் வழியில் அமைந்திருந்த அலங்கார வளைவை தமிழர்களின் ஒரு பகுதியினர் சேதப்படுத்திய காட்சி ஏனோ மனதில் வந்து செல்கின்றது.


எதிரி போட்ட உனைர்வு பூர்வமான துண்டை பெருக்கி கூட்டி எடுத்து  வென்று விட்டோம் என்று பெருமிதம் அடைந்த இன்னுமொரு சந்தர்ப்பம் , 

வாருங்களேன் யாரவது கத்தோலிக்கர் இதனைப் பற்றி பீற்றிக் கொள்வதற்கு   …….

 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, போல் said:

சிங்கள-பௌத்த போலீஸ் காடையர்களும் சிங்கள-பௌத்த நீதித்துறைக் காடையர்களின் மட்டக்களப்பு  முஸ்லீம் நீதிபதியும் இந்துக்களை மிரட்டும் முயற்சியில் இறங்கினர். எனினும், எதற்கும் அச்சப்படாத இந்துக்களின் போராட்டத்தைக் கண்டு, இறுதியில் சிங்கள-பௌத்த போலீஸ் காடையர்களும் சிங்கள-பௌத்த நீதித்துறைக் காடையர்களின் மட்டக்களப்பு  முஸ்லீம் நீதிபதியும் அந்த முஸ்லீம் பயங்கரவாதியின் உடலை இந்து மயானத்தில் இருந்து தற்போது அகற்ற முனைகின்றனர்.  

எனவே, சிங்கள-பௌத்த போலீஸ் காடையர்கள் மற்றும் சிங்கள-பௌத்த நீதித்துறைக் காடையர்களின் காடைத்தனங்கள் மட்டக்களப்பு வாழ் இந்துக்களின் தளராத முயற்சியால் முறியடிக்கப்பட்டுள்ளது.

பல பின்னடைவுகளுக்கு மத்தியில் மட்டக்களப்புத் தமிழர் தெருவில் இறங்கிப் போராடிச் சாதித்த இந்த வெற்றியைக் கூட விளங்க முடியாத சிந்திக்கும் திறனற்ற ஜீவன்களும் இந்த உலகத்தில் உண்டு. தமிழினத்தின் சாபக்கேடுகளில் இதுவும் ஒன்று.

இது இந்துக்களின் வெற்றியா அல்லது தமிழர்களின் வெற்றியா என்பதை நீங்கள் தெளிவுபடுத்தி இந்த “தமிழினத்தின்” சாபக்கேட்டுக்கு பிராயச்சித்தம் செய்ய முயற்சிக்கலாமே?

Edited by Jude

17 hours ago, போல் said:

விளங்க முடியாத சிந்திக்கும் திறனற்ற ஜீவன்களும் இந்த உலகத்தில் உண்டு.

அடேங்கப்பா! இது தங்களுக்கு தான் அளவான தொப்பி என்டு எடுத்து போட்டுக்கொள்ள சிலர் கிளம்பிருக்காங்க.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.