Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஹிஸ்புல்லாஹ்வை களமிறக்கியமை சதித்திட்டமாகும் - ஹக்கீம்

Featured Replies

IMAGE-MIX.png
(ஆர்.யசி)

நாட்டின் பாதுகாப்பு விடயத்தில் சஜித் பிரேமதாசவின் செயற்பாடுகள் முழுமையாக இருக்கும் என்பதை உறுதிப்படுத்த முடியும் அமைச்சர் ரவூப் ஹகீம் தெரிவித்தார்.

hakem.jpg

அத்துடன் முஸ்லிம் வேட்பாளர் ஒருவர் இந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது என்பது முஸ்லிம் வாக்குகளை திசைதிருப்பும் நோக்கத்தில் முன்னெடுக்கும் செயற்பாடாகவே நாம் கருதுகின்றோம். 

இது ஒரு சதித்திட்டமே தவிர வேறு ஒன்றும் இல்லை. இன்று நாம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில் இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் உட்பட ஏனைய பிரதான முஸ்லிம் தலைமைகள் அனைவரும் ஒன்றிணைந்து ஒரு அணியாக தீர்மானம் எடுத்துள்ள நிலையில் நாம் இணைந்துள்ள அணியை பலப்படுத்துவதை விடுத்து ஏனைய ஒரு அணிக்காக துணை போவது முஸ்லிம் வாக்குகளை திசைதிருப்ப வேண்டுமென்றே முஸ்லிம்களுக்கு எதிராக செயற்படும் வேட்பாளரை ஆட்சிக்கு கொண்டுவரும் நோக்கத்தில் எடுக்கும் சதித்திட்டமாகும் என்றும் அவர் கூறினார்.

இம்முறை ஜனாதிபதி தேர்தலை முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தி எம்.எல்.எ.எம் ஹிஸ்புல்லா போட்டியிட தீர்மானம் எடுத்துள்ள நிலையில் முஸ்லிம் தலைமைகளின் கருத்து குறித்து தெரிவிக்கையில் அவர் இவற்றைக் கூறினார். 

https://www.virakesari.lk/article/66788

  • தொடங்கியவர்

சஜித் பிரேமதாச வெற்றிபெறுவதற்கு சிறுபான்மை மக்கள் வாக்களிக்க வேண்டும்

Sunday, October 13, 2019 - 4:19pm

சஜித் பிரேமதாச வெற்றிபெறுவதற்கு சிறுபான்மை மக்கள் தங்களது வாக்களிப்பு விகிதாசாரத்தை இன்னும் அதிகரிக்க வேண்டும். தமிழ், முஸ்லிம் பிரதேசங்களில் அதியுச்ச வாக்குப்பதிவு இடம்பெற வேண்டியது அவசியாகும். அப்போதுதான் நமது வெற்றிவாய்ப்புகளை அதிகரித்துக்கொள்ள முடியும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட மத்திய குழுக்கூட்டம் நிந்தவூரில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரைநிகழ்த்திய அவர் மேலும் கூறியதாவது;

இந்த ஜனாதிபதி தேர்தல் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. நாட்டின் ஜனாதிபதியோ, பிரதமரோ, எதிர்க்கட்சித் தலைவரோ அல்லது சபாநாயகரோ போட்டியிடாமல் புதிய முகங்கள் தேர்தலில் களமிறக்கப்பட்டுள்ளனர். அதுவும் பிரதான கட்சிகள் தங்களுக்கு இருந்த பலவிதமான உள்ளக முரண்பாடுகளுக்கு முகம்கொடுத்த பின்னணியில்தால் தங்களது வேட்பாளர்களை அறிவித்துள்ளன.

ஆட்சிக் கவிழ்ப்பின்போது பல இடங்களில் நாங்கள் கூட்டங்களை நடாத்தினோம். அந்த இடங்களில் சஜித் பிரேமதாசவுக்கு மக்கள் மத்தியில் பலத்த ஆதரவு காணப்பட்டது. பிரதமரை பேசுவதை விட சஜித் பேசுவதையே மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர். இதனால், நிகழ்ச்சிநிரலை மாற்றி இறுதியில் சஜித் பேசுகின்ற அளவுக்கு நிலைமை காணப்பட்டது.

ஐக்கிய தேசியக் கட்சியில் மாற்ற வரவேண்டும் என்று பலரும் விரும்பினார்கள். கட்சிக்குள் இருப்பவர்களே அதை பேசுவதற்கு தயக்கம் காட்டினார்கள். இந்நிலையில், அடுத்த ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாச களமிறக்கப்பட வேண்டும் என்று பிரதமர் முன்னிலையில் நான் தைரியமாக கூறினேன். அன்றுமுதல் இன்றுவரை எனது நிலைப்பாட்டில் உறுதியுடன் இருந்துகொண்டிருக்கிறேன்.

முஸ்லிம் காங்கிரஸ் ஒரு அரசியல் கட்சியாக பரிணமித்து 1988இல் முதலில் எதிர்கொண்ட ஜனாதிபதி தேர்தலில் ரணசிங்க பிரேமதாசவை மறைமுகமாக ஆதரித்தது. அவர் எங்களது வாக்குகளினால்தான்  வெற்றிபெற்றார் என்பது, பின்னர் வந்த பாராளுமன்ற தேர்தல்களில் நாங்கள் தனித்துப் போட்டியிட்டு பெற்ற வாக்குகளின் மூலம் நிரூபணமானது.

கட்சியின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரஃப் ஐக்கிய தேசியக் கட்சியுடன் வெளிப்படையாக மோதினாலும், ஜனாதிபதியாகவிருந்த ரணசிங்க பிரேமதாசவுடன் நெருக்கமான உறவைப் பேணிவந்தார். அட்டாளைச்சேனை கல்வியில் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வொன்றில், ரணசிங்க பிரேமதாச மீண்டும் ஜனாதிபதியாக வரவேண்டும் என்று அவரின் முன்னாலேயே தலைவர் அஷ்ரஃப் கூறியிருந்தார்.

தற்போது போட்டியிடும் அவரது மகனை வெல்லவைப்பது முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்களின் கடமையாகும். சஜித் பிரேமதாச வெற்றிபெறுவது என்பது ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றியல்ல, அது முஸ்லிம் காங்கிரஸ் தலைவரின் வெற்றியாகும். அஷ்ரஃப் உருவாக்கிய ஜனாதிபதியாக ஆர். பிரேமதாச இருந்ததுபோல, முஸ்லிம் காங்கிரஸ் உருவாக்கிய ஜனாதிபதியாக சஜித் பிரேமதாசவை நாம் அடையாளப்படுத்த வேண்டும்.

ஏப்ரல் 21 தாக்குதலின் பின்னர் முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக விரல்நீட்டிய அனைத்து தரப்புகளும் ஒட்டுமொத்தமாக சங்கமித்திருக்கும் அணிக்கு எதிராகத்தான், நாங்கள் இத்தேர்தலில் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க முன்வந்திருக்கிறோம். முஸ்லிம் தரப்பு அடிமை சமூகமாக இருக்க வேண்டுமா, இல்லையா என்ற போராட்டம்தான் இந்த தேர்தலின் பின்னால் இருக்கிறது.

முஸ்லிம் விரோத சக்திகளின் பின்னால் மறைந்துகொண்டால் தப்பித்துக்கொள்ள முடியும் என்று சிலர் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். எங்களது கெளரவத்தை யாருக்காகவும் விட்டுக்கொடுக்க முடியாது. நீதி, நியாயத்துக்காக போராடும் இயக்கம் தப்பிப் பிழைப்பதற்காக அநியாயக்கார கும்பலிடம் சரணடைய முடியாது. தனது சொத்துகளை காப்பாற்றுவதற்காக சிலர் இத்தேர்தலில் களமிறங்கியுள்ளனர். இது முஸ்லிம் வாக்குகளை சிதறடிக்கும் சதித்திட்டமாகும்.

சஜித் பிரேமதாச வெற்றிபெறுவதற்கு சிறுபான்மை மக்கள் தங்களது வாக்களிப்பு விகிதாசாரத்தை இன்னும் அதிகரிக்க வேண்டும். அண்மையில் கல்முனை தேர்தல் தொகுதியில் அதிகூடிய வாக்களிப்பு பதிவாகியிருந்தது. அதுபோல தமிழ், முஸ்லிம் பிரதேசங்களில் அதியுச்ச வாக்குப்பதிவு இடம்பெற வேண்டியது அவசியாகும். அப்போதுதான் நமது வெற்றிவாய்ப்புகளை அதிகரித்துக்கொள்ள முடியும்.

முஸ்லிம்களில் சிலருக்கு இப்போது ஜே.வி.பி. மோகம் வந்துள்ளது. ஜே.வி.பி.க்கு வாக்களிப்பது என்பது மறைமுகமாக கோத்தபாய ராஜபக்ஷவுக்கு ஆதரளிப்பதாகும். ஜே.வி.பி. வேட்பாளர் ஒருபோதும் வெற்றிபெறப் போவதில்லை. சமூகத்துக்காக குரல்கொடுத்து பேசினார்கள் என்பதற்காக வெற்றிபெறாத ஒருவருக்கு வாக்களித்து உங்களது பொன்னான வாக்குளை வீணாக்கவேண்டாம். ஜே.வி.பி.யினர் வெளிப்படையாக எதையும் கையாள்வதற்கு தயக்கம் காட்டினார்கள் என்பதையும் நீங்கள் மறந்துவிடக்கூடாது என்றார்.

https://www.thinakaran.lk/2019/10/13/அரசியல்/41967/சஜித்-பிரேமதாச-வெற்றிபெறுவதற்கு-சிறுபான்மை-மக்கள்-வாக்களிக்க-வேண்டும்

44 minutes ago, ampanai said:

முஸ்லிம்களில் சிலருக்கு இப்போது ஜே.வி.பி. மோகம் வந்துள்ளது. ஜே.வி.பி.க்கு வாக்களிப்பது என்பது மறைமுகமாக கோத்தபாய ராஜபக்ஷவுக்கு ஆதரளிப்பதாகும்.

அநுர பெறும் வாக்குகளில் பெரும்பாலானவை சஜித்துக்கான வாக்குகளிலிருந்து பிரிந்து வருபவை. முதல் சுற்றில் அது கோத்தாவுக்கு சாதகமாக இருக்கும்.

அநுரவுக்கு வாக்களிப்போரில் பெரும்பாலானோர் இரண்டாம் விருப்ப தெரிவுக்கு சஜித் பெயரை இடுவார்கள் என்பதால் இரண்டாம் சுற்றுக்கு சென்றால் அது சஜித்துக்கு ஆதரவாக இருக்கும்.

Edited by Lara

  • தொடங்கியவர்
3 hours ago, ampanai said:

இது ஒரு சதித்திட்டமே தவிர வேறு ஒன்றும் இல்லை. இன்று நாம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில் இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் உட்பட ஏனைய பிரதான முஸ்லிம் தலைமைகள் அனைவரும் ஒன்றிணைந்து ஒரு அணியாக தீர்மானம் எடுத்துள்ள நிலையில் நாம் இணைந்துள்ள அணியை பலப்படுத்துவதை விடுத்து ஏனைய ஒரு அணிக்காக துணை போவது முஸ்லிம் வாக்குகளை திசைதிருப்ப வேண்டுமென்றே முஸ்லிம்களுக்கு எதிராக செயற்படும் வேட்பாளரை ஆட்சிக்கு கொண்டுவரும் நோக்கத்தில் எடுக்கும் சதித்திட்டமாகும் என்றும் அவர் கூறினார்.

சனநாயக நாடுகளில் ஒன்றிற்கு மேற்பட்ட அரசியல் கட்சிகள் இருக்கும், தேர்தலில் சுயாட்சி வேட்பாளர்களும் களம் இறங்குவார்கள். இல்லாவிட்டால் அது சர்வாதிகார இல்லை மன்னர் ஆட்சி நிலவும் நாடாக இருக்கும்.    

  • தொடங்கியவர்
13 minutes ago, Lara said:

அநுர பெறும் வாக்குகளில் பெரும்பாலானவை சஜித்துக்கான வாக்குகளிலிருந்து பிரிந்து வருபவை. முதல் சுற்றில் அது கோத்தாவுக்கு சாதகமாக இருக்கும்.

அநுரவுக்கு வாக்களிப்போரில் பெரும்பாலானோர் இரண்டாம் விருப்ப தெரிவுக்கு சஜித் பெயரை இடுவார்கள் என்பதால் இரண்டாம் சுற்றுக்கு சென்றால் அது சஜித்துக்கு ஆதரவாக இருக்கும்.

கடந்த காலத்தை கொண்டவர் கோத்தா. அதனால், பல சிறுபான்மை தலைவர்கள் சஜித்தை ஆதரிக்க வேண்டும் என கோருகிறார்கள். ஆனால், சஜித்தின் அரசில் இருக்கப்போகும் சரத்தும் கடந்த காலத்தை கொண்டவர், கோத்தாவிற்கு சளைத்தவர் அல்ல. 

சஜித் அனுபவம் குறைந்தவராக அரசியலில் உள்ளார். அவர், மூத்தவர்களின் சொற்படி நடப்பாரா இல்லை தனெக்கென ஒரு புதியபாதையை எழுதுவாரா என்பதில், அவரிடம் சிறுபான்மை மக்கள் புதுமையை எதிர்பார்ப்பது புதிதல்ல.  இவ்வாறு புதியவர்களிடம் புதுமையை எதிர்பார்த்து ஏமாந்ததும் புதிது அல்ல.     

1 hour ago, ampanai said:

சரத் பொன்சேகா ஏற்கனவே மைத்திரி - ரணில் அரசில் இருந்தவர் தான். ஆனால் தேசிய பாதுகாப்புக்கு பொறுப்பாக இருக்கவில்லை.

சஜித் சரத் பொன்சேகாவை தனது அரசில் கொண்டிருப்பதை விட கோத்தா ஜனாதிபதியாக வருவது மிக மோசமான நிலையை உருவாக்கும். தவிர மகிந்த & கோவுக்கு அரசியல் காய்நகர்த்தல்கள் அத்துப்படி. சரத் பொன்சேகாவுக்கு அரசியல் தெரியாது. அவருக்கு இருப்பது இராணுவ பலம்.

மிக மோசமான இனவழிப்பை நடத்திய மகிந்த & கோவை எதிர்ப்பதற்காக, எதிர்ப்பவர்கள் சஜித்திடம் புதுமையை எதிர்பார்க்கிறார்கள் என நீங்கள் நினைத்தால் அது தவறு. சஜித்திடம் நான் புதுமை எதையும் எதிர்பார்க்கவில்லை. என்னைப்போல் தான் பலர் என நினைக்கிறேன்.

1 hour ago, ampanai said:

சனநாயக நாடுகளில் ஒன்றிற்கு மேற்பட்ட அரசியல் கட்சிகள் இருக்கும், தேர்தலில் சுயாட்சி வேட்பாளர்களும் களம் இறங்குவார்கள். இல்லாவிட்டால் அது சர்வாதிகார இல்லை மன்னர் ஆட்சி நிலவும் நாடாக இருக்கும்.    

ஹிஸ்புல்லா களமிறங்குவது ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் எண்ணத்தில் அல்ல, வாக்குகளை பிரிக்கும் எண்ணத்தில்.

Edited by Lara

  • தொடங்கியவர்
1 hour ago, Lara said:

ஹிஸ்புல்லா களமிறங்குவது ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் எண்ணத்தில் அல்ல, வாக்குகளை பிரிக்கும் எண்ணத்தில்.

இருக்கலாம். அதுவும், வாக்குகளை பிரிப்பது, சனநாயகத்தின் ஒரு அம்சமே. சனநாயக ஆட்சி முறைக்குள் உட்பட்டதே.

சனநாயக ஆட்சி முறையே இதுவரை மனிதனால் கண்டுபிடிக்கப்பட்ட ஆட்சி முறைகளில் சிறந்தது. 

  • தொடங்கியவர்
1 hour ago, Lara said:

சரத் பொன்சேகா ஏற்கனவே மைத்திரி - ரணில் அரசில் இருந்தவர் தான். ஆனால் தேசிய பாதுகாப்புக்கு பொறுப்பாக இருக்கவில்லை.

சஜித் சரத் பொன்சேகாவை தனது அரசில் கொண்டிருப்பதை விட கோத்தா ஜனாதிபதியாக வருவது மிக மோசமான நிலையை உருவாக்கும். தவிர மகிந்த & கோவுக்கு அரசியல் காய்நகர்த்தல்கள் அத்துப்படி. சரத் பொன்சேகாவுக்கு அரசியல் தெரியாது. அவருக்கு இருப்பது இராணுவ பலம்.

மிக மோசமான இனவழிப்பை நடத்திய மகிந்த & கோவை எதிர்ப்பதற்காக, எதிர்ப்பவர்கள் சஜித்திடம் புதுமையை எதிர்பார்க்கிறார்கள் என நீங்கள் நினைத்தால் அது தவறு. சஜித்திடம் நான் புதுமை எதையும் எதிர்பார்க்கவில்லை. என்னைப்போல் தான் பலர் என நினைக்கிறேன்.

'அனுர வென்றால் புதிய அரசியலமைப்பு': விஜித்த ஹேரத்' - ஏன்  தேசிய மக்கள் சக்திக்கு தமிழர்கள் பெரும்பான்மையாக ஆதரவு தரக்கூடாது? 

இரண்டு முதன்மை வேட்ப்பாளர்கள் சார்ந்த கட்சிகளை விட இவர்கள் ஒப்பீட்டளவில் குறைவான தீங்குகளை செய்தவர்கள். ஆட்சியில் அமராதவர்கள்.   

12 hours ago, ampanai said:

அத்துடன் முஸ்லிம் வேட்பாளர் ஒருவர் இந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது என்பது முஸ்லிம் வாக்குகளை திசைதிருப்பும் நோக்கத்தில் முன்னெடுக்கும் செயற்பாடாகவே நாம் கருதுகின்றோம். 

ஐதேக வை வெற்றி பெறச் செய்து பெருமளவு அமைச்சு பதவிகளை பெற்றுக்கொள்ள ஹக்கீம் செய்த சதி முயற்சிக்கு ஹிஸ்புல்லாவின் சதி முயற்சி முட்டுக்கட்டையாக இருப்பதால் ஹக்கீம் ஒப்பாரி வைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

11 hours ago, ampanai said:

இருக்கலாம். அதுவும், வாக்குகளை பிரிப்பது, சனநாயகத்தின் ஒரு அம்சமே. சனநாயக ஆட்சி முறைக்குள் உட்பட்டதே.

சனநாயக ஆட்சி முறையே இதுவரை மனிதனால் கண்டுபிடிக்கப்பட்ட ஆட்சி முறைகளில் சிறந்தது. 

நீங்கள் கோத்தா வெல்ல வேண்டும் என விரும்புவதால் இவ்வாறு எழுதுகிறீர்கள்.

இங்கு யாராலும் ஹிஸ்புல்லா போட்டியிடுவதை தடுக்க முடியாது. ஆனால் ஹிஸ்புல்லா போட்டியிடுவது வாக்குகளை பிரிப்பதற்கு என்பதை கூறி மக்களை விழிப்புணர்வூட்டலாம். 

12 hours ago, ampanai said:

'அனுர வென்றால் புதிய அரசியலமைப்பு': விஜித்த ஹேரத்' - ஏன்  தேசிய மக்கள் சக்திக்கு தமிழர்கள் பெரும்பான்மையாக ஆதரவு தரக்கூடாது? 

இரண்டு முதன்மை வேட்ப்பாளர்கள் சார்ந்த கட்சிகளை விட இவர்கள் ஒப்பீட்டளவில் குறைவான தீங்குகளை செய்தவர்கள். ஆட்சியில் அமராதவர்கள்.   

ஜேவிபி ஒரு இனவாத கட்சி, தமிழர் விரோத கட்சி.

இந்திய இலங்கை ஒப்பந்தத்தை எதிர்த்தது.

சமஸ்டியை எதிர்த்தது.

தற்காலிகமாக இணைந்திருந்த வடக்கு கிழக்கை உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து பிரித்தது.

சுனாமி பொதுக்கட்டமைப்பை எதிர்த்தது.

இலங்கை அரசுக்கும் புலிகளுக்குமிடையில் யுத்த நிறுத்தம் நிலவிய போது அதை குழப்பும் முயற்சிகளில் ஈடுபட்டது.

2005 தேர்தலில் மகிந்தவுக்கு ஆதரவு வழங்கி புலிகள் மற்றும் தமிழர்களுக்கெதிராக நடந்த போருக்கும் தீவிர ஆதரவை வழங்கியிருந்தது.

இப்படி பல....

JVP உடைந்து விமல் வீரவன்ச JNP ஐ உருவாக்கியிராவிட்டால் இன்றைய JVP இல் இனவாதம் இன்னும் அதிகமாக இருந்திருக்கும்.

2009 இல் மகிந்த & கோவின் யுத்த வெற்றியின் பின் அவர்களது இனவாதத்தின் முன் JVP இன் இனவாதம் எடுபடாததால் இப்பொழுது கொஞ்சம் அடக்கி வாசிக்கிறார்கள்.

தவிர கடந்த தேர்தலில் மைத்திரிக்கு வாக்களித்த அனைத்து வடக்கு கிழக்கு தமிழர்களும் இம்முறை அநுரவுக்கு வாக்களித்தாலும் அவர் வெற்றி பெற மாட்டார். 3 ஆம் நிலையிலேயே இருப்பார். இது முதல் சுற்றில் கோத்தா, சஜித்தை விட பெருமளவு வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்க உதவும். இரண்டாம் சுற்றில் கோத்தா வெற்றிபெற உதவும். (தமிழர்கள் பெரும்பாலும் இரண்டாம் விருப்ப தெரிவுக்கு யாரையும் போட மாட்டார்கள்).

எல்லா கட்சிகளும் இனவாத கட்சிகள், எனவே எந்த ஒரு கட்சியையும் பிரித்து குறை கூறுவதில் நியாயம் இல்லை. 

மற்றைய இரு கட்சிகளை விடவும், ஜே.வி.பி. கட்சியின் கைகளில் தமிழர் படுகொலைகள் இல்லை.
   
20 minutes ago, ampanai said:

எல்லா கட்சிகளும் இனவாத கட்சிகள், எனவே எந்த ஒரு கட்சியையும் பிரித்து குறை கூறுவதில் நியாயம் இல்லை. 

மற்றைய இரு கட்சிகளை விடவும், ஜே.வி.பி. கட்சியின் கைகளில் தமிழர் படுகொலைகள் இல்லை.

‘அநுர வென்றால் புதிய அரசியலமைப்பு' என்ற வரிகளை வைத்து தமிழர்கள் ஏன் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளிக்க கூடாது என கேட்டீர்கள். அநுர ஆட்சிக்கு வந்தாலும் தமிழர்களுக்கு தீர்வு தரப்போவதில்லை என்பதற்கு தான் ஜேவிபி பற்றி முன்னைய சில விடயங்களை பட்டியலிட்டேன்.

ஜேவிபி கைகளில் தமிழர் படுகொலை உள்ளது. இறுதிப்போரை ஆரம்பித்து வைத்ததே தாம் என ஜேவிபி காரரே மார்தட்டிக்கொண்டவர்கள்.

அநுரவுக்கு தமிழர்கள் வாக்களித்தாலும் அவர் வெல்ல மாட்டார், அது கோத்தாவின் வெற்றிக்கு வழிவகுக்கும் என ஏற்கனவே விளக்கம் தந்து விட்டேன்.

Edited by Lara

  • கருத்துக்கள உறவுகள்

 சிவாஜிலிங்கம் என்னத்துக்காக கேட்கிரார் என்றுதான் எனக்கு விளங்குதில்லை 😄 வடக்கு மக்கள் கோட்டாவுக்கு வாக்களிக்கப்போவதில்லை  அங்கால சைக்கிள் கோஷ்டிகள் பகிஸ்கரிக்கிறம் என்று சொல்லி திரியுதுகள் செம்புகளின்ட பேச்சுகளை காணல சும்ந்திரன் மட்டும் பேசுகிறார் என்று சொல்லுறாங்கள் ஆனால் கட்சி ரீதியாக அல்ல தனிப்பட்ட விசயமாக என்று சொல்லுறாங்கள் சரத்பொன்சேகாவுக்கு வாக்கு அளியுங்கள் என்ற கூட்டம் நாளைக்கு என்ன த்த சொல்ல போகுதோ தெரியல

பேச்சு வார்த்தை நடத்துகிறார்கள் போல

karakattakaran-movie.png

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.