Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாருக்கு வாக்களித்தீர்கள் எனக்கேட்டு யட்டியாந்தோட்டையில் தமிழர்கள் மீது தாக்குதல்

Featured Replies

ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு வாக்களித்தீர்கள் என கேட்டு யட்டியாந்தோட்டையில் உள்ள தமிழர்கள் மீது இனந்தெரியாத நபர்கள் நேற்றிரவு சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர்.

02__1_.jpg

கேகாலை, யட்டியாந்தோட்டை கனேபொல தோட்டத்தில் வசிக்கும் சிறுபான்மை மக்களாகிய இந்திய வம்சாவழியை சேர்ந்த மலையக மக்கள் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதோடு அவர்களின் வீடுகளில் இருந்த பொருட்களுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது.

02__2_.jpg

 இதனால் இந்த மக்கள் அச்சத்திற்குள்ளாகியுள்ளதோடு மிகந்த வேதனையும் அடைந்துள்ளனர்.

02__3_.jpg

மதுபோதையினால் இரு குழுக்களுக்குள் ஏற்பட்ட பிரச்சினையே இதற்கு காரணம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

02__4_.jpg

தற்போது குறித்தப் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

02__5_.jpg

 அப் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில், ' நாங்கள் பிரபாகரனுக்கா வாக்களித்தோம்? பௌத்த சிங்களவர் ஒருவருக்கே வாக்களித்தோம். அவர்களுக்கு வாக்களித்து விட்டு அவர்களிடமிருந்து உதையும் வாங்குகின்றோம். எமது நிலை தொடர்பில் யாரும் கண்டுகொள்வதாக இல்லை" என்றார்.

02__9_.jpg

02__8_.jpg

02__7_.jpg

https://www.virakesari.lk/article/69217

  • கருத்துக்கள உறவுகள்

அம்பனை,

1. எல்லாளனை தோற்கடித்த ருவன் வலி சேயவில் பதவியேற்பு.

2. 24 மணத்தியாளத்தில் தமிழர் மீது முதலாவது தாக்குதல்.

இனி படிப்படியாக உங்கள் ஆசையின் ஒரு பகுதி(தமிழர் மீது நெருக்குவாரம்) நிறைவேறும்.

ஆனால் உங்கள் ஆசையின் மறுபகுதி (தமிழ் மக்கள் எதிர்ப்பு, சர்வதேச அளுத்தம்) மருத்துக்கும் இராது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, ampanai said:

ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு வாக்களித்தீர்கள் என கேட்டு யட்டியாந்தோட்டையில் உள்ள தமிழர்கள் மீது இனந்தெரியாத நபர்கள் நேற்றிரவு சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர்.

 தமிழ்ச்சனம் முழுக்க ஒரு சிங்களவனுக்குத்தான் வாக்களிச்சது எண்டு அந்த  இனந்தெரியாத மோட்டுக்கூட்டத்துக்கு தெரியேல்லை. 😎

நாட்டின் பல்வேறு பகுதிகளில் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன.

காலி - தலாபிட்டிய பள்ளிவாசல், இரத்தினபுரி - நிவித்திகல கெட்டனிகேவத்த பள்ளிவாசல் ஆகியவற்றின் மேல் நேற்று தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் வாசித்தேன்.

23 minutes ago, குமாரசாமி said:

தமிழ்ச்சனம் முழுக்க ஒரு சிங்களவனுக்குத்தான் வாக்களிச்சது எண்டு அந்த  இனந்தெரியாத மோட்டுக்கூட்டத்துக்கு தெரியேல்லை. 😎

UNP காரங்களுக்கே அடி விழுது. இதற்குள் தமிழர்கள் எம்மாத்திரம்?

 

  • கருத்துக்கள உறவுகள்

எந்தக் குடும்பத்தின் காடைத்தனம் பொறுக்க முடியாமல்.. அதனை வீட்டுக்கு அனுப்பினீர்களோ.. அதே குடும்பத்தை மீண்டும் ஆட்சியில் அமர்த்தினால்.. இது தான் நிகழும்.

இதற்கு ஆறுமுகம் தொண்டமான் தான் பதில் சொல்லனும். 

  • தொடங்கியவர்
4 hours ago, ampanai said:

அப் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில், ' நாங்கள் பிரபாகரனுக்கா வாக்களித்தோம்? பௌத்த சிங்களவர் ஒருவருக்கே வாக்களித்தோம். அவர்களுக்கு வாக்களித்து விட்டு அவர்களிடமிருந்து உதையும் வாங்குகின்றோம். எமது நிலை தொடர்பில் யாரும் கண்டுகொள்வதாக இல்லை" என்றார்.

 

  • தொடங்கியவர்

வன்முறைகளால் பாதிக்கப்பட்டால் ’சிறிகொத்தாவுக்கு அறிவிக்கவும்’

தேர்தலுக்குப் பின்னரான காலப்பகுதிகளில் இடம்பெற்று வரும் வன்முறைகளால் பாதிக்கப்படும் மக்கள் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான, சிறிகொத்தாவுக்கு அறிவிக்குமாறு, கட்சியின் பொதுச் செயலாளரும் கல்வி அமைச்சருமான, அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் அன்னம் சின்னத்துக்கு வாக்களித்த, ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்கள் வன்முறைகளுக்கு இலக்காகி, அசௌகரியங்களுக்கு முகங்கொடுப்பதைத் தடுப்பதற்கான பொறுப்பு கட்சிக்கு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

எனவே, அவ்வாறான பிரச்சினைகளை எதிர்நோக்கியிருப்பவர்கள் கட்சியின் தலைமையகத்தின் தொலைபேசி இலக்கமான 0112-2889378, 077-9215299 என்ற இலக்கங்களுக்கு அழைத்து அறிவிக்குமாறும் அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

http://www.tamilmirror.lk/செய்திகள்/வனமறகளல-பதககபபடடல-சறகததவகக-அறவககவம/175-241198

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
46 minutes ago, ampanai said:

 


 கேட்க பாக்க ஆக்களில்லை என்று சொல்லும் முதியவரின் ஆதங்கத்தை கேட்க மனம் வலிக்கின்றது.
நாங்கள் பிரபாகரனுக்கு வாக்களிக்கவில்லை. சிங்கள வேட்பாளருக்கே வாக்களித்தோம்.அப்படியிருந்தும் எங்களை தாக்குகின்றார்கள்.
தமிழ் அரசியல்வாதிகளே நாக்கை புடுங்கிட்டு செத்து தொலையுங்கள்.

 

  • தொடங்கியவர்

மலையக தமிழர்கள் மீதான தாக்குதல்களை தடுத்து நிறுத்துமாறு வடிவேல் சுரேஷ் கோரிக்கை

(ஆர்.விதுஷா)

ஜனாதிபதி தேர்தலை தொடர்ந்து மலையகத்தின் சில பகுதிகளில்  தமிழ் சமூகத்தின் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல்களை வன்மையாக கண்டிப்பதாக இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்த வன்முறைகளை தடுத்து நிறுத்த உடனடி நடவடிக்கை  எடுத்து தமிழ் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும் அவர் புதிய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிடம் வேண்டுகோள்  விடுத்துள்ளார்.  

ஜனாதிபதியாக கோதாபய ராஜபக்ஷ பதவியேற்றதையடுத்து நாடு  பூராவும் வெற்றிக்கொண்டாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.  அதிலும் சிறுபான்மையினர் என்ற ரீதியில் எமது மக்கள் மீதான  தாக்குதல்களை ஏற்றுக்கொள்ள முடியாது. 

தேர்தல் வெற்றியை கொண்டாடுவதென்பது அவரவர் உரிமை.  ஏனைய  இனத்தவருக்கு பங்கம் விளைவிக்கும் வகையில்  செயற்படுதல் காட்டுமிராண்டிதனமான செயலாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

https://www.virakesari.lk/article/69262

  • தொடங்கியவர்

 

 

  • தொடங்கியவர்

யட்டியந்தோட்டை சம்பவம் ‘தேர்தலுடன் தொடர்புடைய சம்பவம் அல்ல’

யட்டியந்தோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கனேபல்ல தோட்டத்தில், நேற்று (18) நடைபெற்ற தாக்குதல் சம்பவமானது,  தனிநபர்கள் இருவருக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தால் ஏற்பட்டுள்ளதென்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மதுபோதையில் இருந்த குறித்த இருவரும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டதாகவும், இது தொடர்பில் பொலிஸ் அவசரப் பிரிவின் 119 என்ற இலக்கத்தின் மூலம் கிடைக்கப்பெற்ற தகவல்களுக்கமைய, யட்டியந்தோட்டை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனரென, பொலிஸ் ஊடகப் பிரிவு ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இந்தச் சம்பவத்தை சில சமூக வலைத்தளங்கள் தவறாக திரிபுபடுத்தி வெளியிடுவதாகவும், இது தேர்தலுடன் தொடர்புடைய சம்பவம் இல்லை என்றும் பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் அறவுறுத்தியுள்ளது.

http://www.tamilmirror.lk/செய்திகள்/யடடயநதடட-சமபவம-தரதலடன-தடரபடய-சமபவம-அலல/175-241218

  • தொடங்கியவர்

’கனேபல்ல தோட்ட மக்களின் பாதுகாப்பை உறுதிபடுத்துக’

யட்டியாந்தோட்டை - கனேபல்ல தோட்ட மக்களினுடைய பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு,தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் அமைச்சருமான பழனி திகாம்பரம், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணித்துள்ளார். 

கனேபல்ல தோட்டத்திலுள்ள மக்கள் தாக்கப்பட்டமை தொடர்பில் தனது கண்டனத்தை வெளியிட்டுள்ள அமைச்சர் பழனி திகாம்பரம், இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்குமாறு, யட்டியாந்தோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு, தொலைப்பேசியூடாக அறிவுறுத்தியுள்ளார்.

மக்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் கைது செய்யப்பட வேண்டும் எனவும் இந்த நாட்டில் மக்கள் ஜனநாயக ரீதியில் சுதந்திரமாக வாழ பொலிஸார் அவர்களது பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.

அதுமாத்திரமன்றி பாதிக்கப்பட்ட மக்களை சந்திப்பதற்காக தொழிலாளர் தேசிய சங்கத்தின் கேகாலை மாவட்ட அமைப்பாளர்களை சங்கத்தின் தலைவர் அமைச்சர் பழனி திகாம்பரம் குறித்தத் தோட்டத்துக்கு அனுப்பி வைத்துள்ளார்.

http://www.tamilmirror.lk/மலையகம்/கனபலல-தடட-மககளன-பதகபப-உறதபடததக/76-241222

  • தொடங்கியவர்

யட்டியந்தொட்ட விவகாரம்: சுமூகமாகத் தீர்வு

யட்டியந்தொட்ட  கனேபொல தோட்டத்தில், நேற்று (18) இரவு ஏற்பட்ட இன முறுகல் சம்பவம், யட்டியாந்தோட்டை பொலிஸார்  தலைமையில், சுமூகமாகத் தீர்த்து வைக்கப்பட்டுள்ளது.

நாட்டின் ஜனாதிபதியாக, கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில், நேற்று (18) இரவு, வெற்றிக் கொண்டாட்டங்கள் இடம்பெற்றுள்ளன. இதன்போது, அங்குள்ள பெருந்தோட்டத் தொழிலாளர்கள் வாழும் பகுதிக்குள் நுழைந்த பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள் சிலர், யாருக்கு வாக்களித்தீர்கள் என்று கேட்டு, வீட்டிலிருந்து தொலைச்காட்சிப் பெட்டி, மின் விசிறி ஆகியவற்றை கீழே போட்டு உடைத்து, அங்கிருந்தவர்களைத் தாக்கியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் அறிந்த யட்டியாந்தோட்டை பொலிஸார், சம்பவ இடத்துக்கு விரைந்த பின்னர், அங்கு ஏற்பட்ட பதற்ற நிலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதுடன், இதற்குக் காரணமான ஒருவரையும் கைது செய்தனர்.

எனினும், குறித்தத் தோட்டத்திலுள்ள மக்கள், மீண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்படலாம் என்று அச்சத்துடன் இருந்த நிலையில், தாக்குதலுக்கு உள்ளான குடும்பத்தாரை, பொலிஸார் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று, இரு தரப்பினருக்கு இடையேயான பிரச்சினையை, சுமூகமாகத் தீத்து வைத்துள்ளனர்.

அத்துடன், பாதிக்கப்பட்ட நபருக்கு, தொலைக்காட்சி, மின்விசி உள்ளிட்ட நட்ட ஈடு பணத்தொகையும் வழங்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது.

http://www.tamilmirror.lk/மலையகம்/யடடயநதடட-வவகரம-சமகமகத-தரவ/76-241221

6 hours ago, ampanai said:

யட்டியந்தோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கனேபல்ல தோட்டத்தில், நேற்று (18) நடைபெற்ற தாக்குதல் சம்பவமானது,  தனிநபர்கள் இருவருக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தால் ஏற்பட்டுள்ளதென்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பொலிஸ் சொல்வதையெல்லாம் நம்ப முடியாது. இப்ப கோத்தா ஜனாதிபதி.

பிள்ளையானின் கட்சியான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஆதரவாளர்கள் (எழுத்துப்பிழைகளை தவிர்த்து வாசிக்கவும்) 10 ஆம் திகதி மட்டக்களப்பில் தாக்குதல் நடத்தியிருந்தார்களாம்.

Edited by Lara

கண்டியில் தமிழர்கள் மேல் தாக்குதல்.

 

  • தொடங்கியவர்

யட்டியன்தொட்டை சம்பவத்திற்கு முடிவு எட்டப்பட்டது 

யட்டியன்தொட்ட கனேபொல தோட்டம்  மேற்பிரிவு லயன் குடியிருப்பினுள் நுழைந்த சிலர் தோட்ட மக்கள் மீது  நேற்று முந்தினம் இரவு (18) தாக்குதல் மேற்கொண்ட சம்பவத்திற்கு முடிவு எட்டப்பட்டுள்ளது

0__1_.jpg

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்கள் இன்று (20) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர் இதே வேலை பாதிக்கபட்டவர்களுக்கும் சம்பவத்துடன் தொடர்பு உடையவர்களுக்கும் இடையில் பொலிஸாரின் தலையீட்டுடன் சமரச பேச்சுகள் நடைபெற்றுள்ளன. இதன் படி சேதமாக்கபட்ட பொருட்களை புதிதாக கொள்வனவு செய்து கொடுப்பதற்கும் இனங்கியுள்ளனர்.

தொடர்ந்து இந்த விடயம் தொடர்பில் சம்பந்தபட்ட அரச அதிகாரிகள் பொலிஸார்  தேர்தல் கண்கானிப்பு பெப்ரல் அமைப்பு மணித உரிமை அமைப்புக்கள் உடனுக்கு உடன் சம்ப இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்க்கொண்டனர்.

தேர்தலுக்காக வாக்கு சேகரிக்க சென்ற எந்த அரசியல்வாதிகளும் இது வரைக்கும் செல்லவில்லை தங்களின் இந்த நிலைமை குறித்து ஆராயவில்லை என பாதிக்கபபட்ட மக்கள்  குற்றம் கூறுகின்றனர்

இருந்தும் தமிழ் மக்களோ முஸ்லிம் மக்களோ இனவாதிகள் அல்ல அவர்கள் வாக்களித்ததும் ஒரு சிங்கள பௌத்த ஜனாதிபதி வேட்பாளருக்கே. அவர்கள் இனவாதிகளாக இருந்திருந்தால் நிச்சயமாக தமிழர்கள் சிவாஜிலிங்கத்திற்கும் முஸ்லிம்கள் ஹிஸ்புல்லாவிற்கும் வாக்களித்திருக்க வேணடும். தேர்தல் தினத்தன்றும் தேர்தல் முடிவடைந்த பின்பும் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.இந்த தாக்குதல் காரணமாக புதிய ஜனாதிபதியின் செயற்பாடுகளுக்கு குந்தகம் ஏற்படலாம் எனவே இதற்கான உரிய நடவடிக்கைகளை அரசாங்கம் உடனடியாக எடுக்க வேண்டும்.

அதே நேரம் தமிழ் முஸ்லிம் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் விசேட பிரதேசங்களுகக்கான அபிவிருத்தி அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன்  அறிக்கை ஒன்றையும் வெளியிட்டு உள்ளமை குறிப்பிடதக்கது. இவரின் சிபார்சுக்கு அமைய இவரின் செலாளர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தேவையான விடயங்களை மேற்க் கொண்டும் உள்ளனர்

தற்போது இந்த சம்பவத்திற்கும் அரசியலுக்கும் தொடர்பு இல்லை எனவும் மது போதையில் இருந்த சிலரே இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் கருத்து தெரிவித்துள்ளமை  கவலை அளிக்கின்றது. 

உண்மை நிலையை பாதிக்கபட்ட மக்களிடம் நேரடியாக வினாவினால் தெரியும். எது என்னவானாலும் பரவாயில்லை இந்த பிரச்சனை தொடர்பான செய்திகளும் தீர்ப்பதற்காக எடுத்த முயற்சிகளினால் இதே போன்ற சம்பவங்கள் மேலும் இடம் பெறவில்லை  யாரும் எத்தனிக்கவும் இல்லை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. காரணம் புதிய ஜனாதிபதியன் செயற்பாடுகளாகும்  எனத் தெரிவித்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/69331

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.