Jump to content

மாடாய் உழைத்து ..


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது
வியாபாரி ஒருவர், தன் ஊரிலிருந்து தினமும் சரக்கு மூட்டைகளை, தன் மாட்டு வண்டியில் ஏற்றிச் சென்று, பக்கத்து ஊரில் விற்பது வழக்கம். ஒருநாள் அந்த வண்டில் மாடு, வியாபாரியிடம் வந்து கேட்டது “எஜமான் இரண்டு ஆண்டுகளாக நான் உங்களுக்கு வேலை செய்கிறேன், நான் செய்யும் வேலைக்கு, நீங்கள் எனக்குக் கொடுக்கும் புல்லின் அளவோ மிகக் குறைவு.., தயவுசெய்து என் புல்லின் அளவைக் கூட்டுங்கோ” என்றது.
 
அதைக் கவனமாகக் கேட்ட வியாபாரி “மாடே, நீ கடினமாக உளைப்பது உண்மையே, ஆனால் பக்கத்து வீட்டுக்காரன் மாடு, ஒரு நாளைக்கு 25 மூட்டைகளை வண்டியில் சுமக்கிறது, நீயோ 20 மூட்டைகளை மட்டுமே சுமக்கிறாய், நீ அதிக மூட்டைகளைச் சுமந்தால், நானும் புல்லின் அளவை அதிகரிப்பதைப் பற்றி யோசிக்கிறேன் என்றார்.
 
பக்கத்து வீட்டு மாடு, பஞ்சு மூட்டைகளை மட்டுமே சுமக்கிறது என்பதை அறியாத இந்த மாடு, தானும் அதிக மூட்டைகளைச் சுமக்க ஒத்துக் கொண்டது. இப்படியே ஓராண்டு சென்றதும், மாடு மறுபடியும் வந்து, தன் புல்லின் அளவை அதிகரிக்கச் சொல்லிக் கேட்டது.
 
அதற்கு வியாபாரி “மாடே, அதிக பாரம் ஏற்றியதால், நம் பழைய வண்டி பாதிப்படைந்து விட்டது, எனவே இப்பொழுது ஒரு புதுவண்டி செய்யச் சொல்லியுள்ளேன், அதற்கு ஆகும் செலவையும் நான் பார்க்க வேண்டும், இன்னும் கொஞ்ச நாட்கள் பொறுத்துக் கொள், புல்லின் அளவை நிட்சயம் அதிகரிக்கிறேன்” என்றார்.
 
வேறு வழியின்றி, மாடும் ஒத்துக் கொண்டது. புது வண்டியும் வந்து ஆறு மாதங்களும் ஆன பின்பு, மாடு திரும்பவும் சென்று புல்லின் அளவைக் கூட்டச் சொல்லிக் கேட்டது.. அதற்கு வியாபாரி..
 
“மாடே, இப்போதெல்லாம் உனது வேகம் மிகக் குறைந்துவிட்டது, பக்கத்து ஊருக்குச் செல்ல, முன்பை விட அதிக நேரம் எடுத்துக் கொள்கிறாய், இதனால என் வியாபார நேரம் குறைந்துவிட்டது, எனவே உனக்கு அதிக புல் தருவது, இப்போதைக்கு சாத்தியமில்லை” என்றார்.
 
கோபமடைந்த மாடு “எஜமான், இப்புது வண்டியின் பாரம், பழைய வண்டியை விட அதிகம், இந்தக் கனத்தையும் சேர்த்து இழுக்க வேண்டியிருப்பதாலேயே என்னால முன்பு போல விரைவாகச் செல்ல முடியவில்லை” என்றது... அதற்கு வியாபாரி..
 
“மாடே!.. நீ என்ன காரணம் சொன்னாலும், உன்னால் எனக்கு அதிக லாபத்தைப் பெற்றுத்தர முடியவில்லை, நான் வேண்டுமானால் உன்மேல் ஏற்றும் மூட்டைகளின் எண்ணிக்கையை வேண்டுமானால் குறைத்து விடுகிறேன், ஆனால் நீ அதிக புல் கேட்காதே” என்றார்.
 
தன் இத்தனை வருட உழைப்பும் வீணாகிவிடும் எனப் பயந்த மாடு “வேண்டாம் எஜமான், நான் எப்படியாவது வேகமாகச் சென்று, உங்களுக்கு அதிக லாபம் பெற்றுத் தந்து விடுகிறேன்”.. என்றது.
 
மறுநாள் தொடங்கி, மாடு தன் சக்தியெல்லாம் திரட்டி, வேகமாக ஓட ஆரம்பித்தது. மீண்டும், முன்பு தான் எடுத்துக் கொண்ட நேரத்திலேயே வியாபாரியைக் கொண்டுபோய்ச் சேர்த்தது. ஆனால், மிகக் கடின உழைப்பால், ஒரு மாதத்திலேயே நோயுற்று, படுத்த படுக்கையானது. வழமையாகச் சாப்பிடும் புல்லைக்கூட, அதனால் உண்ண முடியவில்லை.
 
சில நாட்கள் அதற்கு மருந்து கொடுத்த வியாபாரி, ஒருநாள் அதனிடம் “மாடே, உன்னை நல்ல விலைக்கு ஒருவர் கேட்கிறார், அவரிடம் உன்னை விற்று விடப் போகிறேன்” என்றார்.
 
“எஜமான், நான் இப்போதிருக்கும் நிலையில், என்னால் எந்த வேலையையும் செய்ய முடியாதே, இப்போ எதுக்கு என்னை விலைக்குக் கேட்கிறார்கள்” என்றது.
 
“உன்னை அவர்கள் வேலை செய்ய வாங்கவில்லை, உன்னைக் கொன்று, தோலை எடுக்கவே கேட்கிறார்கள்” என்றார் வியாபாரி. வியாபாரியின் பேச்சைக் கேட்ட மாட்டுக்கு அழுகை வந்தது, அழுதழுது மாடு சொன்னது..
 
“எஜமான், நிங்கள் செய்வது ரொம்ப அநியாயம், உங்கள் பேச்சை நம்பி, மாடாய் உழைத்ததாலேயே நோயுற்றேன், இல்லை எனில் நீண்டகாலம் ஆரோக்கியமாக இருந்திருப்பேன், நீங்கள் செய்வதெல்லாம் துரோகம்” என்றது. அதைக் கேட்ட வியாபாரி..“நான் செய்வது துரோகம் இல்லை
 
 ஒரு  முதலாளியின் லட்சியம், தன் தொழிலாளியிடம், முடிந்த அளவு வேலை வாங்கி அதிக லாபம் பெறுவது. அதையே நானும் செய்தேன், உன் மூலம் 5 ஆண்டுகளில் சம்பாதிக்க வேண்டியதை 3 ஆண்டுகளிலேயே சம்பாதித்து விட்டேன், இப்போ உன்னை விற்பதன் மூலமும் பணம் ஈட்டப்போகிறேன். என்னுடைய அதிக லாபம் பெறும் நோக்கம் நிறைவேற, உன்னுடைய ஆசையை என் மூலதனமாக்கிக் கொண்டேன். நீ ஆரம்பித்திலேயே சுதாகரித்துக் கொண்டிருந்தால், தப்பித்திருக்கலாம்” என்றார்.
 
 
தன் முட்டாள்தனத்தை எண்ணி, மாடு நொந்து அழுதது.
 
இப்படித்தான் சில நிர்வாகங்களின் நோக்கமும், ஊழியர்களிடமிருந்து எவ்வளவு வேலை வாங்க முடியுமோ, அவ்வளவு வாங்கிக்கொள்வார்கள். எனவே ஊழியர்கள்தான் விழிப்புடன் இருக்க வேண்டும்.
 
 
 படித்ததில்   பிடித்தது 
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இது மனிதருக்கும்... பொருந்தும்.

வேலை இடத்தில்... நீங்கள் திடகாத்திரமாக வேலை செய்யும் மட்டும் தான்,
முதலாளிக்கு... அந்த வேலையாள் தேவை.

அவரால்.... அந்த வேலையை செய்ய முடியாமல் போனால்....
அந்த இடத்திற்கு, வேறு ஒருவரை... முதலாளி நியமிப்பார்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

முதலாளியை விடுங்கள்....இப்போதெல்லாம் தொழிலாளியே தொழிலாளிக்கு எதிரியாகின்றார்கள்.....!

---- ஒருத்தரை வேலைக்கு கொண்டு போய் சேர்த்தால் சில நாட்களிலேயே கொண்டு போய் சேர்த்தவரை புறஞ் சொல்லி ஓரங்கட்டி விடுகின்றார்கள்.....!

---- பத்து ஈரோவுக்கு வேலை செய்பவன் எதாவது சிறு பிரச்சினை வரும்போது முதலாளி சொல்கிறான் விருப்பமில்லை என்றால் விட்டுட்டு போ ....பின்னால எட்டு ஈரோவுக்கு வேலை செய்ய ஆள் ரெடியாய் இருக்கு என்று......!   🤔

Posted
1 hour ago, suvy said:

முதலாளியை விடுங்கள்....இப்போதெல்லாம் தொழிலாளியே தொழிலாளிக்கு எதிரியாகின்றார்கள்.....!

---- ஒருத்தரை வேலைக்கு கொண்டு போய் சேர்த்தால் சில நாட்களிலேயே கொண்டு போய் சேர்த்தவரை புறஞ் சொல்லி ஓரங்கட்டி விடுகின்றார்கள்.....!

---- பத்து ஈரோவுக்கு வேலை செய்பவன் எதாவது சிறு பிரச்சினை வரும்போது முதலாளி சொல்கிறான் விருப்பமில்லை என்றால் விட்டுட்டு போ ....பின்னால எட்டு ஈரோவுக்கு வேலை செய்ய ஆள் ரெடியாய் இருக்கு என்று......!   🤔

உண்மைதான்,  வேலையை விட்டு விட்டால் வேறு வேலை கிடைப்பது என்பது உடனடியாக சாத்தியமில்லை .எனவே எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டு மாடாக உழைக்கத்தான் வேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 hours ago, நிலாமதி said:
தன் முட்டாள்தனத்தை எண்ணி, மாடு நொந்து அழுதது.
 
இப்படித்தான் சில நிர்வாகங்களின் நோக்கமும், ஊழியர்களிடமிருந்து எவ்வளவு வேலை வாங்க முடியுமோ, அவ்வளவு வாங்கிக்கொள்வார்கள். எனவே ஊழியர்கள்தான் விழிப்புடன் இருக்க வேண்டும்.

கதையாக இருந்தாலும் மனதுக்கு கஸ்டமாக இருந்தது.

முதலாளியாகிவிட்டால் மனிதன் மிருகமாகி ஆறாவது அறிவை இழக்கிறான்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உண்மைதான் அக்கா சில அல்ல பல நிறுவனங்களில் அப்படித்தான் நடக்கிறது. அதற்கான காரணம் எம்மவர் பலர் எம்மவரையே உரித்து அந்நிய முதலாளிகளுக்கு இலாபம் ஈட்டிக் கொடுப்பதுதான்.

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.