Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுவிஸ் தூதரக அதிகாரியிடம் மீண்டும் விசாரணை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சுவிஸ் தூதரக அதிகாரியிடம் மீண்டும் விசாரணை

 

swiss-embassy-staff-300x200.jpgகடத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டதாக கூறப்படும் கொழும்பில் உள்ள சுவிஸ் தூதரக பணியாளர் கார்னியர் பனிஸ்டர் பிரான்சிஸ், குற்ற விசாரணைத் திணைக்களத்தில் இன்று காலை மீண்டும் முன்னிலையாகியுள்ளார்.

ஏற்கனவே அவரிடம் ஐந்து தடவைகள் விசாரணைகள் நடத்தப்பட்டுள்ள போது, சாட்சியம் பெறும் நடவடிக்கைகள் இன்னமும் முடியவில்லை என்று குற்ற விசாரணைத் திணைக்களத்தினர் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில்  இன்று காலை சுவிஸ் தூதரக பணியாளர் கார்னியர் பனிஸ்டர் பிரான்சிஸ் மீண்டும் குற்ற விசாரணைப் பிரிவில் வாக்குமூலம் அளிப்பதற்காக  முன்னிலையாகியுள்ளார்.

சாட்சியம் பெறப்பட்ட பின்னர் அவர் சட்ட மருத்துவ அதிகாரி முன்னிலையில் மீண்டும் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

http://www.puthinappalakai.net/2019/12/16/news/41559

தமக்கு விரும்பிய வகையில் வாக்குமூலம் வழங்கும் வரை, மீண்டும் வேதாளம் முருங்கையில் ஏறும். 

  1. முதல் நாள் 5 மணித்தியாலங்கள் வாக்குமூலம்.
  2. அவர் மீண்டும் இரண்டாம் நாள் வருமாறு அழைக்கப்பட்டு, 6 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பெறப்பட்டதாம்.
  3. செவ்வாய் மீண்டும் வருமாறு அழைக்கப்பட்டு, 4 மணித்தியாலங்கள்
  4.  இன்று மீண்டும்? 

 

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ampanai said:

தமக்கு விரும்பிய வகையில் வாக்குமூலம் வழங்கும் வரை, மீண்டும் வேதாளம் முருங்கையில் ஏறும். 

  1. முதல் நாள் 5 மணித்தியாலங்கள் வாக்குமூலம்.
  2. அவர் மீண்டும் இரண்டாம் நாள் வருமாறு அழைக்கப்பட்டு, 6 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பெறப்பட்டதாம்.
  3. செவ்வாய் மீண்டும் வருமாறு அழைக்கப்பட்டு, 4 மணித்தியாலங்கள்
  4.  இன்று மீண்டும்? 

திட்டம், இவரை கைது செய்து விட்டு, பின் கைதிகள் பரிமாற்றம் மற்றும் விடுவிப்பதற்கு, நிசாந்தவை நாடு கடத்தும் படி பேரம் பேசுவது.

3 minutes ago, Kadancha said:

திட்டம், இவரை கைது செய்து விட்டு, பின் கைதிகள் பரிமாற்றம் மற்றும் விடுவிப்பதற்கு, நிசாந்தவை நாடு கடத்தும் படி பேரம் பேசுவது.

இருக்கலாம், ஆனால் அது சாத்தியம் என எண்ணவில்லை. மேலும், அது சுவிஸ் அரசு அடிபணிந்ததாக பார்க்கபப்டும். மேலும், ஐரோப்பிய ஒன்றியமும் அமெரிக்காவும் கூட சுவிஸிற்கு ஆதரவை வழங்கும். 

முடிந்தால் உருசிய உதவியுடன் நிசந்தாவை சுவிஸில் வைத்து போடலாம் ( அவர்கள் பிரித்தானியாவில் செய்தமை / செய்ய முயன்றது போல) .

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ampanai said:

இருக்கலாம், ஆனால் அது சாத்தியம் என எண்ணவில்லை.

கைது செய்யப்பட்டு விட்டார் என்பதே பிந்திய செய்திகள்.

2 minutes ago, Kadancha said:

கைது செய்யப்பட்டு விட்டார் என்பதே பிந்திய செய்திகள்.

ஆம், கைது செய்யப்பட்டது, கொழும்பில் உள்ள சுவிஸ் தூதரக பணியாளர் கார்னியர் பனிஸ்டர் பிரான்சிஸ். 

Swiss Embassy local staffer, Garnier Banister Francis, was arrested by the Criminal Investigation Department (CID) on the instructions of the Attorney General a short while ago.

She was arrested after being produced in the National Institute of Mental Health.

The Attorney General advised the CID to arrest Ms. Francis after naming her as a suspect for exciting disaffection against the government.

http://www.dailymirror.lk/top_story/Swiss-Embassy-local-staffer-arrested/155-179662

இதனால்  சுவிஸ் அரசிற்கு சவாலாக இருக்கபோகின்றது. இதன் விளைவுகள் எவ்வாறு இருக்கும் என சிங்களத்திற்கு தெரியாது.  

சுவிஸ் தூதரக பணியாளர் கைது; நீதிமன்றில் முன்னிலை
இனந்தெரியாத நபர்களால் கடத்தப்பட்டு, துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதன் பின்னர், விடுவிக்கப்பட்டதாக கூறப்படும் சுவிஸ் தூதரக உள்ளூர் பணியாளர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அத்துடன், கைதுசெய்யப்பட்ட அவர், கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

சுவிஸ் தூதரக பணியாளரை கைதுசெய்யுமாறு உத்தரவு

இனந்தெரியாத நபர்களால் கடத்தப்பட்டு, துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதன் பின்னர், விடுவிக்கப்பட்டதாக கூறப்படும் சுவிஸ் தூதரக உள்ளூர் பணியாளரை கைதுசெய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு சட்டமா அதிபர், குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு அறிவுறுத்தியுள்ளார்.

குறித்த பணியாளர், அரசாங்கத்தை அசௌகரியத்துக்கு உள்ளாக்கும் வகையில்,  தவறான தகவல்களை வழங்கியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இனந்தெரியாத நபர்களால் கடத்தப்பட்டு, துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதன் பின்னர், விடுவிக்கப்பட்டதாக கூறப்படும் சுவிஸ் தூதரக உள்ளூர் பணியாளர் அங்கொடை மனநல வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தார்.

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில், விசாரணைகளுக்காக, இன்று ஆஜரான நிலையில், அங்கொடை மனநல வைத்தியசாலை அனுப்பிவைக்கப்பட்டார்.

அதனையடுத்து, அங்கொடையில்  இடம்பெற்ற மேலதிக பரிசோதனைகளின் பின்னர் மீண்டும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாக்கப்பட்டார்.

குறித்த பணியாளரின் மனநல பரிசோதனை அறிக்கை கிடைத்ததன் பின்னர், அந்த அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.

அந்த பணியாளர் வழங்கிய சாட்சியங்கள் முன்னுக்குப் பின் முரணாக இருப்பதால் அவரின் மனநிலை குறித்து பரிசோதனை செய்யுமாறு நீதிமன்றம் பணித்தமை குறிப்பிடத்தக்கது.

http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/சவஸ-ததரக-பணயளர-கத-நதமனறல-மனனல/150-242526

’சுவிஸ் தூதரக சம்பவம் நடைபெறாத ஒன்று'

சுவிஸ் தூதரக உள்ளூர் பணியாளர் கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படும் சம்பவமானது நடக்காத ஒன்று என, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று (16) இடம்பெற்ற ஊடக மற்றும் பத்திரிகை ஆசிரியர்களுடனான சந்திப்பின்போது, அவர் இதனைக் கூறியுள்ளார்.

இவ்வாறான சம்பவமொன்று இடம்பெறவில்லை என்பது, விசாரணைகளில் தெரியவந்துள்ளதுடன், சி.சி.டி.வி காட்சிகள் மற்றும் அலைபேசி தரவுகளின் ஊடாகவும் அவ்வாறான சம்பவமொன்று நடைபெற்றிருக்கவில்லையென தெளிவுப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

“தனது ஊழியர் கடத்தப்பட்டமை தொடர்பில் விசாரணையொன்று கோரிக்கை விடுக்கும் பொறுப்பு குறித்த  தூதரகத்துக்கு இருந்தது. பிரதமர் விசாரணைகளுக்கு உத்தரவிட்டார். தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம் தொடர்பில் குறித்த ஊழியரின் ஒத்துழைப்பு தேவை” என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/சவஸ-ததரக-சமபவம-நடபறத-ஒனற/150-242521

பிரிகேடியர் பிரியங்கர பெர்னாண்டோவுக்கு பிரித்தானிய நீதிமன்றம் அபராதம் விதித்ததை அது அவரின் சிறப்புரிமையை மீறும் செயல் என வாதாடும் சிங்களம், சுவிஸ் அரசில் வேலை செய்யும் சிங்கள குடியுரிமை பெற்றவரை 'அரசிற்கு எதிராக பொய்' சொன்னார் என கைது செய்கிறது. 

இலங்கைக்கான சுவிஸ் தூதுவர் இலங்கை ஜனாதிபதியுடன் சந்திப்பை மேற்கொண்டார்

Swiss Ambassador calls on President 16 December 2019 06:31 pm

Ambassador of Switzerland in Sri Lanka, Hanspeter Mock, called on President Gotabaya Rajapaksa at the Presidential Secretariat this morning .

image_22012896d9.jpg

http://www.dailymirror.lk/caption_story/Swiss-Ambassador-calls-on-President/110-179665

“We wish to work together for the benefit of both countries. Also we need to overcome this situation of tension and to remove any misunderstanding,” the Swiss Ambassador said.

In response, President Rajapaksa explained to the Ambassador the progress of investigations into the incident so far.

“It is very well established by now that the alleged abduction is a total fabrication. Irrefutable evidence such as Uber reports, telephone conversations and CCTV footages point to this fact. The Embassy official must have been compelled by some interested parties to bring myself and my government in to disrepute. It is not clear why the alleged victims acted in such a manner,” President said.

President Rajapaksa said that he saw no wrong in the initial reaction by the Swiss Embassy when this incident was first reported. “It is justifiable. If a member of its staff is in trouble, the Embassy has to intervene”.

President requested the Ambassador to cooperate with the government to conduct the investigation to its end so that the truth would be emerged.

Conveying warm congratulations to the President over his recent election victory on his and his government’s behalf, the Ambassador said that he especially appreciated President Rajapaksa’s remark that “he is the President of all Sri Lankans”.

“Switzerland is happy that traditional relations with Sri Lanka remain strong and mutually beneficial” the Ambassador said.

First Secretary of the Mission, Sidonia Gabriel accompanied the Ambassador. (Lahiru Pothmulla)

http://www.dailymirror.lk/breaking_news/No-intention-to-harm-SL-need-to-remove-any-misunderstanding-Swiss-Envoy/108-179666

சுவிஸ் தூதரக ஊழியருக்கு விளக்கமறியல்!

கடத்தப்பட்டு, அச்சுறுத்தப்பட்டதாக கூறப்படும் கொழும்பில் அமைந்துள்ள சுவிட்சர்லாந்து தூதரகத்தின் உள்ளூர் பெண் ஊழியரான கனியா பானிஸ்டரை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு தலைமை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொய்யான வாக்குமூலங்களை வழங்கியமைக்காக அவரை கைதுசெய்து நீதமன்றில் ஆஜர்படுத்துமாறு இன்று சட்ட மா அதிபர் சி.ஐ.டி. என்ற குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு ஆலோசனை வழங்கியிருந்தனர்.

இந் நிலையில் அவர் இன்று மாலை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு கொழும்பு தலைமை நீதிவான் நீதிமன்றம் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இதன்பேதே நீதிவான் அவரை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/71171

  • கருத்துக்கள உறவுகள்

சுவிட்சர்லாந்து தூதரக பெண் அதிகாரி இலங்கையில் கைது

கொழும்பில் கடத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டதாக கூறப்படும் இலங்கையின் சுவிட்சர்லாந்து தூதரகத்தின் பெண் அதிகாரி இன்று கைது செய்யப்பட்டார்.

கானியா பெனிஸ்டர் பிரான்சிஸை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு சட்ட மாஅதிபர் திணைக்களத்தினால் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு இன்று முற்பகல் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதன்படி, கைது செய்யப்பட்ட சுவிட்சர்லாந்து தூதரகத்தின் பெண் அதிகாரியான கானியா பெனிஸ்டர் பிரான்சிஸ் கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் இன்று (16) மாலை முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இவ்வாறு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட, கடத்தப்பட்டதாக கூறப்படும் சுவிஸர்லாந்து தூதரகத்தின் பெண் அதிகாரியை எதிர்வரும் டிசம்பர் மாதம் 30ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதம நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அரசாங்கத்தை அசௌகரியத்திற்கு உட்படுத்தும் வகையில் உண்மைக்கு புறம்பான தகவல்களை சமர்ப்பித்த குற்றச்சாட்டின் கீழ் அவரை கைது செய்ய ஆலோசனை வழங்கியதாக சட்ட மாஅதிபர் திணைக்களம் தெரிவிக்கிறது.

குறித்த பெண்ணின் மனோநிலை தொடர்பில் ஆராய்வதற்காக குற்றப் புலனாய்வு திணைக்களம், அவரை தேசிய மனநிலை சுகாதார ஆய்வு நிறுவனத்திற்கு இன்று அழைத்து சென்றிருந்தது.

கொழும்பிலுள்ள சுவிஸர்லாந்து தூதரகத்தில் பணியாற்றும் இலங்கை பெண் அதிகாரி கடந்த மாதம் 25ஆம் தேதி கடத்தப்பட்டு, அச்சுறுத்தப்பட்டதாகவும், தூதரகத்தின் தகவல்களை பெற்றுக் கொள்ளும் வகையில் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகவும் சுவிஸர்லாந்து, இலங்கை அரசாங்கத்திடம் முறைப்பாடு செய்திருந்தது.

இந்த விடயத்தை அடிப்படையாகக் கொண்டு பொலிஸார் மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்களம் ஆகியன இணைந்து விசாரணைகளை ஆரம்பித்திருந்தன.

சுவிஸர்லாந்து தூதரகத்தின் பெண் அதிகாரி, இலங்கையில் கைது.படத்தின் காப்புரிமை MINISTRY OF FOREIGN AFFAIRS SRILNKA

இதன்படி, கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் கடந்த டிசம்பர் மாதம் 12ஆம் தேதி விசாரணைகள் நடத்தப்பட்டன.

நீதிமன்ற உத்தரவிற்கு அமைய கடத்தப்பட்டதாக கூறப்படும் பெண் அதிகாரியை கொழும்பு பிரதம சட்ட வைத்திய அதிகாரி அலுவலகத்தில் முன்னிலைப்படுத்தியதாக அன்றைய தினம் நீதிமன்றத்தில் முன்னிலையாக அரசத் தரப்பு சிரேஷ்ட சட்டத்தரணி ஜனக்க பண்டார தெரிவித்திருந்தார்.

அத்துடன், குறித்த பெண்ணின் மனநிலை தொடர்பில் ஆராய்ந்து அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

மேலும், குறித்த பெண்ணிற்கு வெளிநாடு செல்ல ஏற்கனவே நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்ட தடையுத்தரவு, எதிர்வரும் 17ஆம் தேதி வரை நீதிமன்றத்தினால் நீடிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், குறித்த பெண்ணிடம் பல்வேறு சந்தர்ப்பங்களில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளை நடத்தியிருந்தனர்.

அப் பெண்ணை, பெண் சட்ட வைத்திய அதிகாரி பரிசோதிக்க உத்தரவு பிறப்பிக்குமாறு, அப்பெண் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி உபுல் குமாரப்பெருமன நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு வைத்தியர்களினால் நடத்தப்பட்ட பரிசோதனைகளின் ஊடாக குறித்த பெண் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாகவும், துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளதாக அந்த சட்டத்தரணி நீதிமன்றத்திடம் கூறியுள்ளார்.

எனினும், கடத்தப்பட்டோ, தாக்கப்பட்டோ அல்லது துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டோ இருக்கின்றமை தொடர்பில் இதுவரை உரிய சாட்சியங்கள் கிடைக்கவில்லை என குற்றப் புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்திடம் தெரிவித்திருந்தது.

குறித்த பெண்ணிடம் நடத்தப்பட்ட விசாரணைகள் போது, அவரது வாக்குமூலம் ஒன்றுக்கு ஒன்று முரண்பட்டு காணப்பட்டதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்திடம் கூறியுள்ளது.

கடத்தப்பட்டதாக கூறப்படும் பெண்ணின் கருத்துக்கள் மீது நம்பிக்கை வைக்க முடியவில்லை எனவும் குற்றப் புலனாய்வு திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை விரைவில் சட்டத்தின் முன் நிறுத்துமாறு சுவிஸர்லாந்து அரசாங்கம் இலங்கையிடம் ஏற்கனவே கோரிக்கை விடுத்திருந்தது.

இந்த நிலையிலேயே, கடத்தப்பட்டதாக கூறப்படும் பெண்ணை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு சட்ட மாஅதிபர் திணைக்களம் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு இன்று அறிவித்திருந்தது.

சுவிஸர்லாந்து தூதுவர் ஜனாதிபதியுடன் இன்று சந்திப்பு

இலங்கைக்கான சுவிஸர்லாந்து தூதுவர் ஹென்ஸ் பீட்டர் மொக் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை இன்று சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கிறது,

சுவிஸர்லாந்து தூதரகத்தின் பெண் அதிகாரி கடத்தப்பட்ட விவகாரம் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

வெள்ளை வேன் ஓட்டுநர்கள் என கூறப்படும் இருவர் கைது

மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி காலத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் வெள்ளை வேன் கடத்தல் சம்பவம் தொடர்பில் ஜனாதிபதி தேர்தல் காலப் பகுதியில் கருத்துக்களை வெளியிட்ட இருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சுவிஸர்லாந்து தூதரகத்தின் பெண் அதிகாரி, இலங்கையில் கைதுபடத்தின் காப்புரிமை Getty Images

சர்ச்சைக்குரிய வெள்ளை வேன் ஓட்டுநர்கள் என தம்மை அடையாளப்படுத்தி கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலப் பகுதியில் நவம்பர் மாதம் 10ஆம் தேதி இந்த இருவரும், முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்னவுடன் இணைந்து ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தியிருந்தனர்.

இவ்வாறு ஊடக சந்திப்பை நடத்திய இருவரும் பல்வேறு குற்றச் சம்பவங்களுடன் தொடர்புப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளதாக பொலிஸார் நீதிமன்றத்தில் அறிவித்துள்ளனர்.

இதன்படி, குறித்த இரண்டு சந்தேகநபர்களையும் எதிர்வரும் 27ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதம நீதவான் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் வெள்ளை வேன் ஊடாக பலர் கடத்தப்பட்டு, துன்புறுத்தல்களுக்கு உட்படுத்தப்பட்டதாகவும், பின்னர் அவர்கள் கொலை செய்யப்பட்டு முதலைகளுக்கு உணவாக வீசப்பட்டதாகவும் குறித்த இருவரும் அன்றைய ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்திருந்தனர்.https://www.bbc.com/tamil/sri-lanka-50810211

  • கருத்துக்கள உறவுகள்

FDFA criticises lack of due process in the case against a local employee of the Swiss Embassy in Sri Lanka 

Press release, 16.12.2019

An employee of the Swiss Embassy in Colombo has today been detained on the grounds that she allegedly made false statements. The FDFA is concerned about this development and calls on the Sri Lankan judicial authorities to ensure better protection of its employee's personal rights in any further proceedings and compliance with national law and international standards. The FDFA and the Swiss Embassy in Colombo will continue to meet their responsibilities as an employer and do everything in their power to assist the member of staff concerned. 

 

On 25 November 2019, the local employee of the Swiss Embassy reported that she had been abducted in Colombo to force her to disclose embassy-related information. Both the victim and the Swiss embassy cooperated fully with the Sri Lankan authorities during the proceedings. The FDFA has repeatedly called for due process to be followed. In particular, the FDFA has criticised the 30-hour interrogation to which the employee was subjected over three days despite being in poor health and the public statements by senior Sri Lankan officials questioning her account before the investigations had been completed. 

Following the arrest of its employee, the FDFA expects the Sri Lankan law enforcement authorities to comply with national law and international judicial standards and to ensure that the employee's rights are now better protected. As an employer, the FDFA calls on the Sri Lankan authorities to meet their obligations under applicable law and give due consideration to the employee's poor state of health. Switzerland wishes to emphasise that in this high-profile case Sri Lanka's reputation as a country that upholds the rule of law is at stake. The FDFA and the Swiss Embassy in Colombo will continue to support their employee as far as possible.

The FDFA has reiterated to the Sri Lankan authorities that it is seeking a common and constructive way forward to resolve the security incident. On 16 December 2019, the Swiss ambassador in Colombo emphasised this again in a face-to-face meeting with Sri Lanka's President Gotabaya Rajapakse.

https://www.fdfa.admin.ch/eda/en/fdfa/fdfa/aktuell/news.html/content/eda/en/meta/news/2019/12/16/77584?pk_campaign=communique&pk_kwd=@swissmfa&fbclid=IwAR1nGIHKFt34rKfGu0wyvs87ACOty95Dgcg4fOjHxzZZZPUI0h_3fHAHeCQ

45 minutes ago, ஈழப்பிரியன் said:

Switzerland wishes to emphasise that in this high-profile case Sri Lanka's reputation as a country that upholds the rule of law is at stake. 

சிறிலிங்காவின் 'மரியாதை'  இதுவரை சுவிஸிற்கோ இல்லை மேற்குலத்திற்கோ தெரியாததல்ல. 

கொத்தாவோ தான் இந்த விடயத்தில் பாதிக்கப்பட்டவர் என்கிறார். தமிழர் விடயத்திலும் இவ்வாறு தான் கூறி வருகிறார்:

  • கருத்துக்கள உறவுகள்

இனந் தெரியாதவர்களால் கடத்தப்பட்டிருந்தால் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து விசாரிக்க வேண்டியதுதான் இவர்கள் கடமை. அல்லது அப்படி காட்டியாவது அவ்வளவோடு  சம்பவத்தை மூடி இருக்கலாம்.  அதை விட்டு   இந்த அரசாங்கம் ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து  குத்தி முறிந்து சம்பவத்தை நீட்டி முழக்கி....  தனது திருகுதாளம் வெளி வந்து விடக்கூடாது என்பதற்காக  திருப்பித் திருப்பி விசாரித்து குறிப்பிடவருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி மனநோயாளியாக்குவது, அல்லது பொய்காரியாக்குவது என கங்கணம் கட்டி வீணாய், தான்தான் கதையின் சூத்திரதாரி என்பதை காட்டிக்குடுத்து வம்பில மாட்டப்போறார் ஜனாதிபதி உருவில் வலம் வரும் கொலை, கொள்ளை கூட்டத் தலைவர். இவரது பதவியும்  கேலிக்கூத்தாகி, வாக்குப் போட்டவர்களும் தலை குனியும் நிலையும் வரலாம்.  கொள்ளை கூட்டத்துக்கு ராஜ தந்திரமும் தெரியவில்லை. அரச சமயோசிதமும் இல்லை. அடிதடி, கடத்தல், பயமுறுத்தல், கொள்ளை, கொலை கலை எல்லா இடமும் பலிக்கும் என வெளிக்கிட்டு மூக்குடைபடப் போகினம் போல் தெரிகிறது. பொறுத்திருந்து பாப்போம். அதற்குமுதல்  பாவம் அந்தப் பெண்ணும் முதலைக்கு தீனியாய்ப் போய்விடும் என்பதுதான்  எனது கவலை எல்லாம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.