Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சம்பந்தனின் செயற்பாடுகளே மாற்றுத் தலைமைக்கான அவசியத்தை வலியுறுத்துகிறது

Featured Replies

இலங்கை தமிழரசு கட்சியின் 70ஆவது ஆண்டு நிறைவு விழாவில் உரையாற்றிய இரா.சம்பந்தன், தாம் சர்வதேச சமூகத்திடமிருந்து எழுத்து மூலமான உத்தரவாதங்களைப் பெற்றிருப்பதாகக் கூறுகின்றார்கள். அவ்வாறாயின், அந்த எழுத்து மூலமான உத்தரவாதங்கள் என்ன என்பதை சம்பந்தன் வெளிப்படுத்தத் தயாரா என ஈ.பி.ஆர்.எல்.எவ் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமசந்திரன் கேள்வியெழுப்பியுள்ளார்.

தமிழரசு கட்சியின் 70ஆவது ஆண்டு நிறைவு விழாவில் சம்பந்தன் ஆற்றிய உரை தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அவ் அறிக்கையில் மேலும் கூறியுள்ளதாவது,

சம்பந்தன் தமிழ் மக்கள் வழங்கிய ஆணைக்கு விசுவாசமாக நடந்துகொண்டாரா? தமிழ் மக்களுக்கு உரித்தான உரிமைகள் எதனையாவது பெற்றுக்கொடுத்தாரா? கடந்த நான்கரை வருடங்களாக அவர் எடுத்த முடிவுகள்  அனைத்தும் தோல்வியில் முடிந்ததற்கான காரணத்தைப் பரிசீலித்தாரா? அதிலிருந்து பாடங்கள் எதனையும் கற்றுக்கொண்டாரா?

இப்பொழுது மீண்டும் ஒருமுறை முழுமையான ஆணை வேண்டுமெனக் கேட்கிறார். ஒரு பகுதி கூட யாருக்கும் போய்விடக்கூடாது என்றும் கூறுகிறார். இத்தகைய புதிய ஆணையினூடாக எதனையாவது சாதிப்பதற்கான திட்டங்களோ, வழிகாட்டல்களோ, அதற்கான வியூகங்களோ உங்களிடம் இருக்கின்றதா?

விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டது நல்ல விடயமாக இருக்கலாம்' என்ற ஒரு கருத்தையும் குறிப்பிட்டிருக்கிறார்.

விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டது நல்லதென்று சம்பந்தன் கருதுவாரானால் விடுதலைப் புலிகள் மௌனிக்கப்பட்டதன் பின்னரான கடந்த பத்து வருடத்தில் அவர் எதனைச் சாதித்தார்?.

விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டது நல்லது என்று கூறுவதானது ஆயுதப் போராட்டம் அழிக்கப்பட்டது நல்லதொரு விடயமாக இருக்கலாம் என்றே பொருள்படும். ஆயுதப் போராட்டம் என்பது சிங்கள-பௌத்த மேலாதிக்க சக்திகளிடமிருந்து தமிழ் மக்களைப் பாதுகாப்பதற்கான போராட்டமே தவிர, அது ஒரு பயங்கரவாத நடவடிக்கையல்ல.

வெளிநாட்டு நீதிமன்ற வழக்குகளில் கூட விடுதலைப் புலிகள் உரிமைகளுக்காகப் போராடுகின்ற அமைப்பே தவிர பயங்கரவாத அமைப்பல்ல என்று குறிப்பிட்டிருக்கின்றார்கள். ஆகவே இதில் எது சரி என்பதை சம்பந்தன் தெளிவுபடுத்த வேண்டும்.

விடுதலைப் புலிகள் மட்டுமன்றி, ஏனைய விடுதலை அமைப்புகளும்கூட, தமிழ் மக்கள் தலைநிமிர்ந்து வாழ்வதற்காக தமது இன்னுயிரை ஈந்திருக்கிறார்கள். பல்வேறு தியாகங்களைச் செய்திருக்கிறார்கள். அவர்களின் தியாகங்களின் மீது நின்று தான் நாம் தமிழ் மக்களின் உரிமைகள் குறித்து குரல்கொடுக்கின்றோம் என்பதை மறந்துவிடக்கூடாது.

நீங்கள் சொல்வது அத்தனையும் சரியென்று நினைக்காதீர்கள். உங்களது ஒவ்வொரு நடவடிக்கைகளையும் தமிழ் மக்கள் மிகவும் அவதானமாக அவதானித்துக் கொண்டிருக்கிறார்கள். அதனை உணர்ந்து நீங்கள் கருத்துக்களை வெளியிடுவது நல்லது. மக்களைத் தொடர்ந்தும் ஏமாற்ற முடியும் எனக் கருத வேண்டாம்.

உங்களது உதடுகள் ஐக்கியத்தை உச்சரிக்கின்ற போதிலும் உங்களது தன்னிச்சையான செயற்பாடுகள் எப்பொழுதும் ஐக்கியத்திற்குக் குந்தகமாகவும் எதிராகவுமே இருக்கின்றது. உங்களது செயற்பாடுகளும் அணுகுமுறைகளுமே ஒரு மாற்றுத் தலைமைக்கான அவசியத்தை வலியுறுத்தியுள்ளது.

https://www.thinakaran.lk/2019/12/21/உள்நாடு/45734/சம்பந்தனின்-செயற்பாடுகளே-மாற்றுத்-தலைமைக்கான-அவசியத்தை-வலியுறுத்துகிறது

 

  • தொடங்கியவர்

தமிழ்-தேசிய-கூட்டமைப்பை-குற்றஞ்சாட்டும்-அனந்தி-சசிதரன்

தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளை விடுத்து தமிழ் தேசிய கூட்டமைப்பு மாற்று தலைமை வரக்கூடாது என்ற எண்ணப்பாட்டில் இருப்பதாக வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.

வட மாகாணத்தில் மணல் அகழ்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது குறித்து எமது செய்தி சேவைக்கு வழங்கிய செவ்வியிலேயே வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் அனந்தி சசிதரன் இதனை குறிப்பிட்டார்.

இதேவேளை, அரசியல் தலைமைகள் கைது செய்யப்படுகின்ற போது குரல் எழுப்புகின்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் யுத்தத்தை நிறுத்துமாறு ஒரு போதும் குரல் எழுப்பவில்லை எனவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

http://www.hirunews.lk/tamil/230711/தமிழ்-தேசிய-கூட்டமைப்பை-குற்றஞ்சாட்டும்-அனந்தி-சசிதரன்

  • தொடங்கியவர்

சம்­பந்­தனும் சுமந்­தி­ரனும் நீங்கினால் கூட்டமைப்பு பிழைத்­துக்­கொள்ளும்!

 

தமிழ் ஈழ விடு­தலை இயக்­கத்தின் தலைவர் செல்வம் அடைக்­க­ல­நாதன், தமிழீழ மக்கள்  விடு­தலைக் கழகத் (புளொட்) தலைவர் த.சித்­தார்த்­தன்­ ஆ­கியோர் தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பை விட்டு வெளி­யேறமாட்­டார்கள் என்­பதே எனது கணிப்பு. அவர்­க­ளுக்கு வேண்­டி­யது பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பதவி.

எங்கு சென்றால் அது கிடைக்கும் என்றே அவர்கள் பார்ப்­பார்கள். எவ்­வாறு நடந்­து­கொண்டால் தமது இலக்கை அடைய முடியும் என்று அதற்­கேற்­ற­வாறு நடிப்­பார்கள். கொள்­கைகள் பற்றி அவர்கள் எவ­ருமே அலட்­டிக்­கொள்­வ­தில்லை என, தமிழ் மக்கள் கூட்­ட­ணியின் செய­லாளர் நாயகம் சி..வி. விக்கி­னேஸ்­வரன்   அளித்த பிரத்­தி­யேக நேர்­கா­ண­லி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவ­ரு­ட­னான   நேர்­கா­ணலின் முழு விபரம் வரு­மாறு,

 

கேள்வி : தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்­புடன் இருந்­து­விட்டு நேற்று வரைக்கும் எத்­த­கைய கொள்கை ரீதி­யான கருத்­துக்­க­ளையும் கூறாது இன்று மாற்று அணியைத் தேடு­வ­தென்­பதும் ஒன்று சேரு­வ­தென்­பதும் இன்னும் ஒரு அணி­யா­கத்தான் இருக்­குமே தவிர, அது மாற்று அணி­யாக இருக்க முடி­யாது என விமர்­ச­னங்கள் முன்­வைக்­கப்­ப­டு­கி­றது. அவ்­வ­கையில் இவ்­வா­றான விமர்­ச­னங்­களை எவ்­வாறு பார்க்­கின்­றீர்கள் ?

பதில் : தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பு 2013 இல் தனது விஞ்­ஞா­ப­னத்தில் உள்­ள­டக்­கிய விட­யங்­க­ளையே நாங்கள் வலி­யு­றுத்தி வரு­கின்றோம். ஆகவே புதி­தாக கொள்கை ரீதி­யாக நாங்கள் எத­னையும் கூற வேண்­டிய அவ­சி­ய­மில்லை. கூட்­ட­மைப்­பினர் எமது மக்­க­ளுக்கு கொடுத்த வாக்­கு­று­தி­களை காற்றில் பறக்க விட்­டு­விட்டு சுய­நல வாழ்க்­கையில் ஊறி நிற்­கின்­றார்கள் என்­பதே எமது குற்­றச்­சாட்டு. மாற்று அணி என்­பது இயற்­கை­யாக உதிக்க வேண்டும். பழைய போத்­தல்­களில் இருந்­த­வற்றை புதிய புட்­டி­களில் அடைத்­து­விட்டு மாற்று அணி என்று குதிப்­பது பயன் அற்­றது. தேர்­த­லுக்­கா­கவே சிலர் நீங்கள் கூறிய வாச­கங்­களைக் கூறி வரு­கின்­றார்கள். எமது மக்கள் சேவை தேர்­த­லுக்கு அப்பால் செல்ல வேண்டும். நாங்கள் மாற்று அணி­யி­னரா இல்லையா என்­பதை மக்­கள் தான் தீர்­மா­னிக்க வேண்டும்.

கேள்வி :- தமிழ்க்­கட்­சிகள் அனைத்தும் கூட்­ட­மைப்­புடன் ஒன்­றி­ணைந்து செயற்­பட முன்­வர வேண்டும் என்ற கூட்­ட­மைப்பின் பேச்­சாளர் சுமந்­தி­ரனின் அழைப்­பினை எவ்­வாறு பார்க்­கின்­றீர்கள் ?

பதில் : காலம் கடந்த ஞான­மா­கவே கரு­து­கின்றேன். ஒன்­றி­ணைந்த கட்­சிகள் பல­வற்றை இது­காறும் ஓரங்­கட்­டி­விட்டு ஓர்­மை­யுடன் ஒற்­றுமை பற்றிக் கூறு­வது வியப்­பாக இருக்­கின்­றது. ஒரு வேளை இரா. சம்­பந்­தனும் எம்.ஏ. சுமந்­தி­ரனும் அர­சி­யலில் இருந்து ஓய்­வு­பெற்றுக் கொண்­டார்­க­ளானால் தமிழ்க்­கட்­சி­க­ளி­டையே ஒற்­றுமை ஏற்­பட அது வழி­வ­குக்­கக்­கூடும்.

கேள்வி :- உங்­களின் தலை­மையில் புதிய மாற்று அணியைக் கொண்ட கூட்டு விரைவில் உரு­வாகும் என, ஈழ மக்கள் புரட்­சி­கர விடு­தலை முன்­ன­ணியின் தலைவர் சுரேஷ் பிரே­மச்­சந்­திரன் கட்­சியின் மத்­திய குழுக்­கூட்­டத்தின் போது கலந்­து­ரை­யாடி, ஊடக சந்­திப்­பிலும் அறி­வித்­தி­ருந்தார். அவ்­வ­கையில் மத்­திய குழுக்­கூட்­டத்தின் முடிவை நீங்கள் ஏற்­றுக்­கொள்­கின்­றீர்­களா ?

பதில் : கொள்கை அடிப்­ப­டையில் நாங்கள் சேர வேண்டும் என்ற முடிவை தமிழ் மக்கள் பேர­வையில் இருந்த போதே நாங்கள் எடுத்­து­விட்டோம். அந்த அடிப்­ப­டை­யில்தான் நாங்கள் வட­மா­காண சபையில் ஒரு­மித்துப் பய­ணித்தோம். கலா­நிதி சர்­வேஸ்­வரன் எங்­களின் பொறுப்­பு­மிக்க அமைச்­ச­ராகக் கட­மை­யாற்­றினார். ஆகவே ஏற்­க­னவே கூட்டு உரு­வா­கி­விட்­டது. அதன் பயணப் பாதையை இப்­பொழுது போட்­டுக்­கொண்­டி­ருக்­கின்றோம். தேர்தல் கூட்டு உரு­வாகும். அது மாற்று அணியின் அத்­தி­வா­ரமா என்­பதை இருந்து பார்த்­துத்தான் கூற­மு­டியும். அவர்­களின் மத்­திய குழுக்­கூட்ட முடிவு என்ன என்று எனக்குத் தெரி­யாது. ஆகவே அது பற்றி என்னால் கருத்து வெளி­யிட முடி­யாது.

கேள்வி :- புதிய மாற்று அணியைக் கொண்ட கூட்­டுக்கு பொது­மக்­க­ளி­டையே எவ்­வா­றான வர­வேற்பு கிடைக்கும் ?

பதில் : முதலில் அது மாற்று அணி­யாக மக்­க­ளி­டையே ஏற்­றுக்­கொள்­ளப்­பட வேண்டும். எமது கூட்­டுக்கு வடக்கு கிழக்கில் ஆங்­காங்கே நல்ல வர­வேற்பு இருப்­பதை நாம் கவ­னித்து வந்­துள்ளோம்.

கேள்வி : கூட்­ட­மைப்பின் பங்­கா­ளிக்­கட்­சி­க­ளான தமி­ழீழ விடு­தலை இயக்கம் மற்றும் தமிழீழ மக்கள் விடு­தலைக் கழகம் ஆகி­யன கூட்­ட­மைப்­பி­லி­ருந்து வெளி­யேறி மாற்று அணியில் இணை­ய­வுள்­ள­தாக அள­வ­ளா­வப் ­ப­டு­கி­றது. அவ்­வ­கையில் அவ்­வா­ற­ான­வர்­களின் இணைவு குறித்து ?

பதில் : தமிழ் ஈழ விடு­தலை இயக்­கத்தின் தலைவர் செல்வம் அடைக்­க­ல­நாதன், தமிழீழ மக்கள்  விடு­தலைக் கழகத் (புளொட்) தலைவர் த.சித்­தார்த்­தன்­ஆ­கியோர் தமிழ்த்­ தே­சியக் கூட்­ட­மைப்பை விட்டு வெளி­யேற மாட்­டார்கள் என்­பதே எனது கணிப்பு. அவர்­க­ளுக்கு வேண்­டி­யது பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பதவி. எங்கு சென்றால் அது கிடைக்கும் என்றே அவர்கள் பார்ப்­பார்கள். எவ்­வாறு நடந்­து­கொண்டால் தமது இலக்கை அடைய முடியும் என்று அதற்­கேற்­ற­வாறு நடிப்­பார்கள். கொள்­கைகள் பற்றி அவர்கள் எவ­ருமே அலட்­டிக்­கொள்­வ­தில்லை.

கேள்வி : ஜனா­தி­ப­தியின் இந்­திய விஜ­யத்­தின்­போது பிரதமர் நரேந்­தி­ர­மோடி வலி­யு­றுத்­திய 13 ஆவது திருத்தச் சட்­டத்தை, கோத்­தபாய மற்றும் மஹிந்த ராஜ­பக்‌ஷ அணி­யினர் முன்­னெ­டுப்­பார்­களா ?

பதில் :- தற்­போ­தைய ஜனா­தி­பதி 13 ஆவது திருத்தச் சட்டம் வேண்டாம் என்றே முன்னர் கூறி வந்தார். தற்­போ­தைய பிர­தமர், காலத்­துக்கு காலம் 13 க்கு அப்பால் என்­றெல்லாம் கூறி­விட்டு எத­னையும் செய்­ய­வில்லை. தமி­ழர்­க­ளுக்கு அதி­கா­ரத்தை பகிர்ந்து கொடுப்­பதில் அவர்­க­ளுக்கு நாட்­ட­மில்லை. சிங்­கள மேலா­திக்­கத்தின் கீழ் தாங்கள் முன்­வந்து தரு­வ­ன­வற்றை நாங்கள் ஏற்­றுக்­கொண்டு வாயைத் திறக்­காமல் இருக்க வேண்டும் என்று அவர்கள் எதிர்­பார்க்­கின்­றார்கள். இந்த யதார்த்த உண்­மையை மோடி­ய­வர்கள் உணர்ந்து கொள்­ள­வேண்டும். அவர் கூறிய பின்­னரும்

13 ஆவது திருத்தச் சட்டம் புதிய அர­சாங்­கத்தால் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டா­விட்டால் நாம் கூறு­வது சரி­யென்ற முடி­வுக்கு மோடி­ய­வர்கள் வரு­வார்கள் என்று எதிர்­பார்க்­கின்றேன்.

கேள்வி : எதிர்­வரும் பாரா­ளு­மன்ற பொதுத் தேர்­தலில் புதிய மாற்று அணி நிறை­வான ஆச­னங்­களை கைப்­பற்­ற­மாட்­டாது என்ற கதை­யா­டலை எவ்­வாறு பார்க்­கின்­றீர்கள் ?

பதில் :- மாற்று அணி­யொன்று வரு­வ­தை­யிட்டு பீதி­ய­டை­வ­துடன் வரப்­ப­டாது என்ற முனைப்பில் இருப்­ப­வர்கள் இலங்கைத் தமி­ழ­ர­சுக்­கட்­சி­யினர். தமி­ழ­ர­சுக்­கட்­சியின் தற்­போ­தைய உண்­மை­யான தலைமை ( அது மாவை அல்ல)  அர­சி­யலை விட்டு நீங்­கினால் ஒரு வேளை கூட்­ட­மைப்பு பிழைத்­துக்­கொள்ளும். இல்லை என்றால் தற்­போ­தைய தலை­மைக்கு எதி­ரா­கவே மக்கள் வாக்­க­ளிப்­பார்கள் என்று நாங்கள் எண்ண இட­முண்டு.

கேள்வி : கிழக்கின் தலை­மைத்­துவம் எவ்­வா­றா­ன­வர்­க­ளிடம் கைய­ளிக்­கப்­பட வேண்டும் என கரு­து­கின்­றீர்கள் ?

பதில் : கிழக்கு மாகாண மக்­களின் குறை­களை நன்கு அறிந்து வைத்­தி­ருக்கும் ஒரு தலை­மைத்­து­வத்­திடம். ஆனால் அத்­த­லை­மைத்­துவம் மக்­களின் குறை­களை முன்­வைத்து அதி­காரம் பெற்ற பின் மக்களை உதாசீனம் செய்யுமாக இருந்தால் மக்களின் கதி அதோ கதி என்றாகிவிடும். கிழக்கில் தமிழ்பேசும் மக்கள் ஒற்றுமையாக செயல்படும் அதே நேரம் தமக்கிடையே இருக்கும் முரண்பாடுகளையும் கருத்து வேறுபாடுகளையும் களைய முன்வர வேண்டும். அவ்வாறு களையாவிட்டால் மத்திய பெரும்பான்மையான கட்சிகளின் கை ஓங்கிவிடும். ஏற்கனவே தமது மக்கள் தொகையை கிழக்கு மாகாணத்தில் 30 சதவிகிதத்திற்கு பெருக்கிக்கொண்டிருப்பவர்கள் எமது பரஸ்பர சந்தேகங்களையும் முரண்பாடுகளையும் கருத்து வேறுபாடுகளையும் அடிப்படையாக வைத்தே எமது இருப்பை ஆட்டங்காண வைத்துவிடுவார்கள் என்பதை நாங்கள் உணர வேண்டும்.

– நேர்காணல் – பாக்கியராஜா மோகனதாஸ்

http://eelamurasu.com.au/?p=24073

இங்கு மண்டையன் சுரேஷ், அனந்தி, விக்கி போன்றோர் நிறைய கருத்துக்களை, கேள்வி பதில்களை முன்வைக்கின்றனர். எல்லோருக்கும் கருத்து சுதந்திரம் இருக்கிறது , அதனால் தங்கள் கருத்துக்களை முன் வைக்கின்றனர்.

இருந்தாலும் மாற்று தலைமை என்ன செய்யப்போகின்றது? உங்களது கருத்துக்கள் எல்லாம் சம், சும் ஒன்றுமே செய்யவில்லை. எமக்கு ஈழம், சமஷடி, சுயாட்சி பெற்றுத்தரவில்லை. இப்படியாக எம்மை ஏமாற்றி விடடார்கள் எனவே மாற்று தலைமை வேண்டும் என்கிறீர்கள்.

சரி , மக்கள் இம்முறை உங்களை ஆதரித்தால் என்னத்தை பெற்றுக்கொடுக்கப் போகீறீர்கள். ஈழத்தை மறந்து விடுவோம். குறைந்தது சமஷடி, வடக்கு கிழக்கு இணைப்பு அல்லது சுயாட்சி ஏதாவதொன்றை பெற்றுக்கொடுக்க முடியுமா? இதை நீங்கள் ஆணித்தரமாக சொல்ல வேண்டும்.

குறிப்பிட காலத்துக்குள் நீங்கள் செய்யாவிட்டால் மக்கள் உங்கள் மணடயில் போட வேண்டும் என்றும் சொல்ல வேண்டும்.

நீங்கள் தமிழர்களது உரிமையை பெற்றுக்கொடுத்தல் எல்லோருக்கும் சந்தோசம்தான்.  ஆனால் கதிரைகளுக்கு, பதவிகளுக்கு ஆசைப்பட்டு மக்களை ஏமாத்த முயட்சிக்க வேண்டாம். 

5 hours ago, Vankalayan said:

நீங்கள் தமிழர்களது உரிமையை பெற்றுக்கொடுத்தல் எல்லோருக்கும் சந்தோசம்தான்.  ஆனால் கதிரைகளுக்கு, பதவிகளுக்கு ஆசைப்பட்டு மக்களை ஏமாத்த முயட்சிக்க வேண்டாம். 

நீங்க சம்சும் கூட்டத்தோட சேர்ந்து மக்களை ஏமாத்துறதுதான் சரி என்று இங்க மட்டுமல்ல பல இடங்களில சொல்லிவாறீங்க.

உங்க சம்சும் விசுவாசம் புல்லரிக்குது. 

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தன், சுமந்திரனை... எப்பவோ, அரசியலிருந்து அப்புறப் படுத்தி இருக்க வேண்டும். 
இவர்கள்... சும்மா கிடந்த மாவையையும், கெடுத்து, குட்டிச்  சுவராக்கி விட்டார்கள். 😊 :grin:

16 hours ago, Gowin said:

நீங்க சம்சும் கூட்டத்தோட சேர்ந்து மக்களை ஏமாத்துறதுதான் சரி என்று இங்க மட்டுமல்ல பல இடங்களில சொல்லிவாறீங்க.

உங்க சம்சும் விசுவாசம் புல்லரிக்குது. 

யாராவது ஒருவருக்கு விசுவாசமாக இருக்க வேண்டும். நான் அங்கு எழுதின கருத்துக்கு உங்களாலும் அந்த மாற்று எனும்  ஏமாற்று தலைமைகளாலும் பதில் சொல்ல முடியாது. நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தன் மற்றும் சுமத்திரன் செயற்பாடுகள் புரிந்து கொள்ளமுடியாததாகவுள்ளது , பேச்சுவார்த்தை மேசையில் அளுத்தம் கொடுப்பதற்கு பல ஏதுவான காரணிகள் இருந்தும் (இலங்கையரசின் மனித உரிமை மீறல் போர் குற்றம் மற்றும் சர்வதேச தொடர்பாடல் மூலம் இலங்கையிற்கு அளுத்தம்) ஏனோ அவற்றை எல்லாம் நீர்த்து போகச்செய்வதிலேயே தீவிரமாக செயற்ப்பட்டுள்ளது (நேரடியாக களத்தில் இறங்காவிடினும் இந்த நடவடிக்கையில் ஈடுபடுபவர்களை குழப்பாமலாவது இருந்திருக்கலாம்) அரசியல் ரீதியாக தமிழ் மக்களின் குரலாக ஒலிக்கவேண்டிய தமிழ் தேசிய கூட்டமைப்பு எதற்காகவோ தமிழ் மக்களின் அபிலாசைகளுக்கு எதிராக செயற்படுகிறது. 

ஆனால் தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சனைகளில் இருந்து திசை திருப்பி சமூகங்களிடையே பிரச்சனைகளை உருவாக்குவதன் மூலம் பெரும்பான்மயினருக்கு சாதகமான சூழ்நிலயை உருவாக்கத்துடிக்கும் அரசியல் தீர்க்கதரிசனம் அற்ற சமூக விரோத அரசியல் தலமைகளுடன் ஒப்பிடும் போது சம்பந்தன் மற்றும் சுமத்திரன் பரவாயில்லை

3 hours ago, vasee said:

சம்பந்தன் மற்றும் சுமத்திரன் செயற்பாடுகள் புரிந்து கொள்ளமுடியாததாகவுள்ளது , பேச்சுவார்த்தை மேசையில் அளுத்தம் கொடுப்பதற்கு பல ஏதுவான காரணிகள் இருந்தும் (இலங்கையரசின் மனித உரிமை மீறல் போர் குற்றம் மற்றும் சர்வதேச தொடர்பாடல் மூலம் இலங்கையிற்கு அளுத்தம்) ஏனோ அவற்றை எல்லாம் நீர்த்து போகச்செய்வதிலேயே தீவிரமாக செயற்ப்பட்டுள்ளது (நேரடியாக களத்தில் இறங்காவிடினும் இந்த நடவடிக்கையில் ஈடுபடுபவர்களை குழப்பாமலாவது இருந்திருக்கலாம்) அரசியல் ரீதியாக தமிழ் மக்களின் குரலாக ஒலிக்கவேண்டிய தமிழ் தேசிய கூட்டமைப்பு எதற்காகவோ தமிழ் மக்களின் அபிலாசைகளுக்கு எதிராக செயற்படுகிறது. 

ஆனால் தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சனைகளில் இருந்து திசை திருப்பி சமூகங்களிடையே பிரச்சனைகளை உருவாக்குவதன் மூலம் பெரும்பான்மயினருக்கு சாதகமான சூழ்நிலயை உருவாக்கத்துடிக்கும் அரசியல் தீர்க்கதரிசனம் அற்ற சமூக விரோத அரசியல் தலமைகளுடன் ஒப்பிடும் போது சம்பந்தன் மற்றும் சுமத்திரன் பரவாயில்லை

சரியாக சொன்னீர்கள் வசீ. சம்பந்தனும், சுமந்திரனும் இன்னும் நன்றாக செயல்பட்டிருக்கலாம். இருந்தாலும் அவர்களும் தங்கள் அரசியல் நோக்கங்களையும் இதட்குள் பயன்படுத்துவதால் சரியான தீர்மானங்களை எடுப்பதில் தவறுகிறார்கள்.

இருந்தாலும் மாற்று தலைமைகள் இதைவிட எதுவும் மேலாக செய்வர்களாக இருந்தால் வரவேற்கலாம். ஆனாலும் அப்படி நடக்காது.

  • கருத்துக்கள உறவுகள்

சம்-சும் போனால் அடுத்த தலைமையை யார் ஏற்பது ? தகுதி உள்ள யாராவது இருக்கின்றனரா ?

புதிய அரசியற் தலைமுறை புதிய சிந்தனைகளுடன் வர வேண்டும் என்பது உண்மைதான். ஆனால்,

தற்போதைய இக்கட்டான சூழலை எதிர் கொள்ளுவதற்கு பொருத்தமானவர் யாருளர் ?

யாரிடமாவது பதிலுண்டா ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.