Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் இணைப்பாளர் ராஜ்குமார் மீது தாக்குதல்

Featured Replies

வவுனியா பிரஜைகள் குழுவின் தலைவரும்   காணாமல் போன உறவுகளின் சங்க இணைப்பாளர் கோ.ராஜ்குமார் மீது ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் உறுப்பினர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக வவுனியா காணாமல் ஆக்கபட்டோரின் உறவினர்கள் தெரிவித்தனர்.

DSC07299.JPG

வவுனியா காணாமல் ஆக்கபட்டவர்களின் உறவினர்களிற்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் இடையிலான கலந்துரையால் ஒன்று வவுனியாவில் இன்று இடம்பெறவுள்ள நிலையில். குறித்த சந்திப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்தும்,டக்ளஸ் தேவானந்தாவிற்கு எதிராகவும் வவுனியாவில் தொடர்ச்சியாக போராட்டம் மேற்கொள்ளும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் ஆர்பாட்டம் ஒன்று இன்றையதினம் முன்னெடுக்கப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் உருவப்படத்தில் “தமிழர்களின் விடுதலை போராட்டத்தை காட்டிக்கொடுத்த போர்குற்றவாளி தன் எழுச்சி மக்கள் போராட்டங்களையும் காட்டுக்கொடுக்க வந்துவிட்டான். ஐ.நாவே ஓநாயை உடனடியாக கைதுசெய் உண்மைகள் வெளிவரும்”.என்ற வசனம் பொறிக்கப்பட்ட பதாதையை  ஏந்தியிருந்ததுடன்,அவரது உருவபடத்திற்கு சாணியினை கரைத்து ஊற்றியதுடன் விளக்குமாறால் அடித்து தமது எதிர்ப்பினை வெளியிட்டிருந்தனர்.

DSC07301.JPG

இதனால் கோபமடைந்த ஈழமக்கள் ஜனநாயாக கட்சியின் உறுப்பினர்கள் அவர்கள் போராட்டம் மேற்கொள்ளும் பந்தல் அமைந்துள்ள பகுதிக்கு முன்பாக ஒன்று கூடியிருந்தனர். குறித்த பகுதியில் நின்றிருந்த சங்கத்தின் இணைப்பாளர் ராஜ்குமார் அவ்விடத்தில் இருந்து புறப்பட்டு சூசைபிள்ளையார் குளம் பகுதியில் அமைந்துள்ள வியாபார நிலையத்திற்கு சென்றுள்ளார்.

அப் பகுதியில் அவரை வழி மறித்த ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் உறுப்பினர்கள் அவரை தாக்கியுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தாக்குதலிற்குள்ளானவர் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளதுடன் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/72122

  • கருத்துக்கள உறவுகள்

எவ்வளவு ஜனநாயக வேஷம் போட்டாலும், சிலசமயம் அதைக் காப்பாற்ற முடியாமல் வேஷம் கலைந்து போய்விடுகிறது. அது சிரங்கு பிடிச்சவன் கை சும்மா இருக்காது  பாருங்கோ.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, satan said:

எவ்வளவு ஜனநாயக வேஷம் போட்டாலும், சிலசமயம் அதைக் காப்பாற்ற முடியாமல் வேஷம் கலைந்து போய்விடுகிறது. அது சிரங்கு பிடிச்சவன் கை சும்மா இருக்காது  பாருங்கோ.

 

இனி  இப்படி   தொடர்ந்து நீங்க  எழுதவேண்டியிருக்கும்

யாழ்ப்பாணத்தில் அவர்களுக்கு  ஆதரவு  பெருமளவு வளர்ந்து  வருகிறது😥

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணம் மட்டுமல்ல, நாடுமுழுவதும் கொள்ளைக்கும்பலின் கையில். நாள்தோறும் இவர்களின் பிதற்றலும், மறுப்பும், அக்கிரமும் அரங்கேறிக்கொண்டிருக்கு. விட்ட தொட்ட குறையை முடிக்கவோ, தன்னையும் குடும்பத்தையும் மின்சாரகத்திரை, ஊழல்மோசடியில் இருந்து  காப்பாற்றவோ ஆட்சிக்கு வந்து விட்டார். இனி இந்தக் கூட்டத்திடமிருந்து நாட்டை மீட்க முடியாது. இருந்தாலும் எனக்கொரு நம்பிக்கை இருக்கு. இதுவும் நமக்கு நமைக்கே. 

  • தொடங்கியவர்

“காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர் மீது தாக்குதல் மேற்கொண்டமை ஜனநாயகத்திற்கான சாவு மணி”

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் ஜனநாயகத்திற்கான சாவு மணி என தெரிவித்துள்ள வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ச.குகதாஸ் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

அவர் இது தொடர்பில் ஊடகங்களுக்கு தெரிவிக்கையில்,

இறுதிப் போரில் பல ஆயிரக்கணக்கான மக்கள் தங்களது உறவினர்களை வட்டுவாகல் பகுதியிலும் ஓமந்தை சோதனை சாவடியிலும் இலங்கை இராணுவத்திடம் ஒப்படைத்தனர். அவர்களை விசாரணை செய்து உங்களுடனே அனுப்புவதாக ஒலி பெருக்கியில் இராணுவம் அறிவித்தமைக்கு அமைவாக மக்கள் தங்களின் உறவினர்களை கையளித்தனர். ஆனால் இன்றுவரை அவர்கள் பற்றிய தகவல்கள் எவையும் தெரியாமல் அலைந்து திரிகின்றனர் உறவுகள்.

தங்களின் பிள்ளைகள்,கணவன்,பெற்றோர் என உறவுகளை தொலைத்து வருடக் கணக்கில் மக்கள் வீதிகளில் கண்ணீருடன் போராடி வருகின்றனர்.இவ்வாறு இருக்க நேற்று (30) வவுனியாவில் நடந்த ஆர்ப்பாட்டத்தை அடுத்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவினர்கள் மீது பேற்கொள்ளப்பட்ட தாக்குதல் அராஐகம் ஐனநாயகத்தின் மீது விழுந்த சாவு மணி ஆகும்.இது வன்மையாக கண்டிக்கப்பட வேண்டும்.

கடந்த காலத்தில் கூட்டமைப்பு தலைவர்களுக்கு எதிராகவும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கோசங்கள் ,உருவப்பட எரிப்புக்கள் நடந்தன ஆனால் எந்த விதமான வன்முறைகளையும் அவர்கள் மக்களுக்கு எதிராக கட்டவிழ்க்கவில்லைஃ

அதனை சகித்துக் கொண்டுதான் மக்களுக்காக குரல் கொடுக்கின்றனர். ஆகவே வவுனியாவில் நடைபெற்ற தாக்குதல் மீண்டும் அராஐகம் ஆரம்பித்தமையை வெளிப்படுத்தியுள்ளது.இவ்வாறான மிலேச்சத்தனமான தாக்குதல்களை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம் என்றார்.

https://www.virakesari.lk/article/72180

  • தொடங்கியவர்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 6 பேர், வெளிப்புறம்

 

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 6 பேர், கூட்டம் மற்றும் வெளிப்புறம்

 

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 5 பேர், பலர் நின்றுக்கொண்டிருக்கின்றனர்

 

வவுனியாவில் நடைபெற்ற காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் மீது துணைஇராணுவக்குழுவான EPDP நடத்திய காட்டுமிராண்டித் தனமான தாக்குதலை கண்டித்து கண்டனப் போராட்டம்

திகதி - 02.01.2020
நேரம் - மாலை 3.30 மணி
இடம் - யாழ் பேருந்து நிலையம் முன்பு

- தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
On 12/30/2019 at 12:33 PM, ampanai said:

வவுனியா காணாமல் ஆக்கபட்டவர்களின் உறவினர்களிற்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் இடையிலான கலந்துரையால் ஒன்று வவுனியாவில் இன்று இடம்பெறவுள்ள நிலையில். குறித்த சந்திப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்தும்,டக்ளஸ் தேவானந்தாவிற்கு எதிராகவும் வவுனியாவில் தொடர்ச்சியாக போராட்டம் மேற்கொள்ளும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் ஆர்பாட்டம் ஒன்று இன்றையதினம் முன்னெடுக்கப்பட்டது.

காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம் இரு பிரிவுகள் கொண்டதா?

 

  • தொடங்கியவர்

இணைப்பாளர் மீது தாக்குதல்; ‘தொடர்பிருந்தால் நடவடிக்கை எடுப்பேன்’

வவுனியா மாவட்டக் காணாமல் ஆக்கப்பட்டோரது உறவினர்களின் சங்க இணைப்பாளர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவமானது, வெறுமனே செய்தியே ஒழிய, உறுதியான தகவல்கள், ஆதாரங்கள் இல்லையெனத் தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தனது கட்சி ஆதரவாளர்கள் இச்சம்பவத்துடன் தொடர்புபட்டிருந்தால், அவர்களுக்கு எதிராகத் தான் நடவடிக்கை எடுப்பதாகவும் கூறினார்.

வவுனியா வாடி வீட்டில் நடைபெற்ற கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்களுடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், இச்சம்பவம் தொடர்பாக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், இது தொடர்பாக மேலதிகமாகச் சொல்ல விரும்பவில்லையென்றார்.

அத்துடன், இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் பின்னர், தமிழ் மக்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகளுக்குப் பிரதான காரணம், தமிழ் பிரதிநிதிகளே என்றும், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

காணாமல் ஆக்கப்பட்டோரது உறவினர், தங்களுடைய பிரச்சினைகள் குறித்துப் பலரிடம் தெரிவித்தும், இதுவரை அது தீர்க்கப்படவில்லை எனவும் இப்பிரச்சினை தொடர்பாகத் தான் அமைச்சரவையில் பேசவுள்ளதாகவும் கூறினார்.

வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டோரது உறவினர்கள், தன்னைச் சந்திக்க மறுத்தது தொடர்பாகத் தனக்குத் தெரியாதெனத் தெரிவித்த அவர், தான் கொழும்புக்கு அவசரமாகச் செல்லவிருந்ததால், அவர்களுடனான சந்திப்பைப் பிறிதொரு தினத்துக்கு ஒத்திவைத்ததாகவும், அமைச்சர் மேலும் கூறினார்.

http://www.tamilmirror.lk/வன்னி/இணபபளர-மத-தககதல-தடரபரநதல-நடவடகக-எடபபன/72-243321

On 12/30/2019 at 5:03 PM, ampanai said:

“தமிழர்களின் விடுதலை போராட்டத்தை காட்டிக்கொடுத்த போர்குற்றவாளி தன் எழுச்சி மக்கள் போராட்டங்களையும் காட்டுக்கொடுக்க வந்துவிட்டான். ஐ.நாவே ஓநாயை உடனடியாக கைதுசெய் உண்மைகள் வெளிவரும்”.

"நாயை குளிப்பாட்டி நடு வீட்டில வைச்சாலும் நாய் நாய் தான்" - இது பழமொழி

டக்கிக்கு என்னதான் பதவி அலங்காரம் செய்தாலும் அதனது இரத்தத்தில ஓடுற காவாலி, கடத்தல் புத்தியை மாத்த ஏலாது.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ampanai said:

வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டோரது உறவினர்கள், தன்னைச் சந்திக்க மறுத்தது தொடர்பாகத் தனக்குத் தெரியாதெனத் தெரிவித்த அவர், தான் கொழும்புக்கு அவசரமாகச் செல்லவிருந்ததால், அவர்களுடனான சந்திப்பைப் பிறிதொரு தினத்துக்கு ஒத்திவைத்ததாகவும், அமைச்சர் மேலும் கூறினார்.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.