Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கருத்துக்களில் மாற்றங்கள் [2020]

Featured Replies

  • 2 weeks later...
  • Replies 65
  • Views 15.7k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

செய்தி திரட்டி பகுதியில் இணைக்கப்பட்ட “13-ம் நம்பரைப் பார்த்து பயப்படணுமா?  ‘வாழைக்கு தாலி’ பரிகாரம் சரியா?” எனும் திரி நீக்கப்பட்டுள்ளது.

தொடர்பான களவிதிகள்:

  • எதுவித அடிப்படையும், உண்மைத்தன்மையும் அற்ற சாத்திரம், மூட நம்பிக்கைகள், சாமியார்கள் வழிபாடு சம்பந்தமான பதிவுகள் தவிர்க்கப்படல் வேண்டும். தீவிர நம்பிக்கையை ஊக்கப்படுத்தாமல் பொழுதுபோக்காக அமையும் பதிவுகளுக்கு இவ்விதி தளர்த்தப்படுகின்றது.
  • மானுடம், மக்கள் நலன், நன்நெறி, பண்பாடு, சீர்திருத்தங்கள், தனிமனித ஒழுக்கம், ஆன்மீகம் சார்ந்து மக்களை நெறிப்படுத்தும் மெய்யியல்/இறையியல் சம்பந்தமான பதிவுகள் ஊக்குவிக்கப்படுகின்றது. எனினும் மதப் பிரச்சாரம் செய்யும் வகையிலான பதிவுகள் அனுமதிக்கப்படமாட்டாது.

எங்கள் மண் பகுதியில் திறக்கப்பட்ட எந்த ஆதாரமும் அற்ற விடயங்களை உள்ளடக்கிய திரி நீக்கப்பட்டது. 

நன்றி

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

த‌மிழ‌ர்க‌ளின் க‌லாச்சார‌ம் எத‌ நோக்கி போகுது , யாழ் க‌ள‌ உற‌வுக‌ளின் ப‌தில‌ எதிர் பார்த்து எனும் திரியில் இறுதியாகப் பதிந்த தலைப்புக்கு சம்பந்தமற்ற பல கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

  • தொடங்கியவர்

ஒரே இரவில் மூவாயிரம் இராணுவ வீரர்களை கொன்றொழித்ததாக கருணா பெருமிதம் எனும் திரியில் கள உறுப்பினரை சீண்டும் வகையில் அமைந்த கருத்துக்கள் சில நீக்கப்பட்டுள்ளன.

கள உறுப்பினர்கள் கருத்தாடற்பண்பைக் கடைப்பிடித்து கருத்துக்கள் வைக்கப்படவேண்டும்.

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

அநாமேதய தளங்களில் இருந்து ஒட்டப்பட்ட நம்பகத்தன்மையில்லாத சில செய்திகள் நீக்கப்பட்டுள்ளன.

பரபரப்பைத் தூண்டும் நோக்கிலும், இலங்கையில் நடக்கவுள்ள தேர்தலில் பங்குபற்றும் அரசியல்வாதிகளை இழிவாக தூற்றும் நோக்கிலும் செய்திகள், பதிவுகள் இணைப்பது தவிர்க்கப்படவேண்டும்.

யாழ் களம் கள உறுப்பினர்களிடம் இருந்து பண்பான, ஆக்கபூர்வமான கருத்து/விமர்சனங்களையே எதிர்பார்க்கின்றது.

"நடிகர் விஜயகுமார் மகள் நடிகை வனிதாவின் மூன்றாவது கலியாணமும் சிக்கலில்" எனும் திரி மூடப்பட்டு அகற்றப்படுகின்றது.

இத்தகைய நாலாம் தரமான மற்றவர்களின் சொந்த வாழ்க்கைக்குள் மூக்கை நுழைக்கும் செய்திகளையோ அல்லது திரிகளையோ திறக்க வேண்டாம் என யாழ் இணையம் தொடச்சியாக உறவுகளிடம் கேட்டுக் கொண்டு வருகின்றது. சமூக வலைத்தளங்களில் வைரலாகும் ஒரு விடயம் யாழிலும் இணைக்கப்படும் போது அதன் தரத்தை எடை போட்டு அது யாழின் தரத்திற்கு எந்த வகையில் செல்வாக்கு செலுத்தும் என்பது தொடர்பாக மதிப்பீடு செய்து இணைக்கவும்.

 

விஞ்ஞான ரீதியிலான அறிவியல் ரீதியிலான எந்த அடிப்படையும் இன்றிய கருத்துகளை கொண்டிருந்த 'அடையாளங்களை தொலைக்கும் தமிழன்!' திரி அகற்றப்படுகின்றது.

அண்மைக் காலங்களில் எந்த அடிப்படையும் அற்ற மருத்துவ பதிவுகளும், மருத்துவ குறிப்புகளும், மூட நம்பிக்கைகளை பரப்பும் திரிகளும் யாழில் பெருகி வருவது அவதானிக்கப்படுகின்றது. தமிழக சஞ்சிகைகளில் இருந்தும் சமூக வலைத்தளங்களில் இருந்தும் பெறப்படும் இத்தகையை பதிவுகளை யாழில் இணைக்க வேண்டாம் என மீண்டும் கேட்டுக் கொள்கின்றோம். 

இவ்வாறு இணைக்கப்படும் பதிவுகள் கருத்துகள் மேலதிக விளக்கம் எதுவும் கொடுக்கப்படாமல் அகற்றப்படும்.

  • தொடங்கியவர்

தொலைபேசியில் வீடியோ கேம் விளையாடியவர் மூளை நரம்பு வெடித்து உயிரிழப்பு எனும் திரியில் இறுதியாகப் பதியப்பட்ட பல கருத்துக்கள் நீக்கப்பட்டு திரியும் மூடப்பட்டுள்ளது.

தொடர்பான களவிதிகள்:

  • யாழ் கருத்துக்களத்தில் குழுக்களாக இணைந்து இயங்குவதையும், ஆரோக்கியமற்ற குழுநிலைக் கருத்தாடல்களையும் தவிர்த்தல் வேண்டும்.
  • கருத்துக்கள விதிகளைச் சட்டை செய்யாது தொடர்ந்தும் குழுக்களாக இயங்குவது அவதானிக்கப்பட்டால் விதிகளுக்கு அப்பால் சென்று கடுமையான தீர்க்கமான நடவடிக்கைகள் எடுக்கப்படும்
  • தொடங்கியவர்

சமூகச் சாளரம் பகுதியில் இருந்து “குறிப்பு பொருத்தம் பாருங்கோவன்” எனும் திரி நீக்கப்பட்டுள்ளது.

களவிதி:

எதுவித அடிப்படையும், உண்மைத்தன்மையும் அற்ற சாத்திரம், மூட நம்பிக்கைகள், சாமியார்கள் வழிபாடு சம்பந்தமான பதிவுகள் தவிர்க்கப்படல் வேண்டும்

'பண்டாரநாயக்க: ஆங்கிலேயத்தனத்திலிருந்து சிங்களத்தனம் வரை' என்ற தலைப்பிலிருந்து சக உறுப்பினரைச் சீண்டி எழுதிய கருத்துக்களும் பதில் கருத்துக்களும் நீக்கப்பட்டுள்ளன.

  • தொடங்கியவர்

வீழ்ச்சியடைந்த பிரான்ஸ் – உலகப்போர் 2 - பகுதி 7 எனும் திரியில் தலைப்புக்கு சம்பந்தமில்லாமல் திசை திருப்பும் வகையிலும், வெறுமனே சீண்டுவதற்காகவும் பதியப்பட்ட இரு கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

தொடர்பான களவிதி:

  • கருத்தாடலைத் திசை திருப்பும் வகையிலும் தலைப்புக்கு தொடர்பில்லாத விதத்திலும், வீண் விதண்டாவாதங்களாகவும் எழுதுவதை கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.
  • தொடங்கியவர்

ஆங்கிலத்தில் பதியப்பட்ட கருத்துக்கள் சில நீக்கப்பட்டுள்ளன.

 

  • யாழ் கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள் அனைத்தும் தமிழிலேயே எழுதப்படல் வேண்டும். தமிழில் எழுதப் பின்வருவனவற்றைப் பயன்படுத்தலாம்.
    • விண்டோஸ் இயங்குதளத்தில் அமைந்த கணினி:
      • இகலப்பை. காணொளி விளக்கம்: 
      • Keyman - தமிழ் சுரதா பாமுனி. கட்டணமற்றது. விண்டோஸ் 8 எனில் அதில் உள்ள Short-Cut வசதியைப் பாவித்து தமிழுக்கும் ஆங்கிலத்திற்கும் மாற்றிக் கொள்ள முடியும்
      • Keyman Tavultesoft * கட்டணம் செலுத்தவேண்டும்.
    • iOS இயங்குதளத்தில் அமைந்த iPad வரைபட்டிகை (tablet), iPhone திறன்பேசி (smartphone):
      • தமிங்கில விசைப்பலகை முறை: Settings >> Keyboard >> Keyboards >> Tamil >> Anjal
      • தமிழ்99 விசைப்பலகை முறை: Settings >> Keyboard >> Keyboards >> Tamil >> Tamil 99
    • Android இயங்குதளத்தில் அமைந்த வரைபட்டிகை (tablet), திறன்பேசி (smartphone):
  • தொடங்கியவர்

முகநூலில் இருந்து இணைக்கப்பட்ட காணொளிச் செய்திகள் ஊர்ப்புதினம் பகுதியில் இருந்து நீக்கப்பட்டுள்ளன

களவிதி:

  • சமூகவலைத் தளங்களை மட்டும் ஆதாரமாகக் கொண்டு செய்திகள், அரசியல் அலசல்கள் இணைப்பது தவிர்க்கப்படல் வேண்டும்.

மேலும் ஊர்ப்புதினம் பகுதியில் செய்திகள் இணைப்பது பற்றிய விளக்கங்களை கீழுள்ள இணைப்பில் படித்து உள்வாங்கி எதிர்காலத்தில் இணையுங்கள்.

 

காத‌ல் என்ற‌ பெய‌ரில் காசு ப‌றித்த‌ பெண் எனும் திரி நீக்கப்படுகின்றது. இவ்வாறான மற்றவர்களின் தனிப்பட்ட விடயங்கள் சார்ந்த தட்டைப் பார்வை கொண்ட திரிகளை / பதிவுகளையும், தரமற்ற வார்த்தைப் பிரயோகங்கள், ஒருமையில் தனிப்பட்டவர்களை அழைக்கும் சொற்களுடனான கட்டுரைகளையும்  இணைக்க வேண்டாம் என பல முறை கேட்டும் தொடர்ந்து இணைப்பவர்கள் மீது நடவடிக்கைகள் எடுப்பதை தவிர எமக்கு வேறு வழிகள் இல்லையென்பதையும் உணர்ந்து கொள்க.

யாழ் இணையம் தொடர்ந்து ஆரோக்கியமான உரையாடல்களுக்கும் கருத்துகளுக்கும் உரிய தளமாக பேண உங்கள் அனைவரினது உதவியும், பங்களிப்பும் அவசியம் என்பதை உணர்ந்து செயற்படவும்.

 

  • 3 weeks later...
  • தொடங்கியவர்

முன்னாள் போராளிகளை இணைத்து பயங்கரவாதத்தை தலைதூக்கச் செய்ய புலம்பெயர் தரப்பு முயற்சி- பாதுகாப்புச் செயலாளர் எனும் திரியில் சக கருத்தாளர்களை பணத்திற்காக கருத்து எழுதுபவர்கள் என்ற அவதூறான கருத்துக்களும் அதன் பதில்களும் நீக்கப்பட்டுள்ளன.

யாழ் களம் ஆக்கபூர்வமான விவாதங்களையே கள உறுப்பினர்களிடம் இருந்து எதிர்பார்க்கின்றது. எனவே, கருத்தாளர்களைப் பற்றிய ஊகங்களைத் தவிர்த்து பண்புடன் கருத்தாடல்களைத் தொடருங்கள்.

  • தொடங்கியவர்

தேசிய அமைப்பாளர் மற்றும் ஊடகப் பேச்சாளர் பதவிகளில் தொடர்ந்தும் நானே இருப்பேன் எனும் திரியில் ஆங்கிலத்தில் பதியப்பட்ட கருத்து நீக்கப்பட்டுள்ளது.

களவிதிகளின்படி கருத்துக்கள் தமிழில் மாத்திரமே பதியப்படவேண்டும்.

அறிவியல் விவாதம் எனும் திரியில் இணைக்கப்பட்ட அறிவியலுக்கு எதிரான மூட நம்பிக்கைகளை ஊக்குவிக்கும் இரண்டு வீடியோக்கள் நீக்கப்பட்டன.  இணைய வெளியில் கொட்டிக் கிட்டக்கும் இவ்வாறான போலி அறிவியல் வீடியோக்களை இணைக்க வேண்டாம் என அடிக்கடி வலியுறுத்தியும் தொடர்ந்து இணைக்கப்படுவதை தவிர்க்கவும். 

  • 2 weeks later...

'சுற்றுச்சூழல்' எனும் பெயரில் திறக்கப்பட்டு ஒரு குறிப்பிட்ட கட்சி ஒன்றினது ஒளித்தொகுப்புகளை / வீடியோக்களை மாத்திரம் இடப்பட்டுக் கொண்டு இருந்தமையால் அந்த திரி நீக்கப்படுகின்றது.

யாழ் இணையம் எந்தக் கட்சியையும் சாராத தளம். அதனால் எந்தக் கட்சியினதும் பிரச்சார மேடையாக யாழை பயன்படுத்துவதை தவிர்க்கவும். இவ்வாறு திறக்கட்டுள்ள திரிகளும் விரைவில் அகற்றப்படும் என்பதையும் கவனத்தில் எடுக்கவும்.

நன்றி

  • தொடங்கியவர்

நாம் தமிழர் அரசியல் - பாகம் 2 எனும் திரியில் கள உறுப்பினர்களைப் பற்றிய அநாவசியமான கருத்துக்கள் வைக்கப்பட்டுள்ளதாக பல முறைப்பாடுகள் வந்துள்ளமையால் அவற்றினை பரிசீலித்து மட்டுறுத்தும்வரை திரி தற்காலிகமாக பூட்டப்படுகின்றது.

  • தொடங்கியவர்

நாம் தமிழர் அரசியல் - பாகம் 2 திரியில் இருந்து கள உறுப்பினர்களைப் பற்றிய அநாவசியமான பல கருத்துக்கள் நீக்கப்பட்டு மீண்டும் கருத்தாடலுக்காகத் திறந்துவிடப்பட்டுள்ளது.

கள உறுப்பினர்கள் வெறும் கட்சிப் பிரச்சாரத்திற்காக அளவுக்கதிகமான காணொளிகளை இணைப்பதைத் தவிர்த்து ஆக்கபூர்வமான கருத்தாடலைத் தொடருங்கள்.

 

  • தொடங்கியவர்

சிரிப்போம் சிறப்போம் பகுதியில் சக கள உறுப்பினரை நையாண்டி செய்யும் வகையில் திறக்கப்பட்ட திரி ஒன்று நீக்கப்பட்டுள்ளது.

இப்படியான அப்ப்பட்டமான களவிதிகளை மீறும் பதிவுகளை கள உறுப்பினர்கள் தவிர்க்கவேண்டும்.

  • தொடங்கியவர்

நாம் தமிழர் அரசியல் - பாகம் 2 இல் பதியப்பட்ட பல கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

யாழ் களம் ஆக்கபூர்வமான வகையிலும் பண்புடனும் கருத்தாடுவதற்கான தளம். களவிதிகளை மீறும் சீண்டல் கருத்துக்களை தொடர்ந்தும் வைப்பது ஆரோக்கியமான கருத்தாடலுக்கு வழிவகுக்காது. எனவே இத்தகைய கருத்துக்களை பதிவதைத் தவிர்த்துக்கொள்ளுங்கள். 

சக உறுப்பினர்கள் சீண்டும் கருத்துக்களை வைத்தால் முறைப்பாட்டு முறை மூலம் நிர்வாகத்திற்குத் தெரியப்படுத்துங்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.